07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 30, 2009

வலைச்சரம் – தொடுப்பவர்கள் அணில், பீட்டர்தாத்ஸ் & கவிதா

அனைவருக்கும் வணக்கம், திரு.சீனா அவர்கள் எங்களை வலைச்சரத்தை தொடுக்க அழைத்திருக்கிறார். அவருக்கு முதலில் எங்களுது நன்றி. அழைக்கும் போதே வானமே எல்லை’ ன்னு சொல்லிவிட்டார். இதில் அதிக சந்தோஷப்பட்டது அணில். அதனால் பீட்டர்தாத்ஸ்’ க்கும், எனக்கும் அது என்ன ஆட்டம் போட போகுதோன்னு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. கொஞ்சம் அதட்டி உருட்டி அமைதியா இருக்கனும், இது நம்மவீடு இல்லை என்று சொல்லி அழைத்துவந்து இருக்கிறோம்.. வலைச்சரத்தில் எழுதும் நாட்களை ஏழுவித கற்களை கொண்டு சரமாக தொடுத்துவிட எண்ணியிருக்கிறோம் முடிந்தவரை முயற்சிக்கிறோம்.

30.03.2009 முத்துச்சரம் – (pearl ) – பார்வைகள்

பார்வைகள் தொடங்கியது ஏப்ரல் 4, 2006, என் வாழ்க்கையில் நான் எப்போதும் மறக்கமுடியாத நாள் இது. நீங்கள் அனைவருமே பார்வைகள்’ ஐ பார்வையிட்டு இருப்பீர்கள், அதனால் அதிகம் சொல்லத்தேவையில்லை. அவ்வப்போது அதிகமாக (எனக்கு) தேவையில்லாத சர்ச்சைகளுக்கு உள்ளாகும் ஒரு பதிவர் ன்னு சொல்லிக்கலாம். :). இதை தவிர்த்து பார்வைகளில் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எழுதிவிடவில்லை. :)இது வரையில் பதிவுகள் 192, என்னுடன் சேர்ந்து எழுதும் அணில்குட்டி’க்கு தான் அன்றும் இன்றும் ரசிகர்கள் அதிகம், பீட்டர்தாத்ஸ்’சின் பீட்டரை படிக்க வருபவர்களும் அதிகம். ஆக கவிதா’வை கண்டுகொள்பவர்கள் குறைவு :(. பரவாயில்லை, கவிதாவின் அருமை பலருக்கு இன்னும் தெரியவில்லை என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்கிறேன். :) . பார்வைகளில் லேபில் வாரியாக சென்றால் எளிதாக பிடித்த பதிவுகளை வரிசை படுத்திவிடலாம்

I. அணில் குட்டி அனிதா:- அணில் என்றாலே நகைசுவை தான். அணில் குட்டியின் அனைத்து பதிவுகளும் இதனுள்ளே அடக்கம்.
1. நான் அடிவாங்கியதை அணிலு அல்வா சாப்பிடற மாதிரி சொல்லுது
2. எடை குறைக்கிறேன் என்று.. நான் பட்ட அவஸ்தையை அணில் ரசித்தது அவஸ்தை பாகம் 1, அவஸ்தை பாகம் 2

II. அப்பாவிற்காக :- என்னுடைய அப்பாவிற்கு பிடித்த விஷயங்களை இதில் சேர்க்க முயற்சிக்கிறேன்.
1. விமானத்தில் டர்புலன்ஸ்
2. 4D திரைப்படங்கள் அரங்க அமைப்பு – (இது யூத் விகடனில் வந்தது)
3. அப்பாவின் கையேடு

III. கதை/கவிதை :- ஏதோ எழுத முயற்சி செய்து இருக்கிறேன்.. :) கவிதைகள், பதிவுகள் எதையுமே மணிக்கணக்காக யோசித்து எழுதியதில்லை, ஆன் தி டேபிள்… வேகவேகமாக எழுதி பதிவிடுவேன். இன்னும் பொறுமையாக எழுதினால் நன்றாக வருமோ என்னவோ.
1. இனிமையான சில தருணங்கள் – ஒரு காதல் கவிதை
2. அடித்துக்கொண்டு சாகுங்கள் ஆணவக்காரர்களே!! - என்னை சுற்றியுள்ள நல்லவர்களை :) எனக்கு புரியவைத்த கவிதை
3. பெண்ணின் நிர்வாணம் அழகு...........!! - இது என்னுள் ஒரு மரணத்தை கண்ட கவிதை
4. ரயில் பயணங்களில்... : கதை என்ற சொல்ல ஒரு ஊறுகாய் !! :)

IV. கேப்பங்கஞ்சி – ஹை லைட்ஸ்’னு சொன்னால், கைப்புள்ள பதிவின் நீளம் அதிகமாக எழுத்துக்களின் அளவை குறைத்து பதிவிட்டது, குறைந்த நேரத்தில் (அரைமணி நேரத்தில்) தேவ் ‘வுடன் சேட்'டி மிக விரைவாக பதிவிட்டது, லிவிங்ஸமைல் வித்யாவின் கேள்விகளுக்காக மண்டையை உடைத்துக்கொண்டது, சந்தோஷ்’ க்காக எல்லோரிடமும் கேள்விகேட்டு சிரமப்பட்டது, எல்லாவற்றையும் விட கருப்பு'வின் பேட்டி இன்னும் என் பதிவில் இருப்பது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு பிடித்தவை
1.லிவிங்ஸமைல் வித்யா - வித்யா(க்களை) வை பற்றி அறிந்துகொண்டேன்
2. கைப்புள்ள - என்னை நம்பி முதலில் கேப்பங்கஞ்சி குடிக்க வந்தவர்.

V. கார்த்தி ஆபிஸ் – சின்ன அண்ணன் பெயரில், துறை சார்ந்த பதிவுகள், அலுவலக குறிப்புகள் அடங்கியது.
1. மேனேஜர் vs டேமேஜர்
2. முதல் பெயர் கடைசி பெயர்
3. வேலையை விட்டு தூக்க முக்கிய காரணங்கள்

VI. பத்மாஸ் கிட்சன் – என் அப்பாவின் அம்மா (ஆயா) தான் எனக்கு சமையல் கற்று கொடுத்தது. அதனால் அவர்களின் பெயரில் இதில் சமையல் குறிப்புகள்.
1. மரவள்ளி கிழங்கில் பலவித உணவுகள்
2. கேழ்வரகில் செய்யும் உணவுகள்

VII. பழம்-நீ – என் அனுபவங்கள் அத்தனையும் என் கணவருக்கே சொந்தமாக்குகிறேன். என் அனுபவங்கள் அழுவாச்சியாக இருக்கும் அதனால் ரசிக்க முடிந்தவை தருகிறேன்.
1. மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக…
2. மருமகளை பழிவாங்கிய மாமியார்

VIII. சமூகம் – சமூகம் சார்ந்த பதிவுகள் அத்தனையும் இதனுள் அடக்கம். நிறைய பதிவுகள் இதில் தான் எழுதி இருப்பதாக தெரிகிறது
1. ஆண்களில் நிழலில்
2. கோயில்களில் பால் அபிஷேகம் பட்னியில் பல உயிர்கள்
3. ஐந்தறை பெட்டியில் கிடைக்காத அழகா அழகு நிலையங்களில்
4. மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்
5. கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது
6. மனிதனின் மறுபக்கம் (யூத் விகடனில் இடம்பெற்றது)
7. வாழ்க்கையை இழந்து வரும் இன்றைய மங்கைகள் (பெண்கள் பலரின் கோபத்தை பெற்றுதந்த பதிவு)
8. ஆண்கள் என்ற மிருகங்கள் (ஆண்கள் சிலரின் கோபத்தை இன்னமும் வாங்கிதந்து கொண்டிருக்கும் பதிவு)
9. வெட்டியான் யூத் விகடனில் இடம்பெற்றது.

IX. கதம்பம் - பொதுவான பதிவுகளை இதில் இடுகிறேன். பதிவர்களின் கருத்துக்களை நட்பு வாரத்திற்காக ஒன்று சேர்த்து பதிந்தது. மறக்கமுடியாத அடிக்கடி படிக்கும் பதிவு இதுதான். இது ஒரு நிலாகாலம். இதோ இதோ என்று எப்பவும் போல சிரமம் கொடுத்தது சிவா, கடைசி வரை கொடுக்காமல் ஏமாற்றியது தேவ். இருப்பினும் அவருடைய பதிவுக்கு சென்று நானே எடுத்து அவர் பெயரில் சேர்த்துவிட்டேன்.. :)
1. நட்பு வாரம் 1
2. நட்பு வாரம் 2

X. ஓவியம் புகைப்படம் : ஏதோ ஒன்றிரண்டு பதிவுகள் உள்ளன. அதிகமாக பதிவுகள் இன்னும் இடவில்லை.

அணில் குட்டி அனிதா: ஓ.. சொந்த வீட்டில் ஆடற ஆட்டம் பத்தாதுன்னு இப்ப அக்கம் பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கிளம்பிட்டீங்களா..?! . ம்ம்…விதிய யாராச்சும் மாத்த முடியுமா? “பிடிச்சிது பிசாசு ஒன்னு வலைச்சரத்தை… !!” அப்புட்டுத்தான் நான் சொல்லமுடியும்…

சீனா அண்ணாச்சி. .நீங்க ரொம்ப நல்லவரு… கூப்பிட்டீங்க பாருங்க நல்ல ஆளா பாத்து.. !! ம்ம்..உங்கள சொல்லி குத்தம் இல்ல.. உங்களுக்கு கவி ய கூப்பிட சொல்லி ஒருத்தர் சொன்னாரு பாருங்க அவரு மட்டும் என் கையில் கிடைச்சாரூஊஊஊஊ…………..!! ஹி ஹி..ஹி… .ஒன்னுமே செய்ய மாட்டேன்… டேரக்ட்டா.....“சங்கு....தான்.....!!

பீட்டர் தாத்ஸ் :- முத்து (Pearl) :-
Pearls are created from a core. The core of a natural Pearl is simply a fragment of shell or fishbone, or a grain of sand that strays into the unsuspecting Pearl oyster's shell. To protect itself from this irritant the oyster secretes multiple layers of nacre, forming a Pearl.
Read more about Pearl-
http://www.mikimotoamerica.com/about_jewelry/pearls/birth.html
http://en.wikipedia.org/wiki/Pearl
http://www.youtube.com/watch?v=VbF9uGlGoro&feature=related

20 comments:

  1. வாழ்த்துக்கள் கவிதா :))

    ReplyDelete
  2. முதல் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. உங்களின் பதிவுகளில் நான் அதிகம் படிக்க துவங்கியதே

    லிவிங்ஸ் பற்றியதை படித்த பின் தான்.

    (அணில்ஸும் ரொம்ப பிடிக்கும்)

    ReplyDelete
  4. கருப்பு கேப்பக்கஞ்சி விரும்பி படித்தப் பதிவு.. :)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் கவி

    ReplyDelete
  6. //சீனா அண்ணாச்சி. .நீங்க ரொம்ப நல்லவரு… கூப்பிட்டீங்க பாருங்க நல்ல ஆளா பாத்து.. !! ம்ம்..உங்கள சொல்லி குத்தம் இல்ல.. உங்களுக்கு கவி ய கூப்பிட சொல்லி ஒருத்தர் சொன்னாரு பாருங்க அவரு மட்டும் என் கையில் கிடைச்சாரூஊஊஊஊ…………..!!//

    ஆரு அது! என் கைல மட்டும் கிடைக்கட்டும்! கைமா பண்ணிடுறேன்!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் கவிதா

    ReplyDelete
  8. வாழ்த்துகள் கவிதா & அணிலு! கலக்குங்க! :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் கவிதா!

    அணில்குட்டிய கட்டிப் போட்டாலே கண்ட்ரோல் பண்ண முடியாது. இதுல சீனா ஐயா வானமே எல்லைனு வேற சொல்லிட்டாரு.

    ஒரு வாரத்துக்கு இந்தப்பக்கம் வர்றதுக்கு யோசிக்கணும்டா வெயிலா!

    ReplyDelete
  11. முதல்நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. நல்லாருக்கு பதிவு கவிதா - துவக்கமே மயக்குகிறது. அனைத்துச் சுட்டிகளையும் படிக்க வேண்டும். அணிலும் தாத்ஸூம் உதவட்டும். நல்வாழ்த்துகள் கவி, அணில், தாத்ஸ்

    ReplyDelete
  13. @ காயூ - நன்றி
    @ ஜமால் - நன்றி
    @ தமிழ்பிரியன் - நன்றி
    @ கவிகாயூ - நன்றி
    @ சிபி - நன்றி
    @ ராஜ் -நன்றி
    @ முல்லை - நன்றி
    @ சென்ஸி - நன்றி
    @ வெயிலான் - நன்றி - வராமல் இருக்காதீங்க :)
    @ குடந்தை அன்புமணி - நன்றி
    @ அனானி - வாழ்த்து கூட அனானி யாக சொல்லனுமா? ம்ம்.என்னவோ நன்றி..

    ReplyDelete
  14. //நல்லாருக்கு பதிவு கவிதா - துவக்கமே மயக்குகிறது. //

    சீனாஜி, நன்றி.. :)

    பூக்களால் தொடுத்து இருந்தால் மயக்கம் வருகிறது என்று சொல்லலாம்.. நான் முத்துக்களால் அல்லவா தொடுத்தேன். .அதுவுமா?

    :))) உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  15. //ஆரு அது! என் கைல மட்டும் கிடைக்கட்டும்! கைமா பண்ணிடுறேன்!
    //

    எங்க நானும் சீனாஜி, ய எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேட்டு பார்த்துட்டேன்... சொல்லவே மாட்டேன்னு அடம் பிடிக்கறாங்க..

    அதனால் அணிலு என்ன முடிவு செய்து இருக்குன்னா...

    சீனாஜி ய...முதல்ல கவனிக்கலாமான்னு ....... :)))

    சீனாஜி.. ப்ளீஸ் எஸ்கியூஸ்.. அது நான் இல்ல.. :))))))))

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்

    மூன்று பேரா ஒருவர் தானா?

    ReplyDelete
  17. வால்பையன்.. நன்றி...

    மூன்றுபேர்.. :))))))

    ReplyDelete
  18. வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது