ராபர்ட் ஸ்காட் கற்றுத் தரும் பாடம்
கேப்டன் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்(Capt. Robert Falcon Scott) என்பவர் ஒரு ஆங்கிலேய மாலுமி. உலகிலேயே தென் துருவத்தில்(South Pole) முதன்முதலில் காலடி பதித்தவர்கள் எனும் பெருமையை பெறுவதற்காக இவரும் இவருடன் மேலும் ஐந்து வீரர்களும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிக் கண்டத்தில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். பலவிதமான தடைகளையும், கடினங்களையும் சந்தித்த பின்னர் 1912 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் தென்துருவத்தைச் சென்றடைகிறார்கள் ஸ்காட்டும் அவர் குழுவினரும். அங்கு சென்று சேர்ந்ததும் அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ராபர்ட் ஸ்காட் தென் துருவத்தில் கால்பதிக்க எண்ணி பயணத்தைத் துவங்கிய கிட்டத்தட்ட அதே நேரத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ரோஆல்ட் அமண்ட்சென்(Roald Amundsen) என்ற தேடலாய்வாளரும் அவர் குழுவினரும் தென் துருவத்தை அடையும் தங்களுடைய பயணத்தையும் துவக்கினர். பூகோள தென் துருவத்தை(Geographic South Pole) சென்றடைய இவ்விருவரும் மேற்கொண்ட ஆயத்தங்கள் வெவ்வேறானவை. இவர்கள் பின்பற்றிய பாதைகளும் வெவ்வேறானவை. ஸ்காட்டின் குழுவினர் தென் துருவத்தைச் சென்றடைவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்னரே அதாவது 1911ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியே அங்கு வந்தடைந்து திரும்பிச் சென்று விட்டதை ராபர்ட் ஸ்காட்டும் அவர் குழுவினரும் அறிந்து கொள்கின்றனர்.
தென் துருவத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, இங்கிலாந்து நாட்டின் கொடியான யூனியன் ஜாக்கைப் பறக்க விட்டு விட்டு தாங்கள் அங்கு வந்திருந்தமைக்குச் சில ஆதாரங்களையும் விட்டு விட்டு ராபர்ட் ஸ்காட்டும் அவர் குழுவினரும் தாங்கள் தோற்கடிக்கப் பட்டுவிட்டோம் என்ற சோர்வுடனும் திரும்புகின்றனர். திரும்பும் வேளையில் வானிலை மேலும் சீர்கெடுகின்றது. மைனஸ் 25 டிகிரி ஃபாரண்ஹீட்டுக்கும் குறைவான கடும் குளிரும் பனிக் காற்றும் தென் துருவத்திலிருந்து திரும்பும் ஸ்காட்டின் குழுவினரைத் தாக்குகிறது. 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, பயணத்தின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவான்ஸ்(Evans) என்ற வீரர் தங்கள் கண் முன்னர் உயிர் விடுவதை ஸ்காட்டும் அவர் குழுவினரும் பார்க்கின்றனர். தென் துருவத்திலிருந்து அவர்களுடைய பேஸ் கேம்ப் அமைந்துள்ள இடத்திற்குமிடையேயான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களைக் கடக்க முற்படும் போது பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். கடும் குளிரின் காரணமாக அவர்களால் ஒரு நாளுக்கு 6 அல்லது 7 மைல்களுக்கு மேல் கடக்க முடிவதில்லை. இந்நிலையில் நாட்களின் கணக்கு மறந்த நிலையில் கேப்டன் ஓட்ஸ்(Capt. Oates) என்ற வீரர் நோய்வாய்ப் படுகிறார். இதற்கு மேல் என்னால் வர முடியாது, என்னை விட்டு விட்டு நீங்கள் சென்று விடுங்கள் என்று கூறுகிறார். இதற்கு அவர்கள் உடன்பட மறுக்கின்றனர். அதற்கு மறுநாள் கடும் 1912 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி, உறைபனியுடன் கூடிய சூறாவளிக் காற்று வீசுகிறது. தன்னுடைய நண்பர்களுக்குத் தான் ஒரு பாரமாக இருக்கக் கூடாது என்று நினைத்த ஓட்ஸ் "நான் சற்று வெளியே செல்கிறேன். முடிந்தால் மற்றொரு முறை சந்திப்போம்"("I am just going outside and may be some time.") என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். அதன் பின்னர் ஓட்ஸை ஸ்காட்டின் குழுவினர் பார்க்கவில்லை.
இதற்கிடையில் கேப்டன் ராபர்ட் ஸ்காட்டும், அவருடன் எஞ்சியிருக்கும் லெப்டினண்ட் போவர்ஸ்(Lt.Bowers) மற்றும் டாக்டர்.வில்சன்(Dr.Wilson) ஆகிய மூவரும் கடும் குளிரின் காரணத்தினாலும் உணவு பற்றாக்குறையின் காரணமாகத் தங்கள் உடல் பலத்தை எல்லாம் இழந்து கடுமையான சோர்வுக்கும் அசதிக்கும் உள்ளாகின்றனர். 1912 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தென் துருவத்திலிருந்து திரும்ப முடியாத நிலையில் தங்கள் இறுதி மூச்சை விடுகின்றனர். "நாங்கள் இறுதி வரை போராடிப் பார்ப்போம், ஆனால் நாங்கள் எங்கள் சக்தி அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம், எங்கள் முடிவு வெகுதூரத்தில் இல்லை. இதற்கு மேலும் என்னால் எழுத முடியும் என்று தோன்றவில்லை, அந்தோ பரிதாபம் தான். கடவுளின் பேரால் எம் மக்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" இது தான் ராபர்ட் ஸ்காட் சொல்லிய கடைசி வார்த்தைகள்.
"I do not think we can hope for any better things now. We shall stick it out to the end, but we are getting weaker, of course, and the end cannot be far. It seems a pity, but I do not think I can write more.
R. Scott
Last entry
For God's sake look after our people."
அம்மூவரின் சடலங்களும் 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி பனியில் புதைந்த நிலையில் ஒரு மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப் படுகின்றன. அதன் பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் ராபர்ட் ஸ்காட் என்பார் ஒரு மிகப் பெரிய தன்னம்பிக்கைச் சின்னமாகத் திகழ்ந்து வந்திருக்கிறார். இதையெல்லாம் இப்ப எதுக்குச் சொல்றேன்னு புரியுதுங்களா? செல்ஃபோன், சாட்டிலைட் ஃபோன், இண்டர்நெட், இமெயில் ஏதுமில்லா அக்காலத்தில் யாருமில்லாத ஒரு அத்துவானப் பனிக்காட்டில் இயற்கையுடன் போராடி உயிர்விட்ட ஐந்து மனிதர்கள் பற்றிய கதையை நாமறிந்து கொள்ள காரணமாக இருப்பது கேப்டன்.ராபர்ட் ஸ்காட் நாள் தவறாமல் எழுதிய அவருடைய நாட்குறிப்பு...அதாவது ராபர்ட் ஸ்காட்டின் டைரி. இப்பவாச்சும் என்ன சொல்றேன்னு புரியுதுங்களா? என்னது? இன்னும் புரியலியா? அறிவுரை சொல்றேன்யா அறிவுரை. பழங்காலத்தில் நம் அரசர்கள் எவ்வாறு அறநெறி வழுவாமல் ஆட்சி புரிந்தார்கள் என்பதையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். அதெல்லாம் பழங்காலம். ஆனா இப்போ இருக்குற டென்சன்ல, ஒவ்வொருத்தருக்கும் தன்னோட வேலையைத் தக்க வச்சிக்கிறதும், தன் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறதுக்குமே சரியாயிருக்குது. இதுலே எங்கே அடுத்தவனைப் பத்தி கல்வெட்டு எழுதறது?
அதுனால? அதுனால...நான் என்ன சொல்றேன்னா... அடுத்தவன் நம்மைப் பத்தியும் நம்முடைய வாழ்க்கையைப் பத்தியும் கல்வெட்டு எழுதலைன்னா பரவால்லை. நம்மளைப் பத்தி நாமளே கல்வெட்டு எழுதிக்கிறதுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி வழிவகை ஏற்படுத்தி கொடுக்குது. அந்த வழி தான் ப்ளாக் அல்லது வலைப்பதிவு. வலைப்பதிவு ஏன் எழுதனும்? ஒன்னுமில்லீங்க...நம்ம வாழ்க்கையைப் பத்தி நாமே எப்பவோ எழுதி வச்சதை ஒரு சில வருஷங்கள் கழிச்சு நாமே எடுத்துப் பாத்தோம்னா கூட "ஆஹா! அந்த காலத்துல நம்மளோட சிந்தனைகளும், கருத்துகளும், ரசனைகளும் இப்படி இருந்துச்சா?" எனத் தோனும். மனிதனுக்குக் கண்டிப்பா வளர்ச்சி தேவை. உடல் வளர்ச்சியைச் சொல்லவில்லை. மனவளர்ச்சியைப் பற்றி சொல்லுகிறேன். நம்முடைய ரசனைகளும், கருத்துகளும், எண்ணங்களும் பரந்து விரிவடைவதைப் படம் பிடித்துக் காட்டுவன வலைப்பதிவுகள். அதற்கு முன்னர் ராபர்ட் ஸ்காட்டின் டைரி குறிப்புகளையே எடுத்துக் கொள்வோமே...தங்கள் வாழ்நாளின் கடைசி சில நாட்களைப் பற்றி அவர் எழுதியிரா விட்டால் அவர்கள் பயணம் தோல்வியடைந்ததற்கான காரணங்களையும், அதை நாமறிந்து கொண்டு பின்னாளில் அத்தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பினையும் இழந்திருப்போம். மேலும் ராபர்ட் ஸ்காட் தன் மனைவி கேத்லினுக்காகவும் ஒரு குறிப்பினை விட்டுச் சென்றார் "என் விதவை மனைவிக்கு" என்று தொடங்கும் ஒரு கடிதத்தில். உயிரோடு திரும்ப வரவில்லை என்ற காரணத்தினால், நான் ஒவ்வொரு நாளும் நரக வேதனையை அனுபவித்தேன் என்று எண்ணிவிட வேண்டாம். தென் துருவம் சென்றடைந்து அங்கிருந்து திரும்பி வரும் வரை நாங்களனைவரும் நல்ல நிலையில் தான் இருந்தோம்" என்று குறிப்பிடுகிறார். அத்துடன் "மறுமணத்தைப் பற்றி உன் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒதுக்கி விட வேண்டாம். உனக்கேற்றவன் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்" என்றும் கூறிச் சென்றிருக்கிறார்.
நான் இப்பதிவின் வாயிலாகச் சொல்ல வந்தது வலைப்பதிவுகளை ஒரு நாட்குறிப்பாக அதாவது டைரியாகப் பயன்படுத்துபவர்களைப் பற்றி. அதாவது தங்கள் வாழ்வில் நடந்த/நடக்கின்ற நிகழ்ச்சிகளை அவை நடந்த வண்ணம் பதிவு செய்து வைத்திருப்பவர்களை. அதில் தலை சிறந்தவர் என நான் கருதுவது...துளசி அம்மா. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன். உங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி உங்க கூட உக்காந்து சிநேகமா கதை சொல்ற மாதிரி இருக்கும் இவங்களோட பதிவுகள். கதை மட்டும் இல்லாம, பலதரப்பட்ட விஷயங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துப்பாங்க. இவ்ளோ ஏங்க...ராபர்ட் ஸ்காட் பத்தி கூட எழுதி வச்சிருக்காங்க அவங்க பதிவுல. அவங்க எழுதுன எட்டு நூத்தி சொச்சப் பதிவுகள்ல பெரும்பாலானவற்றை நான் படிச்சதில்லை...ஆனா படிச்ச வரைக்குமே அவங்க ஒரு தலைசிறந்த டைரி எழுத்தாளர் என்று எனக்கு கண்டிப்பா தெரியும். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில், தன் வாழ்க்கையில் அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய எவ்ரிடே மனிதர்கள் என்ற பதிவுகளைப் படிச்சிப் பாருங்க.
அடுத்து என் நினைவுக்கு வருபவர் மா.சிவக்குமார். நானெல்லாம் பதிவெழுத வந்ததுக்குக் காரணம் அதன் மூலம் கிடைக்கும் கமெண்டுக்காக. நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் வரவில்லை என்றால் துவண்டு விடுவேன். "ஆனால் கமெண்டு வரலைன்னாலும் நான் ஒரு நாட்குறிப்பு போல எழுதிட்டுத் தான் இருப்பேன்னும் அதே காரணத்துக்காகத் தான் என் பதிவுல பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தவில்லை" என மூனு வருடத்துக்கு முன் இவரை நான் சந்திச்சப்போ என்கிட்ட சொன்னாரு. அன்றாட நிகழ்வுகளையும், பொருளாதாரம், வணிகம் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் பதிந்து வைத்திருக்கிறார் இவர்.
அடுத்து துளசியம்மாவைப் போலவே வெகு சுறுசுறுப்பாக எழுதிக் கொண்டே இருக்கும் எங்கள் தலைவி கீதா சாம்பசிவம் மேடம். இண்டர்நெட்டைக் கனெக்ட் செய்வதற்கு டாட்டா இண்டிகாமுடன் மல்லுக்கட்டியதையும், அவர்கள் வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்கியிருப்பதையும், வீட்டிற்குள் வந்து நாய் குட்டி போட்டதையும் அதற்கு இவர் செவிலித் தாயாக இருந்ததையும் நகைச்சுவை பொங்க விவரித்திருப்பார். அத்துடன் முருகர், விநாயகர், கிருஷ்ணர் என அனைத்து கடவுளர்களும் இவர் வலைப்பதிவில் குடிக் கொண்டிருப்பார்கள்.
வலைப்பதிவுகளை ஒரு நாட்குறிப்பு போல எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவர்களுடைய பதிவுகளைக் கொஞ்சம் தோண்டிப் பாருங்களேன்.
|
|
I first...
ReplyDeleteநான் தான் மொத
இப்பவாச்சும் என்ன சொல்றேன்னு புரியுதுங்களா? என்னது? இன்னும் புரியலியா? அறிவுரை சொல்றேன்யா அறிவுரை////
ReplyDeleteப்லிங் ப்லிங்
வலைப்பதிவுக்கு இப்படி ஒரு விளக்கம்... உண்மையிலேயே நல்ல பதிவுங்க. ஆனாலும் சிலவற்றை டைரியிலயே, வலையிலேயோ எழுத முடியாததும் இருக்கத்தான் செய்யுது.
ReplyDeleteexcellent .
ReplyDeleteசின்னதா ஒரு விஷயம் சொல்ல இவ்ளோ விஷயம் சொல்லி இருக்கீங்க. இருந்தாலும் நல்ல, தெரியாத விசயங்களை சொன்னதற்காக நன்றியுடன் வாழ்த்துக்களும்
ReplyDeleteராபர்ட் ஸ்காட் பற்றிய குறிப்புகள் அருமை. நல்லா இருக்கு. அதுவும் விதவை மனைவிக்குச் சொன்னது! :((((((
ReplyDeleteநல்ல கருத்துள்ள பதிவு, நன்றி என் பதிவுகளையும் குறிப்பிட்டமைக்கு. குறிப்பாய்ச் சொல்லும்படி எழுதவில்லை என்றாலும் நான் புராணங்களைக் கையில் எடுத்ததின் காரணம் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். ஆகவே மீண்டும் நன்றி.
நல்ல பதிவு - துளசி மற்றும் கீதா வின் பதிவுகள் எனக்குப் பிடித்தவை
ReplyDeleteஅறிமுகத்தினைக் கூட ஒரு நிகழ்வின் தொடர்ச்சியாகக்க் கூறிய விதம் நன்று நன்று
சுவாரசியமான முன்னுரை!
ReplyDeleteவணக்கம் கைப்புள்ளெ.
ReplyDeleteஅடடே..... நம்மையும் கண்டுக்கிட்டதுக்கு நன்றின்னு சொன்னா ரொம்ப ஃபார்மலா இருக்குமோன்னு இருக்கு!
சொல்லமுடியாதவைகளை விட்டுத் தள்ளுவோம். சொல்லமுடிஞ்சதை விவரமாச் சொல்லலாமுல்லே அன்புமணி?
:-)
எங்கூர்லே தெந்துருவச் சமாச்சாரங்கள் நிறைய இருக்குங்க ச்சான்றுகளோடு.
அதான் கண்டதை ( நான் கண்ணால் கண்டதை) எழுதிக்கிட்டு இருக்கேன்:-))))
நிலா அம்மா, அன்புமணி, KSM, நவாசுதீன், கீதா மேடம், சீனா ஐயா, முல்லை, துளசி அம்மா - உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல.
ReplyDelete