பிகாசா ஷாட் ஒன் டேக் 2 கிளாப்
நான் பதிவைத் தொடங்கும் முன் PIT வலைப்பூவுக்கு நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும் .புகைப்படத்துக்காக பிளாக் தொடங்கியவர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்,ஆனால் கவிதையும் கட்டுரையும் எழுதத்தொடங்கி கேமராவையும் காதலிக்கத் தொடங்கியவர்கள் அதை விட அதிகம் இருப்பார்கள்.அந்த அளவு புகைப்படப் போட்டியும் ,வகுப்புகளும் நடத்தி கேமராவை யூசர் ஃபிரண்ட்லி ஆக்கியது பிட் என்றால் அது மிகையாகாது என்பதை, இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன்.
பிளாகர் உலகில் -பிட் -ரொம்ப நல்லவர் ,வல்லவர்....அவர் இல்லையென்றால் பலர் வெறும் எழுத்தோடு நின்றிருப்பர் அவரது சேவை இந்த வலை உலகுக்கு அவசியம் தேவை என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறேன்...........
[கொஞ்சம் இருங்கள்ட்ராக் எங்கேயோ போகிறதே ,எழுத்து ,மேடைப் பேச்சு லெவலில் போகிறது. யாராவது சோடாவை நீட்டி விடப் போகிறார்கள்..நடையை மாற்றிக் கொள்கிறேன்]
ஒரு படம் அழகாக இருக்கிறது என்று சொல்ல வைப்பதில் பல விஷயங்கள் பங்கு வகிக்கின்றன.
என் கேமரா கண்ணோட்டத்தில்,என் வரையில் நான் கண்டதை ரத்னச்சுருக்கமாக சொல்லி விடுகிறேன்
1-இறைவன் வரைந்த ஓவியங்கள் [உ.ம்]சூரியன் நிலா,கடல்,மலர்கள் என்று வரிசையாகச் சொல்லலாம்.
2-சிசுக்கள் மழலைகள் குழந்தைகள் எப்படியெடுத்தாலும் அழகுதான் .
3-கேமராவின் தரம் .அதன் ஒளி ஈர்ப்புத்தனமை ,வேகம் ,என்று எத்தனையோ தகுதிகளோடு எடுக்கப் படமும் அழகை அழகாகப் படமெடுக்கும்.
4-கேமராவைக் கையாளும் கலைஞரின் தேர்வு,கோணங்கள் இவைகளும் படத்தின் தரத்தை உயர்த்தும் மற்றொரு அம்சம்.
ஒவ்வொறுக்கும் உதாரணமாக ஒவ்வொரு படம் அடுத்த பதிவில்.
கேமராவின் ஒய்டேங்கிள் லென்ஸ் ஃபில்ட்டர்,மாட்டிக்கொண்டேன் விரைவில் சந்திப்போம்
|
|
\ கேமராவையும் காதலிக்கத் தொடங்கியவர்கள் அதை விட அதிகம் இருப்பார்கள்.\\
ReplyDeleteஅழகா சொல்லியிருக்கீங்க
//ஒவ்வொறுக்கும் உதாரணமாக ஒவ்வொரு படம் அடுத்த பதிவில்.//
ReplyDeleteஎதிர்ப்பார்க்கிறோம்
//புகைப்படப் போட்டியும் ,வகுப்புகளும் நடத்தி கேமராவை யூசர் ஃபிரண்ட்லி ஆக்கியது பிட் என்றால் அது மிகையாகாது//
ReplyDeleteறீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))
உண்மைதானெ ஜமால்.
ReplyDeleteஅழகாகச் சொன்னாலே அது,அழுத்தமாக ,ஆழமாக ,உணர்ந்து சொன்னதாகும்.
பாப் ஐ ஒரு டின் ஸ்பின்ஹெச் தந்து உதவுங்களேன்.படங்கள் செலக்ட் பண்ணுவதற்குள் “உஷ்....இப்பவே கண்ணைச் சுத்துதே....”என்று வருகிறது.
ReplyDeleteபிட் தேர்வாளர்களின் கஷ்டம் இப்பொழுது புரிகிறது.
//புகைப்படப் போட்டியும் ,வகுப்புகளும் நடத்தி கேமராவை யூசர் ஃபிரண்ட்லி ஆக்கியது பிட் என்றால் அது மிகையாகாது//
ReplyDelete---
//புகைப்படப் போட்டியும் ,வகுப்புகளும் நடத்தி கேமராவை யூசர் ஃபிரண்ட்லி ஆக்கியது பிட் என்றால் அது மிகையாகாது//
----
//புகைப்படப் போட்டியும் ,வகுப்புகளும் நடத்தி கேமராவை யூசர் ஃபிரண்ட்லி ஆக்கியது பிட் என்றால் அது மிகையாகாது//
ஆயில்யன்! இந்த ”றீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))”போதுமா ?இன்னும் கொஞ்சம் வேணுமா?
என்னாதிது.. எதாவது பதிவுகளுக்கு இணைப்பு குடுக்க சொல்லி ஆசிரியராக்கினா, இங்க வந்து தனியா பதிவு எழுதிட்டு இருக்கிங்க? :)
ReplyDeleteஓ! அப்படியா நினைக்க வைக்கிறது ?.
ReplyDeleteகொஞ்சம் பொறுங்கள் நான் சிலாகித்துக் கொள்கிறேன்
அடுத்த இடுகையில் பதிவுக்கு லின்க் தரப் படும்.
நன்றி பாதை மாறும் பொழுது சுட்டிக் காட்டியமைக்கு.
PiT-க்கு ஜெய் ஹோ:)!
ReplyDelete//
ReplyDelete[கொஞ்சம் இருங்கள்ட்ராக் எங்கேயோ போகிறதே ,எழுத்து ,மேடைப் பேச்சு லெவலில் போகிறது. யாராவது சோடாவை நீட்டி விடப் போகிறார்கள்..நடையை மாற்றிக் கொள்கிறேன்]
//
ஆமா, இந்தாங்க படிங்க சோடா. ஹா ஹா நல்லா சிரிச்சேன்.
தமாஷா நல்லா எழுதரீங்க.
//
ReplyDelete-இறைவன் வரைந்த ஓவியங்கள் [உ.ம்]சூரியன் நிலா,கடல்,மலர்கள் என்று வரிசையாகச் சொல்லலாம்.
//
சரியாச் சொன்னீங்க கோமா !!!
//
ReplyDelete2-சிசுக்கள் மழலைகள் குழந்தைகள் எப்படியெடுத்தாலும் அழகுதான் .
3-கேமராவின் தரம் .அதன் ஒளி ஈர்ப்புத்தனமை ,வேகம் ,என்று எத்தனையோ தகுதிகளோடு எடுக்கப் படமும் அழகை அழகாகப் படமெடுக்கும்.
4-கேமராவைக் கையாளும் கலைஞரின் தேர்வு,கோணங்கள் இவைகளும் படத்தின் தரத்தை உயர்த்தும் மற்றொரு அம்சம்.
ஒவ்வொறுக்கும் உதாரணமாக ஒவ்வொரு படம் அடுத்த பதிவில்.
கேமராவின் ஒய்டேங்கிள் லென்ஸ் ஃபில்ட்டர்,மாட்டிக்கொண்டேன் விரைவில் சந்திப்போம்
//
எல்லா அழகுகளையும் (போட்டோ வழியா தெரியும்) ஒரு சேர சொல்லிட்டீங்க கோமா!!
வாங்க வாங்க விரைவில் சந்திப்போம்.
பிலிம் காட்டப்போறாங்கோ.....
ReplyDeleteகுடந்தை அன்புமணி ஆமாங்கோ பிலிம் காட்டப் போறேங்க வந்து பாருங்கோ.ஆமா எனக்கொரு சந்தேகம் நீங்க வெறும் அன்புமணியா ?குடந்தை அன்புமணியா?....
ReplyDeleteரம்யா
ReplyDeleteஉங்கள் மூன்று பின்னூட்டத்தடுக்கும்
நன்றி.
பிட்டின் சேவை வலையுலகத்துக்கு தேவை.
ReplyDeleteநிறைய கற்றுக்கொள்ள முடிகிறது.