கடவுள் வாழ்த்து============== பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கக் தமிழ்மூன்றும் தாமற்றவர்கள் கேலி செய்தால்
ஒரு நாட்டின் தலை நகரத்தில் குப்பன் என்பவன் இருந்தான். அவன் எது செய்தாலும் அவனை எல்லோரும் கேலி செய்வார்கள். அதனால் குப்பன் மனது புண் பட்டது. அவமானம் தாங்க முடியாமல் ஒரு நாள் குப்பன் அரசவைக்கு வந்து அரசரை வணங்கினான்.
குப்பன்: அரசே! வணக்கம் எல்லோரும் என்னை கேலி செய்கிறார்கள் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தாங்க முடியாத கோபம் வருகிறது. நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் தான் அறிவுரை சொல்ல வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டான்.
இந்த வேண்டுகோளைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் திகைத்து நின்றார்கள். மற்றவர்கள் இவனைக் கேலி செய்வது சரிதான். முட்டாளாக இருப்பதால் தான் அரசனிடமே இப்படிக் கேட்கிறான் என்று அவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டார்கள்.
அரசன்: நான் இதற்கு ஒரு நல்ல வழி சொல்கிறேன். பதிலுக்கு நான் எதைக் கேட்டலும் தருவாயா ? என்று கேட்டான் அரசன்.
குப்பன்: பிறர் என்னை கேலி செய்யக் கூடாது; அதற்காக என் உயிரையே கேட்டாலும் தருவேன்.
அரசன்: நான் விரும்பியதும் அதுதான். நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே நீ செய்ய வேண்டும். சிறு தவறு நடந்தாலும் உன் உடலில் உயிர் இருக்காது.
குப்பன்: உணர்ச்சி வேகத்தில் என்ன பேசி விட்டோம் என்று வருந்தினான். அரசே!! நான் என்ன செய்ய வேண்டும் ??
அரசன்: வீரா! ஒரு கிண்ணத்தில் வழிய வழிய எண்ணெய் நிரப்பி குப்பனிடம் கொண்டுவந்து கொடு.
வீரா : இந்தா குப்பா, எண்ணை கிண்ணத்தை கச்சிதமாக வாங்கிக் கொள் அரசர் சொன்னவைகளை நினைவில் வைத்து, இந்த காரியத்தை கச்சிதமாக செய்து முடி.
அரசன்: குப்பா, நீ இந்தக் கிண்ணத்தை எடுத்திக் கொண்டு நகர வீதிகளின் வழியே சென்றுவர வேண்டும். இந்தக் கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணெயும் தரையில் சிந்தக் கூடாது. அப்படிச் சிந்தினால் உன் உடலில் உயிர் இருக்காது, போய் வா.
வழிய வழிய எண்ணெய் இருந்த அந்தக் கிண்ணத்தைக் கையில் ஏந்தியபடி கவனமாக நடந்தான் குப்பன். அவன் அப்படிச் செல்வதை பார்த்த பலரும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதையும் அவன் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் மனது புண் பட்டது இருந்தது.
அரண்மனை திரும்பிய குப்பன்...
குப்பன்: அரசே! நீங்கள் கட்டளை இட்டபடியே செய்து முடித்து விட்டேன். கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணெயும் சிந்தவில்லை.
அரசர்: நீ நகர வீதிகளின் வழியாகச் சென்றபோது சிலர் உன்னைப் பார்த்துக்கேலி செய்தார்களாமே உண்மையா?
குப்பன்: எண்ணைய் சிந்தக் கூடாது என்பதிலேயே கவனமாக இருந்தேன், அதனால் அவர்கள் பேசியது என் காதில் விழவில்லை அரசே!
அரசர்: நீ கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் போது பிறர் என்ன சொன்னாலும் நீ பொருட்படுத்துவது இல்லையே. அப்படி இருக்கும் போது பிறர் கேலி செய்கிறார்கள் என்று எதற்காக என்னிடம் வந்தாய்?
குப்பன்: அரசே! உங்களால் இன்று நான் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். இனி யாரும் என்னைக் கேலி செய்யும்படி நடந்து கொள்ள மாட்டேன். அப்படியே கேலி செய்தாலும் அதைப் பொருட்ப்படுத்த மாட்டேன்.
இதை மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு குப்பன் அங்கிருந்து புறப்பட்டான்.
எப்போதும் நாம் நமது செயல்களை செவ்வனே செய்யவேண்டுமே அல்லாமல் அவங்க என்ன கூறுவார்கள், இவங்க என்ன கூறுவார்கள், அப்படின்னு நினைக்கக் கூடாது. யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!
நம்மை வெல்ல இவ்வுலகத்தில் யார் இருக்கிறார்கள் ?
இந்த நாளில் நான் ரசித்த சில புதியவர்கள்
ஹரிணி அம்மா
==============
கணவனா? காதலனா?...
நிலாவும் அம்மாவும்
=================
கிருஷ்ணா! கிருஷ்ணா! உங்க எல்லாருக்கும் நீங்க எப்டி பிறந்தீங்கன்னு உங்க அம்மா சொல்லிருப்பாங்க...ஆனா கிருஷ்ணர் சாமி எப்டி பிறந்தார்னு உங்கம்மா சொன்னாங்களா? எங்க அம்மா சொன்ன கதை நான் சொல்லட்டுமா, நிலா வீட்டு சின்ன குட்டி சொல்லராங்கலாம், கிரிஷ்ணர் வேஷம் எல்லாம் போட்டிருங்கங்க.
அந்த அழகை போய் பாருங்களேன். பொங்கல் தெரு விழா. என்ன செஞ்சீங்க அத்தை மாமா பொங்கலுக்கு.....கரும்பு, அந்த குட்டி பாப்பா பொங்கல் வாழ்த்து சொல்லறாங்க, அந்த அழகையும் பாருங்களேன் மாறு வேடப் போட்டியில்
பரிசு எல்லாம் வாங்கினாங்களாம் ரெக்கை கட்டி பறக்குதய்யா அம்மாவோட சைக்கிள். அப்படின்னு அழகா பாடிகிட்டு சூப்பர்ஆ சைக்கிள் ஓட்டறாங்க பாருங்க அந்த குட்டி பாப்பா. நான் பாத்துட்டேன்
அந்த அழகை நீங்களும் பாருங்களேன்.
இந்த நாளில் நான் ரசித்த சில நகைச்சுவை நாயகர்கள்
இவர்கள் எல்லாம் என் பார்வையில் நகைச்சுவை அரசர்கள். இவங்க எல்லாம் ரொம்ப நல்லா எழுதறவங்க. இவங்களை எல்லாம் நான் அறிமுகப் படுத்துவதாக நினைக்காதீங்க. ரொம்ப அருமையா சிரிக்க வைப்பாங்க. எப்படித்தான் கற்பனை பண்ணுவாங்களோ??.
நசரேயன்
========
இவரு இருக்காறே ரொம்ப கில்லாடிங்க. நல்லா வயறு முட்ட சாப்பிட்டிட்டு இன்னைக்கு என்னா பதிவு எழுதலாம்னு மோட்டுவளைய பாத்துகிட்டே இருப்பாராம், அப்படியே தூங்கிடுவாராம். ஆனா இவரு அதிருஷ்டம் முழிச்சிகிட்டு இருக்கறபோது வராத கற்பனைகள், கனவில் தலை விரிச்சி ஆடுமாம். உடனே இவர் அதை அப்படியே மனசுலே படம் பிடிச்சி, அப்புறமா அதை பதிவா போடுவாராம். இதுதான் நான் நசரேயனைப் பற்றி இதுவரை அறிந்த நிலவரம். என்ன ஒரே கலவரமா இருக்கா??
என் முதல் நேர்முகத் தேர்வு
=========================
வழக்கம் போல படிச்சிட்டு வேலை தேடி அலையற அவலத்தை, அவர் கண்ணோட்டத்தில் ஒரு சிரிப்பா சொல்லி இருக்காரு. ஆனா இது கனவு இல்லையாம் அனுபவமாம். நம்புங்க ப்ளீஸ். ஆனா, மேனேஜர் கேட்ட கேள்விக்கு சரியாதான் பதில் சொல்லி இருக்காரு. சரியா? இல்லையான்னு? கொஞ்சம் போயி பாத்து எனக்கும் சொல்லுங்களேன். எதுக்கும் கொஞ்சம் உஷாரு.
வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு. என்னடா இது புட் ஆப்.. படிச்சா மாதிரி ஞாபகம் இல்லையேன்னு, அந்த "வேரை" ஆணிவேரா வச்சி சொல்லவும் ஒரு தயக்கம், அதனாலே முதல் கேள்வியை விட்டு பிடிக்கலாம்னு. நீங்க கேட்டது எனக்கு புரியலை சார் ன்னு சொன்னேன்.மறுபடியும் திருப்பி சொன்னாரு, நானும் அதே பதில் சொன்னேன். என் முதல் நேர்முகத் தேர்வு..
சங்கம் திவால்
=============
சங்கத்திலே கடன் வாங்கிகிட்டு வெளி நாட்டுக்கு போய்ட்டாங்களாம். அது யாருன்னு இப்போ லிஸ்ட் எடுக்கச் சொல்லி காவல் நிலையத்திற்கு சம்பந்தப் பட்டவங்க எல்லாம் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்காங்களாம். என்ன செய்ய? இவங்களுக்கு பணம் கடன் கொடுத்தவங்க மஞ்ச கடுதாசி எல்லாம் கொடுத்துட்டாங்களாம். யோசிங்க! என்ன பண்ண போறாருன்னு போயி அங்கே தான் பாருங்களேன், ஏன்னா நானும் அந்த சங்கத்திலே பணம் போட்டு இருக்கேன். எனக்கும் வந்து சொல்லுங்க திவாலா நிஜம்மா இல்லே ஹவாலாவா ?? பேச்சு வார்த்தை நடக்குது. என்ன நடந்து என்ன பண்ண??
சங்க தலைவர் : என்ன பொருளாளரே நம்ம சங்கத்தோட நிதி நிலைமை எப்படி இருக்கு போட்ட பணம் கிடைக்குமா?? சங்கம் திவால்
இது கள்ளக்காதல்?
================
ஏதோ புதிர் போடற மாதிரி ஆரம்பம். எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருப்போம். மறுபடியும் இங்க வச்சி மொக்கை போடுறதுக்குள்ள சாந்தி மின்சார ரயில் நிலையம் போய்விட்டாள்.
அவளை ஓடிபோய் பிடிக்கிறதுக்குள்ள மூச்சு 300 மைல் வேகத்துல வாங்குது. இதெல்லாம் வேறே நடக்குது. போயி பாருங்க என்ன அட்டகாசம் பண்ணராருன்னு. இது கள்ளக்காதல்?
உருப்புடாதது_அணிமா
====================
திரு. அணிமா அவர்கள் பழகுவதற்கு இனிமையான நண்பர்ங்க என்ன கோவமா பேசினாலும் உங்களை சிரிக்க வச்சிடுவாரு நல்ல நகைச்சுவை மிகுந்த நண்பர். இந்த அணிமாவை நான் வன்மையா கண்டிகிறேனுங்க, இந்தியா போறேன்னு சொன்னாரு, அதுக்கு நம்ப எல்லாம் வேண்டாம்னு போறதா? அதுக்குதான் இந்த கண்டிப்பு. நானும் நிறைய முயற்சி பண்ணி அணிமா அவர்களை தேடி பாத்துட்டேனுங்க, நம்ப தம்பி S.K. கிட்டே கூட சொன்னேன், யப்பா தம்பி நம்ப அணிமா அங்கிட்டு எங்கிட்டாவது கண்ணுலே பட்டா உடனே பதிவு உலகத்துக்கு அனுப்புன்னு. தம்பி S.K.யும் ஆளுங்க, வேண்டியவங்க, வேண்டாதவங்க (என்ன வேண்டாதவங்க?? ), மற்றும் போலீஸ், CID எல்லாம் வச்சி தேடினாராம், ஆனா அணிமா சிக்கலையாம். இதுதான் இதுவரை நிலவரம்.
பாருங்க
நைஜீரியாவில் நடந்த பயங்கரம்
(பதிவர்-வாசகர் சந்திப்பு) போட்டு ஒரே அலம்பல் பண்னறாரு. படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க இதெல்லாம்
கொஞ்சம் ஓவரு இல்லே???? இவரு அப்பப்போ
எஸ் ஆய்டுவாறு. அப்பப்போ வந்து
எஸ் ஆனதுக்கும் சேர்த்து எல்லார் கிட்டேயும்
மல்லு கட்டுவாரு. இப்ப இங்கே போய் பாருங்களேன் என்ன அலம்பல் பண்றாருன்னு ( மீண்டு வந்த) அணிமா is back
( இது அந்த back இல்லீங்க )
நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.., இனி மேலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் முன் யோசியுங்கள், அப்படீன்னு சமுதாயச் சிந்தனையுடன்,
அணிமாவோட சொந்த கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்காரு, இந்த பழக்கம் வேண்டாம்னா நல்லது தானுங்களே. நல்லது யாரு சொன்னாலும் ஏத்துக்கணும் இல்லையா? இங்கே பாருங்க என்ன அழகா
படங்கள் போட்டு விவரத்தோட சொல்லி இருக்காருன்னு.
விஜய்
=====
வெட்டி வம்புன்னு சொல்லுவாங்க ஆனா விஜய்....
காணக் கண்கள் கோடி வேண்டும்
=============================
காலை 5.00 மணி. பெங்களூர் மார்கழிக் குளிரில் ஜாகிங் வாக்கிங் போகும் கடமை கண்ணாயிரங்கள் கூட இழுத்துப் போர்த்தி உரங்கும் நேரத்தில் நான் என்ன செய்கிறேன். மார்கழி மாசத்தில் அதிகாலையில் கோவிலுக்கு வரச் சொன்ன்னாள் அம்மா. அதிகாலையில் எழுந்து குளிரை எதிர்கொண்டு,
ஸ்வெட்டர் மஃப்ளர் ஏதும் இல்லாமல் சில்லென்று அடிக்கும் காற்றில் நடந்து பெருமாளை சேவித்து வந்தோம். இதெல்லாம் நடந்தது ஒரு வாரம். ஒரே வாரம். அடுத்த வாரத்திலிருந்து,
“அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்” என்று இழுக்க, பிள்ளைக்காக பெருமாளைத் துரந்தது, மார்கழி மாதத்துக் குளிருக்கு தனி மகத்துவம் உண்டுங்க. அதுவும் பெங்களூர்லே நம்ம விஜய் பாவம்ங்க. என்ன பாடு படராருன்னு பாருங்க.
பித்து மனம் கொண்ட தாய் மனது.
ஹம் ஹோங்கே காம்யாப்
=======================
ச்சேசே விஜய் ரொம்ப நல்லவரு. வெட்டி வம்பும் பண்ண மாட்டாரு, திட்டவும் மாட்டாரு. இந்த பாட்டு நம்ப நண்பருக்கு ரொம்ப பிடிக்குமாம். கொஞ்சம் அமைதியா இருந்து பாருங்க. உங்க காதுலே விழலையா?? ஹையோ ஹையோ, விஜய் இங்கே பாடலைங்கோ, பெங்களூர்லே பாடறாரு.
இந்த வருடத்தில் எப்படியாவது என் உடம்பு எடையைக் குறைப்பது என்ற தீர்மானத்தை, என்ன தான் காயத்ரி(தங்க்ஸ் தங்க்ஸ்), என் சம்மதமேயில்லாமல் அவளாக நிறைவேற்றிக் கொண்டாலும், நானே கோதாவில் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ரொம்ப குண்டா இருக்காராமா!!! பாவம் ரொம்ப குண்டக்க மண்டக்க கஷ்டப் பட்டிருக்காரு.
ரொம்ப யத்தினப் பட்டு தலை கீழாக சிரசாசனம் செய்கையில், கைக்கடியில் ஏதோ கடித்துத் தொலைக்க அப்படியே, மாட்டு வண்டி குடை சாய்வது போல் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே இருக்கும் இடுக்கில் விழுந்து தொலைக்க, சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது. விஜய் என்னா ஆனாறுன்னு தெரியுனுமா. உடனே விரைந்து செல்லுங்கள், இதோ உங்கள் விஜய் விஜய் விஜய்...
ரயில் பயணங்களில்
==================
அடுத்த நீண்ட பயணம், சென்னையிலிருந்து கொல்கத்தா. இப்போதும், கூட வந்தவர்களில் பெறும் பாலும் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆங்கிலத்தில் பேச்சையெடுத்தாலும், “கீ ஆஷ்சே”, “எந்துக்கு, ஆய்ப்பெயந்தி” என்று அவர்கள் பாஷையிலேயே பதிலளிக்க, நம்மால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கொல்கத்தா வரை மௌன விரதம் தான்.
இப்படி எல்லாம் பாஷை தெரியாமல் கஷ்டப் பட்டதை அருமையா சொல்லி இருக்காரு. உங்களுக்கும் இது பிடித்திருக்கும்ன்னு நினைக்கிறேன். கொஞ்சம் போயி அவரை எட்டிப் பாத்துட்டு வந்திடுங்களேன்.
ரயில் பயணங்களில்.
எனக்குப் பிடித்த உலக நீதி இயற்றிவர்: உலகனாதனார் ========================குற்றமொன்றும் பாராட்டித் திரியா வேண்டாம்
கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
இன்று என் முடிவுரை
===================
நல்லதையே நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்
மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா