அன்பின் சக பதிவர்களே இன்றுடம் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சுகுமார் சுவாமிநாதன் ஏழு இடுகைகள் இட்டு அறுபதுக்கும் மேலாக மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். பல்வேறு துறைகளில் சிறந்த பதிவுகளைத் தேடிப் பிடித்து பல பதிவர்களை அறிமுகம் செய்து - நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்து அறிமுகம் செய்திருக்கிறார். சுகுமார் சுவாமிநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளை நவம்பர் முதல்...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் கடைசி நாளான இன்று பதிவுகள் எனது கடைசி விருப்பங்களை தெரிவிக்கிறேன். (ஏன்யா இப்படி தலைப்பு வச்சு கொல்றன்னு நினைப்பவர்கள். ஃப்ரீயா விடுங்க...)
தனியா-வர்த்தனம் 1
எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளை பரபரப்பில்லாமல், ஓய்வான நாளில் மனம் அமைதியாய் இருக்கும்பொழுது ரசித்து படிப்பேன். இவரது இந்த பயண கட்டுரையை...
மேலும் வாசிக்க...

சினிமா சார்ந்த பதிவர்கள், தொழில்நுட்பம் சார்ந்து பதிவிடுபவர்கள் என தனித்தனியே சொல்லி விட்டேன். இன்று எப்படி வகைப்படுத்துவது என யோசித்து குழம்பியதுதான் மிச்சம். ஆகவே பிற வகைகளை சார்ந்த பல பதிவர்கள் குறித்து இன்று அறியத்தருகிறேன். அதுதான் பிற பல பதிவர்கள்!
குசும்பன்சிலரிடம் நண்பராய் இருப்பது ஆனந்தமாய் இருக்கும். சிலரிடம் நண்பராய் இருப்பது...
மேலும் வாசிக்க...

பதிவுகள் தெரியும். அது என்ன பதிவுகல்? பதிவில் கல்லா.. என நினைக்காதீர்கள். கல் என்பதை இங்கே கற்றல் என எடுத்துக்கொள்ள வேண்டும். வலைச்சரத்தில் இன்று இணையத்தை குறித்தும், மென்பொருட்கள் குறித்தும், இவை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் நான் அறிந்த பதிவுகளை அறிமுகப்படுத்துகிறேன்.
பதிவர் வடிவேலன் அவர்களின் இந்த பதிவில் கணிணியில்...
மேலும் வாசிக்க...

முன்பு பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் வானொலி நண்பர்களுக்கு நன்றி என்றுதான் போடுவார்கள். சமீபத்தில் பார்த்த பாஸ் என்கிற பாஸ்கரனில் இணையதள நண்பர்களுக்கும் நன்றி என சேர்த்து போட்டிருந்தார்கள். சினிமா வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் இணைய தளங்களின் பங்கும் கணிசமாக வளர்ந்து வருகிறது. வலைச்சரத்தில் நான்காம் நாளாகிய இன்று சில சினிமா சார்ந்த பதிவுகள்...
மேலும் வாசிக்க...

வலையுலகில் அறிவூட்டும் பதிவுகளை பகிர்வோர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இவ்வாறான பதிவுகளுக்கு ஹிட்ஸ் அவ்வளவாக வரவில்லையென்றாலும், இவர்களது பதிவுகள் காலம் கடந்தும் தேடப்படும் கட்டுரைகளாக நிற்கும். வலைச்சரத்தில் மூன்றாம் நாளான இன்று அறிவூட்டும் பதிவுகளில் முதல்கட்டமாக கணிணி வரைகலையினை கற்றுத்தரும் பதிவுகள் குறித்து அறிமுகப்படுத்துகிறேன்.
கிராபிக்...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் இரண்டாம் நாளான இன்று நான் தவற விடாமல் தொடர்ந்து படிக்கும் பதிவர்கள் குறித்தும் அவர்களிடம் எனக்கு பிடித்த பதிவுகள் குறித்தும் அறிமுகப்படுத்துகிறேன். காலையில் எழுந்தவுடன் இவர்கள் ஏதாவது பதிவு போட்டிருக்கிறார்களா என பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையே. இவர்களை தொடர்ந்து படிக்கும்பொழுதில் அவர்களுடனே நாம் ஒரு ஹாஸ்டல்...
மேலும் வாசிக்க...

ஒரு ஆச்சர்யமான உண்மையை சொல்லப்போனால், "என்னடா வலைச்சரத்தில் எழுத நம்மை அழைக்கவில்லையே" என நான் சமீபத்தில்தான் யோசித்தேன். நாம் எவை குறித்து நம் எண்ணங்களை செலுத்துகிறோமோ, அவற்றை நோக்கி ஈர்க்கப்பட்டு அவைகளை கையில் கிடைக்கபெறுகிறோம் என்கிற பிரபஞ்ச விதிப்படி நான் யோசித்த இரண்டே வாரங்களில் ஆனந்த அதிர்ச்சியாக சீனா ஐயா அவர்களிடமிருந்து...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற விசா, தனது கடமையினை சரிவர நிறைவேற்றி மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஐந்து இடுகைகள் இட்டு, ஏறத்தாழ அறுபத்தைந்து மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினர் சார்பில் பெருமை அடைகிறேன். அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ள சுகுமார் சுவாமிநாதனை வருக வருக என வலைச்சரக்...
மேலும் வாசிக்க...
சமீபத்தில் மாஜி எம்.எல்.எ ஒருவர் வருமான வரி அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்றபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டார். அவர் மேல் போதைபொருள் வழக்கும் நிலுவையில் உள்ளதாம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் போலீஸிடமிருந்து தப்பித்து சுதந்திரமாக நடமாடியிருக்கிறார். இதில் உச்சம் என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டு போலீஸின் பிடியிலிருந்து தப்பித்த ஒரு கைதி தொடர்ந்து எம்.எல்.ஏ பென்ஷன் வாங்கிக்கொண்டிருந்தார் என்பது தான்.எம்.எல்.ஏ வின் பென்ஷனை...
மேலும் வாசிக்க...
நான் ரசித்த சில பிரபலங்களின் இடுகைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். நித்தியானந்தா பற்றிய நித்திய நினைவுகளை சாரு தன் நித்திரையிலும் பிளாகிலும் அழித்துவிட்டதால் அந்த நவரச பதிவுகளை இங்கே அறிமுகப்படுத்த முடியாத கடமை தவறிய பதிவராக நான் வெட்கப்படுகிறேன்.இவை தற்போது நினைவிலிருந்த பிரபலங்களின் பதிவுகள் மட்டுமே. இன்னும் நான் ரசிக்கும் நிறைய பிரபலங்கள் நிறைய பிரபல பதிவுகள் மிச்சமிருக்கிறதென்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். ...
மேலும் வாசிக்க...
வீட்டு வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை என்று நான் எழுதினால் பணக்கார மேட்டிமை திமிர் பிடித்த உன் வீட்டில் வேலை செய்யவா ஏழைகள் படைக்கப்பட்டார்கள் என்று யாரேனும் எதிர்வினை ஆற்றும் அபாயம் இருக்கிறது. எனவே வேறு மாதிரியாக சொல்வதென்றால் ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்து காலம் தள்ளியவர்கள் இப்போது வீட்டு வேலைக்கு செல்வதில்லை. மாறாக அவர்கள் அலுவலகங்களில் ஹவுஸ் கீப்பிங் எனப்படும் அலுவலக பராமரிப்பு பணிகளுக்கு போய்விடுகிறார்கள். யாரோ ஒருவருடைய...
மேலும் வாசிக்க...
கள்ளக்காதல் என்ற சொல்லாடல் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்பதை பல முறை சொல்லியிருக்கிறேன். காதலென்று வந்த பிறகு கள்ளக்காதல் என்ன நல்ல காதல் என்ன?அறுபது வயதுக்குட்பட்ட யார் கொலைசெய்யப்பட்டாலும் காவல் துறை கள்ளக்காதல் என்ற கோணத்தில் விசாரிக்க தவறுவதேயில்லை. பிரேத பரிசோதனையோடு கற்பு பரிசோதனையும் அந்த சடலங்களுக்கு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான கொலைகளுக்கு கள்ள உறவுகளே காரணமாய் இருப்பதும் மறுப்பதற்கில்லாத உண்மை.தினத்தந்தியில் தொடர்ந்து...
மேலும் வாசிக்க...