07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 28, 2010

படம் காட்டும் பதிவர்கள்





முன்பு பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் வானொலி நண்பர்களுக்கு நன்றி என்றுதான் போடுவார்கள். சமீபத்தில் பார்த்த பாஸ் என்கிற பாஸ்கரனில் இணையதள நண்பர்களுக்கும் நன்றி என சேர்த்து போட்டிருந்தார்கள். சினிமா வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் இணைய தளங்களின் பங்கும் கணிசமாக வளர்ந்து வருகிறது. வலைச்சரத்தில் நான்காம் நாளாகிய இன்று சில சினிமா சார்ந்த பதிவுகள் குறித்து அறிமுகம் கொடுக்கிறேன்.

சினிமா பதிவுகள் குறித்து பதிவிடும்பொழுது பதிவர் கேபிள் சங்கர் அவரது வலைப்பூவை விட்டு சொல்ல முடியாது. உடனுடக்குடன் பட விமர்சனங்கள், இளையராஜா இசை ரசிப்பு அனுபவம், சினிமா வியாபாரம் என தொடங்கி பார்க்கிங்கில் பதினைந்து ரூபாய் கொள்ளையடிப்பது வரை சினிமாவை இஞ்ச் இஞ்ச்சாக ரசிப்பவர்.

சினிமாவை விமர்சன பதிவுகளோடு கட்டுப்படுத்தி விடாமல் சினிமா சார்ந்த ஆய்வு கட்டுரைகளை படித்திருக்கிறீர்களா..? பதிவர் முரளிக்கண்ணன் அவர்களின் நீரோடை வலைத்தளத்தில் ஏராளமாய் காணலாம். பல்வேறு கால நிலைகளில் தான் அனுபவித்த வெள்ளித்திரையினை வெகு ரசனையாய் கூறுகிறார்.

பதிவுலகின் மற்றுமொரு வசதி நாம் அறிய வாய்ப்பில்லாத பிற மொழி படங்களில் பதிவர்கள் ரசித்து வியந்தவைகள் பற்றி நாம் அறிந்துகொள்ள முடிவது.

பிற மொழி படங்கள் குறித்து சொல்கையில் பிள்ளையார் சுழி போட வேண்டியது பதிவர் வண்ணத்துப்பூச்சியார் எனப்படும் பட்டர்பிளை சூர்யாவிடம் இருந்து. உலக சினிமா குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு புத்தகம் எழுதி வருகிறார். இவர் அனுபவித்து சொல்லும்பொழுதே படம் பார்த்த உணர்வு கிடைத்துவிடும்.

பதிவர் ஜெய் இயக்கி வரும் 'பிற மொழிப்படங்கள் தமிழில் தளத்தில்' தான் பார்த்து வியந்த படங்கள் குறித்த விரிவான விமர்சனங்களை உணர்பூர்வமாகவும் ரசனையாகவும் சொல்கிறார்.

பிற மொழிப்படங்கள் குறித்த ஒரு லைப்பரரியாக விளங்குகிறது பதிவர் கீதப்ரியன் நடத்தும் இந்த தளம். விரிவான கதையுடன் கூடிய இவரது விமர்சனங்களை படித்து விட்டு படத்தை பார்த்தால் மொழி புரியாதவர்களுக்கும் எளிமையாக விளங்கும்.

நீங்கள் தீவிர ரஜினி ரசிகரா... ரஜினியை மையமாக வைத்து என்ன செய்தி வெளிவந்தாலும் அது குறித்த ஸ்பெஷல் ரிபோர்ட் இந்த தளத்தில் வந்துவிடும். ரஜினி ரசிகர்கள் ஹோம் பேஜ் ஆகவே செட் செய்துக்கொள்ள கூடிய தளம்.

சினிமா விமர்சனம் படிக்கும்பொழுதே சந்தோஷமாக படிக்க வேண்டுமா.. வேறு வழியேயில்லை நீங்கள் பதிவர் ஜெட்லியின் நீ கேளேன் தளத்திற்குத்தான் செல்லவேண்டும். தியேட்டர் நொறுக்ஸ் என ஸ்பெஷல் இணைப்புடன் லூட்டியாய் விமர்சிப்பதில் இவர் கிங்,

பத்திரிக்கையில் வெளிவராத சினிமா சார்ந்த உண்மை சம்பவங்களை படிக்க வேண்டுமா...? அந்தணன் அவர்களின் அடிக்கடி தளமும் உதயசூரியன் அவர்களின் சுடச்சுட தளமும் இவ்வாறான பல நிகழ்ச்சிகளை சிதறுதேங்காய் போட்டுடைப்பது போல் போட்டு உடைக்கிறது. படித்து சிரித்து வயிறு வலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.


மீண்டும் நாளை சந்திப்போம்.


அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

3 comments:

  1. கடின உழைப்புடன் போடப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல தொகுப்புங்க.

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல அறிமுகங்கள்...

    கலக்குங்க நண்பரே.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது