07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 16, 2011

கதைகள்


கதைகளையும் கவிதைகளையும் வலைப்பூக்களில் அதிகம் காணலாம். பத்திரிக்கைகளில் வெளியாகுமோ ஆகாதோ என்ற தயக்கமில்லாமல், தங்கள் திறனை எப்படி வெளிப்படுத்துவது என்றக கவலையில்லாமல் இங்கே தாரளமாக நம்மை நம் முயற்சியை செய்யலாம்.

இன்று கதைகள் கவிதைகள் சம்பந்தபட்ட பதிவுகளை இடுகிறேன். முதலில் நான் ரசித்த கதைகளில் பத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

கடைசி நிமிடங்கள் கணேஷ் இவர் நன்றாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகளையும் அறிவியல் விசயங்களையும் எழுதுவார். இவரின் படைப்புகளில் என்னை கவர்ந்த ஒன்று இது.
ஒரு குட்டி ஆசை! பொன் கார்த்திக் எல்லோர் வாழ்விலும் இது போன்ற ஒரு ஆசையும் கசப்பான அனுபவமும் இருக்கும். அதைப் போன்ற ஒரு விசயத்தை பற்றிய கதை. இவரின் பதிவுகள் எல்லாமே வாழ்க்கை அனுபவம் போலவும் கதைகள் போலவும் இருக்கின்றன.
பைரவன் கோவிலுக்கு வழி pappu இவரும் விஞ்ஞான சிறுகதைகள் நிறைய எழுதுவார். மேலும் நகைச்சுவை, கவிதை, சினிமா என பல வித பிரிவுகளில் எழுதுகிறார். இவரின் இக்கதை ஒரு வித்தியாசமான ஒன்றுதான்.
உலகின் கடைசி மனிதன் Prasanna இதுவும் ஒரு விஞ்ஞான கதைதான். நிச்சயம் ரசிப்பீர்கள். இவரும் கதை, கவிதை, கட்டுரை என பல விசயங்களை எழுதுகிறார்.
இதுவும் கடந்து போகும் தமிழ் உதயம்இவர் பல வித சமூகக் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார். இக்கதை நிச்சயம் உங்கள் உணர்வுகளை அசைத்துப் பார்க்கும்.
60+இன் புலம்பல் G.ராமசாமி இவ்வலைப்பூவில் பலர் எழுதிய ஏராளமான கதைகள் உள்ளன. பல விதமான கதைகள் ரசிக்க கிடைக்கும். சில விசயங்கள் எத்தனைக் காலங்கள் ஆனாலும் மாறாது என்பதை சொல்லும் கதை இது.
நாயே நாயே பத்மினி இவரது வலைப்பூவில் ஏராளமான நகைச்சுவை கதைகளை காணலாம். தில்லுதுர, டேனி போன்ற கதாபாத்திரங்கள் வாயிலா நிறைய நகைச்சுவை கதைகளை சொல்கிறார்.
அடடே..நம்ம குவார்டர் கோவிந்தனக் கேக்குறீங்களா?? படைப்பாளி குட்டியாக குட்டியாக கவிதைகள் எழுதுவதில் வல்லவர் இவர். ஓவியமும் நன்றாக வரைவார். இவர் எழுதிய ஒரு வித்தியாசமான கதை இது.
கால்ஷீட் பிரபு எம் இவர் விளையாட்டு, சினிமா, கதைகள் போன்று பல பிரிவுகளில் எழுதுகிறார். இவரின் ஒரு நல்ல வித்தியாசமான கதை இது.
வீடு சித்ரன் வாடகை வீட்டில் இருக்கும் நிறைய பேரின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கதை இது. இவரின் வலைப்பூவில் நல்ல கதைகள் பலவற்றை காணலாம்.

அடுத்து பத்து கவிதை வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்.


 
இந்தப் படம் கூட ஒரு கதை சொல்லும்!

11 comments:

  1. அறிமுகப் படுத்தும் விதமும், பக்கங்களும் அருமை..
    தொடரவும்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. இங்கே வழங்கப்பட்டிருந்த கதைகள் கிட்டத்தட்ட அத்தனையுமே புதியவைதான் எனக்கு.... ஒவ்வொன்றாக விரும்பிப் படித்துக்கொண்டிருக்கும்போது இடையே என் கதையையும் பார்த்தபோது ரொம்ப மகிழ்ச்சி எஸ் கே..... நன்றி நண்பா...... கவிதைகளுக்காக ஆர்வமாய்க் காத்திருக்கிறேன்... :)

    ReplyDelete
  3. அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்..வலைச்சர அரங்கத்தில் எனது கதையையும் அரங்கேற்றிய நண்பர் எஸ்.கே க்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  4. நன்றி எஸ்.கே சார். ஏனைய சிறந்த எழுத்தாளர்களுடன் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு.

    ReplyDelete
  5. வித்தியாசமாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள், சிறப்பான அறிமுகங்கள் எஸ்.கே சார்

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  7. சிறப்பான அறிமுகங்கள் எஸ்.கே.

    ReplyDelete
  8. அத்த்னையும் புதுமை எஸ்.கே. தேடிப் படித்து அறிமுகம் செய்தமை நன்று. பத்தும் சென்று பார்த்தேன் - படித்தேன் - இரசித்தேன் - மறு மொழி போட்டென் -நல்வாழ்த்துகள் எஸ்.கே - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. எனக்கு பிடித்த என் கதையை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி :) மற்ற கதைகளை படித்து கொண்டு இருக்கிறேன். நல்ல உழைப்பு :)

    ReplyDelete
  10. நன்றி நண்பரே சில காலம் வேலை பளுவால் தொடந்து எழுத்து முடிவதில்லை. ஆனால் உங்களுடயே இந்த அறிமுகம் எனக்கு ஒரு தூண்டுகோல். இனி தொடந்து எழுதுகிறேன் நன்றி..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது