07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 17, 2011

சமூகம்


சமூகக் கட்டுரைகளும் அறிவியல் கட்டுரைகளும் நம் உணர்வுக்கும் அறிவுக்கும் பயனளிப்பவை. இன்று அப்படிப்பட்ட சமூக/அனுபவ மற்றும் அறிவியல் வலைப்பூக்கள் மற்றும் பதிவுகளைப் பற்றி காணப் போகிறோம்.

சமூகக் கட்டுரைகளில் பல ஆழ்ந்த கருத்துக்கள் செறிந்திருக்கும். சில சமயங்கள் பதிவர்களின் அனுபவங்கள் கூட நமக்கு பாடங்கள் கற்றுத்தரும்.

» I accept my defeat Dr.SR - Muniappan
இவர் ஒரு மருத்துவர். பல விதமான அனுபவக் கட்டுரைகளை நன்கு ரசிக்கும்படி எழுதுகிறார். இக்கட்டுரையில் தன் வாழ்வில் தன் சீனியர் டாக்டர் ஒருவரின் பெருந்தன்மையை போற்றிச் சொல்கிறார்
» தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழி - ஊடகன்
இவரது வலைப்பூவில் பலவிதமான சமூகக் கட்டுரைகளை காணலாம். இது தன்னம்பிக்கை அளிக்கும் நல்லதொரு பதிவாகும்.
» வாழ்க்கைக் கோலங்கள் - Kalidoss
இவர் கவிதை அனுபவக் கட்டுரைகள், சமூகக் கட்டுரைகள் என பலவற்றை எழுதுகிறார். இந்த வாழ்க்கைக் கோலங்கள் தொடர் வாழ்வில் பல முக்கிய தருணங்களை சுவைபடச் சொல்லும் ஒரு அனுபவக் கட்டுரைத் தொடர் ஆகும்.
» Taken for granted! - அன்புடன் அருணா
இவர் கவிதை கட்டுரை என பல விதங்களில் எழுதுகிறார். நன்றி சொல்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் இக்கட்டுரை சிறப்பாக உள்ளது.
» நம் இலக்கை நாம் அறிந்தால் வெற்றி நம்மை அறியும்..!! - பிரவின்குமார்
இவர் நகைச்சுவை, கவிதை, பல்வித சமூகக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இந்த பதிவு ஒரு சிறந்த வெற்றிக்கான இலக்கை நாம் தீர்மானிப்பதின் முக்கியத்துவத்தை சொல்கிறது.
» அனுபவம் புதுமை - Geetha Ravichandran
இவர் கவிதை, கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இந்த பதிவு நம் அனுபவங்களை பற்றியும் அதனிலிருந்து நாம் எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும்  சொல்கிறது.
» குழந்தைய பெக்கச் சொன்னா குட்டி சாத்தானை ... - இரவு வானம்
இவர் நகைச்சுவை, கதை, கட்டுரைகள், சினிமா  போன்றவற்றை எழுதி வருகிறார். இந்த பதிவு இக்காலத்தில் குழந்தைகளின் பேச்சு வழக்கம் சிறு வயதியிலேயே எப்படி மோசமாக மாறிவிட்டது என்பதை வேதனையுடன் விளக்கும் ஒரு பதிவாகும் சிறந்த வெற்றிக்கான இலக்கை நாம் தீர்மானிப்பதின் முக்கியத்துவத்தை சொல்கிறது.
» என்னோட ராவுகள் . . . - மார்கண்டேயன்
இவர் கவிதை,  கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். தன் சொந்த ஊரான மதுரையில்  இளமைக்காலங்களை பற்றி சற்று நெகிழ்ச்சியாக சொல்கிறது இ ந்த பதிவு.
» விளையாட்டுப் போட்டியும் மாங்காய் மரமும்… - Mohamed Faaique
இவர் நகைச்சுவை, கதை, கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இந்த பதிவு தன் பள்ளி அனுபவத்தை மிக நகைச்சுவையாக சொல்லும் ஒரு பதிவாகும்.
» செதுக்குமுத்து - விமலன்
இவர் கவிதை, பல்வித அனுபவக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இவரது அனுபவங்கள் படிக்கும்போது கதைகள் போல இருப்பது வித்தியாசமாக உள்ளது. நம் வாழ்வில் இயல்பாக நிகழும் விட்டுப்போகும் வேலைகள் பற்றி ஒரு நெடிய அனுபவப் பதிவு.

அடுத்த பதிவில் பத்து அறிவியல் பதிவுகளை சுட்டிக்காட்டுகிறேன். நன்றி!

16 comments:

  1. நன்றி சகோதரம்... பிரயோசனமான தொடுப்புகள் தான்.. நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

    ReplyDelete
  2. பல புதியவர்கள்... அற்புதமான படைப்புகள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அர்த்தமுள்ள அருமையான அறிமுகங்கள்.
    நன்றி எஸ்.கே.

    ReplyDelete
  4. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அல்லாரும் சொன்னத ஒரு தபா ரிபீட்டோய்..

    ReplyDelete
  6. நன்றி அய்யா நன்றி..
    இது போன்ற அறிமுகங்கள்தான் எங்களை இன்னும் எழுதத் தூண்டுகின்றது..

    ReplyDelete
  7. அறிமுகத்துக்கு நன்றி!
    புதுமையாகப் பதிந்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  8. நன்றி எஸ்.கே. தலைவா.... எமது வலைப்பக்கத்தையும் இங்கு அறிமுகப்படுத்தியதில் அளவற்ற மகிழ்ச்சி. அலுவலகத்தில் அதிகப்பணி இருப்பதாலும், கிடைக்கின்ற நேரத்தில் மற்ற நண்பர்களின் வலைப்பக்கங்களை படிப்பதாலும் என்னால் தொடர்ச்சியாக எழுத இயலவில்லை.

    ReplyDelete
  9. பகிர்வுகளை பயனுள்ளதாய் கருதி ஏனையோருக்கும் அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றிங்க திரு எஸ்.கே.

    ReplyDelete
  10. என்னுடைய பதிவினையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி எஸ்.கே சார், உங்களுடைய அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பு...

    ReplyDelete
  11. உங்களுடைய அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பு... அனைவருக்கும் வாழ்த்தக்ககளள்.

    ReplyDelete
  12. வணக்கம் எஸ்.கே சார் நலம்தானே?நன்றிகள் உள்ளவரை மனிதமனம் மலர்வது சாத்தியபடுகிறதாய் சொல்கிறார்கள்.
    எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றி.சிரம்தாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  13. நன்றி எஸ். கே., உங்களின் சமூகத்தில் வலைச்சரமாய் என்னையும் கோர்த்து பெருமை சேர்த்ததற்கு,

    உங்களிடமிருந்து இந்த அரிய ஊக்குவிக்கும் பண்பையும் கற்றுக்கொள்ள வேண்டும்,

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது