விடுமுறை நாளின் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே...
நம்முடைய நிறைவேறாத ஆசைகளை கனவுகளை நம் பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறோமா? அப்படி செய்தால் அது சரியா? பெரிய டான்ஸராகனும் என்பது என் கனவு.. ஆனால் என் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அதனால் என்ன? நான் சாதிக்காததை என் பிள்ளை சாதிக்கும்.. நடனத்தில் சாதிக்க வைப்பேன்.
இப்படியாக தன் கனவு நிறைவேறாத ஒவ்வொரு பெற்றோரின் துடிப்பான வரிகள். இங்கே நிறைய இஞ்ஜினியர்கள். அவர்களுடைய பிள்ளைகளும் இஞ்ஜினியரிங் தான் படிக்கவேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள். டாக்டரின் மகன் டாக்டர் தான் ஆகவேண்டுமா? பெற்றோர் பிள்ளையின் பக்கம் நின்று பிள்ளையின் ஆசை அவன் கனவு என்னவென்று அறிய முயன்றால் நலம்.
பிள்ளைக்கும் தன் பெற்றோரின் கனவை நாம் நனவாக்குவோம் என்று முயன்று சாதிக்க முன்னேறுவது இயல்பான விஷயம். அப்படி இல்லாமல் போய், பிள்ளையின் கனவு வேறு மாதிரியாக இருந்துவிட்டால்? இஞ்ஜினியருக்கு தான் படிக்கவேண்டும் என் பிள்ளை.. அதனால் அந்த பிள்ளையை படி படி படி என்று சிரமப்படுத்துவது சரியல்லவே. அந்த பிள்ளைக்கு வேறு எதுவாகவோ ஆக விருப்பம்..
அதன் லட்சியம் வேறு ஏதாவதாக கூட இருந்திருக்கலாம்.. அதனால் பெற்றோர் தன் கனவை தன் பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளுமுன், பிள்ளையின் கனவு லட்சியம் என்னவென்று அறிந்து அதில் முன்னுக்குக்கொண்டு வர பிள்ளைக்கு துணையாக நின்று அவன் சாதனையில் பங்கேற்றுக்கொண்டால் பிள்ளையின் லட்சிய பெற்றோர் ஆவார். அது நிச்சயம்..
காலங்கார்த்தால ஆரம்பிச்சிட்டியா என்று கேட்டுவிடுமுன் சுருக்க முடித்துக்கொள்கிறேன் என் பிரதாபத்தை.. பதிவர்கள் அறிமுகத்துக்கு போய்விடுவோமா?
மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்
1.
தனி மரம்
தனிமரம் என்று சொல்லிக்கொள்ளும் வலைதளத்துக்கு சொந்தக்காரரான இவரின் எழுத்துகள் மசாலா சேர்த்த வேர்க்கடலை சாப்பிட எத்தனை சுவையோ அதுபோல் இவரின் விமர்சன வரிகள் அத்தனை ரசனை.
கையறு நிலை
2.
கலா தென்றல்
தென்றலின் வலைதளத்தில் சென்று சற்றே இளைப்பாறலாம். எழுத்துகள் அங்கே கவிதையாய் மிரட்டும், குழந்தையாய் கொஞ்சும், தாய்மையாய் கனிவை பொழியும். எழுத்துகள் இங்கே ஜனரஞ்சகமாய் மிளிரும்.
மூச்சை தின்று தின்று
3.
ஆயுத எழுத்து
ஆங்காங்கே நிகழ்பவைகளை, நிகழ்த்துபவர்களை, சக, சுக, சிநேக மனிதர்களைப் பற்றியும் சுவாரஸ்யமாய் படைக்கும் பல்சுவை பரிணாம எழுத்துக்கு சொந்தக்காரர்.
சந்தேகமும் நம்பிக்கையும்
4.
பயணம்
முகமும் புன்னகையும் வெள்ளந்தியாய். ஆனால் எழுத்துகள் அனாயசமாய். குறும்படம் இயக்கும் அளவுக்கு முன்னேற்றம். உலக சினிமாக்கள் பார்க்க ஒரு குவாலிஃபிகேஷன் வேண்டும் என்று சொல்லுபவர் பல சினிமாக்களின் விமர்சனம் மிக தத்ரூபமாய் எழுதி இருக்கிறார்.
IFFI 2014 - A SHORT GLANCE
5.
தில்லையகத்து
தன்னைப்பற்றிய சுய அறிமுகம் கூட் ஆங்கிலத்தில் எழுதி உள்ள வலைதளத்துக்கு சொந்தக்காரரான இந்த ஆங்கில ஆசிரியர் வலைச்சர தொகுப்பினை மிக அழகாய் எழுதி இருக்கிறார். வாசித்து மகிழ்ந்தேன். அதையே பகிர்கிறேன்.
தில்லையகத்தின் அறிவுச்சுரங்கம்
6.
ஆர். உமையாள் காயத்ரி
சுவையான சமையல் குறிப்புகள் முதல் தீராக்காதல் கொண்ட கண்ணன் வரை எழுதி வசீகரித்த வலைதளத்துக்கு சொந்தக்காரர். கண்ணனைப்பற்றி எழுதிய ஒரு பகிர்வை பார்த்து சொக்கிப்போனேன். அதையே பகிர்கிறேன்.
மனமீர்த்த மாதவா பதில் சொல்
7.
கோவை 2 தில்லி
திருவரங்கத்து தேவதையின் வலைதளத்துக்கு சென்றால் அங்கே பல்சுவை விருந்தாய் அனுபவங்கள், சமையல் என்று அசத்தி இருக்கிறார். புதிய முயற்சியாய் செய்த சிறுதானிய பொங்கல் பற்றிய பகிர்வும் தந்திருக்கிறார்.
சிறுதானிய பொங்கல்
8.
அமைதிச்சாரல்
அமைதிச்சாரலின் எழுத்துகள் பெயருக்கேற்றார்போலவே அமைதியாய் தன்மையாய் இதமாய் பொழியும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். மென்மையின் வடிவமாய் அங்கு கவிதைகள் அழகு.
தேங்குதல் தவிர்ப்போம்
9.
பறத்தல் பறத்தல் நிமித்தம்
இவருடைய சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற சொல்லும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவர் எழுதும் விமர்சன வரிகளின் ரசிகை நான் முன்பே. நிலாமகளின் விமர்சன எழுத்தே இப்படி என்றால் இவருடைய படைப்பு இன்னும் எத்தனை அழகாக இருக்கும். வாசித்து பாருங்கள்.
அப்புறம் என்னாச்சு?
10.
கவியாழி
இடையறாது பொழியும் கவிதை பிரவாகத்தில் சுகமாய் வாசகர்களை மிதக்க வைக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.
இறைவா எங்கே நீ இருக்கின்றாய்?
11.
ஊமைக்கனவுகள்
கனவுகள் வேண்டுமானால் ஊமையாக இருக்கலாம். ஆனால் இந்த எழுத்தரின் சிந்தனை எப்போதுமே எதையாவது சிந்திப்பதும் எழுதிக்கொண்டிருப்பதும் இவருடைய பகிர்வில் தெரிகிறது.. என்ன ஏன் எது என்று தெரிந்துக்கொள்ள விழையும் ஒரு மழலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எத்தனை சுவாரஸ்யமும் அழகோ அத்தனை சுவாரஸ்யமும் அழகும் இவர் வலைதளத்தில் இருக்கும் பகிர்வுகள்.
பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு
12.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
படிச்சுப்பாருங்க ஏமாறமாட்டீங்க என்ற உத்தரவாதத்துடன் தொடங்கும் அற்புதமான எழுத்துக்கு சொந்தக்காரர்..
உங்க வள்ளி அத்தைக்கு சாமி வருமாமே?
13.
அரட்டை
காபி என்றால் அது ஃபில்டர் தான் என்பது போல அரட்டை என்றாலும் அதில் ஆக்கப்பூர்வமாக கருத்து மிக்கதாக எழுதிக்கொண்டு செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
ஹள்ளி மனேயும் டைப்ரைட்டரும்
14.
ஆறுமுகம் அய்யாசாமி
எழுதும் விஷயத்தை சுவாரஸ்யத்துடன் நகைச்சுவையை மிதமாக கலந்து பகிர்வதில் முதன்மையானவர் இந்த எழுத்தர். இவருடைய பகிர்வை படித்ததும் சிரிப்பு வந்தாலும் யோசிக்கவும் வைத்தது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த எழுத்துகளின் சொந்தக்காரர்.
கொள்ளையோ கொள்ளை
15.
செய்தாலி
அடர் மழை அடாது பெய்துவிட்டு மழை ஓய்ந்தாலும் சிலுசிலுப்பும் சாரலும் எப்படி தொடர்ச்சியாக இருந்துக்கொண்டிருக்குமோ அதுபோல் கவிதை மழையில் சுகமாய் நனையவைத்துக்கொண்டே இருப்பதில் வித்தகர். கவிதையும் ஜனரஞ்சகமாக, சமூக சிந்தனைகள், அனுபவங்கள், காதல் கவிதைகள் என்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர்.
சலாவுதீன் காக்கா
16.
சைக்கிள்
இவர் எழுதும் கவிதை வாசிக்கும்போதே வாசிப்போரின் சுவடு எங்கோ அதில் பதிந்திருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தரவைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர். கவிதையின் வரிகள் மட்டுமல்லாது அதற்கு வைக்கும் தலைப்பே வெகு அழகாக ரசனை மிக்கதாக இருக்கும் இவர் வலைதளத்தில்.
களிச்சிற்றலை
17.
டாக்டர் பி.ஜம்புலிங்கம்
இன்றைய மாணாக்கர்கள், இளைஞர்கள், இளைஞிகள் அறிய வேண்டிய அவசியமான பழைய கால பொக்கிஷத்திலிருந்து நிறைய அரிய விஷயங்களை கண்டுப்பிடித்து ஆராய்ச்சி செய்து அதை அப்படியே நமக்கும் பகிரும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.
தஞ்சை பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள்
18.
எனது எண்ணங்கள்
ஓய்வு வேலைக்கும், உடலுக்கும் மட்டும் தானே அன்றி மனசுக்கோ எழுத்துக்கோ சிந்தனைக்கோ அல்ல என்று நிரூபித்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர். ஆத்மார்த்த எழுத்துகளை வரைவதில் நிகர் இவரே. இவருடைய பகிர்வுகள் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும், உருக்கமாகவும் இருக்கும். யோசிக்க வைக்கும்படியாகவும் இருக்கும்.
மார்ச் மாதம் சம்பளம் இல்லை
19.
குழல் இன்னிசை
இவருடைய எழுத்து நடை மிக எளியதாக எல்லோரையும் சென்று அடையும் விதமாக மிக அருமையாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில், சொல்ல நினைத்த கருத்துகளை ஆழமாய் அழுத்தமாய் நெஞ்சுரத்தோடு எழுதும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். வலைதளத்தின் பெயர் குழல் இன்னிசை என்ற பெயர் வைத்ததில் இருந்தே இவர் கண்ணனுடைய நேசத்துக்குரியவர் என்பதும் அறிய முடிகிறது.
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம்
20.
ஆயிஷா ஃபாரூக்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது ஒரு வகை. இப்படித்தான் வாழவேண்டும் என்பது ஒரு வகை. இந்த எழுத்தரின் ஒவ்வொரு பகிர்வும் இவர் வாழும் வாழ்க்கையை பற்றியும், இவருடைய போராட்டம் நல்லதை நாடறிய செய்யவேண்டும் என்பதில் இருக்கும் உறுதியை பற்றியும் இருக்கும். சமூக சிந்தனையுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் நெருப்பில் தோய்த்து சாட்டையால் அடிப்பது போன்ற கம்பீர வரிகளுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர்.
மாற்றுத்திறனாளிகள் பாக்கியவான்கள்
வழியில் அவசரமாய் வேலைக்கு செல்லும்போது ரோடில் யாராவது மயங்கி விழுந்துவிட்டால் மயக்கம் போட்டு விழுந்தவரை முகத்தில் நீர் தெளித்து குடிக்க நீர் கொடுத்து பக்கத்தில் இருக்கும் ஆஸ்பிடலில் சேர்த்துவிட்டு செல்வீர்களா? அல்லது ஐயோ ஆபிசுக்கு லேட்டாறதே மேனேஜர் கடுவன் பூனை லேட்டானால் மெமோ கொடுத்துடுவாரே என்று கண்டுக்கொள்ளாமல் ஓடுவீர்களா?
மனிதம் எப்போது உயிர்த்திருக்கும்??? கண் முன் யாராவது துன்பப்படும்போது பார்த்தும் பார்க்காதது போல் செல்லாமல் சட்டென்று ஓடி போய் சகாயம் செய்ய முனைவோம்.. மனிதம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதரிடையே உயிர்த்தே இருக்கிறது என்பதின் அடையாளம் இதுவாக இருக்கும்.
இன்றைய நாள் எல்லோருக்குமே அற்புதத்தை தரும் நாளாக அமைய வேண்டிக்கொள்கிறேன் !!
நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன்.
அன்பு நன்றிகள் வணக்கம் !!