அடி வாங்கும் ஆண்கள்
➦➠ by:
வெங்கட் நாகராஜ்
நேற்றைய பதிவில் கோவர்த்தன் கிரி பற்றிய சில
விஷயங்களைப் பார்த்தோம். இன்று கோவர்த்தன்
அருகில் இருக்கும் [B] பர்சானா எனும் இடத்தினைப் பற்றிய விஷயங்களைப்
பார்க்கலாம்!
[B] பர்சானா – ராதையின் பிறப்பிடம் இந்த ஊர். நந்த்காவ்ன் எனும் இடத்தில் கிருஷ்ணர் தனது
பிள்ளைப் பிராயத்தில் இருந்தார் அல்லவா, அந்த இடத்திற்கு மிக அருகிலேயே இருக்கும்
ஊர் தான் இந்த [B] பர்சானா.
இவ்விடத்தில் தான் ராதா பிறந்து வளர்ந்தாராம். கிருஷ்ணர் வளர்ந்த இடமான
நந்தகோபரின் நந்த்காவ்ன் கிராமத்திலிருந்து ராதையின் ஊரான [B] பர்சானாவிற்கு ஹோலி சமயத்தில் அனைவரும் வந்து சேர்வார்கள்.
வட இந்தியாவில் ஃபிப்ரவரி/மார்ச் சமயத்தில் ஒரு நாள்
மட்டும் ஹோலி கொண்டாடுவது வழக்கம். ஆனால்
இங்கோ ஏறக்குறைய ஒரு மாதம் இந்த ஹோலி கொண்டாட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
தில்லி வந்த இரண்டொரு வருடங்களில் ஹோலி சமயத்தில் இங்கே சென்று நான்கு ஐந்து
நாட்கள் கொண்டாட்டங்களில் பங்கு கொண்டதுண்டு! இனிமையான நாட்கள் அவை!
படம்: இணையத்திலிருந்து....
இந்த ஹோலி கொண்டாட்டங்களில் ஒன்று தான் “லட் மார் ஹோலி” என்பது! [B] பர்சானா நகருக்கு வரும் நந்த்காவ்ன் ஆண்களை
அடித்து பின்னிப் பெடலெடுப்பார்கள்.
இம்முறை மார்ச் மாதத்தில் சென்றபோது கோவர்த்தன்
நகரிலேயே வண்டிகளை நிறுத்தி விட்டார்கள்.
[B] பர்சானா செல்ல நினைத்தாலும் நடந்தே தான் செல்ல
வேண்டும் என்ற நிலை – அதுவுமல்லாது அடி வாங்குவதற்காக அங்கே செல்ல வேண்டுமா என்ற
எண்ணமும் வந்தது! பொதுவாக வெளி ஆட்களை அடிப்பது இல்லை என்றாலும் ”விழற அடிகளில் ஒன்றிரண்டு நம் மேல் விழுந்து விட்டால்!” என்ற பயத்திலேயே அங்கே போகவில்லை.
படம்: இணையத்திலிருந்து....
அடிவாங்கும் ஆண்கள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் சில
படங்களை என்னுடைய பக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே
வெளியிட்டிருந்தேன். எனது பக்கத்தினை
தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு அது நினைவிருக்கலாம். அதிலிருந்து ஒரு பத்தி மட்டும் கீழே....
முன்பெல்லாம் சாதாரணமாக ஒரு விழாவாக இருந்தது இப்போது நிறைய மாறிவிட்டது. உத்திரப் பிரதேசம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான ஹரியானாவில் கூட இந்த “லட் மார் ஹோலி” நடக்கிறது. கிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள். முறைப்பெண்களும் அவரது முறைமாமன்களை துரத்தி அடிக்கிறார்கள் – அவருடன் கல்யாணம் ஆகாவிட்டாலும்! பெண்கள் அடிக்க, ஆண்கள் கேடயம் போன்ற ஒன்றால் தடுப்பார்கள். ஆனாலும் அடி விழுந்து விடும்!
முழுப்பதிவினையும் அப்போது படிக்காதவர்கள் வசதிக்காக,
இன்று இங்கேயும் அதன் சுட்டியைத் தருகிறேன்!
சரி நண்பர்களே, இனி இன்றைய அறிமுகப் பதிவர்களைப்
பார்க்கலாம்!
51. வலைப்பூ: கீவியின்
கூவல்கள்
இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் தான் இவர் பதிவுலகில்
பிரவேசம் செய்திருக்கிறார். புனிதா எனும்
பெயர் கொண்ட இப்பதிவர் இதுவரை வெளியிட்ட பதிவுகள் நான்கு மட்டுமே! தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதுங்கள் சகோ.....
அறிமுகப் பதிவு: டொட்டாரா
நியூசிலாந்து நகரில் இருக்கும் டொட்டாரா எனும்
மரத்தினைப் பற்றிய குறிப்புகளை இங்கே பார்க்க முடியும். பதிவிலிருந்து ஒரு பகுதி
இங்கே அறிமுகத்திற்காக!
நியூஸிலாந்துக்கே உரிய தாவரம். சின்னச் சின்ன முட்கள்
போன்ற கூரிய இலைகளும் சின்னதாக சிவப்பு பழங்களும் கொண்டது. இதன் பழங்கள்
பறவைகளுக்கு மிகப் பிரியமான உணவு. மரம்
மட்டும் பெரிதாக வளரும். முப்பது மீட்டர் வரை வளரக் கூடும். இங்குள்ள இரண்டு தீவுகளிலும்
பரவலாக எல்லா இடங்களிலும் வளர்கிறது. உக்கிப் போகாதிருப்பதும் சுலபமாகக் குடைத்து
எடுக்க முடிவதும் இந்த மரத்தின் சிறப்பு. ஆரம்ப காலத்திலிருந்து மஓறி மக்கள்
அவர்களது ஃபாறே (whare) கட்டுவதற்கு இவற்றைப்
பயன்படுத்தியிருக்கிறார்கள்.
52. வலைப்பூ: அனுவின்
தமிழ்த்துளிகள்
அனுராதா ப்ரேம் – இப்பதிவரும் வலைப்பூவில் எழுத
ஆரம்பித்தது இவ்வருடத்தின் ஜூன் மாதம் தான் என்றாலும் இது வரை 10 பதிவுகள் எழுதி
இருக்கிறார். சமையல், புகைப்படம் போன்ற
ஐந்து தலைப்புகளில் பதிவுகள் காண முடிகிறது. சின்னச் சின்னதாய் பதிவுகள்
வெளியிடுகிறார். தொடர்ந்து எழுத ஊக்கம் அளிப்போம்!
அறிமுகப் பதிவு: படித்ததில் பிடித்தது..
கடைசியாக படித்த விஜய் டி.வி. புகழ் கோபிநாத் அவர்களின்
”ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க” புத்தகத்தில்
படித்த, அதில் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
53. வலைப்பூ: தி.பரமேஸ்வரி
சென்னையில் பிறந்தவர்.
பூங்குழலி, திலீபா என்ற பெயர்களிலும் எழுதியுள்ள இவர் தமிழ் இலக்கியத்தில்
முனைவர் பட்டம் பெற்றவர். “ம.பொ.சி
பார்வையில் பாரதி”
என்ற பெயரில் இவரது
ஆய்வேடு நூலாக வெளி வந்திருக்கிறது. தவிர இரண்டு கவிதைத் தொகுப்புகளும் [எனக்கான
வெளிச்சம், ஓசை புதையும் வெளி] வெளியிட்டு இருக்கிறார்.
அறிமுகப் பதிவு: கழிப்பறை காணாத கல்விக்கூடங்கள்
பள்ளிக் கழிவறைகள் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தக
இல்லை என்பதும் அவற்றிலும் பல மாணவர்களின் பயன்பாட்டிற்கே விடப்படாமல் பூட்டியே
வைக்கப்படுவதும் சில பள்ளிகளில் நேர்கிறது. இடைவேளைகளில், உணவு வேளைகளில் ஒரே நேரத்தில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் இருக்கும்
ஓரிரண்டு கழிவறைகளைப் பயன்படுத்துவதும் ஒரு சிக்கலே. மாணவர் விரும்பும் நேரத்தில்
கழிவறையைப் பயன்படுத்த அனுமதிப்பதே இதற்குத் தீர்வாகும். இதனை ஆசிரியர் புரிந்து
கொள்ள வேண்டுமேயன்றி, மாணவர் தன்னை ஏய்க்கும் உத்தியாகவோ அல்லது
வகுப்பறையின் ஒழுங்கு குலைவதாகவோ நினைத்துத் தன் அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த
நினைத்தல் சரியல்ல.
இப்பதிவில் கொடுத்திருந்த பழ. புகழேந்தியின் கவிதையும்
இங்கே....
சார்''
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.
54. வலைப்பூ: என்
எண்ணம்
சோமசுந்தரம் ஹரிஹரன் என்பவரின் வலைப்பூ இது. 2010-ஆம்
ஆண்டு முதலே எழுதி வருகிறார். என்றாலும்
மிகச் சில பதிவுகளே இவர் பக்கத்தில் காண முடிகிறது.
அறிமுகப் பதிவு: மனித ரத்தத்தின் விலை என்ன?
எழுத்துக்காரன் சொன்னான், ஒருநாளைக்கு
ஒருவாட்டிதான் எடுப்பார்கள் என்று தன்னுடைய 16 ரூபாயை கொடுத்தான்.
‘அப்புறம் நீ எப்படி ஊருக்கு போவ’
‘ஊருக்கு நாளைக்கு
போய்க்கிறேன் இந்தா பணம்’
55. வலைப்பூ: எண்ணப்
பறவை
மகாசுந்தர் அவர்களின் வலைப்பூ இது. ”ஓவிய ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, தமிழ் ஆசிரியராகப் பணி. இலக்கிய, இசைப்
பட்டிமன்றங்களில் பங்கேற்பு. புத்தக வாசிப்பையும், மனித நேசிப்பையும் தொடர்வது” என்று தனது
முகப்பில் தன்னைப் பற்றிய குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார்.
அறிமுகப் பதிவு: இலக்கியச் சாரல்
உலக இலக்கியங்களுள் எந்தப்பாத்திரத்திற்கும் இல்லாத
தனிச்சிறப்பு காப்பியத்தில் சிலம்புக்கு உண்டு. காப்பிய நாயகி கண்ணகி மற்றும்
பாண்டிமாதேவியின் அணிகலன்களாக அமைந்து,காப்பியம் முழுதும் வந்து
கதையை இழுத்துச் செல்கின்றன.வாழ்த்திவழிபடுதல் வரையில் மூன்று காண்டங்களிலும்
சிலம்பு தொடர்ந்து விளங்கிக் காப்பியதையே நடத்திச் செல்வது போலுள்ளது.
என்ன நண்பர்களே இன்றைய பதிவினை ரசித்தீர்களா?
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
நாளை மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
|
|
அடி வாங்கும் கணவர்கள் தொடங்கி அறிமுகப் பதிவர்கள் வரை அனைத்தையும் ஆவலோடு படித்தேன். அதிக செய்திகள். சிறப்பான பதிவு. நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
Deleteஒரு தளம் புதிது... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteஅனைத்து பதிவுகளையும் இன்றுதான்
ReplyDeleteதொடர்ச்சியாகப் படித்தேன்
சுவாரஸ்யமான தகவல்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஊக்கம் தரும் உங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி ரமணி ஜி!
Deleteலட் மார் ஹோலி” பற்றிய தகவல் புதியது. பகிர்ந்தமைக்கு நன்றி. இன்ரூ அறிமுகப்படுத்தியுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
Deleteஅறிமுகங்கள் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
Deleteஇங்கு அறிமுகமாகியுள்ள அனைத்து வலைப்பூ பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்தக் கீவியையும் அறிமுகம் செய்தது... மிக்க மகிழ்ச்சி. நன்றி வெங்கட். :-)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புனிதா...
Deleteதங்களை அறிமுகம் செய்தமையில் எனக்கும் மகிழ்ச்சி...
நண்பர் மகாசுந்தர் அவர்களுக்கும், மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
Deleteடிடிக்கு ஒரு தளம்தான் புதிது! எனக்கு எல்லா தளங்களும் புதிது.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteதனபாலனுக்கு தெரியாத தளங்கள் மிகக் குறைவே!
Ariyatha thagavalgal , arimugapaduthiya puthiyavargal anaithum arumai
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீ சந்த்ரா.
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
Delete
ReplyDeleteஇன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!....
முதன் முறையாக என்னையும் இங்கு அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி... மகிழ்வுடன் அனுபிரேம்........
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்....
Deleteஉங்களை அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
Deleteசிறப்பான தளங்கள்! கவிதை மிகவும் சூப்பர்! அடிவாங்கும் ஆண்கள் ஹோலிவிழா அதிசயம்தான்! நன்றி!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
Deleteஹலோ! நண்பரே !
ReplyDeleteஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.
Deleteபத்து நாட்களாக வலைச்சரத்தை பார்க்கவேயில்லை. வந்து பார்த்தால் இங்கே நீங்கள் ஆசிரியராக அமர்ந்திருக்கிறீர்கள்!! மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு! மணம் மிக்க, இனிமை மிக்க பழங்கள் ஃப்ரூட் சாலட் வழியே நிறைய கிடைக்கும் தினமும் என்று நினைக்கிறேன்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
Deleteஅடிவாங்கும் கணவர்கள் சுவாரசியம். இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteலட் மார் ஹோலி” பண்டிகை பெண்களுக்கு மகிழ்ச்சியான திருவிழாதான் போலும்.
ReplyDeleteஇன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
Deleteசிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteநல்லதான தொகுப்பு.
நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.
Deleteலட்மார் ஹோலி தகவல்கள் புதிது பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
Deleteந்ன்றி எனது வலைப்பூ அறிமுகத்திற்கு..
ReplyDelete