07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 12, 2014

கூட்டுக் குடும்பம்




கூட்டுக்குடும்பம் என்றால் சாம்பார், ரசம் என்றெல்லாம் இல்லாது வெறும் கூட்டு மட்டும் சாப்பிடும் குடும்பம் போல என்று நினைக்கும் அளவிற்குத் தான் இன்று நாம் இருக்கிறோம். நமது முன்னோர்கள் பலரும் ஒரே வீட்டில் தங்களது குடும்பங்களோடு இருப்பார்கள். வீடு எப்போதுமே ஒரு கல்யாண கோலத்தில் இருக்கும். சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள், அத்தை, மாமா என்று எப்போதுமே 20-30 பேர் இருக்க, அனைவருக்குமான சமையல் நடந்து கொண்டிருக்கும். 

இப்போதெல்லாம் வீடு என்றாலே கணவன்–மனைவி, ஒன்றோ இரண்டோ குழந்தைகள் – பெரும்பாலான வீடுகளில் ஒரே குழந்தை மட்டும் தான். உறவினர்களைப் பார்ப்பதே வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ என்றாகி விட்டது. யாருக்காகவும் யாரும் விட்டுக்கொடுப்பதில்லை – கணவன் மனைவிக்குள்ளேயே விட்டுக்கொடுப்பது குறைந்து விவாகரத்துகள் பெருகி வரும் நிலையில் குடும்பத்தில் அனைவரும் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுப்பது அரிது தான்.

இப்போது பணி நிமித்தமாக அனைவரும் ஒரே ஊரில் இல்லை என்று சொன்னாலும், ஒரே ஊரில் இருப்பவர்கள் கூட தனித்தனி வீடுகளில் தான் வசிக்கிறார்கள். கிராமங்களில் கூட இந்தப் பழக்கம் புழக்கத்திற்கு வந்துவிட்டது.

இப்படியான நிலை இருக்கையில், சமீபத்திய குஜராத் பயணத்தின் போது நான் கண்ட ஒரு விஷயம் மிகவும் வியப்பாக இருந்தது.  நமது ஊரில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று படுக்கை அறைகள் கொண்ட அடுக்கு மாடி வீடுகள் கட்டுவதைப் பார்க்கிறோம்.  ஆனால் இங்கேயோ நான்கு, ஐந்து, ஆறு படுக்கை அறைகள் கொண்ட வீடுகளின் விளம்பரங்களைத் தான் பார்க்க முடிந்தது.  அதிலும் அதிக பட்சமாக ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தின் விளம்பரத்தினைப் பார்த்த எனக்கு மிகவும் ஆச்சரியம்!  - அதில் ஏழு படுக்கை அறை கொண்ட வீடுகள் இருந்தன – அதாவது 7 BHK வீடு!



இத்தனை படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் இங்கே அதிகம் தேவைப்படுகிறதாம். காரணம் இங்கே கூட்டுக்குடும்பமாக வசிப்பவர்கள் அதிகம்.  பயணத்தில் எங்களுக்கு வாகன ஓட்டியாக இருந்த வசந்த் பாய் கூட, இப்படித்தான் நான்கு அண்ணன் தம்பிகள் – அவர்களது மனைவி மக்கள் – என எல்லோரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்களாம்!   இன்னுமொரு நபர் வீட்டிலும் இப்படி மூன்று நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக ஒரே பெரிய வீட்டில் வசிக்கிறார்கள் – குடும்பத்தில் [30] முப்பது பேருக்கும் மேல் இருக்கிறார்கள்!

நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவின் வேறு பகுதிகளில் இப்படி 7 BHK வீடுகளைக் கட்டுவதுண்டா? கேள்விப்பட்டதுண்டா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...

சரி என்னுடைய வலைச்சரப் பணியின் மூன்றாம் நாளான இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்க்கலாமா?

6    வலைப்பூ: விஜய் கவிதைகள்

நல்ல கற்பனை வளம் இவருக்கு! நிறைய கவிதைகள் இவரது பக்கத்தில் காணக்கிடைக்கின்றன. 27.08.2009 அன்று தொடங்கிய இவரது வலைப்பயணம் வெற்றிகரமாய் ஆறாவது ஆண்டில்.....

அறிமுகப் பதிவு: பெயரற்றவள்



ஞாபக ஒட்டடைகளை  சற்றே விலக்கிப் பார்த்தால்  நீ மட்டுமே தெரிகிறாய் 
கருவிழிக்குள் நூறு 
கவிதைக்கான கரு 
நாசிக்கை எழுதி வாங்கும் 
நாசி 

7    வலைப்பூ: தமிழ் கவிதைகள்

2009 மே மாதம் “என்னைப் பற்றிஎன்று ஒரு பதிவு எழுதி அதன் பிறகு நான்கு வருடங்கள் காணாமல் போயிருக்கிறார்! ஜனவரி 2013-ல் தான் அடுத்த பதிவு!  கவிதைகள் இங்கே நிறைய கிடைக்கும்.

அறிமுகப் பதிவு: முதிர்கன்னி



நீ கிழித்தெறியும் நாட்காட்டி
உனக்கு உணர்த்தியிருக்கும்
காலம் என்றால் என்னவென்று...


உலகப் புகழ்பெற்ற சில புகைப்படங்களையும் அதன் பின்னணிக் கதையும் இங்கே காண முடிகிறது. http://poetry-tuesday.blogspot.com என்ற பெயரில் வலைப்பூ எழுத்த் தொடங்கிய இவர் தற்போதைய www.sairams.com க்கு மாறியது 2010 ஆம் ஆண்டு.  இவர் ஒரு பிரபலரும் கூட - விஜய் டிவியில் நடந்தது என்ன’ ‘என் தேசம் என் மக்கள்போன்ற  நிகழ்ச்சிகளின் இயக்குநர்.




அந்த வகுப்பறையில் உள்ள குழந்தைகளில் ஒரு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கதக்க ஒரு சிறுமி இருந்தாள். பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார்.

9    வலைப்பூ: சாஸ்வதம்

2038-ஆம் ஆண்டில் இப்படியும் நடக்கலாம் என நகைச்சுவையாக சில கற்பனைப் பதிவுகளை இவரது பக்கத்தில் காண முடிகிறது. அரிஷ்டநேமி என்ற பெயரில் எழுதும் இவர் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது 17-02-2013!




உங்களுக்கு குழந்தை எப்ப பிறக்கும்?
வர வருடம் ஏப்ரல் 1ம் தேதி.

இங்க பாருங்க, இந்த ப்ளான் உங்களுக்கு நிச்சயமா சரியா வரும். இதுல நீங்க வருஷம் 1 லட்சரூபா போட்டா உங்க குழந்தை 60 வயசு ஆகும்போது இது மெச்சூர் ஆகும். அவங்க சஷ்டியப்த பூர்த்திக்கி இது கரக்டா இருக்கும். இந்த ஸ்கீம் பேரு சுரபி சஷ்டியப்த பூர்த்தி.


இவரது சுய அறிமுகம் சற்றே வித்தியாசமாக :

திருமங்கலத்தில் உருண்டு, புரண்டு, அதன் புழுதியைத் தன் சட்டையில் அப்பிக்கொண்டிருந்தவனை எது, எதற்காக சென்னைக்கு அழைத்து வந்தது? இவன் இருக்க வேண்டிய இடமே வேறு என்று எது முடிவு செய்தது? இவன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய என்று எப்படி அது கண்டுபிடித்தது? ஒன்று மட்டும் தெரியும். நான் எதற்காகவோ வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு பரிசோதனை எலி. அந்தப் பிரபஞ்சவியல் பரிசோதனை என்ன? அந்தப் பரிசோதனைக்காக என்னை வளர்த்துக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர் யார்? இவையே என் தேடல்கள்... இத்தேடல்களே என்னை செலுத்தும் எரிபொருட்கள்... அந்த எரிபொருட்களே என் தேவைகள்... அந்தத் தேவைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பவை சில சேவைகள்... அந்த சேவைகளே இவைகளுக்கான பதில்கள்... அந்த பதில்கள்தான் நான்... ஆம், நானே எனக்கான தேடுபொருள்... அத்தேடலின் விளைவே எனது எழுத்துகள்...

அறிமுகப் பதிவு: திருச்சியில் ஹைக்கூ...

சிகப்பு
அபாய நிறம்
உதட்டுச் சாயம்!

என்ன நண்பர்களே, இன்றைய தலைப்பு சொல்லும் விஷயத்தினையும், இன்றைய அறிமுகப் பதிவுகளையும் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நாளை மீண்டும் வேறு சில பதிவர்களின் பதிவுகளோடும், குஜராத் பற்றிய வேறு சில செய்திகளோடும் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: எனது பக்கத்தில் இன்றைய பதிவு: மலையடியை முத்தமிடும் நதி – கவிதை எழுத அழைப்பு அதையும் படிக்கலாமே!

62 comments:

  1. ஐயா, வணக்கம். நேற்று அலுவலகப்பணி காரணமாக, இணையப்பக்கம் வரவில்லை. இன்று காலை தான் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தாமதமாக வந்திருப்பதை பொறுத்துக்கொள்ளவும் ஐயா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களை இங்கே அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.... தொடர்ந்து சந்திப்போம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி

      Delete
  2. அட நீங்கள் தான் இவ்வார வலைச்சர வாரத்திலா, கலக்குங்கள். சாய்ராம் அவர்களின் புகழ்பெற்ற கண்கள் வரிசையே வித்தியாசமாக இருக்கிறது என்றால் விஷ்ணுவின் அறிமுகம் படு வித்தியாசம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியர்!....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      Delete
  3. //நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவின் வேறு பகுதிகளில் இப்படி 7 BHK வீடுகளைக் கட்டுவதுண்டா? கேள்விப்பட்டதுண்டா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...//

    இதுக்கும் வடமாநிலங்கள் மொத்தமும் சொல்லலாம். குஜராத் மட்டுமின்றி ம.பி., உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப் என அநேகமான மாநிலங்களில் எப்போதும் கூட்டுக் குடும்பம் தான். அதன் சுவையை நன்கு உணர்ந்திருக்கிறேன். பெரியவர்களுக்கு இன்றும் காலில் விழுந்து மரியாதை செய்யும் வழக்கமும் அங்குள்ள இளைஞர்கள், இளம்பெண்களிடம் காண முடியும். எங்கள் அயோத்தி யாத்திரையின் போது எங்கள் காலிலேயே விழுந்தவர்கள் பலர்! :)))

    ReplyDelete
    Replies
    1. வட இந்தியாவில் மற்ற இடங்களில் கூட்டுக்குடும்பங்கள் இருந்தாலும் 7 BHK கொண்ட வீடுகள் இல்லை என்றே சொல்லலாம்!

      பெரியவர்களுக்கு இவர்கள் தரும் மரியாதையும் மெச்சத்தக்க விஷயம்.

      Delete
  4. முற்றிலும் வித்தியாசமான பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அது சரி ஒரு சந்தேகம். கேட்டுடலாமா??

    ஹிஹிஹி, ஆப்பீச்ச்ச்ச்சிலே வேலை ஏதேனும் உண்டா, இல்லையானு சந்தேகமா இருக்குங்க சாமியோவ்! :)))))))

    மீ த எஸ்கேப்பு! :))))

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா!

      நல்ல டவுட்டு உங்களுக்கு! :) காலையில் எட்டரை மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டால் வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகிறது! வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க மூன்று வாரங்களுக்கு முன்னரே அழைப்பு வந்ததால் இவற்றை கிடைக்கும் நேரத்தில் தட்டச்சு செய்து வைத்தேன்!

      Delete
  5. வித்தியாசமான அசத்தல் அறிமுகங்கள். எல்லோர் வலைக்கும் செல்ல வேண்டும்.


    நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவின் வேறு பகுதிகளில் இப்படி 7 BHK வீடுகளைக் கட்டுவதுண்டா? கேள்விப்பட்டதுண்டா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.//

    இல்லைங்க..கேட்கவே புதுசா இருக்கே.


    கூட்டுக்குடும்பம் என்றால் சாம்பார், ரசம் என்றெல்லாம் இல்லாது வெறும் கூட்டு மட்டும் சாப்பிடும் குடும்பம் போல என்று நினைக்கும் அளவிற்குத் தான் இன்று நாம் இருக்கிறோம்//

    ஹாஹாஹா...!!!.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

      Delete
  6. சுவாரசியமான அறிமுகங்கள்... சென்று பார்க்கத் தூண்டுகிறது நீங்கள் அறிமுகப்படுத்திய விதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்...கூட்டுக் குடும்பம் பற்றி கேள்விப்படும்போது ஆசையாய் இருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      Delete
  7. அட உங்களுடைய தளத்திலும் பதிவா?... எப்படிங்க முடியுது?.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கீதாம்மாவிற்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்! இரண்டு/மூன்று வாரத்திற்கு முன்னரே அழைப்பு வந்ததால் தயார் செய்து வைத்திருந்தேன்....

      Delete
  8. என்னுடைய வலைப்பூ சென்ற மாதம்தான் எனது நூறாவது பதிவை ஏற்றுக்கொண்டது. அடுத்த ஒரே மாதத்தில் ஒரு பரந்துபட்டத் தளத்தில் எனக்கும் ஒரு சிறு இடம். பரிசோதனை ‘செய்யும் எலியாக’ உணர்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவினை இங்கே குறிப்பிட்டதில் எனக்கும் மகிழ்ச்சி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஷ்ணு.

      Delete
  9. நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே, இந்த எளியவனின் கவிதைகளை ரசித்து அறிமுகப்படுத்தியதற்கு..............

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவினை இங்கே குறிப்பிட்டதில் எனக்கும் மகிழ்ச்சி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜய்.

      Delete
  10. அடடே நீங்கதான் ஆசிரியரா... வாழ்த்துகள்!!

    அடுக்கு மாடி வீட்டில், ஏழு படுக்கை அறை கொண்ட வீடு என்பது ஆச்சரியமானதுதான்.

    அறிமுக வலைப்பூக்கள் எல்லாமே புதியவை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

      Delete

  11. அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      Delete
  12. கூட்டுக்குடும்பம் முறையை இன்னமும் பின்பற்றும் குஜராத் மக்கள் வாழ்க.

    விஜய் கவிதைகள் தவிர மற்ற எல்லாமே புதுசு.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  13. கூட்டுக்குடும்பம் கேட்க பார்க்க பரவசம் தான்.
    இன்று இடம்பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      Delete
  14. வட இந்தியாவில் குஜராத்தில் கூட்டுக் குடும்பத்திற்கென 7 BHK அபார்ட்மெண்டுகள். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எல்லோரும் ஒரே தொழிலில் பங்குதாரர்களாக இருப்பார்கள். தகவலுக்கு நன்றி!

    இன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள்.

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. //எல்லோரும் ஒரே தொழிலில்... ‘

      இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      Delete
  15. நீங்க தான் வார ஆசிரியரா.. பலே.
    இந்தப் பக்கம் வந்தே நாளாச்சு.

    பரவாயில்லையே - இங்கே ஒரு பதிவு அங்கே ஒரு பதிவு.. கலக்குங்க. (நான் கீதா சாம்பசிவம் மாதிரி எல்லாம் கேட்கமாட்டேன்.)

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை...

      Delete
  16. நீங்க தான் வார ஆசிரியரா.. பலே.
    இந்தப் பக்கம் வந்தே நாளாச்சு.

    பரவாயில்லையே - இங்கே ஒரு பதிவு அங்கே ஒரு பதிவு.. கலக்குங்க. (நான் கீதா சாம்பசிவம் மாதிரி எல்லாம் கேட்கமாட்டேன்.)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை அழுத்தமாய்ச் சொல்ல இரண்டாம் முறை பதிவிட்டீர்களோ! :)

      Delete
  17. @வம்பாதுரை, நான் கேட்டதிலே என்ன தப்பு? :) என்னை வம்புக்கு இழுக்கலைனா உங்களுக்குச் சரியா இருக்காது போலிருக்கு! :)))))

    ReplyDelete
    Replies
    1. வம்பாதுரை! :)))

      கேட்டதில் தப்பு இல்லை! உங்களுக்கு விளக்கமும் நான் சொல்லி இருக்கிறேன் மேலே! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      Delete
  18. இந்தியா முன்னேறிவிட்டது 7 படுக்கையறை வசதி தொடர் மாடி இப்போது தான் அறிகின்றேன் உங்கள் தயவில்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      Delete
  19. இன்றும் புதிய அறிமுகங்கள் பல இனித்தான் பார்க்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி! தொடரட்டு்ம் பணி

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      Delete
  20. அறிமுகங்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள். பார்க்கிறேன் நன்றி நண்பரே,,,,

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      Delete
  21. சுவாரஸ்யமான தளங்களின் அறிமுகம்! வாழ்த்துக்கள்! சென்று பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      Delete
  22. வணக்கம் சகோதரரே!

    இந்த காலத்தில் ௬ட்டுக்குடும்பங்கள் தகவல்கள் ஆச்சரியமளிக்கிறது. மிகவும் மகிழ்ச்சியான விஷயமும் ௬ட,அதன் சிறப்பை உணர்ந்த குஜராத் மாநில மக்களை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை.

    இன்று தங்களால் வலைச்சரத்தில் அறிமுகம் ஆனவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரின் தளங்களுக்கும் சென்று வருகிறேன்.
    அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.



    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      Delete
  23. அறிமுகங்களைக் கண்டேன். அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்வேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Dr. B. ஜம்புலிங்கம் ஐயா.

      Delete
  24. ஹெட் மாஸ்டர்:
    அப்பாதுரை,:::

    கீதா, ஸ்ரீராம் , இளங்கோ , எழில் எல்ல்லோரும் வந்தாச்சு.

    இந்த கிழவனை மட்டும் காணோமே:

    இங்கே உள்ளேன் ஐயா.
    வந்தேன் ஐயா.

    வே.நா. அறிமுகப்படுத்திய பதிவுகள் எல்லாவற்றிலும் பின்னூட்டம் இட்டுவிட்டேன். இங்கே மட்டும் போட மறன்னு போயி.
    சாரி சார்.
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா சுப்புத் தாத்தா வந்தாச்சு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      Delete
  25. ஆஹா... அருமையான பகிர்வு அண்ணா....
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      Delete
  26. கூட்டுக் குடும்பம் இன்னுமும் இருப்பதில் மகிழ்ச்சி. 7 BHK வீடு இருப்பது ஆச்சரியமே !

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களை அழகாக‌ அறிமுகம் செய்தமைக்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      Delete
  27. கூட்டுக்குடும்பத்தை பற்றி அழகான ஒரு பகிர்வு.

    அறிமுகம் ஆனா அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      Delete
  28. கூட்டு குடும்பம் தலைவர் ஒழுங்கா இருந்தாதான் சரிபடும்.ஒற்றுமையா இன்னும் இருக்காங்களே.சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

      Delete
  29. ஹப்பப்பா கலக்குகின்றீர்கள் வெங்கட் ஜி! அருமையான பதிவு! கூட்டுக் குடும்பங்கள் வட இந்திய மாநிலங்களில் காணப்படுகின்றன! தென் இந்தியாவிலதான் இல்லை போலும். ஒருவேளை இந்த 7 ஆறைகள் கொண்டவை விலை குறைவோ அங்கு?!!!!

    நல்ல வித்தியாசமான அறிமுகங்கள்! அனைத்தும் புதியவைதான். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மிக்க நன்றி ஜி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      Delete
  30. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      Delete
  31. கூட்டுக் குடும்பமுறை இப்படிக் கலைஞ்சு போனதுக்குக் கல்விதான் காரணமுன்னு எப்பவும் நினைப்பேன். புள்ளைகளை வெவ்வேறு தொழிற்கல்வி படிக்க வச்சுட்டு, அவுங்க வேலை செய்யாம உள்ளுரிலேயே படித்ததைப் பயன்படுத்தி வேலை பார்க்க எங்கே வாய்ப்பிருக்கு?

    வேலை கிடைக்கும் இடத்துக்கு ஓடவேண்டி இருக்கே!

    ஆனா... நீங்க உள்ளூரிலும் கூடத் தனிக்குடும்பமா இருக்காங்கன்னு எழுதுனது யோசிக்க வைக்குது. சுதந்திரம் வேணும் என்றதன் தாக்கம்தான்.

    அந்தக்காலத்தில் குடும்ப சொத்துன்னு நிலபுலன்கள் இருந்ததால் அவைகளைப் பார்த்துக்கொண்டு, அதில் அனைவரும் உழைச்சு அதில்வரும் வருமானத்தைக் கொண்டு மொத்த குடும்பமும் வாழ முடிஞ்சது. இப்போ?

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது