அர்[dh]தி [ch]சாய்!
➦➠ by:
வெங்கட் நாகராஜ்
Courtesy: www.trekearth.com
நேற்றைய பதிவில் சொன்னது போல நெடுஞ்சாலைகளில் நிறைய
பயணம் செய்ய வேண்டியிருந்தது. சில சமயங்களில் இரவுப் பயணமும் அமைந்து விட்டது –
தவிர்க்க முடியாத காரணங்களால். என்னுடன்
வந்திருந்தவர்கள் பின் இருக்கைகளில் அமர்ந்து உறங்கி விட, நான் எப்போதும் போல்
ஓட்டுனருடன் பேசியபடியே முன் இருக்கையில். ஓட்டுனர் தூங்கி விடக்கூடாதே என்பதால்,
நானும் எப்போது முன் இருக்கையில் அமர்ந்தாலும் உறங்குவதில்லை.
அப்படி பயணிக்கும் சமயங்களில் ஓட்டுனர் வசந்த் [b]பாய் தனது ஒரு நாளைய Quota வான இருபது மாவா மாசாலாவிலிருந்து ஒரு புடியா
எடுத்து வாயில் அதக்கிக் கொள்ள அந்த வாசமே எனக்கு மயக்கம் தருவதாக இருந்தது!
அவ்வப்போது சாலையோர உணவகம் வரும்போது இங்கே தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும்
என நினைப்பதுண்டு. இரண்டு மூன்று மணி நேர
பயணத்திற்குப் பிறகு சற்றே அப்படியான உணவகங்களில் நிறுத்தி, இயற்கை உபாதைகளை
முடித்து, தேநீரும் அருந்துவது வழக்கமாகி விட்டது.
அப்படி தேநீர் அருந்த முதல் முறை நிறுத்தியபோது கிடைத்த
அனுபவம் தான் இந்த “அர்[dh]தி [ch]சாய்”! அதாவது பாதி தேநீர் – நமது ஊரில் கட்டிங் சாய்
என்றும், மஹாராஷ்ட்ராவில் “ஒன் பை டூ” என்றும் சொல்லப்படும் பாதி அளவு தேநீருக்கு இங்கே
அர்[dh]தி [ch]சாய் என்று பெயர். இதில் என்ன ஸ்பெஷல் என்று
கேட்பவர்களுக்கு இது வழங்கும் விதம் தான் ஸ்பெஷல்!
நமது ஊர் போல கண்ணாடி டம்ளரிலோ, அல்லது மண் குடுவைகளிலோ
இவர்கள் தேநீரை தருவது இல்லை இந்த அர்[dh]தி [ch]சாய். இங்குள்ள பலரும் தேநீர் கடைக்குச் சென்றவுடன்
தனக்கு ஒரு அர்[dh]தி [ch]சாய் என்று சொல்ல, அவர்கள் கையில் ஒரு சாசரை [Saucer] கொடுத்து விடுகிறார் கடைக்காரர். ஏற்கனவே தயாரித்து கெட்டிலில் வைத்திருக்கும்
தேநீரை, சாசரில் முழுவதும் விடுகிறார்.
அவரும் அதைக் குடித்து முடிக்கிறார்!
இது தான் அர்[dh]தி [ch]சாய்.
முதல் முறை தேநீர் என்று கேட்ட எனக்கு கையில் சாசரைத்
தர நான் விழித்தேன்! அக்கம் பக்கத்தில் பார்த்த பிறகு எனக்கு கப்பில் அதுவும் முழு
கப் வேண்டும் எனச் சொல்ல, என்னை மேலும் கீழும் பார்த்து ஒரு டம்ப்ளரில் விட்டுக்
கொடுத்தார். அவரின் பார்வை, என்னைப்
பார்த்து “தம்பி ஊருக்குப் புதுசோ!” என்று கேட்பது போல இருந்தது!
பல ஊர்களுக்குப் பயணிக்கும்போது இப்படி சில
வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கிறது அல்லவா! இன்னும் சில அனுபவங்களை நாளைய
பதிவில் சொல்கிறேன்!
என்னுடைய வலைச்சர வாரத்தின் ஆறாம் நாளான இன்றைய
அறிமுகங்களை இப்போது பார்க்கலாம்!
21. வலைப்பூ: இதமான அலைகள்
ஆகஸ்ட் மூன்று 2011 அன்று வெளிவந்தது இவரது முதல்
பதிவு! இதுவரை 185 பதிவுகள் எழுதி
இருக்கிறார். யசோதா காந்த் - எண்ணப்பறவை
சிறகடிக்க வண்ணவண்ண கனவுகளோடு விண்ணில் பறப்பவள்! என்று தன்னைப் பற்றிய
அறிமுகத்தில் சொல்கிறார். நிறைய கவிதைகள்
இவரது பக்கத்தில் காணக் கிடைக்கின்றன.
நீங்களும் படித்து ரசிக்கலாமே....
அறிமுகப் பதிவு: ஒட்டாமல் உறவாடி... தாமரை இலை தன் மீது ஒட்டாமல் இருக்கும் தண்ணீரைப் பார்த்துச் சொல்வதாய்
இருக்கும் கற்பனைக் கவிதை. படித்து
ரசிங்களேன்!
22. வலைப்பூ: எளிமையான யதார்த்தம்
R. உமையாள் காயத்ரி –
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவுலகில் இவரது பயணம். கவிதைகளும், நிறைய சமையல் குறிப்புகளும், தனது
பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார்.
தற்போதைய வாசம் எகிப்து நாட்டில்.
அறிமுகப் பதிவு: இட்லி கவிதை
குளிர் பிரதேசங்களில் இட்லி/தோசைக்கு மாவு அறைத்தால்
புளிப்பதில்லை – அந்த மாதிரி எகிப்து நாட்டில் இருக்கும்போது இட்லி மாவு
புளிக்காது போக, அங்கே இட்லி செய்ததை கவிதையாகப் படைத்திருக்கிறார் இவர். பாருங்களேன்!
புளிக்காத மாவில்
-
புன்
சிரிப்புடன்
இட்லி…..!!!
இந்தியா
என் கண்முன்னே…
நிழலாடியது
குஷ்பு
இட்லியோ…..!!!
குளிரில்
புளிக்க
குறைந்தது
ஆகும் நாட்கள்
நாலு -
குமுறினர்……..
23. வலைப்பூ: PROFESSOR K.S. RAMESH
Chemistry Professor என தனது பதிவில் சொல்லும் இவர் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும்
பதிவுகள் எழுதி வருகிறார். இவரது
பக்கத்தில் Malgudi Days ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிடுகிறார்.
அறிமுகப் பதிவு: குயிலோசை
இனிமையா
கூவறது ஆண் குயிலா �பெண் குயிலா�?
இது என்ன கேள்வி �பெண் குயிலாத்தான் இருக்கணும்!
இப்படித்தான் பலபேர்
நினைச்சிக்கிட்டிருக்காங்க�அது தப்பு
24. வலைப்பூ: கல்விக்கோயில்
”ஒவ்வோர்
ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான்
பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு
கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான
கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை
உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி” என்று தனது வலைப்பூவின் முகப்பில் எழுதி
இருக்கிறார் கவி செங்குட்டுவன்.
அறிமுகப்
பதிவு: கொடுப்பதில் மகிழ்வு
பள்ளி
மாணவர்களிடம் பிறர்க்கு உதவும் மனப்பான்மையை ஏற்படுத்தவும், அடுத்தவர்க்கு
கொடுப்பதன் மூலம் தாம் மகிழ்ச்சி கொள்ளும் பண்பை வளர்த்திடவும் ”கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா” அவரது
பள்ளியில் நடந்த நிகழ்ச்சி பற்றிய பதிவு.
25. வலைப்பூ: தத்துவ சிந்தனைகள்
அருமையான
தத்துவ சிந்தனைகளை பதிவுகளாக வெளியிடுகிறார். இவரது பதிவுகள் நம்மைச் சிந்திக்க
வைக்கும் என்பது உண்மை.
அறிமுகப்
பதிவு: பொறாமை
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலான
காலகட்டத்தில் பொறாமைப்படாமல் வாழ்ந்திருந்தால் அவன் கடவுளாவான் ஆனால் அதர்க்கு சந்தர்ப்பமே அமைவதில்லை
ஏன் எனில் அவனின் மனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமையினாலும் மற்றும் மிருகத்
தன்மைக்கு இடங்கொடுப்பதுமே காரணமாக இருக்கிறது.
என்ன நண்பர்களே, இன்றைய தலைப்பு சொல்லும்
விஷயத்தினையும், இன்றைய அறிமுகப் பதிவுகளையும் பற்றிய உங்கள் கருத்துகளை
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
நாளை மீண்டும் வேறு சில பதிவர்களின் பதிவுகளோடும்,
குஜராத் பற்றிய வேறு சில செய்திகளோடும் உங்களைச் சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
எனது பக்கத்தில் இன்றைய பதிவு: தில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க! - அதையும் படிக்கலாமே!
|
|
ஒரு புதிய அறிமுகம்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteசுவையான தேநீர் போல -
ReplyDeleteஇன்றைய தளங்களும் அருமை..
வாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
Deleteசகோதரி உமையாள் காயத்ரி அவர்களுக்கும், மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி திரு. வெங்கட் ஸார்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
Deleteஎன்னை வெங்கட் என்றே உரிமையோடு அழைக்கலாம் நண்பரே!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇட்லி கவிதை வாயிலாக என்னையும் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள்.
நன்றி கில்லர்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
Deleteதம, 2
ReplyDeleteதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
Deleteசாய் குடிக்கும் முறை புதுசாக இருக்கிறது. ரொம்பக் காலத்துக்குமுன் கப் அண்ட் சாசரில் குடிக்கும்போது அப்படிக் குடிப்பதை த்ரில்லாக அனுபவித்த நினைவு வருகிறது.
ReplyDeleteவழக்கம்போல, அறிமுகங்கள் புதுசு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteஉலகையே வியக்க வைத்த புத்தம் புதிய குறும்படத்தின் பெயர். இந்த குறும்படம் ஜூன் 2015 தான் ரிலிஸ் ஆகும். ஆனால், இந்த குறும்படம் மிக பிரமாண்டமாக இருக்கும். இந்த குறும்படத்தின் பெயரைப் பார்க்க :- https://www.youtube.com/watch?v=6uqSozz48Ac
ReplyDeleteஇந்த Channelக்கு Subscribe செய்வதன் மூலம் நீங்கள் இந்த படத்தைப் பார்க்கலாம். நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!!
www.youtube.com/thevashokkumar
#Tamil #Tamilshortfilm #tamilfilm #shortfilms #tamilfilms #lingaa #Chennai #Youtube
விளம்பரம்.... ஓகே....
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஷோக் குமார்.
அர்தி சாய் அனுபவம் எங்களுக்கும் அறியத் தந்தீர்கள் அண்ணா...
ReplyDeleteசகோதரி உமையாள் காயத்ரி உள்ளிட்ட அனைத்து வலையுலக ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
Delete//
ReplyDeleteநமது ஊர் போல கண்ணாடி டம்ளரிலோ, அல்லது மண் குடுவைகளிலோ இவர்கள் தேநீரை தருவது இல்லை இந்த அர்[dh]தி [ch]சாய். இங்குள்ள பலரும் தேநீர் கடைக்குச் சென்றவுடன் தனக்கு ஒரு அர்[dh]தி [ch]சாய் என்று சொல்ல, அவர்கள் கையில் ஒரு சாசரை [Saucer] கொடுத்து விடுகிறார் கடைக்காரர். ஏற்கனவே தயாரித்து கெட்டிலில் வைத்திருக்கும் தேநீரை, சாசரில் முழுவதும் விடுகிறார். அவரும் அதைக் குடித்து முடிக்கிறார்! இது தான் அர்[dh]தி [ch]சாய்.//
படிக்கவே சுவாரஸ்யமாயிருந்தது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் ஜி!
Delete//வலைப்பூ: PROESSOR K.S. RAMESH//
ReplyDeleteprofessor என்று திருத்தம் செய்யுங்கள் சார்!
தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி முகம்மது நிஜாமுத்தீன்.
Deleteதமிழ் மணம் வாக்கு 5.
ReplyDeleteதங்களது வருகைக்கும் தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.
Deleteநிறைய புது அறிமுகங்கள். அர்தி சாய் அருமை சகோ :)
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன் ஜி!
Deleteஅப்படின்னா நான்கூட ஊரில் பலமுறை 'அர்திசாய்' சாப்பிட்டிருக்கிறேன். அவசரஅவசரமா வேலைக்கு ஓடும்போது அம்மா கொடுக்கும் 'டீ'யை ஒரு சின்ன தட்டில் ஊற்றித்தான் குடிப்பேன்.
ReplyDeleteதோழி உமையாள்காயத்ரி தவிர மற்றவர்களின் வலைப்பூக்கள் புதியவை. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
Deleteஇன்றும் புதிய அறிமுகங்கள் பகிர்வுக்கு நன்றி குஜாராத் பயணம் விபரம் தொடரட்டும் சார்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteஅறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் எனக்கு புதியவர்கள். அவசியம் அவர்களது பதிவை படிப்பேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
Deleteஅர்[dh]தி [ch]சாய். விவரம் அறிந்தேன்.
ReplyDeleteஇன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
Deleteநன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே ... கால தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ..
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி நன்றி நன்றி ... வளர்க உங்கள் தமிழ் தொண்டு ....
அன்புடன் ~யசோதா காந்த்~