! பதிவர்களே ! அனைவருக்கும் வணக்கம்
வருகிற 15.12.2014 முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும்
அருமை நணபர் கில்லர்ஜி - கிரேட் தேவகோட்டைக்காரன், கடந்த 18 ஆண்டுகளாக (U.A.E) அபுதாபியில் ஒரு அலுவலகத்தில் கோப்புகள் பிரிவில் ( Filing Clerk ) பணியாற்றிக்கொண்டு வருகிறார். இவரது துணைவி, இறைவன் விருப்பப்படி இவரை விட்டு விண்ணுலகம் போய் 13 ½ ஆண்டுகளாகிறது . இவரது துணைவி இவருக்கு ( அன்புமகன் தமிழ்வாணன், இனியமகள் ரூபலா ) கொடுத்துச்சென்ற இரண்டு பொக்கிஷங்களுக்காக வாழும் ஜீவன் இவர்., அந்த ஓட்டத்தில் இவருள் எழுந்தவை இவர் மண்ணுள் புதையும் முன் இந்த விண்ணில் கணினி வழியே விதைத்துக்கொண்டு இருக்கிறார்.
.
‘’மனிதநேயம்’’ இதுவே இவரது சிந்தனை.
நாடு, மொழி, ஜாதி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் - இவருக்கு புனிதனாக வேண்டுமென்ற சிந்தையில்லை சராசரி மனிதனாக வாழ்ந்தாலே போதுமென்ற கொள்கையோடு... வாழ்ந்து இவரைப் படைத்தவனிடம் (அவன் இறைவனா ? அல்லது ஒரு சக்தியா ? இவரறியார்.) சரணடையலாமென திட்டமிட்ட... பழமையை விரும்பும் புதுமைச்சித்தன் இவர்.. இதற்குமேல் இந்த
.வேற்று மனிதனிடம் வேறு ஒன்றும் இல்லை.
வருகிற 15.12.2014 முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இருக்கும் பதிவர் நண்பர்
கில்லர்ஜியினை வருக ! வருக! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
1 முதல் ஏழு நாட்களுக்கு சிறப்பான அறிமுகங்களை அள்ளித் தரத் தயாராக இருக்கும் கில்லர்ஜியினை ஆவலுடன் எதிர் பார்த்து
காத்திருக்கும் சக நண்பர்களை யும் சிறந்த மறுமொழிகளை அளீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
sivappukanneer@gmail.com – மின்னஞ்சல் முகவரி
மேலும் வாசிக்க...
இன்றுடன் (30.11.2014 ல்) முடியும் வாரத்திற்குஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமைத் தங்கை திருமதி மஞ்சு பாஷினி தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 131
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 184
பெற்ற மறுமொழிகள் : 274
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 38
அன்புச் சகோதரி மஞ்சு பாஷினியினைப் பாராட்டி நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைப்பதில் பெருமையுடன் கூடிய பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
01.12.2014 முதல் துவங்கும் வாரத்தில் இருந்து ஒரு வார காலத்திற்கு ( 07.12.2014 ) ஆசிரியப் பொறுப்பு ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இணக்கம் தெரிவித்த உயர்திரு பழனி கந்த சாமி ஐயா அவர்கள் நாளை ( 01.12.2014 ) காலை முதல் தான் ஏற்ற பணீயினைச் சிறப்பாகச் செய்யும் வண்ணம் - அறிமுகப் பதிவுகளை வெளியிட்டு தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்ற சம்மதித்து இருக்கிறார்.
இவருடைய வாழ்க்கைக் குறிப்பு. :
இவர் 1935 ம் வருடம் கோவைக்கு அருகிலே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் சிறு வயதிலேயே கோவை நகரத்திற்கு குடி பெயர்ந்தவர். இவர் தன் சிறு வயது முதல் இன்றுவரை இவருடைய வாசம் கோவை நகரமே.
இவரது படிப்பு ஒன்றாம் வகுப்பிலிருந்து பி.எச்.டி. வரை கோவையிலேயே முடித்தார்.. விவசாய இலாக்காவில் 1956 ம் வருடம் சேர்ந்து பல பதவிகளில் வேலை பார்த்து 1994 ம் ஆண்டு பணி நிறைவு பெற்றார். பணிக் காலத்தில் ஸ்வீடன், நெதர்லாந்து, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா ஆகிய வெளி நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்,
இவருடைய பொழுது போக்குகள், கர்னாடக இசை கேட்டல், புத்தகங்கள் படித்தல், சுற்றுலா செல்தல் ஆகியவை ஆகும். இவருடைய நண்பர் ஒரு பதிவு வைத்திருந்ததைப் பார்த்து இவரும் பதிவுலகில் 2009 ம் ஆண்டு அடிஎடுத்து வைத்தவர். இது வரை சுமார் 700 பதிவுகள் பதிந்திருக்கிறார்.
உயர்திரு பழனி கந்த சாமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்று நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத் குமார்
நல்வாழ்த்துகள் பழனி கந்த சாமி
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் கீதா மதிவாணன் .
இவரது வலைத்தளம் : கீத மஞ்சரி : http://geethamanjari.blogspot.com . - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 080
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 094
பெற்ற மறுமொழிகள் : 295
பெற்ற வாக்குகள் : 041
வருகை தந்தவர்கள் : 1530
கீதா மதிவாணன் - ஆஸ்திரேலிய உயிரினங்கள், குழந்தை நல்ம் சார்ந்த பதிவுகள், பெண்மை வாழ்க, உள்ளத்து உள்ளது கவிதை, தமிழன் எனக்கோர் இடமுண்டு, சென்றிடுவோர் எட்டுத் திக்கும் , இணையவழி நூலகங்கள், பற்றிய பதிவுகள் எனப் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
கீதா மதிவாணன் இவ்வாசிரியப் பொறுப்பினை
மூன்றாம் முறையாக ஏற்றிருக்கிறார்,
இவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி
வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் துளசிதரன் தில்லை அகத்து - கீதாவுடன் சேர்ந்து இணக்கம் தெரிவித்துள்ளார்.
இவர் பெயர் துளசிதரன். பாலக்காட்டில் CFDVHSS எனும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிகின்றார். இவரது தோழி கீதா. அவர் இருப்பது சென்னை.
இவர்களதுவலைத்தளம் thillaiakathuchronicles. ஆரம்பித்து ஒருவருடம், நான்கு மாதங்களே ஆகின்றது. இவர்கள் இருவரும் சேர்ந்து, கலந்தாலோசித்துதான் இவர்கள் வலைத்தளத்தில் எழுதுகின்றார்கள்.. தனித்தனியாக எழுதும் இடுகைகளையும் கூட, ஒருவருக்கொருவர் திருத்தம் செய்து, விவாதித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து, இருவரும் சம்மதம் தெரிவித்த பின்னரே வெளியிடுகின்றனர்.
நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும் துளசிதரன் தில்லைஅகத்து மற்றும் கீதாவினை -வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும் அறிமுகம் செய்யும் பதிவுகளைத் தருக எனக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கீதா மதிவாணன்
நல்வாழ்த்துகள் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...