மன்னிப்பு கோரலும், நன்றி கூறலும்.
➦➠ by:
killerjee ( கில்லர்ஜி)
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
கணபதி பப்பா மோரியா
गणपति पप्पा मोरिया
காணொளி
செந்தூரப்பூவினும் மென்மையான எனது வலை உறவு சொந்தங்களே வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி வலைச்சரத்தில் கடைசியாக எழுதிக்கொல்வது
எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு அவர்களை ஹீரோவாக
சித்தரித்து கடந்த ஒரு 9 நாட்களும் தங்களை மகிழ்வித்தேனா ? இல்லையா ? 80 தங்களுக்கே
தெரியும் பலரும் ஞானி ஸ்ரீபூவு பள்ளியில் வந்து ஆசிரியரை அடிப்பார் என்று ! அப்படி அவர் செய்தார் என்றால் ? அவர்
ஞானி அல்ல ! சரிதானே (இதை சரியாக கணித்து கருத்துரை தந்த எனது தேவகோட்டை சகோதரி (எஜிப்த்) திருமதி.
ஆர். உமையாள் காயத்ரி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்டை இந்த இடத்தில் வழங்க
கடமைப்பட்டு இருக்கிறேன்)
ஆசிரியரை நான் என்றுமே மதித்து நடந்தவன், நடப்பவன் அதனால் தான் என் மனதில் திரு.
குருந்தன் ஆசிரியர் இன்னும் இருக்கிறார் அவர் என்னை அடித்ததே இல்லை, என்னை
மட்டுமல்ல ! சகோதரி திருமதி. பொன்னம்மா அவர்களையும்
அடித்ததில்லை தாங்கள் நினைக்கலாம் என்ன ? திடீரென
சகோதரி ஆம் நண்பர்களே இரண்டாவது படிக்கும் வயதில் காதல் வருமா ? அதுவும்
அன்று இப்பொழுது வரும் திரைப்படங்களின் உதவியால் இனி வரலாம் பொன்னம்மாவின்
பெயரைத்தவிற வேறு எந்த பெண்களின் பெயரும் சத்தியமாக எனக்கு நினைவில் இல்லை நான்
ஒன்றாவது தொடங்கி மருத்துவக்கல்லூரி போகும் வரை (என்னையா ? திடீர்னு வலைப்பூவை காதுல, சுத்துறே) இல்லைங்க நான் பள்ளிக்கூடத்துக்கு மருத்துவக்கல்லூரி
வழியாகத்தான் போவேன் அதைத்தான் சொல்ல வந்தேன் ஒன்றாவது தொடங்கி நாலாவதோடு எனது
பள்ளி வாழ்க்கை முடிந்து விட்டது (அதற்க்கு பிறகு
படிக்க வைக்க முடியவில்லையா ? வறுமையா ? இல்லை நண்பர்களே.... வளமை ஆம் மிராசுதாரின் பேரனுக்கு பணத்திற்க்கா ? பஞ்சம்
வேறு காரணம் என்ன ? சேஷ்ட்டை அதான் ’’சட்டீர் ’’ ’’சட்டீர் ’’ ’’சட்டீர் ’’) நாலாவது ஆசிரியரின் பெயர்தான் மரியாதைக்குறிய திரு.
குருந்தன் அவர்கள் பொன்னம்மாவை நான் ஞாபகம் வைத்து இருப்பதற்க்கு காரணம் பள்ளியில்
முதல் ராங்க் மாணவன் நான் முதல் ராங்க் மாணவி சகோதரி திருமதி. பொன்னம்மா அவர்கள்
எங்கள் இருவருக்கும் போட்டி இருந்து கொண்டே இருக்கும் ஆகவே கடைசியாக அன்று கண்டதுதான்
நான் சகோதரி திருமதி. பொன்னம்மா அவர்களை இன்று எப்படியும் அவருக்கு
பேரன்-பேத்திகள் இருப்பார்கள் என்றே கருதுகிறேன் அந்த சகோதரி எல்லா நலனும் பெற்று
வளமுடன் வாழ்வார்கள், வாழவேண்டுமென இந்த தருணத்தில் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
இப்பொழுது என் மனதில் படுவது என்ன ? தெரியுமா ? அடுத்த
முறை எனது இனிய இந்தியாவுக்கு வரும் பொழுது அவரை எப்படியாவது திரு. குருந்தன்
ஆசிரியர் அவர்களிடம் காண்பித்து அவர் மூலமே பொன்னம்மாவை சந்தித்து இந்த
வலைச்சரத்தில் அவர்களைப்பற்றி தொடுத்ததை சொல்ல வேண்டுமென்ற ஆவல் தோன்றுகிறது
போதுமே.... பொன்னம்மாவைப்பற்றி...
நண்பர்களே... பல இடங்களில் இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு என சொல்லியிருக்கிறேன் சும்மா ஒரு கப்சாவுக்காக அவர் இறக்கும்போது எனது பனிரண்டாவது அகவை என ஞாபகம் அவரைப்பார்த்து பயப்புடுவேன் காரணம் அவரது மீசை மற்றபடி அவருடன் பழகியது குறைவானாலும் நிறைவு காரணம் அவருடைய தாத்தாவுடைய தாத்தாவின் பெயர் வரை எனக்கு தெரியும் எல்லாம் அவரிடம் கேட்டதுதான் அதைப்பற்றி எழுதவேண்டுமானால் பெருங்கதை (ஆமாமா, உங்க வீட்ல கதைக்கா ? பஞ்சம்) எனது மகன் தமிழ் வாணனுக்கு எனது இன்ஷியலோடு எனது அப்பா, தாத்தா, தாத்தாவின் அப்பா, அவரின் அப்பா இப்படியே ஏழு நபர்களின் பெயர்களை சொல்லிக்கொடுத்து இருக்கிறேன் நான் பிழைத்திருந்தால் நாளை எனது பேரனுக்கும் சொல்லிக்கொடுத்துப்போவேன் இதையேன் சொல்கிறேன் என்றால் ? இன்றைய குழந்தைகளுக்கு தாத்தாவின் பெயரே தெரியவில்லையே 80தை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது நண்பர்களே முடிந்தவரை நமது மூதாதையர்களின் பெயர்களை சொல்லிக்கொடுங்கள்.
இதை
தாங்கள் ரசித்திருப்பீர்கள் எனது கற்பனையில் நடக்காததை நடந்ததுபோல் சித்தரித்தேன்
இதில் பல உயிரோட்டமுள்ள எனது குடும்பத்தினரை உலவ விட்டுள்ளேன்... எனது
குடும்பத்தார்கள், சொந்த பந்தங்கள் படிக்கும்போது ஒருவிதமான உணர்ச்சிகள் பொங்கும் 80ல் எமக்கு சந்தோஷமே ஆம் நண்பர்களே..
தெய்வத்திரு. ஞானி ஸ்ரீபூவு அவர்கள் மிராசுதார் (ஐயா)
தெய்வத்திருமதி. பூ. சுப்பம்மாள் அவர்கள் (அப்பத்தா)
தெய்வத்திரு. பூ. முருகன் அவர்கள் (பெரியப்பா)
தெய்வத்திரு. பூ. கணபதி அவர்கள் (அப்பா)
தெய்வத்திரு. பூ. பேச்சி முத்து அவர்கள் (சித்தப்பா)
தெய்வத்திரு. பூ. மாரி முத்து அவர்கள் (சித்தப்பா)
திரு. பூ. களஞ்சியம் அவர்கள் கோயமுத்தூர்
(சித்தப்பா)
&
திருமதி. மீனாம்பாள் கணபதி அவர்கள் (பாசமான
அம்மா)
நண்பர்களே... நீங்கள் ரசித்திருக்கலாம், சிரித்திருக்கலாம், ஆனால் ? இதை எழுதி
முடிக்கும் பொழுது எனது கண்கள் கசிந்திருந்தன..... ஆம் இவர்களைப்பற்றி நான்
வலைச்சரத்தில் மாலையாக கோர்த்ததை அவர்கள் பார்த்தால், எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்
என்பதை நினைத்துப்பார்க்கிறேன் இருப்பினும் இதைக்காண எனது துணைவியே இல்லை என்கிற
பொழுது நான் ரொம்ப தூரம் ஆசைப்படுவது கொஞ்சம் கூடுதலே இந்த தருணத்தில்
//தம்மின்
மெலியாரை நோக்கித் தமதுடமை
அம்மா பெரிதன்று அக மகிழ்க//
என்ற குமர குருபர சுவாமிகளின் பொன்மொழியை நினைத்து ஆறுதல்
கொள்கிறேன் இதையேதான் மறைந்தும் நம் நெஞ்சங்களில் வாழும் கவிஞன் நமக்காக எளிமையாக
மொழி பெயர்த்து தந்தான் இப்படி கீழே...
காணொளி
என் மனைவிக்காக நான் ஒரு கவிதை
எழுதியிருந்தேன் பலரும் படித்திருக்கிறார்கள் வலைச்சரம் மூலமாக புதிதாக வந்த
உறவுகள் மற்றும் படிக்காதவர்கள் மௌன மொழி ’’கிளிக்’’கி பார்க்கலாமே போதும் சரி அடுத்த விசயங்களுக்கு போவோமா ? ஊர்கோலம் இருங்க கொஞ்சம்
சூட்தண் குடிச்சுட்டு வர்றேன்
அன்பு நெஞ்சங்களே... தில்லை அகத்தாரே முனைவர் திரு. P.ஜம்புலிங்கம் அவர்களே இந்த வாரம் நாங்களும் அரைசெஞ்சுரி
அடிச்சோம்ல... நான் நினைச்சேனே ? முழுசதமும்
அடிச்சுருப்பேன் நீங்கதான் கில்லர்ஜியிடமிருந்து வித்தியாசமாக எதிர்பார்க்கிறோம்னு
சொல்லி சொல்லி எனது சிந்தனையை ரணகளமாக்கி, ரத்தக்குளமாக்கிட்டீங்களே... அதனால, இப்புட்டுதான் முடிஞ்சது அடுத்த வலைச்சர ஆசிரியர்
கிடைத்தால் (?) (அடுத்துமா ? ஐயாசாமி
ஆளை விடப்பா.. யாரது ? இடையிலே) நிச்சயம் 100 சதம் அடிக்க
முயற்சிக்கிறேன் நமது சிந்தனைகள் ரணமாகும் பொழுது சூட்தண் குடிக்கச்சொல்லி எனது ஐயன் ஞானி ஸ்ரீபூவு அவர்கள் அதன் செய்முறையையும்
சொல்லிக்கொடுத்து இருக்காரு.. அது எப்படினு ஏற்கனவே உங்கள் எல்லோருக்குமே பதிவுல
சொல்லியிருக்கிறேன் அந்தப்பதிவை படிக்காதவர்கள் இதை கிளிக்கி படித்துக்கொள்ளவும்.
நண்பர்களே ஒரு நற்செய்தி நான் மதவாதி அல்ல ஆனால் ? கீதாசாரத்தில் வரும்....
என்ன நடந்ததோ அது நன்றாக நடந்தது
என்ன நடக்கிறதோ அதுவும் நடக்கிறது
இந்த நடைமுறை யதார்த்தத்தை நம்புபவன் இதை உலக அளவிலான சுமார்
25 மொழிகளை
தேர்ந்தெடுத்து மொழி மாற்றம் செய்து எனது வலைப்பூவில் வெளியிடலாமென
தீர்மானித்திருக்கிறேன் இதற்க்கு எப்படியும் ஒரு வருடம் ஆகலாம் இது வெற்றியடைய தங்களின்
வாழ்த்துகளை தருவீரே.....
இனிய உறவுகளே.... என்னை கில்லர்ஜி யில் தொடரும் பதிவர்கள் அடுத்த பாராவை படிக்கச்செல்லலாம் நான் வலைச்சர
ஆசிரியராக இருந்த கடந்த வாரத்தில் புதிய சொந்தங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி
அவர்களிடம் ஒரு கேள்வி வலைச்சரம் என்பது ஒரு மிகப்பெரிய ஆலமரம் பல விழுதுகளை படர
விட்டுள்ளது இந்த ஆலமரத்தினிலே அற்புத மாடத்திலே பதிவர்கள் என்ற நாமெல்லாம் வந்து
இளைப்பாறும் மாடப்புறாக்கள் அதில் சிறகு முளைக்கத்தொடங்கிய இந்த கில்லர்ஜி யும் ஒரு குஞ்சு இந்தக்குஞ்சை வளர்த்து பருந்தாக வளர்த்து விடவேண்டாம் ஒரு
காக்கையாகவாவது வளர்த்து விடுங்கள் நான் வலைச்சரத்தையும், உங்களையும், என்னையும்
பிரிக்க விரும்பவில்லை தங்களது கடந்த வார வரவுகள் வலைச்சரத்துக்காகவா ? எனக்காகவா ? எனக்காக ? என்றால் ? இந்தவாரம் இன்றைய மனிதர்கள் எவ்வளவு விசயங்களை
இழந்து எதையோ நோக்கி ஓடுகிறோம் என்பதை வலியுறுத்தி அன்றைய
மனிதர்கள். பதிவுக்கு ஏன் ? வரவில்லை அதன் தொடச்சியாக அடுத்து வரும் இன்றைய MONEYதர்கள் அதற்காகவாவது வாருங்கள் எனது எழுத்துக்களில். கருத்துக்களில் குற்றம் ,குறையிருப்பின் தாராளமாக எழுதலாம் எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை, எவரும்
எல்லாமும் தெரிந்து கொள்வதும்மில்லை நான் மதுரை விழாவில் பேசியதுபோல ஜிலேபியின்
சக்களத்தி என்று சொல்வார்களே ஜூஜூபி அந்த மாதிரியான பதிவுகளைத்தான் தற்போது
தூவிக்கொண்டு இருக்கிறேன் எனது சிந்த்தனையின் வெளிப்பாடுகள் இன்னும் வெளிவரவில்லை 80தே எனக்கு
மட்டும் தெரிந்த உண்மை உங்களிடம் காசோ, பணமோவா கேட்டேன் ? எவ்வளவோ நேரம் ஒதுக்கி நானாட, நாயாட இந்த மாதிரி ப்ரோக்ராம் பார்க்கிறீர்கள்
பயனுள்ள நல்ல விசயங்களை மட்டுமே நான் தருகிறேன் இதைக்காணக்கூடாதா ? நான் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன் என்னுள் எழுந்தவை இந்த விண்ணில்
விதைக்கவா ? இல்லை என்னுள் புதைக்கவா ? இதுவே எமது சிரம் தாழ்ந்த கேள்வி
நேற்று முன்தினம் ஞானி ஸ்ரீபூவு அவர்கள்
என்னை காமராஜரை எதுக்குடா ? முறைச்சுப்பார்க்கிறே ? என்று
கேட்டாரே.. அதில் இல்லையா ? கர்மவீரர் காமராஜரைப்பற்றிய எனது சிந்தனை
யாரும் செல்லவில்லையே அந்தத்தலைவனைக்காண.... ஒருவேளை அவர் மோசடி மஸ்தானோ ?
பார்த்தீர்களா ? எந்த காரணத்திற்காக நான் பிள்ளையாரை வெறுத்தேனோ ? இந்த அரபு தேசத்தில் சட்டப்படி பிள்ளையாரின் பெயரில்தான் (எனது தந்தையார் தெய்வத்திரு. கணபதி அவர்கள்) வாழவேண்டிய சூழல் அதனாலென்ன ? எனக்கு உயிர் கொடுத்த தந்தைக்கு இதைக்கூட நான் கொடுக்ககூடாதா ? என்ன ? கில்லர்ஜியை கொன்று விட்டார்கள் ஆம் கொலைகாரனை கொன்றால்தான் என்ன ? எனது அலுவலகத்தில் பெயர்ப்பலகைகூட அவரின் பெயரே சற்றே வருத்தமாக இருக்கிறது காரணம், கில்லர்ஜியின் பெயர் வராமல் எனது தந்தையின் பெயர் வந்து விட்டதால் அல்ல U.A.E அரசு அலுவலகத்தில் தொங்கும் இந்த பலகையை எனது தந்தையார் காணாமல் போய் விட்டாரே... என்ற வேதனையே.... இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ? இந்தப்பெயரை அரபியில் எழுதியிருப்பது ஜானாபாதி ஏற்கனவே இறந்தவரை மீண்டும் கொல்வதா ? காரணம் அரேபியர்கள் G யை J என்றுதான் உச்சரிப்பார்கள்.
எனது
தந்தையார் பெயர் கணபதி
எனது
பெயர் KILLER
இப்படி
எனது பெயரை எழுதினால் சமூகம் என்னை ‘’கொலைகாரன்’’ என்று சொல்லி விடுமே (இப்ப மட்டும் என்ன ? வாழுதாம்) என்று அஞ்சியே...
எனது பாஸ்போர்டில் தந்தையின் பெயரை முன்னிருத்தி கில்லர்ஜியை பின்னிருத்தினேன் அது
அப்படியே பின்னுக்கே போய் விட்டது சரி வலைப்பூவில் கில்லர் என்று போட்டால் பயந்து
யாரும் வரமாட்டார்கள் ஆகவே தந்தையின் பெயரில் முதல் எழுத்து G
KILLER. G
இப்படி
போட்டால் ? பொருத்தமில்லையே...
ஆகவே KILLER gee
எப்பூடி ? உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ
அப்பாடா... போதுமா ?
திரு. G.M. பாலசுப்பிரமணியன் அவர்களே...
திரு. நா. முத்து நிலவன் அவர்களே...
திரு. ஊமைக்கனவுகள் அவர்களே...
திரு. மணவை. ஜேம்ஸ் அவர்களே...
திருமதி. மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே...
திருமதி. சசிகலா அவர்களே...
இன்னும்..... அவர்களே..... இவர்களே... எவர்களேயாயினும் இதாங்க தங்கமலை
ரகசியம்.
இனிய
நண்பர்களே... தங்களுக்காக கடந்த ஒருவாரமும் ஞாயிற்றுக்கிழமை ஞானம்பாளுக்கு விரதம்
இருக்கத்தொடங்கி, சனிக்கிழமை சங்கீதாவுக்கு விரதம் இருந்து தினம் 9 நவரத்தினங்களை ஜொலிக்க விட்ட கருங்கல் நான் முதல் பதிவரான இனிய நண்பர் திரு.
துரை செல்வராஜூ அவர்கள் தொடங்கி.... இன்றைய கடைசி பதிவரான எனது திண்ணைப்பள்ளிக்கூட
நண்பி வரை பெயருக்கு கீழே இஷா தொடங்கி... அனிம்னபூத் அபாட் என எழுதியிருந்தேன்.
இது என்ன ? தெரியுமா ? (இதைதானய்யா ?
காலம் பூராம் கேட்டுக்கிட்டு இருக்கோம்) அதாவது இது பிலிப்பைன்ஸ் நாட்டின் மொழியான தகாலன்
ஆகும் இதன் அர்த்தம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, தொடங்கி இன்றோடு அறுபத்து
நான்கு இதை ஒரு பதிவாக ஆடியோவில் 100 வரை பேசி பதிவிடுகிறேன்
அடுத்து தலைப்புகளில் நாந்தாங்கோ..... கில்லர்ஜி தொடங்கி இன்றைய மன்னிப்பு கோரலும், நன்றியுரையும் வரை தலைப்பில் ஒரு தவறு இருக்கிறது அது தெரியுமா ?
விடைகள் வரும் 2015 ஜனவரி 14 ஜய வருடம் தை மாதம் புதன்கிழமை உகாண்டா நாட்டு நேரம் இரவு 11.59 pm க்கு முன்பு வரை எழுதும் விடைகளை ஏற்றுக்கொண்டு
கண்டு பிடித்து விட்டார் என அறிவிக்கப்படும்.
நான் நிறைய எழுத வேண்டுமென நினைத்தேன் பதிவு நீண்டு
விட்டதால்....
அனிம்னபூத் அபாட்
நமக்கு
வித்தியாசமாக எதையாவது கொடுப்போமே... அப்பிடினு தோணுச்சு அதுனால நான் எப்படியும்
சுமார் 85 வருஷத்துக்கும் மேலே
தொடர்ந்து படிச்சுக்கிட்டு வர்ற இந்த பதிவை தங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்
புகைப்படத்துல இருக்கிறவரு என்னோட திண்ணைப்பள்ளிக்கூட
நண்பி. திருமதி. குஜாலாம்பாள்.
06.01.1835.
கீழே
சொடுக்குங்க இப்பவே சொல்லிப்புட்டேன் பயப்புடக்கூடாது.....
அன்பு
இதயங்களே... வணக்கம் இது எமது மன்னிப்பு கோரலும், விடை பெறலும்... முதலில்
மன்னிப்பு தருவீரே காரணம் இதில் நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்த முடியாமல்
விடுபட்டவர்கள் மட்டும் இந்த காணொளியை காணவும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்தானே
சிலரது மனம் அமைதி பெறுகிறது
காணொளி
கேட்பீரே...
இதற்க்கு உங்களிடமிருந்து விரிவான கருத்துரையை
எதிர்பார்க்கிறேன்.
அன்பு நெஞ்சங்களே... கடந்த ரம்ஜான் லீவுக்கு நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் எனக்கு ஒரு ஆஸ்திரேலியா விசிட் விசா அனுப்பினார் அங்கு போன எனக்கு அவர் செய்த துரோகத்தை விலாஎலும்பு முறிந்து போகும் அளவுக்கு உட்கார்ந்து எழுதி வைத்துள்ளேன் அதை விலாவாரியாக தங்களுக்கு எனது கில்லர்ஜி வலைப்பூவில் வழங்குகிறேன் கண்டிப்பாக படித்து சிலிர்பீரே... அல்லது சிரிப்பீரே...
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
இன்றைய கொசுறுகள்
Killergee – உலகம் எப்படி, போயிருச்சு பார்த்தியா ? செல்போணுக்கு உள்ளே..
கில்லர்ஜி – அப்படினா ? இப்ப நீங்க எந்த இடத்திலே
இருக்கீங்க ஃப்ரதர் ?
Killergee - ? ? ?
நன்றி
शुक्रिया
ధన్యవాదాలు
നന്നി
Thanks
شــكرا
சலாமத்
இஸ்தூத்தி
ஒல்லது
அன்புடன்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி தேவகோட்டையான்)
நேற்று இரவு புதிய ஆசை கனவுல முளைத்தது நண்பர் திரு. கரந்தையார், நண்பர் திரு. சே.குமார் அவர்களைப்பார்த்து பொறாமைப்பட்டேன் நாமலும்
தொடர்கதை எழுதினால் என்ன ? என்று ஆனால் ? புலிகளைப்பார்த்து எலி ஆசைப்படலாமா ? வீட்டுக்குள் புலி வந்தால் பயந்து ஓடுவார்கள் எலி வந்தால் ? வெளக்கமாத்தை வைத்து ‘’சட்டீர்’’ (இங்கும் சட்டீரா ?) அடித்து விட்டால் ? அதான் பயமாகீது.....
மதிப்பிற்குறிய ஐயா திரு. ஜியெம்பி மற்றும், திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு ஞானி ஸ்ரீபூவுவைப்பற்றி நிறைய இருக்கிறது கில்லர்ஜியில் எழுதுகிறேன்.
மனசை தமிழ்ப்படத்து கசாநாயகனைப்போல தந்த இறைவன் MOONஸி யை ஆங்கிலப்படத்து வில்லனைப்போல கொடுத்துட்டானே....
தேவகோட்டை சந்தனக்காட்டில்....
கீழே சொடுக்குக...
வாழ்க ! தமிழ்.
* * * * * * * * * * * * * * * * * *