07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 2, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்

2
வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

இரண்டாம் திருநாள்

02.06.2015


1] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: 
மணிராஜ்

நான் சென்ற ஆண்டு (2014) 
என் வலைத்தளத்தினில் நடத்திய
‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ 
பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று


 

ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியலில் 
முதலிடமும்
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்
’இரண்டாம் இடமும் 
பெற்றுள்ளவர்கள் இவரே 
என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் 
இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.


-oOo-

 அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு-1
வெற்றிகரமான ஆயிரமாவது பதிவு

ஆயிரம் நிலவே வா ! ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html 





அதிசயப் பாறைகள்-2

வெற்றிகரமான 1500வது பதிவு




கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்-3







மூன்றாம் கோணம்  

ஐந்து லட்சம் ஹிட்ஸ் போட்டியில் 

முதல் பரிசுக்குத்தேர்வான கட்டுரை











2. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்
வலைத்தளம்: கதம்ப உணர்வுகள் 


 முதன்முதலாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது, 
என் ஒருவனின் வலைத்தள அறிமுகத்திற்கு மட்டுமே, 
ஒரு முழுநாள் ஒதுக்கி சிறப்பித்திருந்தவர்
என் அன்புக்குரிய மஞ்சு 
அதற்கான இணைப்பு இதோ: 

  



பிறரின் பதிவுகளை ரஸித்து ருசித்துப் படித்து 
மிக நீண்ட பின்னூட்டம் அளிப்பதில் வல்லவர் 
மற்றும் நல்லவர் .... நம் மஞ்சு !

நேசத்தின் நிழல்

அதீத அன்பு

காதலாய்

நீ மட்டுமே வேண்டும்

சொல்லிவிடு

திருமதியாக்கி விடேண்டா...





3. திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்
வலைத்தளங்கள்: 
கை மணம்
முத்துச்சிதறல்


 
புதிய வலைத்தளம் ஒன்றினை உருவாக்கி அதில் நான் எழுத வேண்டும் என
என்னை வற்புருத்தி, ஓர் தூண்டுகோலாக இருந்தது மட்டுமல்லாமல்
என் முதல் பதிவுக்கு வருகை தந்து, முதல் பின்னூட்டமிட்டு சிறப்பித்த
என் அன்புக்குரியர் இவர்கள்.



எதைத்தான் சாப்பிடுவது ?

எதைத்தான் இங்கே நான் குறிப்பிடுவது?
இவரின் பதிவினில் அனைத்தும் முத்துக்களே!


உதவி எனப்படுவது யாதெனில்
நார்த்தங்காயும் பல்வலியும்
இதெற்கென்ன தீர்வு ?





4. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
வலைத்தளங்கள்: 
கோவை2தில்லி
சாப்பிட வாங்க
ரசித்த பாடல்


 
இன்று நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்க
மிகவும் தூண்டுதலாக அமைந்தது இவர்கள்
இந்த மேற்படி பதிவுக்குக் கொடுத்துள்ளதோர் பின்னூட்டமே எனச்சொல்லலாம்.



http://kovai2delhi.blogspot.in/2015/04/blog-post_6.html
சிறுதான்யப் பாயஸம்


மார்கழிக் கோலங்கள்

எல்.கே.ஜி. அட்மிஷன் என்றால் சும்மாவா!!!

பிடி கொழுக்கட்டை

இவரின் பதிவுகளில் முன்பெல்லாம் அவ்வப்போது
நல்ல மணமுள்ள ’கதம்பம்’ கிடைத்து வந்தன.
அது ஒரு சீசன் போலிருக்கு !





5. திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
வலைத்தளம்: கீதமஞ்சரி




நான் சென்ற ஆண்டு (2014) என் வலைத்தளத்தினில் நடத்திய
‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்
’முதலிடம்’ 
பெற்றுள்ள 
’விமர்சன வித்தகி’ 
இவரே என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் 
இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

 


http://geethamanjari.blogspot.in/2013/08/blog-post_7.html
ஆசை
http://geethamanjari.blogspot.in/2015/04/blog-post_19.html
அழைப்புமணி
பெரிய மனுஷியாகிவிட்டாளாம்
சிவப்பி


என் மூச்சும் பேச்சும்
என்றென்றும் தமிழமுதே!
என் எழுதுகோல் பீச்சும்
எண்ணத்தின் வீச்சுமதுவே!

என்று சொல்லும் இவரே 
இன்றைய தேதியில் 
மிகவும் அருமையான 
முன்னனி எழுத்தாளராகத் திகழ்ந்து வருபவர்.

-oOo-




இவருடைய வலைத்தளத்தினில்
‘ஒண்டவந்த பிடாரிகள்’ 
என்ற தலைப்பினில்
மிகவும் சுவாரஸ்யமான 
தொடர்பதிவுகளையும் காணலாம்.
http://geethamanjari.blogspot.in/2015/02/1.html

-oOo-



இவரின் சமீபத்திய நூல் வெளியீடு


என்றாவது ஒருநாள் 


(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய 
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்) 
மூல ஆசிரியர் – ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா) 
தமிழில் – கீதா மதிவாணன்

பதிப்பகம் – அகநாழிகை --- விலை – ரூ.150/-  
கிடைக்குமிடம்: 
அகநாழிகை புத்தக உலகம், 
390, அண்ணா சாலை, 
KTS complex, 
சைதாப்பேட்டை, 
சென்னை - 600015.




இவர் தமிழில் மொழிபெயர்த்து 
வெளியிட்டுள்ள இந்த நூலினை

 ‘என்றாவது ஒரு நாள்’

வாங்கிப்படிக்க வேண்டும் என நான் 
என் மனதினில் நினைத்திருந்தேன்.

அதற்குள் அதனை அவர்கள் அன்பளிப்பாகவே 
அன்புடன் அனுப்பி அசத்தியுள்ளார்கள் ! :)

’விமர்சன வித்தகி’ 

திருமதி. கீதா அவர்களின் அன்புக்கு 
என் இனிய நன்றிகள்.

 நீடூழி வாழ்க ! 

 





[Serial Nos: 2 to 5 above]

இவர்கள் நால்வருக்குள்ளும் 
ஒருசில ஒற்றுமைகள் உள்ளன. 
அவற்றைப்பற்றி மற்றொருநாள் சிறப்பித்துப் 
பேசலாம் என்று நினைத்துள்ளேன்.







மீண்டும் நாளை சந்திப்போம் !




என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்] 


109 comments:

  1. பிள்ளையாரோடு ஆரம்பித்து இருக்கின்றீர்கள் அருமை இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
    - கில்லர்ஜி -

    ReplyDelete
  2. இன்று தங்களால் அறிமுகப் படுத்தப்பட்ட சகோதரிகள் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள், திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள், திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள், திருமதி. ஆதி வெங்கட் அவர்கள், திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
    அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஏதோ பெரிய குடும்பத்திற்குள் நுழைந்தது போன்றதொரு பிரமிப்பு.

    இவர்களுக்கு மத்தியிலா நாமும் எழுதுகிறோம் என நினைக்கத் தூண்டுகிறது.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. :) நன்றி :)

      //ஏதோ பெரிய குடும்பத்திற்குள் நுழைந்தது போன்றதொரு பிரமிப்பு.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      Delete
  4. இப்போது இங்கு இரவு மணி பதினொன்று. உங்களின் இரண்டாம் பதிவிற்கு நாம் தான் முதல் விருந்தினர் என நினைத்து வலைச்சரத்தைத் திறந்து பார்த்தால் இப்போதும் எனக்கு ஏமாற்ற‌மே! எனக்கு முன்பே மூன்று பேர் வந்து விட்டார்கள்!

    என்னை இங்கே அறிமுகப்படுத்தியிருப்பதற்கு அன்பு நன்றி! நீங்கள் அவசியம் உங்கள் வலைத்தளத்தில் எழுத ஆரம்பிக்க் வேன்டும் என்று நான் கேட்டுக்கொண்டதற்கு இசைந்து நீங்கள் எழுதிய முதல் பதிவும் அதற்கு நான் முதல் பின்னூட்டம் கொடுத்ததும் இப்போது தான் நடந்தத் போல இருக்கிற‌து. ஐந்து வருடங்களில் பல சாதனைகளை ஏற்படுத்தி விட்டீர்கள்! இன்னும் பல சாதனைகள் தொடர என் இனிய வாழ்த்துக்கள்!

    என்னுடன் அறிமுகப்படுத்தப்பட்ட திருமதி.ராஜராஜேஸ்வரி, திருமதி.ஆதி வெங்கட், திருமதி மஞ்சுபாஷிணி சம்பத்குமார், திருமதி. கீதா மதிவாண‌ன் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. @ மனோ சாமிநாதன்

      இன்று இந்த வலைச்சரத்தில் காட்சியளிக்கும் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. :) அன்பான வருகைக்கும் அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் மிக்க நன்றி சித்ரா :)

      பிரியமுள்ள கோபு மாமா

      Delete
  6. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! வலைச்சரத்தில் தங்களது இரண்டாம் நாள் பதிவினில் அறிமுகம் ஆன சகோதரிகள்,

    திருமதி. இராஜராஜேஸ்வரி http://jaghamani.blogspot.com
    திருமதி. மஞ்சுபாஷிணி http://manjusampath.blogspot.in
    திருமதி. மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot.in
    திருமதி. ஆதி வெங்கட் http://kovai2delhi.blogspot.in
    திருமதி. கீதா மதிவாணன் http://geethamanjari.blogspot.in

    அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ Tue Jun 02, 12:51:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! வலைச்சரத்தில் தங்களது இரண்டாம் நாள் பதிவினில் அறிமுகம் ஆன சகோதரிகள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் தங்களின் உளங்கனிந்த நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      என் வலைச்சர ஆசிரியர் பணிக்காக தாங்கள் அன்றாடம் மறைமுகமாக மேற்கொண்டுவரும் அருந்தொண்டுகளுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.

      தங்களின் TIMELY HELPக்கு மிக்க நன்றி. :)

      அன்புடன் VGK

      Delete
  7. அட பிள்ளையார் பார்த்துக் கொண்டு இருக்கிறாரே. நல்லது. அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...! மேலும் தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...ஆழ்கடலில் முத்தெடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  9. வலைச்சரம் எழில் வனப்பு ஏந்தி நிற்கின்றது அய்யாவின் "V.G.K" கை வண்ணத்தில்!
    இரண்டாம் நாளில் இனிய சிறப்பினை இனிதே பெற்றுள்ள அனைவருக்கும்
    அன்பின் நல்வாழ்த்துகள்
    திருமதி. இராஜராஜேஸ்வரி http://jaghamani.blogspot.com
    திருமதி. மஞ்சுபாஷிணி http://manjusampath.blogspot.in
    திருமதி. மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot.in
    திருமதி. ஆதி வெங்கட் http://kovai2delhi.blogspot.in
    திருமதி. கீதா மதிவாணன் http://geethamanjari.blogspot.in
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  10. வல்வினை தீர்க்கும் விநாயகப்பெருமானின் தரிசனம் காலை எழுந்தவுடன் கிடைக்கப் பெற்றேன்.

    பெண்களுக்கே முதல் உரிமை என்ற பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து ஐந்து ரத்தினங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். அவர்களைப் பாராட்டுவதா அல்லது அவர்களை அளிமுகம் செய்த உங்களைப் பாராட்டுவதா என்று குழம்புகிறேன்.

    இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகளை முழுமையாகப் பார்க்க ஒரு நாள் போதுமா என்று கவலைப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தூக்கக் கலக்கத்தில் "அறிமுகம்" என்பதற்குப் பதிலாக "அளிமுகம்" என்று தட்டச்சு செய்து விட்டேன். ஆனால் இதுவும் ஒரு விதத்தில் பொருத்தம் என்றே நினைக்கிறேன். ரத்தினங்களை அளித்த அளிமுகம் என்றும் கொள்ளலாம் அல்லவா?

      இதுதான் "குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலியே" என்று சமாளிக்கும் டெக்னிக்?

      Delete
    2. பழனி. கந்தசாமி Tue Jun 02, 03:51:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வல்வினை தீர்க்கும் விநாயகப்பெருமானின் தரிசனம் காலை எழுந்தவுடன் கிடைக்கப் பெற்றேன். //

      மிக்க மகிழ்ச்சி.:)

      //பெண்களுக்கே முதல் உரிமை என்ற பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து ஐந்து ரத்தினங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். //

      முதலில் இறை வணக்கம் போல இது இறைவிகள் வணக்கம்.

      ஐந்து ரத்தினங்களா ! :)

      இவ்வாறு பஞ்ச ரத்தினங்களாகத்தான் பெரும்பாலான நாட்களில் என்னிடமிருந்து வரக்கூடும். ஒருசில நாட்களில் மட்டும், அது எட்டுவரை எட்டக்கூடும். :)

      //அவர்களைப் பாராட்டுவதா அல்லது அவர்களை அறிமுகம் செய்த உங்களைப் பாராட்டுவதா என்று குழம்புகிறேன்.//

      தாய்க்குலமான அவர்களையே பாராட்டிவிடுங்கள். :) சும்மா குழம்பாதீர்கள் .... குழப்பாதீர்கள் ! :)

      //இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகளை முழுமையாகப் பார்க்க ஒரு நாள் போதுமா என்று கவலைப்படுகிறேன்.//

      முழுமையாகப் பார்க்க ...... ஒருநாளே ஜாஸ்தி ஐயா. ஒரு 5 அல்லது 10 நிமிடங்கள் போதுமே. :) உட்புகுந்து அவர்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் படிக்கத்தான் நிறைய நாட்கள் தேவைப்படலாம். அதுபோலெல்லாம் போய் சிரத்தையாகப் படிப்பவர்கள் ஆயிரத்தில் ஒருவர் இருப்பதே சந்தேகம்.

      அதனால் மற்றவர்களைப்போலவே தாங்களும் கவலை ஏதும் படாமல் ஜாலியாக இருங்கோ.

      Delete

  11. தங்கள் அறிமுகத்தால்
    சிறந்த அறிஞர்களின்
    தகவல் கிட்டியதே!

    ReplyDelete
  12. இவர்கள் அனைவரும் நான் விரும்பித் தொடரும்
    அற்புதமான பதிவர்கள்
    பகிர்ந்து கௌரவப்படுத்தியமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. பிள்ளையார் சுழி போட்டி செயலெதுவும் தொடங்கு என்று ஒரு பாடல் உண்டு. அது நினைவுக்கு வந்தது, விநாயகப் ப்ர்த்மானை மேலே முதலில் கண்டதும்!

    அறிமுகமாகியுள்ள சகோதரிகள் வலைத்தளங்கள் எனக்கும் அறிமுகமானவையே என்பதில் எனக்கு சிறு மகிழ்ச்சி!

    திருமதி கீதா மதிவாணனின் தொடர் பதிவின் தலைப்பு "ஒண்டவந்த பிடாரிகள்"

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //திருமதி கீதா மதிவாணனின் தொடர் பதிவின் தலைப்பு "ஒண்டவந்த பிடாரிகள்"//

      ’ஒட்டவந்த பிடாரிகள்’ஐ உடனே ஓடஓட விரட்டி விட்டு ‘ஒண்ட வந்த பிடாரிகள்’ ஐ மட்டும் வைத்துக்கொண்டேன். மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      Delete
  14. அட! அதற்குள் இத்தனை பின்னூட்டங்கள்!! என்னுடன் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT Tue Jun 02, 05:59:00 AM

      வாங்கோ, வணக்கம். இன்று 03.06.2015 புதன்கிழமை என் தாயார் ஸ்ரார்த்தம். இப்போது தான் ஒருவழியாக அது முடிந்து என்னால் சாப்பிடவும் முடிந்தது. நேற்று இரவு வெகுநேரம் கண்விழித்ததாலும், இன்று தடபுடல் சாப்பாடு சாப்பிட்டுள்ளதாலும், இப்போதுகூட கொஞ்சம் கண்ணைச் சொக்கித்தான் வருகிறது.

      அதனால் பதில் அளிக்க இவ்வளவு தாமதம்.

      //அட! அதற்குள் இத்தனை பின்னூட்டங்கள்!! என்னுடன் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      :) தங்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள்.

      என் வலைச்சர ஆசிரியர் பணிக்காக தாங்கள் அன்றாடம் மறைமுகமாக மேற்கொண்டுவரும் அருந்தொண்டுகளுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

      தங்களின் TIMELY HELPக்கு மிக்க நன்றி. :)

      அன்புடன் VGK

      Delete
  15. வலைச் சரம்
    களை கட்டத் தொடங்கிவிட்டது ஐயா
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
  16. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  17. அன்பின் அண்ணா..

    வலைச்சரத்தில் தங்களது இரண்டாம் நாள் பதிவு - மங்கலத் தோரணங்களுடன் ஒளிர்கின்றது..

    நேற்று - திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரையைக் கண்டபோதே மனம் பரவசமானது.. நினைத்ததைப் போல - அவர்களே முதலில் தங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளார்கள்..

    மகிழ்கின்றது மனம்.. சிறப்பிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    என்றென்றும் வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. :) பரவசம் மிக்க தங்களின் அழகான நிறைவான கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் :)

      Delete
  18. முதல் இடுகையிலேயே மிகப்பெரிய எழுத்தாளுமைகளுடன் என் வலைப்பூவையும் குறிப்பிட்டுள்ளதற்கு மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

    வலைப்பூவில் இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவுகள் அனைத்துமே என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவை என்பதை இங்கு சொல்வதில் மகிழ்கிறேன். பதிவுகளோடு என்னுடைய நூலறிமுகத்தையும் அது கிடைக்குமிடத்தையும் இங்கு தந்துள்ளதற்கு மிக மிக நன்றி.

    என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் தவறாமல் தொடர் பின்னூட்டங்களால் ஊக்கமளிக்கும் தாங்கள் இங்கும் என் பதிவுகளை முன்னிலைப்படுத்தி ஊக்கமளித்திருப்பது என் பேறு.

    இன்றைய அறிமுகங்களான இராஜராஜேஸ்வரி மேடம், மனோ மேடம், தோழிகள் மஞ்சுபாஷிணி, ஆதி வெங்கட் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி

      தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)

      தங்களின் அன்பு வருகைக்கும் அழகுக் கருத்துக்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

      Delete
  19. தங்களுடைய அறிமுகப் பதிவுகளை வலைவழி வந்து தெரிவித்த தமிழ் இளங்கோ ஐயாவுக்கும் புதுவை வேலு அவர்களுக்கும் தோழி ஆதிக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி Tue Jun 02, 08:24:00 AM

      /தங்களுடைய அறிமுகப் பதிவுகளை வலைவழி வந்து தெரிவித்த தமிழ் இளங்கோ ஐயாவுக்கும் புதுவை வேலு அவர்களுக்கும் தோழி ஆதிக்கும் மனமார்ந்த நன்றி.//

      என் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு திறம்படச் செயலாற்றி, எனக்கு உதவிவரும் அந்த மூவருக்கும் என் கூடுதல் நன்றிகளை மீண்டும் நானும் தங்களுடன் சேர்ந்து இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
  20. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  21. அனைத்தும் தொடரும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  22. ஆஹா அண்ணா எங்க ஃபேவரைட் பிள்ளையாரை வைத்து தொடங்கி அட நம்ம ராஜேஸ்வரி, மனோம்மா, ஆதிவெங்கட், கீதா எல்லோருடனும் என் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தி எனக்கு இஷ்டமான பதிவுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்க..

    வலைச்சர அசத்தலான ஆரம்பத்திற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா..

    என்னுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ராஜேஸ்வரி, ஆதிவெங்கட், மனோம்மா, கீதா எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா..

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை எனக்கு அன்புடன் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

    எல்லோரையும் இனியும் சந்திக்கப்போகும் சந்தோஷத்தையும் தரப்போகும் அண்ணாவுக்கு நிறைவான அன்பு நன்றிகள்....

    வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நிறைவான அன்பு நன்றிகள்பா..

    தொடர்ந்து அசத்துங்கோ அண்ணா... அன்பு வாழ்த்துகள்..

    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மஞ்சு, வணக்கம்.

      இன்று வலைச்சரத்தில் காட்சியளிக்கும் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      அன்பு வருகைக்கும் அழகுக் கருத்துகளுக்கும் சந்தோஷம்ப்பா :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  23. பகிர்வுகள் அனைத்தும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. என்னை அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றிகள்!

    அறிமுகமாகியிருக்கும்
    அன்புத் தோழியர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி Tue Jun 02, 10:34:00 AM

      //என்னை அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றிகள்!//

      இன்று வலைச்சரத்தில் காட்சியளிக்கும் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      Delete
  25. என்னை அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றிகள்!

    அறிமுகமாகியிருக்கும்
    அன்புத் தோழியர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி Tue Jun 02, 10:36:00 AM

      //அறிமுகமாகியிருக்கும் அன்புத் தோழியர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.!//

      அவர்கள் அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  26. ஆஹா அட்டகாசமான அறிமுகங்கள் அனைவரும் என் நெருங்கிய தோழியர்கள் என்பதில் மகிழ்ச்சி. தங்கள் பதிவென்றாலே ஒரு தனி சந்தோஷம் வந்து ஒட்டிக்கொள்ளும் வாழ்த்துக்கள் தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சசி கலா Tue Jun 02, 10:50:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா அட்டகாசமான அறிமுகங்கள். அனைவரும் என் நெருங்கிய தோழியர்கள் என்பதில் மகிழ்ச்சி.//

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்கள் பதிவென்றாலே ஒரு தனி சந்தோஷம் வந்து ஒட்டிக்கொள்ளும்//

      தங்களின் தனி சந்தோஷம் இப்போது என்னையும் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.

      //வாழ்த்துக்கள். தொடருங்கள் தொடர்கிறோம்.//

      :) மிக்க நன்றி :)

      Delete
  27. இன்று அறிமுகமாயிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. தங்களது இரண்டாம் திருநாள் பதிவினல் அறிமுகம் ஆன
    திருமதி. இராஜராஜேஸ்வரி, திருமதி. மஞ்சுபாஷிணி,
    திருமதி. மனோ சாமிநாதன், திருமதி. ஆதி வெங்கட், திருமதி. கீதா மதிவாணன்
    ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. மங்கையர் மலர்! நல்ல அறிமுகம்! நல் வாழ்த்துகள்! அனைவருக்கும்

    ReplyDelete
    Replies
    1. :) மங்கையர் மலருக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா :)

      Delete
  30. 'உங்களுக்குக் கொஞ்சம்; எனக்குக் கொஞ்சம்' என்று அளவான பங்கிடல். அதுவே அழகாக இருக்கிறது. இனி வரப்போகிற 'வலைச்சர' ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதலாக இருப்பது தான் இதில் விசேஷம்!

    ReplyDelete
    Replies
    1. ஜீவி Tue Jun 02, 12:38:00 PM

      வாங்கோ, நமஸ்காரம். வணக்கம்.

      //'உங்களுக்குக் கொஞ்சம்; எனக்குக் கொஞ்சம்' என்று அளவான பங்கிடல். அதுவே அழகாக இருக்கிறது. இனி வரப்போகிற 'வலைச்சர' ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதலாக இருப்பது தான் இதில் விசேஷம்!//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான விஷேசமான பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  31. வினை தீர்க்கும் விநாயகப் பெருமானின் அருளுடன் இன்றைய தங்களது வலைச்சரத் தொடுத்தல் அழகு! பின்னெ பெண் வலைப்பதிவர்கள் அணி வகுப்பாயிற்றே!!! அழகாகத்தானே இருக்கும்! அதுவும் எல்லோருமே ஜாம்பவானிகர்கள்! இதில் இன்னும் மஞ்சுபாஷிணி மற்றும் கீதா மதிவாணன் அவர்களைத் தெரிந்திருந்தாலும் வலைத்தளங்களுக்கு இன்னும் செல்லவில்லை...நேரம் தான் காரணம்.......போக வேண்டும்....

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! மணக்கத் தொடங்கிவிட்டது.....வலைச்சரம்! தங்களால்.....

    ReplyDelete
  32. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  33. இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அறிமுகம் செய்த உங்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க நன்றி, மேடம் :) சந்தோஷம் !

      Delete
  34. தொப்பையப்பர் கடைக்கண் பார்வை பார்த்தாலே போதும் என்று நினைத்தால் இங்கு அவர் முழுக்கண்ணால் பார்க்கிறாரே.

    பெண்மைக்கு மதிப்பு கொடுத்து (எப்பொழுதும் போல்) பெண்களின் வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு பெண்களின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    அறிமுகப் படுத்தப்பட்ட ஐவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    கோபு அண்ணா மீதி உள்ள 33 நாட்களில் ஒரு நாளாவது ரகசியமா எனக்கு போன்ல சொல்லிட்டு இங்க பதிவு போடுங்க. ஒரே ஒரு நாள் முதல்ல வந்து பின்னூட்டம் கொடுத்துடறேன்.

    வாழ்த்துக்களுடனும்,
    வணக்கத்துடனும்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya Tue Jun 02, 03:04:00 PM

      //தொப்பையப்பர் கடைக்கண் பார்வை பார்த்தாலே போதும் என்று நினைத்தால் இங்கு அவர் முழுக்கண்ணால் பார்க்கிறாரே. //

      நன்றாக உற்றுப்பாருங்கோ, உங்களைப் பார்த்து தொப்பையப்பர் கண்ணடிப்பார் ! :)

      //பெண்மைக்கு மதிப்பு கொடுத்து (எப்பொழுதும் போல்) பெண்களின் வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு பெண்களின் சார்பில் மனமார்ந்த நன்றி. //

      மிகவும் சந்தோஷம் ஜெயா ! :)

      Delete
  35. ஆஹா கலை கட்டிவிட்டது உங்கள் ஆரம்பம்.
    முத்துகளையும் ரத்தினங்களையும் இங்கே கொட்டி விட்டீர்கள்.
    அள்ளி கொள்வது எங்கள் அதிர்ஷ்டம்.
    வளர்க உங்கள் பணி.
    விஜயலட்சுமி

    ReplyDelete
    Replies
    1. விஜியின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வீ....ஜீ யின் மனம் நிறைந்த நன்றிகள். :)

      Delete
  36. இன்றய அறிமுகப்படுததியிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துகள் திருமதி இராஜ ராஜேஸ்வரி மேடம் பதிவுகளுக்கு அடிக்கடி போய்ப்படித்து ரசித்திருக்கேன். மனோ மேடம் பதிவுகளும் படித்திருக்கேன். மற்றவர்களின் பக்கம் இனிமேலதான் போகணும் அனைவருக்கும் மறுபடியும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. :) அன்பான வருகைக்கும் இனிமையான கருத்துக்களுக்கும் என் அன்பு நன்றிகள் .... பூந்தளிர் :)

      Delete
  37. பிரமாதம் பிரமாதம். விநாயகப் பெருமானோடு ஐம்பெரும்தேவியர் அறிமுகம் அருமை.

    எல்லாருமே எனக்குப் பிடித்த பதிவர்களும் கூட. பெண்களுக்கு இரண்டாம் நாளிலேயே 100% இட ஒதுக்கீடு.. கொடுத்ததற்கு நன்றி விஜிகே சார். :)

    வாழ்த்துகள் ராஜி, மனோ மேம், மஞ்சு, ஆதி & கீதா :)

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan Tue Jun 02, 04:11:00 PM

      வாங்கோ ஹனி மேடம். வணக்கம்.

      //பிரமாதம் பிரமாதம். விநாயகப் பெருமானோடு ஐம்பெரும்தேவியர் அறிமுகம் அருமை.

      எல்லாருமே எனக்குப் பிடித்த பதிவர்களும் கூட. பெண்களுக்கு இரண்டாம் நாளிலேயே 100% இட ஒதுக்கீடு.. கொடுத்ததற்கு நன்றி விஜிகே சார். :) //

      தங்களின் அன்பான வருகைக்கும் ருசியான தேன் சிந்திடும் கருத்துக்களுக்கும் VGK யின் மனம் நிறைந்த நன்றிகள். :)

      Delete
  38. இன்று அறிமுகப் படுத்தியிருக்கும் பதிவர்களுக்கு பாராட்டுக்கள் திருமதி இராஜே ராஜேஸ்வரி அம்மா பதிவுகள் மட்டும் படித்திருக்கேன். இனிமேலதான் மத்தவங்க பக்கமும் போய் ப்பார்க்க வேண்டும்

    ReplyDelete
  39. அறிமுகமாயிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். திருமதி ராஜராஜேஸ்வரியின் பதிவுகள் பக்தி மனம் கமழும். அவர் பூரண நலம் பெற்று மீண்டும் வலை உலா வர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
    அட்டகாசமான அறிமுகங்கலுக்கு நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam

      தங்களின் அன்பு வருகைக்கும் அட்டகாசமான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம்.

      Delete
  40. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. மணி மணியான எழுத்தாளர்கள்.. வலைத்தளத்தில் மகுடம் சூட்டியவர்கள்.. படிக்கத் திகட்டாத அவர்கள் புகழ் இன்னொரு முறை உங்களால் பளிச்சிடுகிறது !
    அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ரிஷபன் Tue Jun 02, 08:19:00 PM

      //மணி மணியான எழுத்தாளர்கள்.. வலைத்தளத்தில் மகுடம் சூட்டியவர்கள்.. படிக்கத் திகட்டாத அவர்கள் புகழ் இன்னொரு முறை உங்களால் பளிச்சிடுகிறது ! அனைவருக்கும் வாழ்த்துகள்//

      வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் அன்பு வருகைக்கும் மணிமணியான, மகுடம் சூட்டிய, திகட்டாத, பளிச்சென்ற கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள
      வீ...............ஜீ

      Delete
  42. ராஜேஸ்வரி மேடம் நலம் பெற்று மீண்டு வந்தமையறிந்து மகிழ்ச்சி. அவர்களை முதல் பதிவராக அறிமுகம் செய்திருப்பது மிகவும் சரி. மஞ்சு, கீதா, மனோ சாமிநாதன் ஆதி வெங்கட் அனைவருமே எனக்குப் பழக்கமான பதிவர்கள் தாம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! மனோ தான் உங்களுக்கென்று வலைத்தளம் உருவாக்கி எழுத ஊக்குவித்தவர்கள் என்ற விபரம் இன்று தான் அறிந்தேன். புகழ்மாலைக்கு இவர்கள் அனைவரும் மிகவும் பொருத்தமானவர்களே. எல்லோருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G Tue Jun 02, 08:33:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ராஜேஸ்வரி மேடம் நலம் பெற்று மீண்டு வந்தமையறிந்து மகிழ்ச்சி. அவர்களை முதல் பதிவராக அறிமுகம் செய்திருப்பது மிகவும் சரி.//

      நீங்க சொன்னா எதுவுமே சரியாகத்தான் இருக்கும். :)

      //மஞ்சு, கீதா, மனோ சாமிநாதன் ஆதி வெங்கட் அனைவருமே எனக்குப் பழக்கமான பதிவர்கள் தாம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

      சந்தோஷம்.

      //மனோ தான் உங்களுக்கென்று வலைத்தளம் உருவாக்கி எழுத ஊக்குவித்தவர்கள் என்ற விபரம் இன்று தான் அறிந்தேன். //

      நான் வலைத்தளத்தினில் கட்டாயம் எழுத வேண்டும் என 2010ம் ஆண்டிலேயே என்னை ஊக்குவித்தவர்களில் இவர்களின் பங்கும் அதிகம்.

      ஆனால் 2009ம் ஆண்டிலேயே ஒருநாள் என் வீட்டுக்கே நேரில் வருகை தந்து, எனக்காக ஓர் வலைத்தளம் உருவாக்கிக் கொடுத்து உதவியவர், என் அருமை நண்பரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் ஸ்ரீனிவாஸன் அவர்கள் மட்டுமே.

      //புகழ்மாலைக்கு இவர்கள் அனைவரும் மிகவும் பொருத்தமானவர்களே. எல்லோருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். :)

      Delete
  43. ஆஹா அத்துனை அறிமுக பதிவர்களும் என் இனம், மிகுந்த மகிழ்ச்சி. பெண்மையை முன்னிறுத்தும் எதுவும் பிரகாசிக்கும் என்பது அதன் மகிமையுணர்ந்தோர் மறுக்க முடியாத உண்மை. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தாங்கள் அறிமுகபடுத்தியவர்கள் பதிவுகளைச் சில படித்துள்ளேன். மற்றவையும் படிக்க வேண்டும். தங்களால் வலைச்சரம் மணம்கமழ்கிறது. தொடருங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. mageswari balachandran Tue Jun 02, 08:38:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா அத்துனை அறிமுக பதிவர்களும் என் இனம், மிகுந்த மகிழ்ச்சி. பெண்மையை முன்னிறுத்தும் எதுவும் பிரகாசிக்கும் என்பது அதன் மகிமையுணர்ந்தோர் மறுக்க முடியாத உண்மை.//

      அச்சா, பஹூத் அச்சா ! மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். :)

      //பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தாங்கள் அறிமுகபடுத்தியவர்கள் பதிவுகளைச் சில படித்துள்ளேன். மற்றவையும் படிக்க வேண்டும். தங்களால் வலைச்சரம் மணம்கமழ்கிறது. தொடருங்கள். நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். :) நீங்களும் தொடர்ந்து வாங்கோ.

      Delete
  44. மங்கையர் திலகங்களுடன் மங்கல ஆரம்பம்!

    ReplyDelete
    Replies
    1. சென்னை பித்தன்Tue Jun 02, 08:49:00 PM
      மங்கையர் திலகங்களுடன் மங்கல ஆரம்பம்!//

      :) மிக்க நன்றி சார் :)

      Delete
  45. பிரபல ஐந்து பதிவர்களை இன்று ஞாபகமூட்டினீர்கள்.
    அவர்களின் சிறந்த பதிவுகளின் சில இணைப்புகளையும் தந்தீர்கள்.
    இன்று பங்குகொண்ட ஐவருக்கும் வாழ்த்துகள்...

    தொடர்வோம்...

    ReplyDelete
  46. திறமையான ஐந்து பெண் பதிவர்களை அறிமுகப்படுத்தி வலைச்சரத்திற்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள் ஐயா!
    த ம +1

    ReplyDelete
  47. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  48. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    என்னில் பாதியையும் இன்றைய முதல் தினத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க நன்றி வெங்கட்ஜி ...... பாதியென்ன, மீதியும் நிச்சயமாக உண்டு :)

      Delete
  50. அறிமுகப்பதிவர்கள் அறிமுகமானவர்களே. தங்களின் மூலம் அறிமுகம் என்பதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க நன்றி, முனைவர் ஐயா :)

      Delete
  51. அறிமுகப் பதிவர்கள் எல்லாம் விலை உயர்ந்த ரத்தினங்கள் போன்றவர்கள். உங்கள் பதிவுகளில் அடிக்கடி பார்த்தும்,படித்தும் பரிச்சயமானவர்கள். யாவருக்கும், வாழ்த்துகள்.
    யாவரையும் ஸ,ந்தோஷமாகப் பார்க்கிறேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi Thu Jun 04, 12:56:00 PM

      வாங்கோ, நமஸ்காரங்கள்.

      //அறிமுகப் பதிவர்கள் எல்லாம் விலை உயர்ந்த ரத்தினங்கள் போன்றவர்கள். உங்கள் பதிவுகளில் அடிக்கடி பார்த்தும், படித்தும் பரிச்சயமானவர்கள். யாவருக்கும், வாழ்த்துகள்.
      யாவரையும் ஸந்தோஷமாகப் பார்க்கிறேன். அன்புடன்//

      தங்களின் அன்பான வருகையும் வாழ்த்துகளும் எங்களுக்கு மிகவும் விலை உயர்ந்த ரத்தினங்களாகவும், எங்கள் மனதுக்கு ஸந்தோஷம் தருவதாகவும் உள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி.

      Delete
  52. அறிமுகம் படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும்
    இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  53. இந்த பதிவிற்கு நான் இட்ட பின்னுட்டம் என்ன ஆனதென்று தெரியவில்லை! விடாமல் இதோ மீண்டும் ஓர் பின்னூட்டம்! பிள்ளையார் சுழி போட்டு துவங்கி இருப்பது மிக்க மனநிறைவைத் தருகின்றது! உச்சிப்பிள்ளையாரை தினமும் தரிசிப்பவர் அல்லவா? இன்றைய அறிமுக பெண்பதிவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள் இவர்களின் சில பதிவுகளை வாசித்து மகிழ்ந்து கருத்திட்டிருக்கிறேன்! வலைச்சரத்தில் இவர்கள் அறிமுகம் ஆனதில் மகிழ்ச்சி! சுய அறிமுகத்தில் தாங்கள் தந்துள்ள ஜாங்கிரி சிறுகதை ஏற்கனவே தங்கள் தளத்தில் படித்து நெகிழ்ந்து போனேன்! ஓர் சமையல்காரரின் மன ஓட்டத்தை மிக அருமையாக சித்தரித்து இருப்பீர்கள்! எத்தனை முறை படித்தாலும் இந்த ஜாங்கிரி திகட்டாத ஒன்று! பாராட்டுக்கள்! தங்களின் எழுத்துப்பணியும் வலைச்சரப் பணியும் தொடரட்டும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @‘தளிர்’ சுரேஷ்

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான பல கருத்துக்களுக்கும், வலைச்சரத்தின் வளர்ச்சிக்காக தங்களின் பொன்னான தமிழ்மண வாக்கினைப் பதிவு செய்துள்ளதற்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது