வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 6-ம் நாள்
➦➠ by:
6-ம் நாள்,
gmb writes
வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 6-ம் நாள்
----------------------------------------------------------
ஆறாம் நாள்.
திரு ராதாகிருஷ்ணன்
என் வலைப்பூவின் ஆரம்ப இணைப்பாளர் என்று எண்ணுகிறேன் இங்கிலாந்திலிருந்து எழுதி
வருகிறார். சில புத்தகத் தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது அதீதக் கனவுகள் என்னும் வலைத்தளத்தில் எழுதி
வருகிறார்.நான் அவ்வப்போது அவர் தளத்துக்குச் செல்வேன் அவரும் எப்போதாவது வருவார்.
நான் பொதுவாகச்செல்லும் தளங்களில் இவரைக் காண்பது இல்லை. பலருக்கும் இவர் தளம்
புதிதாய் இருக்கலாம் இவரது பதிவு ஒன்று மாதிரிக்கு.இறைவனும் இறை உணர்வும்
திரு பக்கிரிசாமி நீலகண்டன் ஆஸ்திரேலியாவிலிருந்து
எழுதுகிறார். அண்மையில் சில காலமாக இவரைப் பதிவுகளில் காண முடிவதில்லை. ஆனால்
பதிவுகளை வாசித்துப் பின்னூட்டங்கள் ஆங்காங்கே இட்டு வருகிறார். இவரது தளத்தில்
இவர் ஸ்டாட்டின் எனும் மாத்திரையால்
அவதிக்குள்ளானவர் என்று தெரிகிறதுஇந்த மாத்திரை கொலோஸ்திரலைக் கட்டுப்படுத்த கொடுக்கப்
படுகிறது. என்னுடைய சாதாரணன் ராமாயண்ம் படித்து அதை நாந்தான் எழுதினேனா என்று
கேள்வி கேட்டு இருந்தார். அவரது பிறவி மர்மங்கள் என்னு நீண்ட தொடரில் பல
பதிவுகளைப் படித்து இருக்கிறேன் அவை முற்பிறவி எண்ணங்கள் பற்றி ஒரு மருத்துவர் தன்
நோயாளியிடமிருந்து பெரும் செய்திகளைத் தாங்கியவை வித்தியாசமான பதிவுகள். முகவுரை மட்டும் இங்கே கொடுக்கிறேன்
அடுத்த அறிமுகம் ஃப்ரான்ஸ் நாட்டில் இருந்து எழுதும்
அருணாசெல்வம் ஆரம்பகாலத்தில் இருந்தே இவரது பதிவுகள் எனக்குப் பழக்கம் கவிதைகள் பல
தாங்கி வரும் இடுகைகள். இவர் பெயர் பற்றிக் கேள்விப்பட்டவர்களுக்கு இவர் ஆணா
பெண்ணா என்று சந்தேகம் இருந்தது போலும் ஒரு பதிவில் அவரே அதைத் தீர்த்து வைத்தார்
அவர் ஒரு பெண்மணிதாங்கோ.மரபுக் கவிதைகள் எழுதும் இவர் ஒரு அகவல்
வெளியிட்டிருந்தார். அதன் சுட்டி இதோ அகலிகை செய்தது சரியே
மதி சுதா ஸ்ரீலங்காவிலிருந்து எழுதுபவர். பல பதிவுகள்
அங்கிருக்கும் நிலையைப்பிரதி பலிக்கும் பதிவெழுதுவது குறும்படங்களைத் தயாரித்து
வெளியிடுவதிலும் ஆர்வமுள்ளவர் ஒரு வித்தியாசமான சிந்தனைப் பகிர்வு இதோ
உங்களுக்காக..குறியீட்டு சினிமாவை ரசிக்கத் தெரியாத தமிழ் ரசிகர்கள்
|
|
குறள் பதிவுகளை அதிகம் விரும்பும் திரு.பக்கிரிசாமி நீலகண்டன் அவர்களை ஏனோ அதிகம் காண முடிவதில்லை... சகோதரி அருணாசெல்வம் அவர்களும் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வருவார் என நம்புவோம்...!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
@ திண்டுக்கல் தனபாலன்
Deleteபக்கிரிசாமி அவர்களது பின்னூட்டங்களை ஆங்காங்கே பார்க்கிறேன் அருண செல்வமும் விட்டு விட்டுதான் எழுதுகிறார். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிடி
ட்விட்டர்#Twitter எனும் சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமாக வெளிவரும் இரு மின்நூல்களை தொகுத்து வழங்குகிறார் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள்,,, முதலாவதாக ரைட்டர் சரவண கார்த்திகேயன் என்பவரின் பெருமுயற்சியால் வெளியிடப்படும் "தமிழ் மின்னிதழ்" இரண்டாவதாக ஆந்தைகண்ணன் என்பவரின் பெருமுயற்சியால் வெளியிடப்படும் "நமதுதிண்ணை" என இரு இணையதள மின்நூல் பதிவுகளை அப்படிய தருகிறார் திரு ராதாகிருஷ்ணன். இணைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அவரது வலைப்பூவினில் அனைவரும் வருகைதருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்,,,
ReplyDelete@ செந்தழல் சேது
Deleteதிரு ராதாகிருஷ்ணனின் தள இணைப்பாளன் நான் அவரது எழுத்துக்களைப்படிக்கிறேன். அவ்வப்போது பின்னூட்டமும் இடுவதுண்டு. மற்றபடி மின்னிதழ்களைப் படித்ததில்லை. ஆர்வமுடன் பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி சார்.
மிக்க நன்றி சார்
Deleteஇவர்களும் நான் விரும்பித் தொடரும்
ReplyDeleteமிகச் சிறந்த பதிவர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
(எப்படி பதிவிடவும் விடாது தொடர்ந்து
பின்னூட்டமிடவும் முடிகிறது
தங்கள் இவ்வார உழைப்பு பிரமிப்பூட்டுகிறது )
@ ரமணிஎனக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஓரளவாவது செவ்வனே செய்ய வேண்டாமா. ?சிறிதுமுன் தயாரிப்பு சிறிது முனைப்பு அவ்வளவுதான் வருகைக்கும் வாழ்த்டுக்கும் நன்றி ஐயா.
Deleteவெளிநாட்டுப் பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
Deleteவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.
உலகம் சுற்றும் வாலிபரின் G.M.B உற்ச்சாக பதிவு!!!
ReplyDeleteஅடையாளம் காட்டியுள்ளவர்களின் சுட்டிகளின் பதிவுகளுக்கு சென்று வருகிறேன்! நன்றி!
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
@ யாதவன் நம்பி
Deleteஉற்சாகப்படுத்தும் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.
வயதானாலும் இளமை உணர்வோடு எதையும் ,தன் தனித்தன்மை கெடாமல் தினம் எழுதும் உங்கள் முயற்சி கண்டு வியக்கிறேன்! வாழ்த்துகிறேன்!
ReplyDelete@ புலவர் இராமாநுசம்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
தஞ்சையம்பதி தவிர மற்றவர்கள் புதியவர்கள். அவர்களது தளங்களுக்குச் சென்று படித்தேன். நன்றி.நாளை சந்திப்போம்.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
Deleteஅறியாத பதிவர்களின் தளங்களுக்குச் சென்று வாசித்ததற்கு நன்றி ஐயா
முதல் இருவரும் புதியவர்கள்.
ReplyDeleteமற்றவர்கள் தொடர்ந்து வாசிப்பவர்கள்...
மிகச் சிறப்பாக வலைச்சரத்தில் சரம் தொடுக்கிறீர்கள் ஐயா...
அருமை... அருமை.
@ பரிவை சே குமார்
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம். ஆறாம் நாளான இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து வலைப் பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் சுட்டிய அதீதகனவுகள் ராதாகிருஷ்ணன் தளம் சென்று பார்த்தேன். இவரது பதிவுகளை மீண்டும் நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு தொடர்வேன்.
பக்கிரிசாமி நீலகண்டன் வாசகர்களில் நானும் ஒருவன். இவருடைய பதிவுகள் யாவும் ஒரு நூலாக அல்லது மின்நூலாக வந்தால் நல்லது.
சகோதரி அருணாசெல்வம் கவிதைகள் வாசிப்பதுண்டு; கவி காளமேகம் எழுதிய சில தனிப் பாடல்களுக்கு இவர் தந்த ரசனையான விளக்கங்கள் நினைவுக்கு வருகின்றன.
சகோதரி மதிசுதா அவர்களது பதிவுகள் போய்ப் பார்க்க வேண்டும்.
தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களது ஆன்மீகப் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கின்றேன்; படிக்கும் போது, அயல்நாட்டில் இருக்கும் அவர் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தார் என்று எண்ணத் தோன்றும்.
த.ம.5
@ தி தமிழ் இளங்கோ
Deleteஆழ்ந்த வாசிப்புக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. ஒரு சின்ன திருத்தம் .மதி சுதா என்பவர் ஒரு ஆண்பதிவர் உங்கள் பின்னூட்டம் கண்டபின் அவர் தளம் போய் சரிபார்த்துக் கொண்டேன். வருகைக்கு நன்றி ஐயா
எனது தவறுக்கு மன்னிக்கவும்.
Delete@ தி.தமிழ் இளங்கோ,
Deleteஅவர் பெயர் தவறு செய்யும் படியே இருக்கிறது. மன்னிக்க என்ன இருக்கிறது மீள் வருகைக்கு நன்றி ஐயா
புதியவர்கள்!
ReplyDelete@ ஸ்ரீராம்
Deleteஉங்களுக்கா.?உங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ.
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஐயா!.
ReplyDeleteகுழந்தைகள் பள்ளி இறுதியாண்டுகளில் உள்ளதால் பதிவுகள் எழுதுவது சிரமமாக உள்ளது. விரைவில் மீண்டும் பதிவுகள் எழுதுவதற்கு முயற்சிக்கிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி N
@ பக்கிரிசாமி நீலகண்டன்
Deleteஉங்கள் மீள்வருகையை எதிர் நோக்குகிறோம் வலைச்சரம் வந்ததற்கு நன்றி ஐயா
அன்பின் ஐயா..
ReplyDeleteஇன்றைய சரத்தில் தொடுக்கப்பட்ட புதிய பூக்களைத் தெரிந்து கொண்டேன்
தங்களது - நேர்த்தியான தொகுப்பில் எனக்கும் ஒரு இடமளித்து சிறப்பித்தற்கு மிக்க நன்றி.. மகிழ்ச்சி..
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
@ துரை செல்வராஜு
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. குவைத்தில் மசூதியில் குண்டு வெடிப்பு என்று பத்திரிக்கையில் படித்ததும் நீங்கள் நலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கை இருந்தது. நலம்தானே?
அன்பின் ஐயா..
Deleteயாதொரு பிரச்னையும் இல்லை. நலமாக இருக்கின்றேன் ஐயா..
இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கின்றேன்.. நம்மவர்களுக்கு இதுவரையிலும் பிரச்னை இல்லை..
அமைதியை வேண்டிக் கொள்வோம்..
தங்கள் அன்பினுக்கு நன்றி..
சிலர் எனக்கு புதியவர்கள் ஐயா! இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ தனிமரம்
Deleteபுதியவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் அல்லவா வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
இராதாகிருஷ்ணன், பக்கிரிசாமி நீலகண்டன் ஆகியோரை அறியேன்! மற்றவர்களின் தளங்களுக்கு அவ்வப்போது செல்வதுண்டு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDelete@ தளிர் சுரேஷ்
Deleteராதாகிருஷ்ணன் பக்கிரிசாமி ஆகியோரைப் பற்றிய தகவல்களுக்கு பின்னூட்டங்களைப்பாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிசார்
வணக்கம் அய்யா, தஞ்சையம்பதி அவர்களின் தளம் தெரியும் மற்றவர்கள் புதியவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி.
ReplyDelete@ மகேஸ்வரி பாலசந்திரன்
Deleteபுதியவர்களை பழகியவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்
சிறந்த பதிவர்களை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றிகள்.
ReplyDelete@ துளசிகோபால்
Deleteஉங்கள் வருகைக்கும் என் பணியினைப் பாராட்டியதற்கும் நன்றி மேட.
இன்றைய அறிமுகப்பதிவர்களில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திரு N.பக்கிரிசாமி அவர்களை அறிவேன்.அவரது வலைத்தளமும் எனக்கு பரிச்சயமுண்டு. அவர் மொழிமாற்றிய தொடர்கள் யாவும் திரும்பப் படிக்கத்தூண்டும். பணிச்சுமை காரணமாக பதிவுலகில் அவர் தற்காலிக விடுப்பு எடுத்திருக்கிறார் என எண்ணுகிறேன். மற்றவர்களின் வலைத்தளங்களை இனி பார்க்கவேண்டும். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்களுள் சிலர் அறிந்தவர்கள். சிலர் புதியவர்கள். அவர்களுடைய தளங்களை சென்று பார்த்து தொடர்பவராக இணைந்துகொண்டேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDelete@ கீத மஞ்சரி
Deleteஅடையாளம் காட்டப்பட்டவர்களில் அறியாதவர்களை பரிச்சயப் படுத்டிக் கொள்ளலாமே வாழ்த்துக்களுக்கு நன்றி மேம்
சிலர் புதியவர்கள்! அறியத்தந்தமைக்கு நன்றி அய்யா!
ReplyDelete@ மைதிலி கஸ்தூரி ரெங்கன்
Deleteபுதியவர்களைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளஒரு வாய்ப்பு. வருகைஇக்கு நன்றி மேடம்
aya indarya arimugam kaalathi vendravagal. vaalthukal aya.
ReplyDelete@ மை மொபைல் ஸ்டூடியோஸ்
Deleteதமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்யலாமே. வாழ்த்துக்கு நன்றி.
Aya en mobile phone il antha vasathe ilai.
ReplyDelete@ மை மொபைல் ஸ்டூடியோஸ்
Deleteதமிழ்ப் பதிவுலகில் என்ன செய்ய முடியும்?உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இடுகைகள் எழுதவேண்டும் .மொழி அவசியம்
அருணா செல்வம் தவிர மற்றவர்கள் புதியவர்கள்.....சமீப காலமாக அருணா அவர்களையும் காணவில்லை....மீண்டும் வருவார் என நம்புகின்றோம்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்!
@ துளசிதரன்
Deleteவலைச்சரமே புதியவர்களையும் அடையாளம் காட்டத்தானேவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தஞ்சயம்பதி ஐயா அவர்களையும் மிக நன்றாக அறிவோம். மற்றவர்களின் தளங்களுக்கும் செல்ல வேண்டும்....அறிந்துகொண்டோம்....
ReplyDeleteமிக்க நன்றி சார்!
@ துளைதரன்
Deleteமீண்டும் வந்து நினைவினை சரிசெய்து விட்டீர். நன்றி
அறிமுகமான அனைவருக்கும் தங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் ...!தஞ்சயம்பதி அவர்களை மட்டும் தான் தெரியும் மற்றவர்கள் புதியவர்கள் இதோ சென்று பார்க்கிறேன் ஐயா.நன்றி !
ReplyDelete@ இனியா
ReplyDeleteஎன் அடையாளம்மூலம் பிற பதிவர்களை அறிய முடிந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்களுக்கு நன்றி
மிக்க நன்றி ஐயா. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
ReplyDelete