07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 20, 2015

பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டுமா?

நண்பர் ஒருவர் நேற்று போன் செய்திருந்தார். வலைச்சரம் எழுதறீங்க, வந்து கருத்து சொல்றவங்களுக்கு ஒரு நன்றி சொல்லலாமே என்றார். சொல்லலாம் தான், நேரமில்லை என்றேன். கஷ்டப்பட்டு நேரம் செலவழிச்சு பதிவர்களை அறிமுகப்படுத்தறீங்க, உங்களை மதிச்சு இங்க வந்து கமென்ட் போடுறவங்களுக்கு என்ன மரியாதை என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருக்குத் தெரியும், நான் என்ன வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று. இருந்தாலும் அவர் கேட்டது நியாயமான கேள்வி தான். பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் தான், ஆனால் நன்றியையே பலவிதமாகச் சொல்லவேண்டுமே.


இங்கே வரும் பின்னூட்டங்களை கவனிக்காமலில்லை. கைபேசியில் உடனுக்குடன் பார்த்துவிடுகிறேன். எந்தெந்தப் பதிவுக்கு யார் என்ன பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள் என்று என்னால் தூக்கத்திலிருந்து எழுந்து கூட சொல்ல முடியும். பின்னூட்டங்களைப் பதிவு செய்யுங்கள். பதில் சொல்லவில்லை என்பதற்காக கோபித்துக்கொள்ள வேண்டாம்.
--------------


தொடர்ந்து எழுதுபவர்களில் மேலும் சில முக்கிய பதிவர்களைப் பார்க்கலாம்.

பதிவர் புதுவை வேலு அவர்கள் குழல் இன்னிசை என்னும் வலைப்பூவில் எழுதிவருகிறார். நிறைய பதிவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட எல்லா வலைப்பூக்களிலும் இவரது பின்னூட்டங்களைக் காணலாம். இவருடைய பதிவுகள் சில:




கூட்டாஞ்சோறு என்னும் வலைப்பூவில் எழுதி வரும் செந்தில் குமார் தெரியாத நிறைய விஷயங்களைத் தொகுத்துத் தருகிறார். சமீபத்தில் தான் அவரது வலைப்பூவைப் பார்த்திருந்தேன். குறுகிய காலத்துக்குள் நூறு பதிவுக்கும் மேல் எழுதிவிட்டார். இன்னதென்றில்லாமல் அனைத்து பதிவுகளையுமே சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார். 




பரதேசி @ நியூயார்க் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் ஆல்பி அவர்கள் பதிவை சுவாரஸ்யமாக எழுதுவதில் வல்லவர். கூர்ந்து கவனித்தால் தெரியும் - கொஞ்சம் மெல்லிய நகைச்சுவை இழையோடும் இவரது பதிவுகளில். இசையும் அனுபவப் பதிவுகளும் வெகு சுவாரஸ்யம்.




எண்ணங்கள் என்னும் வலைப்பூவில் எழுதிவரும் கீதா சாம்பசிவம் அவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அனுபவங்களை ரசனையுடன் சொல்வது அவரது இயல்பு. எப்போதுமே உற்சாகமாக எழுதுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.




புத்தம் புதிய பதிவர்

வற்றா நதி படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தான் கார்த்திக் புகழேந்தி. மிகப் பெரிய ஆளெல்லாம் இல்லை, சின்ன வயசு தான். மாதம் இரண்டு மூன்று பதிவுகள் மட்டுமே எழுதினாலும் ஒவ்வொன்றும் மண் மணம் மணக்கும் மணி முத்துக்கள். இவரது தளத்தில் இணைந்திடுங்கள், தொடர்ந்து வாசியுங்கள்.




மீண்டும் நாளை சந்திப்போம்.





19 comments:

  1. ஆனால் நீங்கள் வலைச்சரத்தில் நன்றி சொல்லவில்லை... தூக்கத்திலிருந்து எழுந்து பதில் சொல்ல முடியும்... ஆனால் எழுப்ப மனமில்லை... அதனால் கோபித்துக் கொள்கிறேன்...! ஹா... ஹா...

    இன்றைய இனிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    சொந்த தளத்திலேயே ஒரே மாதிரி மறுமொழி தேவையா...? தேவை தான் என்போருக்கு அடுத்த பதிவர் சந்திப்பில் ஒரு பரிசு உண்டு ! என்பதை முடிவு செய்தாகி விட்டது... விவரங்கள் இங்கே-->(http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html)

    ReplyDelete
    Replies
    1. சந்தடி சாக்குல இங்க வர்றவங்கள உங்க எடத்துக்குக் கடத்தறீங்களா டிடி? அட்ரா சக்க....

      Delete
    2. ஹா... ஹா... கண்டுபிடிச்சிட்டீங்களே வாத்தியாரே... அது புதிய பதிவர்களுக்கு(ம்) உதவும்...!

      Delete
  2. குழல் இன்னிசையும், கூட்டாஞ்சோறும் நான் அறியாத தளங்கள் என்று நினைக்கையிலேயே அடுத்த ஆச்சரியம். கா.பு. ப்ளாக் வெச்சிருக்காரா? அடடே... ஆர்வமாய் தொகுத்த உன் முயற்சிக்கு பாராட்டுகளும், அறிமுகம் பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகளும் ஸ்.பை.

    ReplyDelete
  3. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாததால் தப்பில்லை கார்த்திக் சரவணன். ஆனால் உங்கள் அலைபேசி எண்ணை இங்கு தரவும். நாங்கள் எல்லோருமே ஓரிரு நாட்களில் நாடு இரவில் ஃபோன் செய்து நீங்கள் சொல்லியிருப்பது உண்மையா என்று டெஸ்ட் செய்து பார்க்கிறோம்.

    :)))))

    இன்றைய பதிவர்களில் நான் அறியாதவர்கள் அதிகம்.

    ReplyDelete
  4. வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஏற்று அதனை திறம்பட செய்துவரும் வலைச்சரம் ஆசிரியர் கார்த்திக் சரவணன் அவர்களுக்கு பதிவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்!
    எனது வலைத் தளத்தை அறிமுகம் செய்த அய்யாவுக்கு இந்த புதிவுலக வலைப் புறாவின் நன்றியே தூது!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம +1

    ReplyDelete
  5. கார்த்திக் புகழேந்தி தளம் பாக்கனும்னு நெனச்சிருந்தேன். லிங்க் தெரியாம பாக்க முடியல. ஸ்பை பகிர்வால் வாசிக்க முடிந்தது....

    ReplyDelete
  6. Interesting title..

    பின்னூட்டங்கள் பல வகை.

    * ஒரு சிலவை சும்மா அட்டண்டன்ஸ் பின்னூட்டங்களாக இருக்கும்.- அதையும் குறைத்து மதித்துவிடக்கூடாது!!!

    * ஒரு சிலவை குறை கண்டுபிடிக்கவே வந்த பின்னூட்டமாக இருக்கும்

    * ஒரு சிலவை பழைய கணக்கைத் தீர்க்க வந்தவைகளாக இருக்கும்.

    * ஒரு சிலவை பதிவை தவறாகப் புரிந்து கொண்டு எழுதியதாக இருக்கும்.

    * ஒரு சிலவை வரம்பு மீறியது போல் இருக்கும் ஆனால் மீறி இருக்காது.

    * ஒரு சிலவை நாகரீகமாக இருக்கும் ஆனால் ஒவ்வொரு எழுத்தும் விஷமாக இருக்கும்.

    இதற்கெல்லாம் பதில் சொல்வதுக்கு, முதலில் மூட் இருக்கணும், ரெண்டாவது நேரம் இருக்கணும். ஒரு சில நேரங்களில் அர்த்தமற்ற பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி விடுவோம் நல்ல பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல நேரம் இருக்காது. இதனால் பல தவறான புரிதல்கள் சூழல் வருவதையும் தவிர்க்க முடியாது. :)))

    ReplyDelete
  7. இன்றைய அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துகள்
    மறுமொழி கூற நேரமில்லாதவர் என்ன செய்ய முடியும்.....

    ReplyDelete
  8. இன்றைய அறிமுகத்தார்அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. அறிமுகம் செய்தமைக்கு நன்றி. என்னைத் தவிர மற்றவர்கள் புதியவர்களே! ஊரில் இல்லாததாலும் வேறு பல வேலைகளாலும் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை. :(

    ReplyDelete
  10. இன்றைய அறிமுகத்தார்அனைவருக்கும் வாழ்த்துக்கள்.புகழேந்தியின் வலை புதிது இனி பார்க்கின்றேன். பின்னூட்டத்துக்கு பதில் கூற நேரம் இருக்க வேண்டும் அதுக்கான மனநிலையும் சேர்ந்தே இருக்க வேண்டும்!

    ReplyDelete
  11. குழல் இனிது, கூட்டாஞ்சோறு தவிர மற்றவை புதிது. பகிர்விற்கு நன்றி.
    சிறப்பான பணிக்கு உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. அதிகமான வேலை, குறைவான நேரம் என்று இருந்ததால் வலைப்பக்கம் வரமுடியவில்லை. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. வந்தேன்.

    வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி இருந்ததைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. இது எனக்கு வலைச்சரத்தில் இரண்டாவது அறிமுகம்.

    என்னுடன் அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    த ம 10

    ReplyDelete
  13. இன்றைய அறிமுககங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. அறிமுகங்கள் அனைவருக்கு என் வாழ்த்துக்கள் ..! தங்கள் பணியை செவனே செய்யும் தங்களுக்கும் என் பாராட்டுக்கள் ...!

    ReplyDelete
  15. பின்னூட்டத்துக்கு நன்றி பதில் சொல்வது நல்லதுதான். அது பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டும். தமிழ் மணத்தில் பின்னூட்டங்களின் எண்ணிகையும் கருத்தில் கொள்ளப் படும் உங்கள் பதிவுக்கு நீங்களே பின்னோட்டமிட்டாலும் அந்த எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படும். ஒவ்வொரு கருத்துக்கும் நன்றி கூறி தர வரிசையை சற்று உயர்த்திக் கொள்ளஉதவும்.
    வருண் குறிப்பிட்டுள்ளதுபோல் பின்னூட்டவகைகள் பற்றி ஏற்கனவே நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்
    நீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த வகை

    ReplyDelete
  16. ஆரம்பத்தில் பின்னூட்டங்களுக்கு மறுமொழி கூறிவந்தேன். தொடரந்து நேரமின்மை காரணமாக அதனைக் குறைத்துக் கொண்டேன். பின்னூட்டத்திற்கு நன்றி சொல்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  17. சிறந்த தளங்களின் அறிமுகம்! கார்த்திக் புகழேந்தியின் தளத்திற்கு ஒருமுறை சென்றதாக நினைவு! மீண்டும் சென்று பார்க்கிறேன்! பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில் எனக்கும் குழப்பம்தான். ஆரம்ப காலத்தில் அனைத்துக்கும் பதில் அளிக்கையில் பின்னூட்டம் அதிகம் பெறுவதற்கு இப்படி செய்கிறாயா? என்று ஒருவர் வம்பு வளர்த்தார். சரி என்று பதில் சொல்லாமல் நிறுத்தினால் நீ என்ன பெரிய கொம்பனா? மதித்து கருத்து போடுகிறோம்! ஒரு நன்றி கூட சொல்ல மாட்டாயா? கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாயா? என்று சமீபத்தில் ஒருவர் கொக்கரித்தார். இருவருமே பிளாக்கர் ஐடி இல்லாமல் ( அனானி என்று சொன்னால் கோபித்துக் கொள்கிறார்கள்) கருத்திட்டவர்கள். சந்தேகமாக ஏதாவது கேட்டிருந்தால் பதில் அளிக்கலாம். மற்றவற்றை தவிர்த்துவிடலாம் என்று இப்போது முடிவுக்கு வந்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது