07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 14, 2015

ஸ்கூல்பையன் வலைப்பூ பதிவர் பொறுப்பில் வரும் வார வலைச்சரம்!!!


வணக்கம் வலைச்சர நண்பர்களே...
மூத்த பதிவர் வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று நேற்றுடன் நம்மிடமிருந்து விடைபெற்றார். அவர் தனது வலைச்சர பதிவாக பதிமூன்று பதிவுகள் எழுதி சக பதிவர்களையும், அவர்களது பதிவையும் அறிமுகம் செய்தும், அதோடு அவரது வலைப்பூ பதிவுகளையும் தவறாது அறிமுகம் செய்திருந்தார். 

அப்பதிவுகள் சுமார் 4500-க்கும் மேல் பக்கப்பார்வைகள் பெற்றுள்ளது. அதோடு 1000-க்கும் மேல் மறுமொழிகளும் பெற்றுள்ளது. மிகுந்த ஆர்வமுடனும், பதிவர்களின் படங்களுடனும் வலைச்சரத்தை தொடுத்த அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அனைவராலும் ஸ்கூல்பையன் என அறியப்பட்ட சரவண கார்த்திகேயன் அவர்களை அழைக்கின்றோம். அவர் ஸ்கூல்பையன் என்ற வலைப்பூ ஆரம்பித்து பதிவுகள் எழுதி வருகிறார். 

பல நாட்களாக ஸ்கூல் பையன் என்ற பெயரில் இருந்த இவர் வலைப்பதிவுகளிலும் முகநூலிலும் எதிர்கொண்ட சில சிக்கல்கள், தொந்தரவுகள், கிண்டல்கள் காரணமாக சொந்தப் பெயரில் (கார்த்திக் சரவணன்) எழுதுவதாக சொல்கிறார்.

இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றவர். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர் 2006 ஆம் ஆண்டு முதலே வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தாலும் இவருக்கென வலைப்பூவை உருவாக்கியது 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான்.

ஸ்கூல்பையன் (கார்த்திக் சரவணன்) அவர்களை வலைச்சர ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நல்வாழ்த்துக்கள் வை. கோபாலகிருஷ்ணன்....
நல்வாழ்த்துகள் ஸ்கூல்பையன் (கார்த்திக் சரவணன்)...

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...

21 comments:

  1. கடந்த 13 நாட்களாக வலைச்சரம் ஆசிரியர் பணியை திறம்படச் செய்த அய்யா V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களுக்கு நன்றி!

    நாளை முதல் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் சகோதரர் கார்த்திக் சரவணன் (ஸ்கூல் பையன்) அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!

    த.ம.4

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்
    ஸ்கூல் பையன்..

    ReplyDelete
  3. //மூத்த பதிவர் வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று நேற்றுடன் நம்மிடமிருந்து விடைபெற்றார். அவர் தனது வலைச்சர பதிவாக பதிமூன்று பதிவுகள் எழுதி சக பதிவர்களையும், அவர்களது பதிவையும் அறிமுகம் செய்தும், அதோடு அவரது வலைப்பூ பதிவுகளையும் தவறாது அறிமுகம் செய்திருந்தார். //

    அரிய பெரிய வாய்ப்பளித்து என்னை கெளரவித்ததற்கு மிக்க நன்றி.

    //அப்பதிவுகள் சுமார் 4500-க்கும் மேல் பக்கப்பார்வைகள் பெற்றுள்ளது. அதோடு 1000-க்கும் மேல் மறுமொழிகளும் பெற்றுள்ளது. மிகுந்த ஆர்வமுடனும், பதிவர்களின் படங்களுடனும் வலைச்சரத்தை தொடுத்த அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் மகிழ்ச்சியடைகிறேன்.//

    இந்தப்புள்ளிவிபரங்கள் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. மிக்க நன்றி. சந்தோஷம்.

    ReplyDelete
  4. நாளைமுதல் வலைச்சர ஆசிரியர் பணியில் அமர உள்ள திரு. கார்த்திக் சரவணன் (ஸ்கூல்பையன்) அவர்களை வருக! வருக!! வருக!!! என இருகரம் கூப்பி மனமார வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்கிறேன். :)

    ReplyDelete
  5. இரு வாரங்கள் திறம்பட ஆசிரியப்பணி ஏற்றமைக்கு நல் வாழ்த்துக்கள் கோபு அண்ணா

    ReplyDelete
  6. வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறோம் புதிய ஆசிரியர் தம்பி சரவணன்

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் சிறப்புடன் பணி செய்த அண்ணா V.G.K அவர்களுக்கு நன்றி!..

    பணியேற்க வருகை தரும் - கார்த்திக் சரவணன் அவர்களுக்கு அன்பின் நல்வரவு..

    ReplyDelete
  8. வருக வருக என்று வாழ்த்து...கார்த்திக் சரவணன்....

    ReplyDelete
  9. வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் சக பதிவர் நண்பர் கார்த்திக் சரவணன் அவர்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள்.
    த ம 6
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  10. சிறப்புடன் பணி செய்த அன்பின் அய்யா வைகோ அவர்களுக்கு நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  11. வாங்க கார்த்திக் சரவணன்... அசத்துங்க... வாழ்த்துகள்...

    ReplyDelete
  12. ஆசிரியர் பணியை சிறப்பாக நிறைவு செய்த கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பொறுப்பேற்கவுள்ள கார்த்திக் சரவணன் அவர்களுக்கு நல்வரவு. நாளை சந்திப்போம்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  13. இரண்டு வாரங்களாக ஆசிரியர் பொறுப்பில் இருந்த வை.கோ. ஜி அவர்களுக்கு பாராட்டுகள்.

    இந்த வார ஆசிரியர் நண்பர் கார்த்திக் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. திரு வைகோ சார் ஆசிரியப் பொறுப்பில் இருந்து திறம்பட பணி செய்ததற்கும், பின்னூட்டங்களையும், வாக்குகளைக் கண்டுப் பிரமித்து பாராட்டுகின்றோம்.

    இந்த வார ஆசிரியர் நண்பர் கார்த்திக் சரவணன் அவர்களை வருக என்று சொல்லி வாழ்த்துகிறோம்....கலக்குங்க சரவணன்!

    ReplyDelete
  15. வணக்கம் !
    சிறந்த முறையில் பதிவர்களை அறிமுகம் செய்து வைத்த கோபாலகிருஸ்ணன் ஐயாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று
    நிற்கும் சகோதரர் ஸ்கூல் பையனுக்கு என் இனிய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  16. சிறப்புற தன் பணியைச் செய்த கோபு சாருக்கும், திறம்பட செய்ய உள்ள நண்பர் கார்திக் சரவணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  17. வாழ்த்துகள்.....
    ....இருவருக்கும்!!!

    ReplyDelete
  18. அய்யா அவர்களக்கு நன்றி, புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
  19. வாழ்த்துகள் கார்த்திக் வருக வருக :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது