07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 12, 2015

தளிர் சுரேஷ் தனது ஆசிரியர் பொறுப்பை மெக்னேஷ் திருமுருகனுக்கு தருகிறார்!!!


வணக்கம் வலைச்சர நண்பர்களே...
இன்றுடன் தனது ஆசிரியர் பொறுப்பை நிறைவு செய்யும் தளிர் வலைப்பூ பதிவர் சுரேஷ் அவர்கள் மிகுந்த பொறுப்புடனும், ஆர்வமுடனும் தனது பதிவுகளை எழுதி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரின் ஒவ்வொரு பதிவிலும் ஆரம்ப பத்திகளில் பதிவர்களுக்கு ஆலோசனைகளையும், குறிப்புகளையும் குறிப்பிட்டு வந்தது சிறப்பு. 

மொத்தம் எட்டு பதிவுகள் எழுதிய இவர் 275 மறுமொழிகளையும், 1650-க்கும் அதிகமான பக்கப்பார்வைகளையும் பெற்றுள்ளார். அவர் எழுதிய பதிவுகளின் விவரம் கீழே.

தளிர் சுரேஷ் அவர்களை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது,

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "விமர்சன உலகம்" வலைப்பூ பதிவர் மெக்னேஷ் திருமுருகன் அவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளார். அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கேட்கையில் கீழ்க்கண்டவாறு தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.
பெயர் – மெக்னேஷ்

வயது – 03.07.1991

கல்வி – டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி

ஊர் – நாயக்கன்பட்டி கிராமம் , சேலம் 

தொழில் – சென்னையில் மெடிக்கல் ரெப்பாக இரு ஆண்டுகள் இருந்து பின் ராஜினாமா . இப்போது தந்தையின் குலத்தொழில் . வருங்காலத்தில் அரசு அதிகாரி .

வலைத்தளம் – TNPSC உலகம் , விமர்சன உலகம்

எழுத ஆரம்பித்த நாள் – 19.06.2014

இதுவரை எழுதியவை – TNPSC சார்ந்த 130 பதிவுகள் , சிறுகதைகள் 12 , தொடர்கதைகள் -2 , சினிமா விமர்சனங்கள் 82 , கட்டுரைகள் – 10 .

பரிசு – சென்ற மாதம் யாழ்பாவணன் மற்றும் ரூபன் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு .

இவர் எழுதியுள்ள ஹாலிவுட் சினிமா இயக்குனர்கள் சம்பந்தமான தொடர்கள் பெரும் வரவேற்பு பெற்றவை. அவற்றைப் பற்றி அவரது வலைப்பூவில் லேபிளில் பாருங்கள்.

மெக்னேஷ் அவர்களை "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது,

நல்வாழ்த்துக்கள் தளிர் சுரேஷ்...
நல்வாழ்த்துக்கள் மெக்னேஷ் திருமுருகன்...

நட்புடன்..
தமிழ்வாசி பிரகாஷ்...

10 comments:

 1. வணக்கம்
  சிறப்பாக பணியை செய்து முடித்த தளிர் சுரேஸ் ஐயா அவர்களுக்கு நன்றி வருகிற வாரம் பதிவுகளை மகுடம் சூட்ட வரும் வலைச்சர ஆசிரியர் மெக்னேஸ் திருமுருகன் அவர்களை வாழ்த்துகிறேன் சிறப்பாக அசத்துங்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-.

  ReplyDelete
 2. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மெக்னேஸ் திருமுருகன் நல்லா சினிமா காட்டுவார் என்று நம்பலாம் :)

  ReplyDelete
 4. தளிர் சுரேஷ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  மெக்னேஸ் திருமுருகன் அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
 5. பாராட்டுகள் தளிர் சுரேஷ்.

  வாழ்த்துகள் மெக்னேஷ் திருமுருகன்.

  த,ம. 4

  ReplyDelete
 6. அட நம்ம மெக்னேஸ் திருமுருகன்... அசத்துங்க தம்பி...

  ReplyDelete
 7. நல்வாழ்த்துகள்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 8. நன்றி! வாழ்த்துக்கள் மெக்னேஷ் திருமுருகன்! உங்கள் பதிவுகள் சிலது படித்துள்ளது நினைவுக்கு வருகின்றது! வலைச்சரத்தில் அசத்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. என்னை வாழ்த்தி வரவேற்ற அனைத்து நல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிரேன் .

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது