07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 31, 2015

எழுத்துக்கு மரியாதை !





" தை எழுதுவதற்கு மூன்று முக்கிய விதிகள் இருக்கின்றன் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த மூன்று விதிகளை அறிந்தவர்கள் யாரும் கிடையாது ! " என்றார் சாமர்செட் மாம் !

கதையோ, கட்டுரையோ, கவிதையோ எதுவாகினும் நூறுசதவிகித கற்பனை என்று ஒன்றும் கிடையாது ! ஒரு படைப்பில் கடுகளவாவது எழுதுபவரின் உண்மை அனுபவமோ, அவர் வாசித்தவற்றின் தாக்கமோ, அவரைப் பாதித்த மனிதர்களோ அல்லது அவர்களைப் பாதித்த சம்பவமோ கலந்ததுதான் எழுத்துப் படைப்பு.

விஞ்ஞானப் புதினங்கள்கூட இதற்கு விதிவிலக்காக முடியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் நடக்கப் போவதை சிந்திக்கும்போது கூட இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் விஞ்ஞான வசதியின் தொடர்பாகவோ அல்லது அதன் அடுத்த நிகழ்வாகவோதான் சிந்திக்க முடியும் ! நாம் அறிந்த ஒன்றுடன் எதையும் ஒப்பிட்டு யோசிப்பது மூளையின் அடிப்படைகளில் ஒன்று.

ஒரு எழுத்தின் வெற்றி எழுத்தாளன் தன் அனுபவங்களையும் கற்பனையையும் கலக்கும் விகிதத்தில்தான் உள்ளது !

மற்றப்படி வர்ணனைகள், சொல்லாடல் எல்லாம் " சித்திரமும் கைப்பழக்கம்... " தான் !

ஆக, சாமர்செட் மாம் சொன்னது சரிதான் !

பொதுவாக வலைதளம் நடத்துபவர்களை வலைபதிவர்கள் என்றே குறிப்பிடுகிறோம். இது சரிதானா எனத் தெரியவில்லை !... பதிவது என்றால் ஏற்கனவே எழுத்தில் உள்ள ஒன்றை அச்சேற்றுவது. தட்டச்சுச் செய்து இணையத்தில் ஏற்றுவதால் பதிவர் என்று சொல்லலாம் என்றாலும் வலை படைப்பாளி என்பதே சரி எனப் படுகிறது...

இணையத்தின் மாபெரும் புரட்சி என்றால் அது அறிவு சார்ந்த தகவல்கள் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிட்டியதோடு, சமூக அந்தஸ்து, கல்வித்தகுதி என்ற ஏட்டு மதிப்பீடுகளையெல்லாம் புறந்தள்ளி, அதே கடைக்கோடி மனிதனும் தன் அறிதலை உலகின் யாருடனும் பகிர்ந்துகொள்ளமுடியும் என்பதுதான் !

ஒரு பத்து வருடங்களுக்கு முன்புகூட ஒருவரது எழுத்துப் படைப்புப் பத்திரிக்கையில் வந்தால்தான் உண்டு என்ற நிலை இருந்தது.

" பிரசுரத்துக்கான தகுதியிருப்பின் நிச்சயம் தேர்வாகும் " என்பது பொதுவிதி என்றாலும் பத்திரிக்கை குழுமங்களிலும் அரசியலும் பாராபட்சமும் உண்டு என்பது அதில் உழன்றவர்களுக்குத் தெரியும் ! ஒரு பத்திரிக்கையின் ஆசிரியரை சுற்றி ஒரு குழுவும், ஆஸ்த்தான எழுத்தாளர்களும் உண்டு. புதிதாய் நுழைபவர் இந்தப் பத்திரிக்கை பத்மவியூகத்தை உடைப்பது அவ்வளவு சுலபமல்ல ! ஒரு எழுத்தாளரின் முதல் கதையை நிராகரித்த பத்திரிக்கை அவர் பிரபலமான பிறகு அதே கதையை அனுப்பியபோது பிரசுரித்த சம்பவங்களெல்லாம் உண்டு !

இன்று இணையத்தின் வசதியால் நமது எந்தப் படைப்பையும் நாமே பிரசுரிக்கலாம் என்ற நிலையில் வலையில் எழுதுபவரின் பொறுப்பும் அதிகமாகிறது. யாரும் எதையும் உள்ளிடலாம் எனும்போது எழுதுவது எதையும் ஜாக்கிரதையாக எழுத வேண்டும் என்ற சுயதணிக்கையும் அவசியமாகிறது !

" கனவில் கண்டதாகப் பொய் சொல்லக்கூடாது " என்பார்கள்...

காரணம், கனவு என்பது இரண்டாவது நபரால் அறிய முடியாத அந்தரங்கம். அதில் பொய்யை கலப்பது தன்னையே ஏமாற்றிக்கொளவதாகும் !

அதே நிலைதான் வலை எழுதுபவர்களுக்கு ! ஏதோ ஒரு காரணத்துக்காக " தெரிந்தே " பொய்யான, ஆதரமற்ற தகவல்களைத் தருவதும், மற்றவர் படைப்புகளைத் தன் பெயருக்கு கீழே பிரதி எடுப்பதும் தன்னையே ஏமாற்றிகொள்ளும் செயல்.

மேலும் பதிந்த செய்தி அந்த நொடியே நம்மால் கட்டுப்படுத்த முடியாத, மீன்டும் பெற முடியாத நிலையை எட்டிவிடும் இணைய மாயத்தில், ஒருவர் பற்றிய அவதூறு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அந்த அவதூறு நம்மைப் பற்றியது என்றால் எப்படி நடத்துக்கொள்வோம் என்பதை உணர்ந்தாலே இணையம் பற்றிய பயமும் தெளிவும் ஒருசேர பிறந்துவிடும் !



சிந்திக்க...

பாரீசை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பத்து வயது மகனுடன் காரில் சென்றுக்கொண்டிருந்தேன்...

அந்தச் சாலையில் அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச வேகமான, மணிக்கு நூற்றியிருபது கிலோமீட்டரில் நான் கார் ஓட்டிகொண்டிருக்க, மகன் பக்கத்து இருக்கையில் விடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.

ஒரு திருப்பத்தில் கார் ஒன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி அதிவேகமாய், எங்கள் காரை உரசுவதுபோல முந்தி செல்ல, கோபத்தில் கத்தினேன் நான் !

" அப்பா ! அந்த ஆள் ஒரு நொடிக்குள் நம்மைத் தாண்டி போய்விட்டார் இல்லையா ?... "

என் வசவு மழை நின்ற பிறகு ( ரொம்பக் கெட்ட வார்த்தையெல்லாம் இல்லீங்க ! ) விளையாடுவதை நிறுத்தாமலேயே கேட்டான் என் மகன்.

" ஏன் கோபமாகக் கத்தினாய் ? "

" அவன் எப்படி ஓட்டிகொண்டு போனான் என்று பார்த்தாய் தானே ?!... "

மீன்டும் சிடுசிடுத்தேன் !

" அந்த ஆள் ஒரு நொடியில் நம்மைதாண்டி மறைந்துவிட்டார்... இரண்டு காரின் கண்ணாடிகளும் மூடப்பட்ட நிலையில் யார் காதில் விழும் என இப்படிக் கத்தினாய் ? "

இத்தனைக்கும் வீடியோ கேமிலிருந்து முகம் திருப்பவில்லை அவன் !

ரெளத்திரம் பழகு பதிவுக்கு வித்தாய் அமைந்த சம்பவம் இது !



ங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என முழங்கி இணையத்தில் தமிழ்டயரி எழுதும், வயதாலும் தமிழ் அனுபவத்தாலும் மூத்த இராய. செல்லப்பா அவர்களின் எழுத்துச் சிறப்பு !

திவுகள்மன்றம், வேர்களைத்தேடி, தமிழ்க்காற்று ஆகிய முனைவர் இரா.குணசீலன் அவர்களின் மூன்று வலைப்பூக்களும் செந்தமிழின் நறுமணம் பரப்பும் செம்மொழிப்பூக்கள்

ழிப்போக்கனது உலகத்தில் பயணிக்க விரும்புபவர்கள் அங்கு நீண்ட நேரம் தங்குவதற்குத் தகுந்த நேரத்தில் செல்லுங்கள்... ஆழமான கருத்துடன் கூடிய அழகு எழுத்தினை அவசரமாயக் கடந்துவிட முடியாது... கூடாது !

" ங்குச் சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா? " என்ற சிலாகிப்புடன், மெட்ராஸ்தமிழனாய் எழுதும் நண்பர் குரு... சக மனிதர்களைப் படிப்பது ஒரு கலையென்றால் அப்படிப் படித்த அனுபவங்களை எழுத்தில் வடிப்பது கற்க இன்னும் சிரமமான கலை ! இரண்டினையும் மிக நேர்த்தியாய்ச் செய்பவர் ! வலைப்பூ வயதில் மூத்தவர் ! இவரது படைப்புகள் கடந்த காலத்தின் எந்தத் தருணத்தையும் நமக்காக மீட்டெடுக்கும் காலயந்திரங்கள் !

பாலமகியின்பக்கங்களின் சிறப்பை அந்தப் பக்கங்களில் காணக்கிடைக்கும் "முச்சு நின்றால் மட்டும் மரணமில்லை, சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட மரணம் தான். " என்றவரிகளே சொல்லிவிடும் !

தை, கவிதை, படித்தது, பிடித்தது என எழுத்து ஊஞ்சல் கட்டும் கலையரசி, திருநள்ளாறு, நாகூர், வேளாங்கன்னி என மும்மத நகரங்களுக்கும் பாலமாய் விளங்கும் எங்கள் காரைமாநகரின் எழுத்தரசி !

ல்சுவைபக்கம் பதியும் நிஜாமின் வலைப்பக்கங்களில் பல சுவையும் இருப்பது உண்மை ! இவர் " அரசு பதில்களையே " குழப்பியவர் என்பதால் கேள்விகள் கேட்காதிருத்தல் நலம் !!!

" சிரிங்க, சிரிங்க, சிரிச்சிக்கிட்டே இருங்க " என்னும் தமிழ் வலைப்பூவின் ஸ்மைலி சிம்பள் நம்பள் ஜோக்காளி பகவான் ஜீ !

புதியகாற்று எனப் பெயரிட்டிருந்தாலும் இளையராஜாவின் இசை தன் மூச்சுக்காற்று எனும் அளவுக்கு இளையராஜாவின் முரட்டு பக்தர் சார்லஸ் !

ன் ரசணை எனத் தன் ரசணைகள் பற்றிய வரைவாக வலைப்பூவில் ரசிக்கும் கவிதைகள் படைக்கும் தர்மலிங்கம் ராஜகோபலன்...

" வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் " என்ற தலைப்புடன், நினைத்துபார்க்கிறேன் எனத் தன் நினைவோட்டங்களை எழுத்தாய் பதியும்  வெ.நடனசபாபதி அவர்கள்...

ர்த்தமுள்ள பார்வையில் ஆழமான கருத்துடன் அழகு பதிவுகளிடும் அமுதவன் அவர்கள்...

ல்வரவு என அகமும் முகமும் மலர வரவேற்று தன் எழுத்துப்படைப்புகளைப் பரிமாறும் ரூபன் !

லகங்கள் செய்பவன் என்ற பயமுறுத்தலோடு எழுதும் நாரதன்... இவரது கலகங்களும் நன்மையில் முடிபவையே !

ளம் நிலவின் இதமான குளிராய் கவிதை படைக்கும் இளையநிலா இளமதி !

ட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அனைத்தையும் சிறப்பாகப் பதியும், தமிழ் பத்திரிக்கைகளில் எழுதும் வளரும் இளம் எழுத்தாளர் சகோதரி பவித்ரா நந்தகுமார்...

தையும் கவிதையுமாய்க் கதம்ப வலை நடத்தும் கவிமனம் கொண்ட அருணா செல்வம்.

ன் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே! என அறிவித்து அழகுதமிழில் இயற்கை ரகசியங்கள் விளக்கும் கீதமஞ்சரி !

சிறந்த மனிதர்கள் தொடங்கிச் சினிமா வரை எதையும் சமூகச் சிந்தனையுடன் சுவைபடக் கூறும் தென்றல்... கீதா எம்மின் தளம்.

லைப்பில் கூறியதை போலவே இந்தத் தனிமரம் நமக்குப் பரிமாறக் காத்திருக்கும் கனிகளில் அறுசுவையும் உண்டு !

ஹுஸைனம்மாவின் டிரெங்க் பெட்டியில், மிட்டலின் "இரும்புகை" பிரான்ஸ் அரசாங்காத்தின் கோப நெருப்பில் உருகியது முதல் மல்லைய்யாவின் முதலீடுகள் அவர் மேனி தங்க நகையாய் மாறியது வரை அனைத்துச் செய்திகளும் சுவாரஸ்யம் !

லக்கியம் தொடங்கிக் கதை, கவிதை, கட்டுரை, சமூகச் சீர்த்திருத்தம், நகைச்சுவை என எதைத் தேடினாலும் யாழ்பாவாணனின் எழுத்துகளில் கிடைக்கும் !


தொடருவோம்...



பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

58 comments:

  1. வணக்கம் வலை படைப்பாளி அவர்களே!
    நானறிந்த வரையில் அனுபவத்தை அனுவாய் பிளந்து அளிப்பவர் தாங்கள்! மேலும் பல நூல்களின் தாக்கம் உங்களுக்குள் ஒரு ஊக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பதே உண்மை. எதார்த்தம் என்னும் ஏணிமேல் நின்று பார்த்தால் தெரிவது வலைப் பூவில் படைப்பாளிகளைவிட பதிவர்களே மேலோங்கி காணப் படுகிறார்கள். சொல்லப் போனால் நானும் ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் தான் உள்ளேன். படைப்பும், பகிர்வும் இருண்டும் கலந்த கலவை நான். இதில் கற்பனையும் கலந்து விடுவதால் மூன்றுங்கலந்த மூஞ்சுறுவாய் சுற்றி வருகிறேன். சமயம் பார்த்து வலைப்பூ பதிவர்கள் தலையில் ஒரு குட்டு வைத்து விட்டீர்கள். மோதிரக் கையால் குட்டு பட்டமைக்காக பெருமை படுகிறேன். நன்றி!

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்துகள்!
    தொடர்வோம்!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      " சமயம் பார்த்து வலைப்பூ பதிவர்கள் தலையில் ஒரு குட்டு வைத்து விட்டீர்கள் "

      நான் பதிவர்கள் என குறிப்பிட்டது தவறான புரிதலுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற ஐயம் எழுவதால் ஒரு விளக்கம்...

      வலைபதிவர் என்பதற்கு மாற்றாக வலைபடைப்பாளி என குறிப்பிடுவது பொருத்தமாகுமே என்று தான் குறிப்பிட்டேன். " அச்சிடுபவர்கள் " என்ற அர்த்தத்தில் பதிவர்கள் என்ற வார்த்தை இருப்பதாக கருதியே குறிப்பிடேன்,

      மற்றபடி படைப்பாளி பதிவர் என இரண்டு பிரிவெல்லாம் இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை அப்படி நினைத்து குறிப்பிடவுமில்லை !

      " கதையோ, கட்டுரையோ, கவிதையோ எதுவாகினும் நூறுசதவிகித கற்பனை என்று ஒன்றும் கிடையாது ! ஒரு படைப்பில் கடுகளவாவது எழுதுபவரின் உண்மை அனுபவமோ, அவர் வாசித்தவற்றின் தாக்கமோ, அவரைப் பாதித்த மனிதர்களோ அல்லது அவர்களைப் பாதித்த சம்பவமோ கலந்ததுதான் எழுத்துப் படைப்பு."

      என்ற வரிகளை கருத்தில் கொண்டீர்களேயானால், நான் உட்பட அனைவருமே பகிர்பவர்கள்தான் !

      " அதே நிலைதான் வலை எழுதுபவர்களுக்கு ! ஏதோ ஒரு காரணத்துக்காக " தெரிந்தே " பொய்யான, ஆதரமற்ற தகவல்களைத் தருவதும், மற்றவர் படைப்புகளைத் தன் பெயருக்கு கீழே பிரதி எடுப்பதும் தன்னையே ஏமாற்றிகொள்ளும் செயல். "

      என்ற வரிகளில் நான் குறிப்பிட்டது வலைதள படைப்புகளை திருடுபவர்களை... இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமானால் நீங்கள் பதிந்த ஒன்றை அப்படியே ஒற்றி எடுத்து தன் பெயருக்கு கீழே ஒட்டிகொள்பவர்களை.

      மற்றப்படி யாரையும் எதன் பொருட்டும் குட்டுவது என் நோக்கமோ இயல்போ அல்ல, மேலும் அதற்கான தகுதிகள் எதுவும் அற்றவன் நான் !

      நன்றி





      Delete
  2. எந்தப் படைப்பும் 100 % கற்பனை என்று எதுவும் கிடையாது என்பது நிஜம். எழுதுபவரையும், வாசிப்பவரையும் எங்கோ ஒரு இடத்தில் தங்கள் அனுபவத்தோடு நினைக்க வைப்பதே எழுத்தின் வெற்றி.

    இன்றைய அறிமுகங்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் தளங்களுக்குச் சென்றிருக்கிறேன். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னது மிகச் சரி !

      வருகைக்கு நன்றி

      Delete
  3. இன்றைய வலைச்சரத்தில் என்னை அறிமுகபப்படுத்தியமைக்கு நன்றி திரு சாமானியன் அவர்களே! வலைத்தளத்தில் எழுதுவோரை வலைப்படைப்பாளிகள் என்றோ அல்லது வலைப்பதிவர்கள் என்றோ அழைப்பதில் சிக்கல் இருக்குமானால், பொதுவாக வலைஞர்கள் என்றழைக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. "வலைஞர்கள் "
      அய்யா அவர்களின் இந்த கருத்து ஏற்புடையதே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
    2. வலைப்பதிவர்கள் என்பதே சரி. வலைஞர்கள் என்ற சொல் மீனவர்களில் ஒரு பிரிவினரைக் ( உள்ளூரில் ஏரி, குளம், ஆறு இவற்றில் வலை வீசி மீன் பிடிப்பவர்களை) குறிக்கும் சொல்

      Delete
    3. நீங்கள் சொன்னது மிகச் சரி !

      வருகைக்கு நன்றி

      வாருங்கள் அய்யா...

      சிக்கல் என்று எதுவும் கிடையாது... வலை படைப்பாளிகள் என்பது இன்னும் ஆழமான பதமாக தோன்றியது... வலைஞர்கள் என்ற சொல் நன்றாகத்தான் இருகிறது... ஆனால் தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னதையும் கருத்தில் கொள்ள வேண்டும்...

      வருகைக்கும் கருத்து பகிர்விக்கும் நன்றி அய்யா

      Delete
    4. அய்யா அறியாத தகவலுக்கு நன்றி

      Delete
  4. புதியவர்கள் சிலரை தங்கள் மூலமாக அறிந்தேன். அறிமுகங்களுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  5. என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கு நன்றி சகோதரி

      Delete
  6. பத்திரிக்கையில் வருவதை பகிர்ந்து கொள்வது கூட தன்னையே ஏமாற்றிகொள்ளும் செயல் தான்... சுய ஆய்வும் செய்து கொள்வது அவசியம்...

    வித்தாய் அமைந்த சம்பவம் கொஞ்சம் திகைக்கவும் வைத்தது...

    தர்மலிங்கம் ராஜகோபாலன் அவர்களின் தளம் புதிது... நன்றி... மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ஆழ வாசித்து கருத்திட்டமைக்கும் நன்றி வலைசித்தர் அவர்களே !

      Delete
  7. காரில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போல பல முறை எனக்கும் ஏற்பட்டுள்ளது. மிகவும் யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள். அற்புதமான நடை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் குரு...

      வாழ்த்துரைக்கு நன்றி

      Delete
  8. வணக்கம்,
    தாங்கள் சொன்னது உண்மைதான், ஒரு சிறந்த படைப்பாளன் தன் அனுபவத்தையும், கற்பனையும் கலந்தே,,,,,,,,,,,,,,,
    தங்கள் மகன் கேட்டது சரியே, நாம் யாரும் கவனிக்கவில்லையென்றாலும் நாம் பாட்டுக்கு கத்திக்கொண்டே இருப்போம்,,,,,,,,,,,, கோபம் அடங்கும் வரை,,,,,,
    என் தளத்தினையும் தாங்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி சகோதரி

      Delete
  9. வணக்கம் சகோதார் சாம்!

    இன்றைய வலைச்சரத்தில் எனது தளத்தினையும்
    அறிமுகம் செய்துள்ளமை கண்டு மிக்க மகிழ்ச்சி!

    சில தடங்கல்கள் காரணமாக வலையுலகில் இன்னும்
    ஏராளமான தளங்களைப் பார்க்கச் சந்தர்ப்பம் அமையவில்லை.
    அதனாலேயே இங்கும் வந்து பார்த்திடாது தவறவிட்டுள்ளேன்.

    தங்கள் பணி மிகச் சிறப்பாக இருக்கின்றது!
    கருத்துக்களும் அருமை!

    கொஞ்சம் கற்பனையும் கலந்ததே
    எழுத்தாளனின் படைப்பு என்பது எனது கருத்து.
    என்னுடன் இங்கு அறிமுகமான அனைவருக்கும்
    உங்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    எனது தளம் வந்து அறியத் தந்தமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தடங்கல்கள் இருந்தும் என் அழைப்பை ஏற்று, ஆழமாய் கருத்திட்டதற்கு நன்றிகள் பல சகோ !

      Delete
  10. வலைச்சர அறிமுகத்தில் நான் வாசிப்பவர்கள் அனைவரும் இருக்கிறார்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே

      Delete
  11. படைப்பாளி என்பதும் கூட நன்றாகத்தான் இருக்கிறது.... ரௌத்திரம் பழகிய விதம் நல்ல சம்பவம்.... இன்று அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. படைப்பாளி என்ற வார்த்தையின் கனம் கருதி கூறினேன்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

      Delete
  12. 100 வீதம் ஒரு படைப்பு கற்பனையாக இருக்கமுடியாது என்பதில் நானும் உங்களுடன் உடன் படுகின்றேன். ஆனால் படைப்பிள்/வலையில் வெட்டி ஓட்டும் வழக்கம் நான் அறியேன் [[[[[[[[! ஏதோ கொஞ்சம் சில தொடர் எழுதியிருக்கின்றேன் என்பதே பெருமிதம்தான் வலையில்.சாமானியன் சாதாரண வழிப்போக்கன் தனிமரத்தையும் வலைச்சரத்தில் மின்னலிட்டதுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்...

      மற்றவர்களின் தளங்களிருந்து படைப்புகளை வெட்டி அவர்களின் தளங்களில் அவர்கள் எழுதியதாய் பதியும் ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள்...

      அப்படி தன் தளத்தில் திருடிய ஒருவரை பற்றி நண்பர் கில்லர்ஜி தன் தளத்தில் சில காலத்துக்கு முன்னர் பதிந்திருந்தார் ... அப்படிப்பட்டவர்களை குறிப்ப்பிட்டே அந்த வார்த்தைகளை எழுதினேன் !

      நன்றி

      Delete
  13. இன்றைய வலைச்சரத்தில் என்னுடன் அறிமுகமான வலையுறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே !

      Delete
  14. வலைப் பதிவர்கள் வலை எழுத்தாளர்கள் என்பதைவிட வலைஞர்கள் என்பதே சரியாகத் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வலைப்பதிவர்கள் என்பதே சரி. வலைஞர்கள் என்ற சொல் மீனவர்களில் ஒரு பிரிவினரைக் ( உள்ளூரில் ஏரி, குளம், ஆறு இவற்ரில் வலை வீசி மீன் பிடிப்பவர்களை) குறிக்கும் சொல்

      Delete
    2. வாருங்கள் காரிகன்,

      வலைஞர்கள் நல்ல வார்த்தை... ஆனால் தமிழ் இளங்கோ அவர்களின் விளக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்...

      தொடர் வருகைக்கு நன்றி காரிகன்

      Delete
  15. நாம் எழுதுபவற்றில் அனுபவமும், கற்பனையும், படித்த நூல்களின் தாக்கமும் இருக்கவே செய்யும் என்பது மிகச்சரி. கனவு என்பதில் பொய்யைக் கலப்பது தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் செயல் என்பதும் உண்மை..
    நீங்கள் சொல்லியிருப்பது போல் அக்காலத்தில் வெகுஜன நாளிதழ்களில் நம் படைப்புக்கள் பிரசுரமாவது மிகவும் அரிது தான். ஆனால் இன்றைக்கு நாமே ஆசிரியராக இருந்து நினைத்தவற்றை எழுதி வெளியிட்டுக்கொள்ள முடியும் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. அதைவிட இன்னொரு மகிழ்ச்சி தரும் விஷயம் உடனுக்குடன் கிடைக்கும் பின்னூட்டம் தான். பத்திரிக்கையில் நம் எழுத்தைப் பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றறிய வாய்ப்பில்லை.
    பெரும்பாலானவர்கள் எழுதும் பின்னூட்டங்கள் அருமை, பாராட்டு என்கிற ரீதியில் இருந்தாலும் சிலரின் ஆக்கப்பூர்வமான எழுத்துக்கள் நம்மை உற்சாகப்படுத்தி ஊக்குவித்து மேலும் எழுதச்செய்யும் டானிக்காக செயல்படுகின்றன. என்பதை யாரும் மறுக்க முடியாது. பின்னூட்டமூலம் நாம் மேலும் கற்கவும் முடிகின்றது.
    சிறந்த படைப்பாளர்களுக்கு மத்தியில் என் தளமும் அறிமுகமாவது அறிந்து மகிழ்ந்தேன். மிகவும் நன்றி. அறிமுகமாகும் எல்லோருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கலையரசி...

      மிக அருமையான பின்னூட்டத்துக்கு என் வாழ்த்துகள்...

      என் பதிவில் விடுபட்ட ஒன்றினை பகிர்ந்துள்ளீர்கள்...

      ஆமாம், வெகு ஜன பத்திரிக்கையில் வாசகரின் மனநிலை நமக்கு தெரிய வராது என்பதுடன் ஒரு படைப்பு அந்த பத்திரிக்கையின் வாசகர் வட்டம் அளவே பரவும்.
      என் எழுத்தில் ஏதேனும் நிறை இருந்தால் அது பலரின் ஆக்கபூர்வமான பின்னூட்டஙளின் உதவியால் அமைந்ததுதான் !

      நன்றி. தொடருவோம்

      Delete
  16. சில தளங்கள் புதியவை! கார் அனுபவம் தங்கள் பிள்ளையின் அறிவு முதிர்ச்சியினைக் காட்டுகிறது! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  17. //எழுத்துக்கு மரியாதை !//
    - எனும் தலைப்பில் இன்று வெளியிட்ட தங்கள் பதிவில் எனக்கும் ஓர் இடம் தந்து மரியாதை செய்தமைக்கு மிக்க நன்றி திரு. சாம்.. (புனைபெயர்.)

    இன்று என்னுடன் அறிமுகம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்...!!!

    !

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்துக்கள் சரியான நேரத்தில் மரியாதை செய்யப்படவும் வேண்டும் நண்பரே !

      நன்றி

      Delete
  18. அன்புள்ள அய்யா,

    கதை எழுதுவதற்கு மூன்று முக்கிய விதிகள் கதை எழுதுவதற்கு சாமர்செட் மாம் மூலம் வழியாக நன்கு விளக்கியிருந்தீர்கள்.

    வலைப்பூ...வலைப்பதிவு... வலைப்பதிவர்... வலை படைப்பாளி...வலைஞர்கள்,,, எது சரி என்பதை நன்கு ஆராய்ந்து முடிவு செய்யலாம்.
    பத்து வருடங்களுக்கு முன்புகூட ஒருவரது எழுத்துப் படைப்புப் பத்திரிக்கையில் வந்தால்தான் உண்டு என்ற நிலை இருந்த உண்மையை... நிலமைகளை விளக்கியிருந்தது அருமை.
    ரெளத்திரம் பழகு - கோபம் நியாயமானது...!
    இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான அனைத்து வலையுறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

    நன்றி.
    த.ம.10


    ReplyDelete
    Replies
    1. அய்யா...

      வலைபதிவருக்கான மாற்று வார்த்தை இந்த பதிவின் ஓட்டத்தில், என் எண்ணமாய் வந்து விழுந்தது ! அவ்வளவுதான் ! இருந்தாலும் இதன் மூலம் ஒரு ஆரோக்யமான கருத்து பகிர்வு ஆரம்பித்ததில் மகிழ்ச்சியே !

      நன்றி

      Delete

  19. வணக்கம்!

    வண்ண வலைகளை இங்கு வடித்துள்ளீர்!
    எண்ண உரையை இணைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      பல அலுவல்களுக்கு மத்தியிலும் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி

      Delete
  20. வாழைப் பழமும் கொடுத்து அதை உரித்தும் கொடுத்த மாதிரி ,வலைச்சரத்தை நான் பார்க்கும் முன்பே தகவலும் கொடுத்ததற்கு நன்றி :)
    அறிமுகம் செய்ததற்கு இரட்டிப்பு நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. பின்ன ? ஆம் ஆத்மின்னு பட்டம் கொடுத்திட்டீக... அதுக்கேத்தப்படி நடந்துக்கனுமே ?

      நன்றி ஜி

      Delete
  21. உடனடியாகத் தளத்திற்கு வரமுடியாமைக்கு என்னை மன்னிக்கவும்.
    எனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
    தங்கள் அறிமுகங்கள் யாவும் பயனுள்ளவை, அதேவேளை அழகாகவும் ஒழுங்காகவும் தனிச்சிறப்பாக அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா...

      மன்னிப்பெல்லாம் எதற்கு ?

      நாம் ஒவ்வொருவருமே தனிப்பட்ட அலுவல்கள் பல உள்ளவர்கள்... அப்படி இருந்தும் வலைப்பூவுக்காக நேரம் ஒதுக்கி ஆத்மார்த்தமாக இயங்குவதுதான் வலைபதிவர்களின் சிறப்பு

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்ய

      Delete
  22. [[[[கதையோ, கட்டுரையோ, கவிதையோ எதுவாகினும் நூறுசதவிகித கற்பனை என்று ஒன்றும் கிடையாது ! ஒரு படைப்பில் கடுகளவாவது எழுதுபவரின் உண்மை அனுபவமோ, அவர் வாசித்தவற்றின் தாக்கமோ, அவரைப் பாதித்த மனிதர்களோ அல்லது அவர்களைப் பாதித்த சம்பவமோ கலந்ததுதான் எழுத்துப் படைப்பு.]]]

    உண்மை! இல்லாததை மனிதனால் சிந்திக்க [வே] முடியாது!
    Excellent!

    ReplyDelete
    Replies
    1. " உண்மை! இல்லாததை மனிதனால் சிந்திக்க [வே] முடியாது! "

      நான் எழுதிய வரிகளை உள்வாங்கி எழுதிய பின்னூட்டத்துக்கு நன்றிகள் பல

      தொடருவோம்

      Delete
  23. என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சாம் அவர்களே! நான் இளையராஜாவின் ரசிகன் மட்டுமே ....முரட்டு பக்தன் அல்ல! ராஜாவின் இசை சம்பந்தமாக மட்டுமே எழுதுவதால் என்னைப் பற்றி முற்சாய்வு எண்ணங்கள் வாசகர்களுக்கு தோன்றி விடப் போகிறது. சமூகம் சார்ந்த பல விசயங்களையும் இனிமேல்தான் எழுதவிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. " முரட்டு ரசிகன் " என்பது ஒரு செல்ல வார்த்தை சார்லஸ் ! எனது முபாரக் பதிவில் பயன்படுத்தியது.

      உங்களிடமிருந்து சமூக பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்...

      வருகைக்கு நன்றி சார்லஸ்

      Delete
  24. மிகவும் நன்றிங்க, என் வலைப்பக்கத்தையும் அறிமுகம் செய்ததற்கு. :-)

    ReplyDelete
  25. வருகைக்கு நன்றி அம்மா...

    பதிவுகளில் தொடருவோம்

    ReplyDelete
  26. நான் விரும்பித் தொடரும் பன்முகப் படைப்பாளிகள் பலரையும் இங்கு காண்பதில் பெரும் மகிழ்ச்சி. அவர்களுள் நானும் இருப்பது பெருமகிழ்ச்சி. மிகவும் நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. அம்மா...

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  27. நண்பரே நாங்கள் இருவர் அல்லவா எங்கள் தளத்தில் எழுதுகின்றோம்....கீதா பயணத்தில் இருப்பதால், துளசிக்கு இணைய வசதி அவ்வளவாக இல்லாததால், கீதாதான் இணையத்தில் எங்கள் பதிவுகள், எங்கள் பின்னூட்டங்கள் எல்லாமே பதிவு செய்வதால், வர இயலவில்லை. மன்னித்துவிடுங்கள்...நாங்கள் வந்தால் பழைய பதிவுகளையும் பார்த்துவிடுவது உண்டு...

    கதையோ, கட்டுரையோ, கவிதையோ எதுவாகினும் நூறுசதவிகித கற்பனை என்று ஒன்றும் கிடையாது ! ஒரு படைப்பில் கடுகளவாவது எழுதுபவரின் உண்மை அனுபவமோ, அவர் வாசித்தவற்றின் தாக்கமோ, அவரைப் பாதித்த மனிதர்களோ அல்லது அவர்களைப் பாதித்த சம்பவமோ கலந்ததுதான் எழுத்துப் படைப்பு.// மிக மிக உண்மையே! எழுத்தைப் பற்றி அருமையான ஒரு பதிவு...

    அடையாளப்படுத்தப்பட்ட படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே...

      மன்னிப்பெனும் பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு ?

      நேரம் ஒத்துழைத்தால் நிச்சயம் வந்துவிடுவீர்கள் எனப்து தெரியும்.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆசானே.

      பதிவுகளில் சந்திப்போம்.

      Delete
  28. வாவ்! இப்போது தான் பார்த்தேன்!
    நாரதனை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி!!!!!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது