07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 24, 2015

பஞ்ச காவியங்கள் !!!!!

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைக்கு பற்பல பணிப்பழுவுகளுக்கு இடையே எழுதியிதால், முன்னுரையாக சில விஷயங்களைக் குறிப்பிட முடியாமல் போய்விட்டது. இன்று ஒருநாள் மட்டும் நேரடியாக பதிவர்களைப் பற்றி காண்போம். இன்று எழுத நினைத்த கவி காளமேகத்தின் பாடலையும் ஆற்றலையும் நாளைய பதிவில் காணலாம் . 


பத்திரிக்கையாளர், வழக்குரைஞர் என பன்முகத்திறமை கொண்ட சுந்தர் அவகளின் வலைப்பூவே இது. தன் பதிவுகளின் வழியே சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசியல் சார்ந்த பதிவுகளை சமூகத்தில் பதிவு செய்யும் இவரின் பதிவுகள் நம் அனைவருக்கும் உபயோகமானது. தன்னைப்பற்றிய சுய அறிமுகத்தை நான் எனும் தலைப்பில் கொடுத்திருக்கும் இவர், சுற்றுச்சூழல் மாசுபாடுகள் குறித்து வழக்குத் தொடுப்பது எப்படி? எங்கே? என்பதைப்பற்றியும் விலாவரியாக எழுதியுள்ளார் .


பெண்ணியத்திற்காக உண்மையாக எழுத்தின்வழியே போராடும் அரிதான எழுத்தாளர்களில் ஒருவர் அவ்வை நிர்மலா. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ப்ரெஞ்ச் என அனைத்து மொழிகளையும்  கற்றுத் தேர்ந்ததுடன் , தளரா வேகத்துடன் சளாரா நடையில் இவர் எழுதும் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை . இவரின் சில பதிவுகள் ,


வெல், இந்த தளத்தைத் தெரியாமல் இருப்பவர்கள் வலையுலகில் அரிது என்றே சொல்லலாம். KG, ஸ்ரீராம், ஷோபனா, ராமன், கௌதம் என பல்வேறு திறம்வாய்ந்த பஞ்சபாண்டவர்களை பதிவுலகில் எழுதி அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கும்  ஒரு தளம் . இத்தளத்தில் இல்லாத விஷயங்களே இல்லை. அனுபவக்கட்டுரைகள் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள் , எங்கள் ப்ளாக்கில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் படித்து மனப்பாடம் செய்தால் அட்டகாசமாக எழுத ஆரம்பித்துவிடலாம். தளத்தின் அனைத்துப்பதிவுகளுக்கும் மணிமுடியாக விளங்கும் பாஸிட்டிவ் செய்திகள் தொடரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கே.ஜி சார், இப்போதெல்லாம் எழுதாமல் இருப்பது ஏனோ என்றுதான் தெரியவில்லை. எங்கள் ப்ளாக்கிலிருந்து சில பதிவுகள் ,


இத்தளத்தின் வழியே பல அற்புதமான கட்டுரைகள் எழுதிவருகிறார் திரு.  விஜயன்துரை. இவர்மட்டும் முழுநேர எழுத்தாளன் ஆனால் , எழுத்துலகில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் எனப்புகழாரம் சூட்டி இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது நம்ம சீனு அண்ணன் தான் . ஆம் ! அவர் கூறியது உண்மைதான். இவரின் பதிவுகளின் தரம் அவர் கூற்றிற்கேற்ப இருப்பது உண்மைதான். கதைகள் மற்றும் கவிதைகளில் வார்த்தை ஜாலம் புரியும்  இவரின் சில பதிவுகள் ,


மணிமாறன் அண்ணனின் எழுத்தாக்கத்தில் உருவான இந்த தளத்தில் சினிமாக்கட்டுரைகளும், சிந்திக்கவைக்கும் அனுபவக்கட்டுரைகளும் இடம்பெறும்.  இப்போதெல்லாம் முழுக்க சினிமாக்கட்டுரைகளிலேயே இவர் கவனம் செலுத்தியிருப்பது கொஞ்சம் வேதனைக்குள்ளாக்கியிருந்தாலும், முன்போ மீண்டு வந்து எழுத்தால் நம்மை மீண்டும்  கவர்ந்திழுப்பார் என நம்பலாம் . இவரின் சில பதிவுகள்,

நன்றி  மற்றும் அன்புடன் ,
மெக்னேஷ் திருமுருகன்

7 comments:

 1. அவ்வை நிர்மலா அவர்களின் தளம் புதிது... நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. சில தளங்கள் புதியவை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. பதிவர்கள்
  அனைவருக்கும்
  வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது