++++++++++++++++++++++++++++++++++++
1.
தமிழ் வலைப் பதிவாளர்கள் உதவிப்பக்கம்(6 பேர்கள் கொண்ட குழு)
புதிதாக வரும் பதிவர்களுக்கும் சரி, அல்லது
கணினித்தொழில் நுட்பத்தில் அதிகப் பரீட்சயம்
இல்லாத என்னைப் போன்ற ஆசாமிகளுக்கும் சரி,
கை கொடுத்து உதவும் பதிவு இது
--------------------------------------------------------------------------------
2.
வேலை வாய்ப்பு கல்வி வலையிதழ்(5 பேர்கள் கொண்ட குழு)
இலைஞ்ரகள் பாணியில் சொன்னால் சூப்பரான பதிவு இது
வேலை தேடும் அல்லது வேலையில் முன்னேறத்துடிக்கும்
பல இளைஞர்களுக்கு இந்த வலையிதழ் ஒரு வரப்பிரசாதம்.
என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு - வயது காரணமாக
எவரும் வேலை தரமாட்டார்கள். ஆனால் நான் எனக்குத்
தெரிந்த பல இளைஞர்களைப் பார்க்கச் சொல்லும் பதிவு இது.
----------------------------------------------------------------------------------------
3.
தமிழ் சங்கம்(6 பேர்கள் கொண்ட குழு)
4.
இலக்கணம்(4 பேர்கள் கொண்ட குழு)
5.
சொல் ஒரு சொல்(4 பேர்கள் கொண்ட குழு)
இந்த மூன்று பதிவுக்ளுமே - பெயரிலேயே
பதிவின் நோக்கத்தைக் கொடிபிடித்துச்
சொல்கிறது!
இவர்கள் தமிழுக்கு அறிய சேவைகள்
செய்து வருகிறார்கள்.
பல அறிவு ஜீவிகளின் பின்னூட்டங்களைங்களை
நிறையக் காணலாம். சுவாரசியமாகவும், உபயோகமாவும்
இருக்கின்றது!
-------------------------------------------------------------------------------------
6.
திராவிடத் தமிழர்கள்(5 பேர்கள் கொண்ட குழு)
தங்கள் நிலைப் பாடுகளைச் சொல்லாற்றலுடன்
சொல்லும் குழு.
பெயரிலேயே குழுவின் சிறப்பான நோக்கம் தெரியும்
உடன்பாடான கருத்துக்களும் இருக்கும். சமயங்களில்
சில எதிர்மறையான கருத்துக்களும் இருக்கும்
நான் இவ்ர்களுடைய பதிவுகளை விரும்பிப் படிப்பதுண்டு!
------------------------------------------------------------------------------------
7.
விக்கி பசங்க(11 பேர்கள் கொண்ட குழு)
அறிவியல், தொழில் நுட்ப விஷயமாக் என்ன
கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்
உடனே தயக்கமின்றிப் பதில் வரும்
(நான் இவர்களிடம் கேட்க விருபும் கேள்வி –
எப்போதாவது நீங்கள் 11 பேர்களும் ஒன்றாக
சந்தித்திருக்கிறீர்களா?
அதேபோல உங்கள் குழுவில் உள்ள அனைவரும்
சகக்குழு உறுப்பினரை நேரில் சந்தித்திருக்கின்றீர்களா?
-------------------------------------------------------------------------------------
8.
சாப்பிட வாங்க(4 பேர்கள் கொண்ட குழு)
விதம் விதமாக உணவுகளைப் பற்றி - த்யாரிக்கும்
முறையுடன் எழுதுகின்றார்கள். அதற்குத்
தொடர்பான படத்தைப் பார்த்தாலே போதும்
அப்போதே செய்து சாப்பிடத்தோன்றும்
இந்தக் குழுவினரிடமும் கேட்டுத் தெரிந்து
கொள்ள ஒரு கேள்வி உள்ளது.
பாலாபாய் அவர்களை உங்கள் குழுவில் எப்படி
சேர்த்துக் கொண்டீர்கள்?
அவர் நல்லவர் - வல்லவர்
அவருக்குச் சாப்பிடத் தெரியும், மற்றவர்களுக்கு
விருந்து வைக்கத்தெரியும்!
ஆனால் சமையலைப் பற்றி உண்மையிலேயே
அவருக்கு ஏதாவ்து தெரியுமா?:-)))
------------------------------------------------------------
9.
கடல் கன்னி (9 பேர்கள் கொண்ட குழு)
கடலையும், கடல் சார்ந்த நகரங்களையும்
சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் குழு
--------------------------------------------------------------------
10.
திரைப்பார்வை(3 பேர்கள் கொண்ட குழு)
பெயரிலேயே இந்தக் குழுவின் செயல்பாடுகள்
தெரிவதால் விளக்கம் தேவையில்லை!
--------------------------------------------------------------------------
11.
வலைச்சரம்( 3 பேர்கள் கொண்ட குழு)
மிக மிக ந்ல்ல குழுவினரின் பதிவு.
(நான் ஆசிரியராக இருக்கிறேன் அல்லவா –
அதனால் தான் இரண்டு மிக மிக!)
இதைப் பற்றிய விளக்கம் தேவையில்லை
நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் பதிவு
பல நல்ல பதிவுளை அடையாளங்காட்டும்
அருமையான வேலையைச் செய்து கொண்டிருக்கிரார்கள்
இவர்கள் என்னைபோன்ற ஆசாமிகளைக் கூப்பிட்டு
ஆசிரியராக ஒருவாரம் பணி செய்யப் பணிப்பதைக்
குறைத்துக் கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது!
-----------------------------------------------------------------------------
12.
வருத்தப் படாத வாலிபர்கள் சங்கம்(9 பேர்கள் கொண்ட குழு)
சிரிக்க, சரிக்க மட்டுமே என்று நகைசுவையாக எழுதி
வலைப் பதிவர்களின் ஏகோபித்த ஆதரவைபெற்ற
குழு இதுதான் என்றால் அது மிகையல்ல
கவனிக்கவும் - வலைப்பதிவர்களில் 40% நகைசுவை
விரும்பிகள்
------------------------------------------------------------------------------
13.
முருகனருள்(6 பேர்கள் கொண்ட குழு)
14.
கண்ணன் பாட்டு( 5 பேர்கள் கொண்ட குழு)
மேற்கண்ட இரு குழுவினரும் இறைத்
தொண்டாற்றுபவர்கள். அருமையான்
இறை வழிபாட்டுப் பாடல்களையும், மனதை
நெறிப்படுத்தும் கட்டுரைகளையும் எழுதிக்
கொண்டிருப்பவர்கள்.
இவ்ர்களின் பதிவுகள் - என்னைபோன்ற
வயதான் ஆசாமிகளுக்கு மனத்தெம்பைக் கொடுக்கும்:-))))
-----------------------------------------------------------------------------------
15.
சக்தி( 3 மாதரசிகள் கூட்டாக கலக்கும் பதிவு)
பெண்களின் தேவைகள், பெண்களின் பிரச்சினைகள்
அதற்கான் தீர்வுகள், யோசனைகள் என்று சிறப்பாக
எழுதுகின்றார்கள்
----------------------------------------------------------------
16.
சென்னப்பட்டிணம்( 8 பேர்கள் கொண்ட குழு)
சென்னையின் சிறப்புக்களையும் பிரச்சினைகளையும்,
அதற்கான சீரமைப்பு யோசனைகளையும் எழுதிக்
கொண்டிருக்கும் குழுவினர்
-----------------------------------------------------------------------
17.
இயன்ற வரையிலும் இனிய தமிழில்( இருவர் கூட்டணிப் பதிவு)
தனிதமிழ் ஆர்வலர்களுக்கான் பதிவு. அரிய
தமிழ்ச் சேவைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்
----------------------------------------------------------
18.
சற்று முன் ( Breaking News)
தமிழ் வலைப் பதிவுகளில் ஒரு புதிய, அற்புதமான
முயற்சி - செயல் பாடுகள் கொண்ட பதிவு
இந்திய மற்றும் வெளி நாட்டுச் செய்திகளை சுடச் சுடச்
தொகுத்துக் கொடுக்கிறார்கள்
16 நல்ல இதயங்கள் Cum வல்லுனர்கள் சேர்ந்து செயல்
படுகின்றார்கள். அதோடு நம் மின்னஞ்சல் முகவரிக்கே
செய்திகள் வந்து சேரும் இணைப்பையும் கொடுத்து
உதவுகிறார்கள்.
ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே 537 பதிவுகள்
இட்டிருக்கின்றார்கள் என்பது வியப்பான செய்தி
இப்போது தமிழ்மணத்தில் மிகவும் Popular ஆன பதிவு
இவர்களுடைய பதிவுதான்
ந்ல்ல வளர்ச்சியும், எதிர்காலமும் இந்த்ப் பதிவிற்கு உள்ளது
இன்னும் சில மாதங்களில் கூகிள் நிறுவன்மே (Tamil Division)
இவர்கள் பதிவின் மேல் ஒரு கண் வைத்து, நல்ல விலை
கொடுத்து வாங்கிவிடக் கூடிய வாய்ப்பும் உள்ளது!:-))))
(க்ண்ணோட்டம் தொடரும்)
--------------------------------------------------------------------
Blogger சொதப்புகிறது. அதனால் இந்த
18 குழுக்களுக்கும் பெயரின் மீது அழுத்தி
சுட்டி வரும்படி செய்ய இயலவில்லை!
(செஞ்சாச்சு-சிந்தாநதி)
பொருத்தருள்கவும்!