தமிழ்99
எல்லாரும் என்னை மன்னிச்சுக்குங்க.. என்று சொல்லி விட்டு மாநாட்டு பட்டியல் தந்த இந்த வார ஆசிரியர் சயந்தன் காணாமல் போய் விட்டதால் வலைச்சரத்தின் 99வது இடுகையை தமிழ்99 சிறப்பு பதிவாக இடுகிறேன்.
முதலில் தமிழ்99 பிரச்சாரகர் ரவிசங்கருக்கு நன்றி. ரவிசங்கரின் முயற்சி படிப்படியாக வெற்றி கண்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்களெல்லாம் வெறும் அறிக்கைகள் மாதிரி தமிழ்99 பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்த போது புயலாக வந்த ரவிசங்கர் நேரடியாக களத்தில் இறங்கி தனிப்பட ஒவ்வொருவராக தமிழ்99க்கு மாற்றி வருகிறார். அது அவரது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி. நன்றி.
பழம்பெரும் தமிழ் வலைஞர்கள் பலரும் புதிதாக தமிழ்99 பெருமையை உணர்ந்து வருவது இதில் பெருமைக்குரிய விதயம். பாராட்டுகள் ரவி.
இங்கே தமிழ்99 உதவிகள் சில.
தமிழ்99 முறையில் தட்டச்ச முதலில் எகலப்பையை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். (நீங்கள் ஏற்கனவே எகலப்பை பயன்படுத்துபவராக இருந்தால் அது தமிங்கில தட்டச்சு முறை என்பதால் இதை நீங்கள் தனியாக பதிவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும்.
பதிவிறக்க: எகலப்பை தமிழ்99
தமிழ்99 விசைகளை உணர்ந்து கொள்ள பழகும் வரை தற்காலிகமாக காகிதத்தில் அச்சிட்டு வைத்துக் கொள்ள விசைப்பலகை உதவிப்படம்.
தமிழ்99 விசைப்பலகை படம்
தமிழ்99 முறையில் நேரடியாக தட்டச்சுமுன் ஓரளவு பயிற்சி பெற விரும்பு கிறீர்களா? எனில் இந்தக் கருவி உங்களுக்கு உதவும். இதில் பயிற்சி எடுத்த பின் எகலப்பை தமிழ்99 மூலம் விரைவாக தட்டச்ச முடியும்.
தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி(பதிவிறக்க)
தமிழ்99? அது என்ன? எதற்காக தமிங்கில முறையை விட்டு தமிழ்99க்கு மாற வேண்டும்? தமிங்கில முறை மிக வசதியாக இருக்கிறதே என்கிறீர்களா? பரவாயில்லை. ஆனால் இதைக் கொஞ்சம் பார்த்து விட்டு வாருங்கள்,
சிறந்த தமிழ் விசைப்பலகை எது?
|
|
வலைச்சரத்தின் 99வது இடுகையை தமிழ்99 விழிப்புணர்வு இடுகையாக இட்டது நல்லது உத்தி :)
ReplyDeleteஅப்புறம், இந்த இடுகையில் தரப்பட்டுள்ள விசைப்பலகை படத்தில் கிரந்த எழுத்துக்களை காணோம். : போன்ற விசைகளும் தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளன. எனவே, http://i16.photobucket.com/albums/b7/ravidreams/tamil99key.gif
என்ற முகவரியில் கிடைக்கும் படத்தையே தரலாம். இது அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ படம். இல்லை, இதை விட பெரிய, தெளிவான படம் கிடைத்தாலும் தெரியப்படுத்துங்கள்.
பயிற்சிக்குத் தரப்பட்டுள்ள கருவியிலும் எனக்கு முழு ஒப்புதல் இல்லை. ஏனெனில், தமிழ்99 குறுக்கு வழி விதிகள் சில அதில் பின்பற்றப்படவில்லை. அதில் பெறும் பயிற்சி குறையுடதாகவே இருக்கும்.
படம் இங்கே
ReplyDeleteநன்றி ரவி
ReplyDeleteபடம் சற்று சிறியதாக இருப்பதாக தோன்றியதாலேயே சற்றுப் பெரிய படமாக தேடினேன்.
அப்புறம் எகலப்பை தமிழ்99 குறுக்கு வழிகள் எகலப்பை உருவாக்கும் போது எளிமைக்காக விஞ்ஞான முறைப்பபடி இணைக்கப் பட்டவை.
தமிழ்99 விசைப்பலகை முறைக்கும் அதற்கும் நேரடி தொடர்பு இல்லை.
நேரிடையாக கற்றுக் கொள்வதால் எகலப்பை பயன்படுத்தும் போது குறுக்கு வழிகள் இன்னும் எளிமைதானே தரும்?
நமக்கான ஒரு கருவி உருவாகும் வரை இது எளிமையான கருவி என்பதால் பயன்படுத்த பரிந்துரைக்கலாம்.
ரவி மூலம் தமிழ்99 பற்றி அறிந்தேன். அது மட்டுமல்ல கணிணியில் பலதரப்பட்ட பிரச்சனைக்கு பதிலை விரல் நுனியில் வைத்திருக்கும் ரவிக்கு என் பாராட்டுகள் உரிதாகட்டும். அதை பற்றி பதிவிட்ட சிந்தாநதிக்கு ஒரு 'ஓ'.
ReplyDeleteஎன்ன எனக்குதான் இன்னும் தமிழ்99 பழக சிரமமாயிருக்கு ;-) மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை தமிங்கில தட்டச்சை மறக்க முடியவில்லை.
எ-கலப்பைக்குன்னு சிறப்பா குறுக்கு வழிகள் உருவாக்கப்படதா தெரில, சிந்தாநதி. எல்லாமே, அரசால் அறிவிக்கப்பட்டவை தான்.
ReplyDeleteபார்க்க - http://www.tamilvu.org/Tamilnet99/annex2.htm
(தற்காலிகமா இந்த இணைப்பு செயல் இழந்திருக்கு..கொஞ்ச நாள் / நேரம் கழிச்சு பாருங்க)
என்ன தான் வலைப்பதிவுலகில் ஓரிருவராய் மாற்றினாலும், அது பத்தாதுங்க. உங்கெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பள்ளிகளிலேயே தமிழ்99 முறை பயிற்றுவிக்கப்பட வேண்டும். அது ஒன்று தான் முழுமையான நிரந்தரமான வருங்காலத்தைக் கணக்கில் கொண்ட தீர்வு. அரசு மட்டத்தில் தொடர்புடையவர்கள் எவரும் இருந்தால் இதை அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இல்லை, பரந்த அளவிலான activism தமிழார்வலர்கள், மக்களிடம் இருந்து வர வேண்டும்.
ஜெஸிலா - நன்றி. சீக்கிரம் முழுசா மாறிடுவீங்கன்னு நினைக்கிறேன்.
சுட்டிக்கு நன்றி
ReplyDeleteஇந்த இணைப்பு பின்னாளில் பரிந்துரைக்கப் பட்டிருக்கலாம். ஆரம்ப விதிகளில் இது இல்லை. annexure-11 என்று தான் இருக்கிறது. எனவே தான் ஆரம்பகால தமிழ்99 விசைப்பலகைகளில் இந்த விதிகள் இணைக்கப் படவில்லை. இப்போதும் எகலப்பை தவிர பல கருவிகளில் இது பின்பற்றப் படுவது இல்லை.
மேலும் நான் இணைத்துள்ள பயிற்சிக்கருவியை உருவாக்கியவர் தமிழ்99 மாநாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர். எனவேதான் ஆரம்ப கருவியில் இந்த விதி இணைக்கப் படவில்லை என்பதை கூறினேன்.
இலக்கண விதி தட்டச்ச அதிக வசதி தருகிறது என்பது உண்மை. அதனால் ஆய்வுகளுக்குப் பின் பின்னாளில் அது இணைப்பு விதியாக இணைக்கப் பட்டுள்ளதாக தோன்றுகிறது.
அரசு மட்டத்தில் பலரும் தட்டச்சு பயின்றவர்களே கணினி இயக்க ஆரம்பித்ததால் அவர்கள் சொந்தமாக பாமினி எழுத்துரு நிறுவிக்கொண்டு தடட்ட்ச்சு முறையிலேயே தட்டச்சி வருகிறார்கள். (அரசு தாம், தாப் எழுத்துரு மற்றும் தமிழ்99 விசைப்பலகையை பரிந்துரைக்கிறது.)
ReplyDeleteமேலும் பாமினி எழுத்துருவின் சிறப்பு அதை தேர்வு செய்து கொண்டு எந்த எழுதுகருவியும் அவசியமின்றி யளனகப முறையில் தட்டச்ச முடியும் என்பதாகும்.
தமிழ்99 கொ.ப.செ-க்கள் ரெண்டு பேரோட அன்புத்தொல்லையும் தாங்காமலே தமிழ்99க்கு சீக்கிரம் மாறிடுவேன்னு நினைக்கிறேன் :-) அரும்பணிக்கு வாழ்த்துக்கள் சிந்தாநதி & ரவிசங்கர்.
ReplyDeleteஅய்யா, இந்த பயிற்சி சுட்டி வேலைக்கு ஆகலை... என்னன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.
ReplyDeleteஅந்த பயிற்சிக் கருவிக்கு tam எழுத்துரு வேண்டும். மேலும் அதை பயிற்சிக்கு மட்டும் தான் உபயோகிக்க முடியும்.
ReplyDeleteஎனவே இதைப் பயன்படுத்துங்கள்...
http://wk.w3tamil.com/
யூனிகோடில் அவசரத்துக்கு தட்டச்சு செய்து copy&paste செய்யவும் இது உதவும்.
இதை இணைய இணைப்பு இல்லாத போது பயன்படுத்த
http://wk.w3tamil.com/download.html
இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
இது விசைப்பயிற்சிக்கும் அவசரத்துக்கும் மட்டும் பயன்படுத்துங்கள்,
மேலே ரவி கூறியுள்ள குறுக்குவழிகள்
தத என்று தட்டச்சினால் தானாகவே த்த என்று வருவது நத என்று தட்டச்சினால் ந்த என்று வருவது போன்றவை இருக்காது. அது எகலப்பை, தமிழ்விசை போன்றவற்றில் மட்டுமே இருக்கிறது.