07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 10, 2007

காமெடி சரவெடி!

நகைச்சுவை என்பது எழுத்திலேயே இயல்பாக வரும்போது தான் ரசிக்க முடிகிறது. ஒரு பதிவர் வலிந்து நகைச்சுவையை திணிக்க முற்படுவாரேயானால் அது அவருக்கு மட்டுமே நகைச்சுவையையும், படிப்பவர்களுக்கு தாவு தீரும் வகையிலும் தான் அமையும். வலைப்பூக்களில் அரிதான நேரங்களில் மட்டுமே தரமான நகைச்சுவைகளை காண முடிகிறது. பதிவுகளை விட பின்னூட்ட லூட்டிகளில் தான் நம் வலைப்பதிவர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். நான் ரசித்த நகைச்சுவை பதிவுகளில் சில :

வாசுவும் ஜெனிபர் லோபசும் - நண்பர் ஜெயராமன் எழுதிய இந்தப் பதிவு 100 சதவிகித நகைச்சுவைக்கு உத்தரவாதம். பாக்கியம் ராமசாமி போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கு இணையானது இவரது பாணி நகைச்சுவை எழுத்து.

செந்தலழார் என்றாலே கோமாளித்தனம் தான். தலைவர் கொலைவெறியுடன் பட்டையைக் கெளப்பிய பதிவு இது. படிப்பதற்கு முன்னால் வயிற்று வலி மாத்திரை ஸ்டாக் இருக்கிறதா என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள் - சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா

உடன்பிறப்பு வரவனையான் மிக சீரியஸாக எழுதும் பதிவுகள் கூட பல நேரங்களில் புன்னகையை வரவழைக்கும். மிக உயர்தர இலக்கிய நையாண்டி இவரது ஸ்பெஷாலிட்டி. இணையத்தில் டவுசர் பாண்டிகளின் டவுசரை அவிழ்ப்பதில் கெட்டிக்காரர் இவர். ஒரு உதாரணம் : ஆரப்பாளையம் போலீசார் Vs டவுசர் பாண்டிகள்

குசும்பனின் குசும்புகளுக்கு என்றுமே நான் பரம விசிறி. இணைய எழுத்தாளர்களுக்கு தன் நகைச்சுவை 'பஞ்ச்'களால் கும்மாங்குத்து குத்தும் குசும்பனுக்கு இணை வேறு யார்? குசும்பனின் குசும்புகளுள் ஒன்று : டாப் டௌன் பத்து

நான் வலைப்பூ தொடங்குவதற்கு முன்பே பேவரைட்ஸில் Add செய்து வாசித்துக் கொண்டிருந்த வலைப்பூ பெனாத்தலாரின் பெனாத்தல்கள். முன்பெல்லாம் இயல்பான நகைச்சுவையில் பட்டையைக் கிளப்புவார். சில காலமாக அவரது பதிவுகளில் வலிந்து நகைச்சுவையை திணிக்க முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் எனக்கு ஆல் டைம் பேவரைட் இது : வந்தாச்சு அவன் விகடன்

சுகுணா திவாகரின் எழுத்துக்களை படித்தாலே பலருக்கு சுளுக்கு பிடித்துக் கொள்ளும். என்னைப் போன்ற பின்நவீனத்துவ ரசிகர்களுக்கு இலக்கிய தாகமெடுத்து விடுகிறது. அவரது மிக முற்போக்கான நவீன எழுத்துச் சூறாவளிகளுக்கு இடையிலேயும் அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்ள சில நேரங்களில் நகைச்சுவை சரவெடியை கொளுத்திப் போடுவார் - முரளிமனோகர் - ஒரு பின்நவீனத்துவ சிறுகதை முயற்சி(?)

நண்பர் நாமக்கல் சிபி மட்டும் நரசிம்மராவிடம் பேசியிருந்தால் நரசிம்மராவே கூட சிரித்து தொலைத்திருப்பார். இயல்பிலேயே நகைச்சுவையில் ஊறிய நண்பரின் டாப் கிளாஸ் பா.க.ச. பதிவு ஒன்று - பாலபாரதி : சும்மா கேட்டவுடன் அதிருதில்ல!

சமீபகாலமாக நகைச்சுவை சரவெடிகளை தமிழ்மணத்தில் கொளுத்திப் போடும் நண்பர் அபிஅப்பாவின் பதிவுகளுக்கு நான் ரெகுலர் விசிறி. அவரது இந்தப் பதிவினை தலைப்புக்காகவே படித்தேன் : ஒரு சீரியஸ் பதிவு!!

துக்ளக் சோ ராமசாமிக்கும் நண்பர் முத்து(தமிழினி)வுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதென்னவோ தெரியலை அவர் சீரியஸாக சோ ராமசாமியை விமர்சித்தால் கூட எனக்கு சிரிப்பு தான் வருகிறது. நண்பரின் "நச்" பதிவொன்று இதோ : துக்ளக் ஆண்டு விழா - ஒரு வம்பு பதிவு

What the f***? - எப்போதான் பொட்டீக்கடை நாகரிகமாக :-) பேச கத்துக்கப் போறாரோ?

மைடியர் முண்டக்கன்னி அம்மனே! - NO COMMENTS :-)

நினைவில் நின்ற சில பதிவுகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். மற்ற நகைச்சுவை மற்றும் மொக்கை எழுத்தாளர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.

5 comments:

  1. நன்றி லக்கி! மிக்க சந்தோஷம்!

    ReplyDelete
  2. நன்றி அபி அப்பா!

    ReplyDelete
  3. "சிஸ்டர்,ஐ லவ் யூ" என்று துவங்கும் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்.சுட்டி கீழே உள்ளது.

    http://vavaasangam2.blogspot.com/2007/01/blog-post.html

    தலைப்பே 'நகை'ச் சுவையாக இல்லை? யார் எழுதியதா? படித்துப் பாருங்கள் தெரியும்!
    உங்கள் பதிவில் இதை ஏன் குறிப்பிடவில்லை மடிப்பாக்கம் மைனரே?

    ReplyDelete
  4. நேற்றைய சரவெடியில் சொல்லியிருக்கிறேன் வாத்தியாரே! :-)

    ReplyDelete
  5. கண்டுகொண்டதற்கு ரொம்ப நன்றி வாத்யாரே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது