07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 11, 2007

சீரியஸ் சரவெடி!

சீரியஸான பதிவுகளை எழுதும் வலைப்பதிவர்கள் மிக அதிகம். ஆயினும் தங்கள் அனுபவத்தில் இருந்து எழுதுபவர்களின் எழுத்து ஏற்படுத்தும் தாக்கம், புனைவு மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதில்லை. கதை, கட்டுரை என்று இலக்கியத்தின் எந்த கூறாக இருந்தாலும் சொந்த அனுபவங்கள் மூலமாக உருவாகும் எழுத்துக்கான வசீகரமே தனி தான். என்னை கவர்ந்த, என் நினைவில் இருக்கும் சீரியஸ் பதிவுகள் சில :

கேலிக்கூத்து! - குட்டி பூர்ஷ்வாவின் இப்பதிவைப் படித்து விட்டு உங்களுக்கு தாவு தீர்ந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

விட்டில் பூச்சிகள் - இளவஞ்சி எழுதிய கதை. இது புனைவா அல்லது அவரது அனுபவமா என்று அவர் தான் சொல்லவேண்டும் :)

ஒரு பத்திரிகையாளரின் பர்சனல் அனுபவம் - தேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது! - சுவையாக ஆரம்பித்து நெகிழ்ச்சியாக முடியும் அட்டகாசமான பதிவு. தடாலடியாரின் மாஸ்டர் பீஸ் இது!

சுடர் விளையாட்டு சுயபுராணமாக தெரிந்தாலும்... சுயமரியாதை கொண்ட - பகுத்தறிவைப் பயன்படுத்த விரும்பிய மனிதனின் வாழ்க்கைப் போக்கு எப்படி போகும் என்பதை படம்பிடித்து காட்டிய பாலபாரதியின் அசத்தல் பதிவு இது... சுடர்:- பத்தவச்சுட்டியே பலூன்மாமா..

ஆனந்தக் கண்ணீர் - சிறுகதையா அல்லது கவிதையா என்ற குழப்பமிருந்தாலும் தன் உணர்ச்சிகளை தெளிவாகவே இப்பதிவில் கொட்டியிருக்கிறார் விவசாயி!

மே 21, 1991 - 1
மே 21 1991 - 2
மே 21, 1991 - 3
மே 21, 1991 - இறுதிப்பாகம் - நான் படித்த மிகச்சிறந்த தொடர்பவுதிகளில் ஒன்று. பெனாத்தலாரின் மே 21.

முரட்டு வைத்தியம் - 3 - தனக்கு தானே முரட்டு வைத்தியம் செய்துக் கொள்ளும் தில் டோண்டு சாரை விட்டா வேற யாருக்கு இருக்கு?

"மரணம்" - மரணம் மட்டுமா மரணம் என்று கேள்வி எழுப்புகிறார் வித்யா. இக்கவிதையை வாசிக்க கொஞ்சம் மனத்திண்மை தேவை.

என்னுடைய சென்னை - சில நினைவுத்துளிகள் - இது சீரியஸ் பதிவா, ஜாலி பதிவான்னு சொல்ல முடியாத வித்தியாசமான பதிவு. மதியக்காவின் எழுத்துக்களுக்கு தான் எத்தனை வசீகரம்!

சந்திரா அத்தை - தேன்கூடு போட்டிக்கு - அந்த காலத்து எழுத்தாளர் லஷ்மி ரேஞ்சுக்கு இப்பவும் கதை எழுத ஆளிருக்கு டோய்!!!

வழக்கம்போல டிஸ்கி : நினைவில் நின்ற சில பதிவுகளை மட்டுமே சேர்த்திருக்கிறேன். எனக்கு பிடித்த எல்லாம் பதிவுகளையும் சேர்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்காவது நான் வலைச்சரம் சிறப்பாசிரியராக இருக்க வேண்டும்.

5 comments:

  1. Lucky boss
    Following link is not working
    "முரட்டு வைத்தியம் - 3 - தனக்கு தானே முரட்டு வைத்தியம் செய்துக் கொள்ளும் தில் டோண்டு சாரை விட்டா வேற யாருக்கு இருக்கு?"

    ReplyDelete
  2. தவறான சுட்டி. இதோ சரியான சுட்டி

    எனது பதிவை குறிப்பிட்டதற்கு நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி இம்சை!

    சுட்டியை சரி செய்துவிட்டேன்!!!

    நன்றி டோண்டு சார்!

    ReplyDelete
  4. லக்கிலுக்,

    // இது புனைவா அல்லது அவரது அனுபவமா என்று அவர் தான் சொல்லவேண்டும் //

    பார்த்த, கேட்ட, அனுபவித்த, நண்பர்களுக்கு நடந்த நிகழ்வுகள் என்ற விதத்தில் அதெல்லாம் அனுபவங்கள் தான்!

    ஆனால் எல்லாவற்றையும் கலந்துகட்டி எழுதிய விதத்தில் அது புனைவு என்ற வகையிலேயே வருமென நினைக்கிறேன்!

    நல்லா என்னை ஒருதடவை பாருங்கையா! போலிஸ் அடிதாங்கற ஒடம்பா இது?! :)))

    ReplyDelete
  5. //நல்லா என்னை ஒருதடவை பாருங்கையா! போலிஸ் அடிதாங்கற ஒடம்பா இது?!//

    ஒருவேளை வாங்குனதுக்கு அப்புறம் இப்படி ஆயிடிச்சா அண்ணே? :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது