திரைப்படங்கள்... சில பார்வைகள்...
பரமசிவன் அருள் புரிய வந்து வந்து போவார்!
பதி விரதைக் கின்னல் வரும் பழையபடி தீரும்!
சிரமமொழு தாள மெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
- பாரதிதாசன் (தமிழ் நாட்டிற் சினிமா)
திரைப்பட விமர்சனங்களை படிப்பது ஒரு நல்ல அனுபவம். இது தான் படம். இது கதை (விகடனில் செழியன் செய்வதைப்போல, படத்தை காட்சிக்கு காட்சி விளக்கி விடுவது) என்றெல்லாம் ஒற்றைப்படையில் பேசாமல், திரைப்படத்தில் இருந்து தொடங்கி வேறு பல தளங்களுக்கு சென்று திரும்பும் இலக்கியத்தை நெருங்கும் விமர்சனங்களைப் படிப்பது அலாதியானது. இணையத்தில் ரோஜர் ஈபர்ட்டின் பல விமர்சனங்களில் இந்த அம்சம் இருக்கும். தமிழ் பதிவுலகில் நான் படித்து ரசித்த விமர்சனங்களில் சில.
சந்திரசேகரன் கிருஷ்ணனின் செவன் சாமுராய் பற்றிய பதிவு.
கானா பிரபாவின் செவன் சாமுராய் குறித்த விமர்சனம் ஒன்று. ஈழத்தை தொட்டு செல்லும். தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. முதல் இரண்டும் எனக்கு பிடித்த மலையாளப் படங்கள் என்பதால்... அடுத்த இரண்டும், திரைப்படத்தில் தொடங்கி வேறு ஒரு தளத்திற்கு சென்று முடிவதால்...
கானா பிரபா - மனசின் அக்கரா
காழ்ச்சா
சினிமா பாரடிசோவும் யாழ்பாணத்து திரையரங்குகளும்
பதே பஞ்சாலியும் பெரிய மாமியும்
நான் ஒரு ஆண் ஆதிக்கவாதி என்ற உண்மையை எனக்கு சொன்னவர் மதி. :) . இவரது திரைப்பட மற்றும் புத்தக விமர்சனங்களை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். ஒன்றிரண்டு முறை சாட்டில் உரையாடியும் இருந்தேன். வாசப்பின், ரசனையில் வீச்சை கண்டு இயல்பாகவே மதி ஒரு ஆணாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது என்னைப் பற்றி பல விஷயங்களை எனக்கே சொன்னது. இன்னொரு விதத்திலும் மதிக்கு நன்றி கூற வேண்டும். என்னை சினிமா பாரடிசோ பார்க்கச்சொல்லி கேட்டுக்கொண்டார். இல்லையெனில் அந்த அனுபவம் கிடைக்காமலேயே போயிருக்கக்கூடும். அவரது சில விமர்சனங்கள்.
மதி கந்தசாமி - விட்
காதல் படங்கள் - ஒரு பட்டியல்
ஜூலியஸ் சீசர்
|
|
வணக்கம் சித்தாத்
ReplyDeleteஇன்று தான் உங்கள் பதிவைப் பார்த்தேன், என் பதிவுகள் குறித்த உங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றிகள்.
இதோ நான் எழுதிய செவன் சமுராய் பற்றிய பதிவு
http://kanapraba.blogspot.com/2005/12/blog-post_31.html