Sunday, May 31, 2009

அமித்து அம்மாவுக்கு நன்றிஉரை - சக்திக்கு வரவேற்புரை

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்ற அமித்து அம்மா, எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 150 மறு மொழிகள் பெற்று, அறுபதுக்கும் மேலான பதிவர்களை அறிமுகப்படுத்தி - அவர்களின் இடுகைகளின் சிறப்பினைச் சொல்லி, சுட்டிகள் கொடுத்து, ஏற்றுக் கொண்ட பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றி மன மகிழ்வுடன் சென்று வருகிறேன் என விடை பெறுகிறார்.

ஒரு வார காலமாக, வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பினிற்காக அவர் உழைத்த உழைப்பு நன்றாகவே தெரிகிறது. பல்வேறு துறைகளில் இருந்து பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுக படுத்திய விதம் பாராட்டத் தக்கது. அவரை வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்தி நன்றி கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து சூன் திங்கள் முதல் நாள் துவங்கும் வாரத்திற்கு சகோதரி சக்தி வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் வீட்டுபுறா என்ற பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ அறுபது பதிவர்கள் இவரது இடுகைகளைப் பின் தொடர்கிறார்கள். பட்டாம்பூச்சி விருது பெற்றவர். இவரது நிஜப்பெயர் தமிழ்செல்வி. இவர்கள் நடத்தும் நிறுவனங்களின் பெயரான சக்தி என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறார். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அரிய தத்துவத்தினை வாழ்வினில் கடைப்பிடிப்பவர்.

அன்பின் சக்தியினை வருக வருக - பல நல்ல அறிமுகங்கள் தருக தருக எனக் கூறி, வலைச்சரத்தின் சார்பினில் வரவேற்பதில் மிகப் பெருமை அடைகிறேன்.

சீனா

வருகிறேன்

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை - இது பைபிள் வசனம்.
இந்த வாசகத்தை போன்றே என்னை விட்டு விலகாமலும், மனம் சங்கடப்படும் போதெல்லாம் என்னை கைவிடாமலும் இருப்பது எழுத்தும் வாசிப்பும் தான், மனிதர்களை விடவும் மனமெங்கும் என்னை அதிகம் ஆக்ரமித்தது எழுத்துதான்.

கன்னாபின்னாவென்று படித்துக்கொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் நிறுத்தினேன். மளிகைக் கடையிலிருந்து வரும் பொட்டலப் பேப்பரைக் கூட விட்டு வைக்காத நான் எதையுமே படிக்காமல் இருந்தேன். மீண்டும் இந்த வலையுலகத்திற்கு வந்த போதுதான் எனது வாசிப்பின் புதிய பரிணாமம் தோன்றியது. ஆச்சரியப்பட்டுப் போனேன். விரிவாக படிப்பது, அதை வேறொரு கோணத்தில் வைத்து யோசிப்பது என்று எப்போதும் என்னை ஏதோ ஒரு உலகிற்கு அழைத்துக்கொண்டு போனது.

எத்தனையோ பேர் எவ்வளவு அருமையாக எழுதுகிறார்கள், இவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு வலைப்பூ என்ற ஒன்று இல்லையென்றால் அவர்களின் டைரி க்குள்ளே தானே இவையெல்லாம் முடங்கிப்போயிருக்கும். மேலும் எழுத தூண்டுதலுமற்று, அப்படியே கேட்பாரற்று அவர்களின் எழுத்துக்குள் எங்கு போயிருக்கும்? இந்த கேள்வி சில நல்ல படைப்புகளை படித்து முடித்தபின் எனக்குத் தோன்றும்.

வலைப்பூவை படிக்க ஆரம்பித்த பிறகு என்னிடமிருக்கும் புத்தகங்களெல்லாம் மீள் வாசிப்பு செய்யப்படுகின்றன. எழுத்து ஒன்றேதான். ஆனால் இடைப்பட்ட காலகட்டங்களில் அதன் புரிதல் வேறாயிருக்கிறது.

அலுவலக அழுத்தம், குடும்பச் சுமைகள் இதற்கு நடுவே நம்மை இளைப்பாற்றிக்கொள்ள நமக்கே நமக்கென்று கிடைத்த தனி ஒரு இடம். மனதை நிறைய வைக்கும் வாசிப்புகள், நல்ல நட்புகள், நெகிழ்ச்சியான சில நிகழ்வுகள் என இந்த வலைப்பூ உலகம்
எனக்கு தந்தது அதிகம்.

முடிந்தமட்டும் கொடுத்தவேலையை செய்திருக்கிறேன்.
நேரமின்மையால் என்னால் இன்னும் பலரின் பல பதிவுகளின் சுட்டிகளைத் தரமுடியவில்லை.

வலைச்சரத்தின் மூலமாக என்னை இன்னும் சிலர், பலருக்கு அறிமுகப்படுத்திய திரு. சீனா அவர்களுக்கு நன்றிகள்

இறுதியாக என்னைப் பிறருக்கு அறிமுகப்படுத்திய எனது சில பதிவுகள். இந்த இரண்டுப் பதிவும் நான் எழுத வந்தது வேறு,ஆனால் எழுதியது வேறு. எழுத ஆரம்பித்த பிறகு மனதில் தோன்றியதை அப்படியே பதிவு செய்தேன்

1. என் அப்பாவைக்குறித்தான இந்தப் பதிவு

2. தெருக்கூத்து

3. அன்புள்ள வர்ஷினிக்கு
(எந்த முன் தோன்றலுமில்லாமல், முந்நாளின் நிகழ்வை என் மகளுக்கு உரைக்காமல் வந்த பின் நான் அவளுக்கு சொல்லுவதைப் போல எழுதிய பதிவு இது.
என் மனதுக்கு மிகவும் நிறைவாய் உணர்ந்த பதிவும் இதே)


(எனக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் பதில் / நன்றி சொல்வது மிகவும் சொற்பமே.
ஏனெனில் எனக்கு அலுவலகத்தில் மட்டுமே கணினி உபயோகம், கிடைக்கும் சொற்ப நேரத்தில், மற்ற பதிவுகளை வாசித்து அதற்கு பதிலிடுவதற்கே சில / பல சமயங்கள் சரியாக இருக்கும் (நேரம் கிடைக்கும் போது அலுவலக வேலையும் செய்வேங்க) இதுவரை எனக்கு பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள்)

Saturday, May 30, 2009

கொசுவத்தியும், விமர்சனமும்

நினைவுப் பகிர்தல் என்பது சில சமயம் நெகிழ்ச்சி, பல சமயம் நெகிழ்ச்சி. சென்றதினி மீளாது மூடரே என்பதறிந்தும் நடந்தவற்றை அசைபோடுவதில் தப்பேதுமில்லை. அப்படி படிச்சதுல எனக்குப் பிடிச்சது

துளசி தளத்தில் தொடர்ச்சியாக 15 பாகங்கள் வெளிவந்த “அக்கா”, அதுல பூக்கட்டுறத பத்தியும், வீடு மெழுகறத பத்தியும், பாம்பு அடிச்சத பத்தியும் சொல்லியிருப்பாங்க. அட அட அட. டீச்சர்னா சும்மாவா?

அடுத்ததா, அமுதா என் வானத்தில் தன் மாமனாரைப் பற்றி பகிர்ந்து கொண்ட இந்த நினைவுப் பகிர்வு

கோபம்,பயம் இப்படின்னு நவரசங்களையும் பற்றி பதிவெழுதி,பிறகு புறாக்களையெல்லாம் ஃபோட்டோ புடிச்சு (PIT)க்கு தயாராகி வரும் கத்தார் சிங்கத்தின் இந்த தந்தையர் தினப் பதிவு

புத்தக விமர்சனம் - புத்தகங்களைப் பற்றி யாராவது விமர்சனம் யாராவது எழுதி அது என் கண்ணில் பட்டு நான் படிக்க ஆரம்பிச்சேனா, நான் இருக்கறது ஆபிஸ்னு கூட மறந்துடுவேன், முதலில் அந்த புத்தகத்தையும், அதன் எழுத்தாளர் + பதிப்பகத்தின் பெயரையும் குறிச்சு வெச்சுப்பேன், பிறகு வாங்குறதுக்கு எளிதாக இருக்குமில்ல.


இப்படி புத்தகவிமர்சனத்தைப் பற்றி சொல்லும் வலைப்பூக்கள்


இவள் என்பது பெயர்ச்சொல் என்று சொல்லும் உமாஷக்தி (புத்தக விமர்சனம் மட்டுமல்லாமல் வேற்றுமொழி திரைப்படங்களையும் அழகாக விமர்சிக்கிறார்) இவரின் புத்தக விமர்சனத்தைப் படித்தபின் நான் வாங்கிய புத்தகம் நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது என்ற தமிழ்நதியின் சிறுகதைத் தொகுப்பு.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபின் என்ன சொல்ல?
வார்த்தைகளை நம் நடையில் சொல்லிவிட்டுப்போய்விடலாம் ஆனால் வலியை???

மேலும் இவரின் அணில்குட்டியும், சக்திவேலும், நானும் என்ற பதிவில் நடந்த நிகழ்வை அருமையாக வார்த்தைகளாக வார்த்திருப்பார்

வடகரை வேலன் அவர்களின் நூல் நயம் என்ற இந்த வலைப்பூவும் . கண்மணி குணசேகரனின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்திய வலைப்பூவில் இதுவுமொன்று.

முகமூடிக் கவிதைகள் மற்றும் புனைவுகள் என்று எழுதி அசத்தும் கிருத்திகாவின்விஷ்ணுபுரம்” நாவலின் விமர்சனம்.

கிருஷ்ண பிரபு என்பவருடைய இந்த வலைப்பூ

அரசூர் வம்சம் விமர்சனம் குறித்த Bee' Morgan னின் இந்தப் பதிவு

பதிவெழுத நமக்கு மேட்டர் இல்லையேன்னு நெனைக்கறப்ப சரியா ஏதாவது ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டனுப்புவாங்க. அப்படி வழக்கொழிந்த தமிழ்சொற்கள் என்று ஒரு தொடர்பதிவு புழக்கத்திலிருந்த போது, நிறைய பேர் நல்லா எழுதினாங்க. அதுல எனக்கு ரொம்பப் பிடிச்சது திகழ்மிளிரோட இந்தப் பதிவு

Friday, May 29, 2009

சிறுகதையும், சிரிப்பும்

சிறுகதைகள் : கவிதைக்கு அடுத்தாப்ல எனக்கு அதிகமா பிடிச்சது கதைகள், டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்குற தொடர்கதைகளை விடவும், ஒன் டே மேட்ச் மாதிரி சிறுகதைகள் இருக்க, அதுவும் இப்ப 20-20 மாதிரி கடுகுக் கதைகள் கூட வந்துடுச்சி.

நானும் எழுதினேன், காக்காணி என்ற சிறுகதைன்னு சொல்லி பெருங்கதைய. அதையே இன்னும் ஃபைன் ட்யூன், ஃபில்டர் இப்படி ஏதேதோ செஞ்சா சிறுகதையா ஆகுமாம், அனுபவசாலிகள் சொன்னது. கெடக்கறது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை, அப்படிங்கற கதையா அது இப்ப எதுக்கு, நாம மத்தவங்கள பாப்போம் வாங்க.

Bee' Morgan னின் சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்

சிதறல்கள் தீபாவின் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்

சாளரம் கார்க்கியின் குட்டி தேவதை

மழைக்கு ஒதுங்கியவை அ.மு. செய்யதுவின் அந்த முதல் சந்திப்பு பாகம்-2 (அழகா ஒரு கவிதையோட முடிஞ்சிருக்கும்)

குடந்தையாருடைய தனிமரம்

உழவனின் கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம்

அடுத்ததா நகைச்சுவை, நான் படிச்ச் சிரிச்ச சில வலைப்பதிவுகள் இங்கே.

குடுகுடுப்பையாரின் சும்மா குழம்பு, பிறகு அவர் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆன கதை

அபி அப்பாவின் வந்தியத் தேவன் வாந்தியத்தேவனானது , பிறகு விகடன் குட் ப்ளாக்ல வந்த அவரோட இன்னொரு சங்கீதம் கத்துக்க ட்ரை பண்ணத சொல்லிய ஒரு பதிவு

சோம்பேறி(?) என்பவருடைய இந்தப் பதிவு இவருடைய வலைப்பூவின் தலைப்பெழுத்தான படிக்கும்போதெல்லாம் புன்னகைக்கவைக்கும் இவரோட பதிவை விடவும் இண்ட்ரஸ்ட்டிங்க் இவரோட வலைப்புவின் இந்த எழுத்துக்கள் தான் //ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது: //

கோமாவின் ஹாஸ்யரசம்

நட்புடன்
அமித்து அம்மா

Thursday, May 28, 2009

தி க்ரேட் பட்டினத்தார்

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன்? கச்சியேகம்பனே!

வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே

ஊற்றைச் சரீரத்தை யாபாசாக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற்து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே



இதை படிக்கும்போது என்ன என்னவோ தோணுதா, இல்ல எதுவுமே தோணலையா. சரி போகட்டும். எனக்கு சித்தர் பாடல்கள்னா ரொம்பப் பிடிக்கும், அதுலயும் நமக்கு ரொம்பப் பிடிச்சவர் தி க்ரேட் பட்டினத்தார். பட்டினத்தார்னு சொன்னவுடனே சிலர், பலருக்கு தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்ற வாசகங்கள் நினைவுக்கு வரலாம்.

மேற்சொன்ன பாடல்கள் அவர் எழுதியவற்றில சில, படிக்கும்போதே பிரிச்சுப் படிச்சோம்னா எளிதில் பொருள் விளங்கிடும். நல்ல வேளையா இவங்கள்லாம் இந்த காலத்துல இல்லை, இருந்ததிருந்தாங்கன்னா ஸ்ரீலகஸ்ரீ சுவாமிகளா ஆக்கிட்டிருப்பாங்க.

நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துது, ஏன் திடிர்னு இப்படின்னு கேட்கறவங்க கீழ இருக்குற இந்த ரெண்டு வலைப்பூவையும் படியுங்க,

என்னோட தேடலில், இவங்க ரெண்டு பேர் வலையிலதான் நான் சித்தர் பாடல்களைப் பார்த்தேன், அதுல திரு. சிவமுருகன் நீலமேகம் என்பவர் நல்ல விரிவா, பொழிப்புரையே கொடுத்திருப்பார். அடுத்ததா ஜகதீஸ்வரன் என்பவருடைய இந்த வலைப்பூ


என்னோட தேடல் இதோட முடியவில்லை, சிலரோட வலைப்பக்கங்கள்ல இருந்து நாம தெரிஞ்சிக்காத தெரிஞ்சிக்கலாம், அப்படி புரியும்படி சொல்லியிருப்பாங்க

அதுல ஒன்னு சந்திரவதனாவோட மகளிர் வலைப்பூ

குழந்தை வளர்ப்புக்கான பேரண்ட்ஸ் க்ளப்

பூந்தளிர் தீஷூ அம்மாவோட இந்த வலைப்பூ (மாண்டிசோரி கல்வி முறையினை இவங்க பொண்ணுக்கு மட்டும் சொல்லித்தரமா, தீஷூ மூலமா நமக்கும் சொல்லித்தருவாங்க.

பிறகு மழலைகளுக்கான மழலைகள்.காம் இந்த வலைப்பூ 2007 க்குப் பிறகு வலைத்தளமா மாறிடுச்சு போல, நீங்க அங்க க்ளிக்கினாலே இத கண்டுபுடிச்சிரலாம்.

அப்புறம் அம்மாக்கள் வலைப்பூ, ஆரம்பத்துல நாலு பேரோட மாத்திரம் ஆரம்பிச்ச இந்த வலைப்பூ இப்ப கிட்டத்தட்ட 12 அம்மாக்களை இணைச்சு வெச்சிருக்கு.
இதுல இருந்தும் நிறைய தெரிஞ்சிக்கலாம், குறை மாத குழந்தை வளர்ப்புல இருந்து, குழந்தைகளுக்கு தரும் உணவு முறைகள், அவர்களுக்கான புத்தகங்கள்,
ஆக்டிவிட்டீஸ் இப்படி நிறைய. இப்படி ஒரு வலைப்பூவுக்கு பிள்ளையார் சுழி போட்ட சந்தனமுல்லைக்கு நன்றிகள்

தேடல் தொடரும்

நட்புடன்
அமித்து அம்மா

Wednesday, May 27, 2009

இசையால் வசம் ஆகா இதயமெது?

என்னைப்பொறுத்தவரை நம்மை நாமாகவே அவ்வப்போது உயிர்ப்போடு வைத்திருப்பது மூன்று எழுத்து, இசை, பயணம்.
இதில் எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதற்கீடான பொறுப்பு இசைக்கும் உண்டு.

பாடல்கள் நம்மை நம் மனநிலைக்கு தக்கவாறு மாற்றிக்கொண்டே இருக்கின்றன. காதல் தோல்வியா இந்தா பிடி ஒரு பாடல்,
கல்யாணமா இந்தா பிடி இன்னொரு பாடல், எல்லாரும் கைவிட்டுவிட்டு தனிமையை நாடுகிறாயா, ஓடி வா என்னிடம் என்று
நம்மை அணைத்து கொள்ளும் சக்தி பாடல்களுக்கு உண்டு. சில சமயம் சில பாடல்களின் வரிகள் நமக்காகத்தான் எழுதப்பட்டனவா
என்று கூட அது நமக்கு சிச்சுவேஷன் சாங்காக அமைந்துவிடும்.

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே, காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே என்ற ஒரு பாடல் ஜூலி கணபதி படத்தில் வரும். காதோரம் அந்தப் பாடலை கேட்டுக்கொண்டே, ஜன்னலோர இருக்கை
மட்டும் கிடைத்துவிட்டதானால் எனக்கு அந்த நாள் தான் இனிய நாள், எனது ராசிபலனில் அன்று மோசமாகவே போட்டிருந்தாலும் இது போன்ற
பாடல்களை கேட்கும் வாய்ப்பு அதுவும் ஜாக்பாட்டாக ஜன்னலோர இருக்கை என்றால், அந்த நாள் தான் எனக்கு சொர்க்கம்.

இது மாதிரியே இன்னும் சில பாடல்களான, அழகிய கண்ணே, உறவுகள் நீயே, கனாக் காணும் கண்கள் மெல்ல என மென்மையான பாடல்களை கேட்டுக்கொண்டு வந்தால் அட, அட அதெல்லாம் சொல்லி மாளாது போங்க. அன்னக்கிளி படப்பாடல்கள், என்னைக்கேட்டால் இளையராஜாவின் தி பெஸ்ட் அந்தப் பாடல்கள் தான் என்று சொல்வேன், அது போன்று துள்ளலோடு ஆரம்பிக்கும் இசையை வேறு எந்தப்படத்திலும் நான் கேட்டதில்லை.
தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் வெறி அந்தப் படத்தின் அத்தனை பாடல்களின் ட்யூனிலும் தெரியும்.

70 - 80 இந்த இடைக்காலத்தில் வந்த பாடல்கள் ஏறக்குறைய நம் மனதை வருடும் பாடல்கள் தான், இளமையெனும் பூங்காற்று, அபூர்வ ராகத்தில் வரும் கேள்வியின் நாயகனே.
ஆழக்கடலில் தோன்றிய முத்து என நிறைய ஃபேவரிட்கள்.

பழைய பாடல்கள் ப்பா, இடையிடையே பாடல் வரிகளையே முழுங்கிவிடும் இன்றைய பாடல்களைக் கேட்கும்போதுதான் பழைய பாடல்களின் அருமை தெரியும்.
தனிமையிலே இனிமை காண முடியுமா, நான் மலரோடு தனியாக ஏனங்கு வந்தேன், பாலும் பழமும் படப் பாடல்கள், கட்டோடு குழலாட ஆட என அதற்கான லிஸ்ட்
இன்னுமின்னும் பெரியது.

சமீபத்திய பாடல்கள் சில பாடல்களை மட்டுமே அடையாளம் காண முடிகிறது. நிறைய வரிகள் அட போட வைக்கிறது. அப்படி போடுமாறு இருந்தால் அது அநேகமாக ந. முத்துக்குமாரினுடையதாக இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது, என்ன புள்ள செஞ்ச நீ என்று ஆரம்பிக்கும் பாடல், அதில் வரும் சில வரிகள் -- திக்க வெச்ச தெணற வெச்ச, தெக்க வெச்ச வள்ளுவனா, என்னை ஒத்தையில நிக்க வெச்ச.
அப்படின்னு. ம்ஹூம். எழுதியது யாரோ?

இது போன்ற நினைவுகளை கிளறும் ஒரு பதிவு: தமிழ்நதியின் பாடல்கள் திறக்கும் பலகணிகள் , அதே போன்று அவரின் உயிரோசையில்
வெளிவந்த பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிற்து வெளி. பயணமும் பாடலையும் பற்றி ஒரே நேரத்தில் அறிய வேண்டுமானால் இவரின் இந்தப் பதிவுகளை படித்துவிடுங்கள்.

பயணம் பற்றி நான் படித்த இன்னொரு பதிவு: தீராத பக்கங்கள் திரு. மாதவராஜின் ரெயிலோடு போய், இவரின் சேகுவேரா பற்றிய பக்கங்கள் இன்னும் வாசித்து தீரவில்லை, வா... சித்துக்கொண்டே இருக்கிறேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம்.

இன்னுமொரு பதிவு: புதுகை அப்துல்லாவின் பயணங்கள், எனக்கு ஒன்னுப் புரியல, இவர் ஏன் இவரோட டைரிக்குறிப்புகள் எழுதாம, தம்பியோட டைரிக் குறிப்புகள் எழுதறாரு :)

மீண்டும் சந்திக்கலாம்
நட்புடன்
அமித்து அம்மா






Tuesday, May 26, 2009

கவிதைகள் பார்ட் II

பார்ப்பவையெல்லாம் கவித்துவமா தெரிகின்ற நமக்கு பல சமயங்களில் அதை கவிதையாக்கும் வாய்ப்பு வராது, சில சமயம் வந்திருந்தாலும் அது கவிதையாவும் இல்லாம, உரைநடையாவும் இல்லாம ஒரு ஷேப் இல்லாத ஷேப் புக்கு உள்ளாகியிருக்கும்.
இப்படி பல சமயங்களில் தோற்று சில சமயம் நம்மில் பலர் ஜெயிச்சிருப்போம்.

உரைநடைகளில் அசத்தல் பதிவெழுதினாலும், இவர்களுக்குள்ளும் கவிஞர்கள் இருக்கிறார்கள் என மெச்ச வைத்தது இதோ கீழ்க்காணும் வரிகள்.

தக்கைகள் அறிவதில்லை
நீரின் அடியாழம்;
ஒரு போதும்.

இதனை எழுதியவர் இதோ இவர்தான் அண்ணாச்சி

(மாத்தி யோசி)
”அம்பலத்தில் ஆடும் ஆதி சிவன்
தானறிவான் கால் தூக்கி ஆடி விட்டால்
அம்பிகை தோற்ப்பாள் என சும்மா
இருந்தவளை போட்டிக்கு அழைக்கவில்லை
தானே பெரிதெனும் தற்பெருமை தானடக்கி”

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர், மாத்தி யோசி என்று நம்மை சொல்லும் மிஸஸ்.தேவ்

(ஒழுகும் வானம்)
உடைந்து ஒழுகும்
வானத்தை சிறு
பாத்திரத்தில் பிடித்து
பல்தேய்த்துத் துப்புவனிடத்தில்
பிரபஞ்சத்தின் அழகியல்குறித்த
ஆலாபனை எதற்கு?

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் யாவரும் கேளிர்னு சொல்ற இவர்தான்,



ஒரு தக்கையைப்போல
காதலின் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டேயிருந்தேன்
நீ வந்தாய்,
ஒரு கல்லைப்போல
மூழ்கிப்போய்விட்டேன்.!
இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் தங்கமணி புகழ் ஆதித் தாமிரா

இவரின் பேசித்தீராத ஒன்று.! நம்மை அதிகம் பேச வைத்தது, கொஞ்சம் கவித்துவத்தோடு இருக்கும் இதையும் படியுங்கள் அவரின் இந்த வலைப்பூவில்
காதல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது.. காமம் அதிலிருந்து வண்ணங்களை விசிறியடிக்கிறது..





அனுபவிக்கத்தெரியாத தனிமை

உறங்கி விழிக்கையில் மேஜைமீது பரவியிருந்தது மீதமிருக்கிற மெழுகு,உண்மைதான்...அனுபவிக்கத்தெரியாத தனிமைகள் மிகக்கொடியவை!

இப்படி சொல்றவர் காதல் கறுப்பியான இவர்தான்


நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து

விழி இழந்தவனின்
கம்பு விசிறலைப்போல,
வீசி வீசி நானிறைத்த சொற்களெல்லாம்
சிதறிய அறையில்
தனிமை தியானத்திற்குப் பிறகான ஒர் கணத்தில்
தேடியபடியிருக்கிறேன்,
நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து
வெளிவர எனக்கிருக்கும்
ஒரே சாவியான சில சொற்களை-

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் சிறுமுயற்சி என்று பெருமளவில் பதிவெழுதுபவர், இவரின் சிண்ட்ரெல்லா கவிதையும் அருமை.



அது ஒரு கதைக் காலம் என்று கவிதைக்கு கூட்டிச்செல்பவர் யாருன்னு நீங்களே கண்டுபிடியுங்க

காக்கையை ஏமாற்றிய நரியும்
நரியை ஏமாற்றிய காக்கையும்
கொக்குக்கு விருந்து வைத்த ஓநாயும்
ஒநாய்க்கு விருந்து வைத்த கொக்கும்
திராட்சைக்கு ஏங்கிய நரியும்
பாட்டிவீட்டு தோட்டத்தில்
உலாவிக்கொண்டிருந்தன கேட்பாரற்று!
சன்,விஜய், கலைஞர் அலைவரிசைகளில்
கரைந்துப் போயிருந்தாள் பாட்டி!!
பஞ்ச காலத்தில்
காட்டில் தொலைத்து விடப்பட்ட
சித்திரக்குள்ளனும் அவன் சகோதரர்களும்
அலைந்துக்கொண்டிருந்தனர்...
தடயத்திற்காய் விட்டுவந்த
அப்பத்துண்டுகளைத் தேடி!!!


வேதியியல் மாற்றங்கள்

நொடிக்குநொடிக்கும் குறைவான
நமது கண்களின் உரசலில்
எனக்குள்ளே மீண்டும்
இரசாயன மடை உடைத்து
வேதியியல் மாற்றங்கள் நிகழ்த்துகின்றன
உன் நினைவுகள் ம் குறைவான
நமது கண்களின் உரசலில்
எனக்குள்ளே மீண்டும்
இரசாயன மடை உடைத்து

இப்படி கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுப்பவர் வேறு யாருமில்லை, நட்புக்கு உரியவர்தான்

விதை கவிதை

எட்டாம் வகுப்புக்கு முன்னர், எனக்கு முதன் முதல் வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தியது யார்னா, நினைவுகளோடு கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செய்து பார்த்ததில் ஞாபகத்திற்கு வந்தது ஆனந்த், என் முதல் நண்பன். நான், உஷா, ஆனந்த். உஷாவும், ஆனந்தும் ஒரே காம்பவுண்ட் (வாசல்) எங்க வாசல்ல இருந்து நாலாவது வாசல் அவங்களோடது. உஷாவால தான் ஆனந்த் பழக்கம். அடிக்கடி உஷா வீட்டிற்கு போக எதிர் வீட்டிலிருக்கும் ஆனந்த் எப்பவுமே ஒரு புக்கை படிச்சுகிட்டு, சுத்தி ரெண்டு, மூணு புக்கோட தான் இருப்பான். கோகுலம், பூந்தளிர், அம்புலி மாமா, க்ரைம் நாவல் கூட சில சமயங்களில். அந்த புத்தகத்தின் மேல்
இருக்கும் ஈர்ப்பால் நானேதான் ஆனந்த்கிட்ட போய் பேசினேன், அப்பவே உஷா என்னைப் பார்த்து கண்ண காட்டுச்சு, எனக்கு அதெல்லாம் புரியல, நானே வலியப் போய் பேசி ரெண்டு பூந்தளிர கடனா வேற அவன்கிட்டருந்து வாங்கிட்டேன்.பிறகுதான் தெரிஞ்சுது, ஆனந்தே ஒரு ரொம்ப பழைய புக்குக்கு நாலணாவும், கொஞ்சம் புது புக்குக்கு எட்டணாவும் கொடுத்து வாடகை லைப்ரரியில (பழைய பேப்பர் கடை) எடுத்து படிக்கிற விஷயம். இப்படியா நானும், ஆனந்தும் ஃப்ரெண்ட் ஆகி பேப்பர் கடைக்கு ஒன்னா போய் புக் எடுக்கறது, நான் படிச்சுட்டு அவனுக்கும், அவன் படிச்சுட்டு எனக்கும் தர வழக்கமாகியது. இது இப்படியே ஓட, ஒருநாள் நான், உஷா, ஆனந்த் மூவருமே வாடகை சைக்கிள் கடைக்கு போய் சைக்கிள் எடுத்து
கத்துக்கறதா முடிவு செஞ்சோம். சைக்கிள் கடைக்கு பக்கத்துல ஒருத்தர் குள்ளமா நின்னுக்கிட்டிருந்தார். டேய் இங்க வாடா என்று ஆனந்தை கூப்பிட்டார், அவனும் போனான், அதைப் பார்த்த உஷா, என்னை இடித்து வா, நம்ம போலாம் என்றது.நான் போகலை, இரு ஆனந்த் வரட்டும் என்றேன், அவன் வருவான், நீ வா என்றாள் உஷா, நான் திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே உஷாவோட டெலிபோன் குவார்ட்டர்ஸுக்கு போயாச்சு (அங்கதான் சைக்கிள் கத்துக்க வாட்டமா இருக்கும், பெரிய வண்டில்லாம் வராது) கொஞ்ச நேரம் கழித்துதான் ஆனந்த் வந்தான், நான் ஏன் இவ்ளோ நேரம், அந்தாள் ஏன் உன்ன கூப்பிட்டான் என்றேன், அதற்கு ஆனந்த் ஏதோதோ சொல்லி மழுப்ப, உஷாவோ அவங்க அம்மாகிட்ட போய் சொல்லிட்டு வர போயிருப்பான் என்றாள். அதற்கு ஆனந்த் முகம் மாறி
தலை குனிந்தான். கொஞ்ச நாள் கழித்துதான் ஆனந்தைப் பற்றி உஷா வழியாக அறிந்தேன், அதாகப்பட்டது, ஆனந்திற்கு அப்பா இல்லை, அவன் அம்மாவிற்கு ஆனந்த் உட்பட நான்கு பசங்க, முதல் மூன்றும் பெண் (மூவருமே அழகா இருப்பாங்க), ஆனந்த் தான் கடைசி, உஷாவின் கூற்றுப்படி, ஆனந்தை அழைத்த ஆள், அவன் அம்மாவை வைத்திருப்பவர் (?!). அதன் பிறகு நானும், ஆனந்தும் நிறைய முறை அவர் வீட்டின் கீழே இருக்கும் சைக்கிள் கடைக்கு போக நேரிட்டால், அவரை தூரத்திலே பார்த்த ஆனந்த், நீ முன்னாடி போய் சைக்கிள் எடுத்துக்க, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் என்று அங்கேயே சைக்கிள் இல்லாமல் ப்ரேக் போட்டுவிடுவான்.

இதில்லாமல் ஆனந்த் மேல் ஒரு பொதுவான குற்றச்சாட்டு, ஆனந்த் பெண்களோடே பழகுகிறான், பெண்களைப் போலவே நடக்கிறான், சில செய்கைகளும் அதைப்போலவே இருக்கிறது என்பதே, மேலும் அவன் பேருக்கு முன்னால் ....டை என்ற அடைமொழி இருந்தது, தெருவில் சில பையன்கள் அவனை அப்படி கூப்பிடுவது வழக்கம்,
என்னைப்பொறுத்தவரையில் ஆனந்திடம் அப்படி ஏதும் நான் கண்டுபிடிக்கவில்லை, இல்லை அப்போது அவன் எனக்கு நெருங்கிய தோழனாக் இருந்ததால் அவை என் கண்ணுக்கும் மனதுக்கும் படவில்லையோ என்றும் தெரியவில்லை. இப்போதும் ஆனந்த் என்ற பெயர் நினைவுக்கு வந்தால், என் மனத்திரை பிம்பம் ஒரு அரைக்கால் ட்ரவுசர், மேல் சட்டை (அது பெரும்பாலும் அவனின் ஸ்கூல் யூனிஃபார்மாகவே இருக்கும்)அதீத பவுடர் பூச்சு, குங்குமத் தீற்றல், கருகரு சுருள் முடி இவையே.

கொஞ்சநாட்களுக்கு பிறகு தெருவில் ஏதோ சண்டை, ஆனந்தின் அம்மாவை நிறைய பேர்
அசிங்க அசிங்கமாக பேசிக்கொண்டிருந்தார்கள், அழகாய் இருக்கும் அவர்கள் அக்காவையும் அது குறித்தது. அதற்குப்பிறகு ஆனந்திடம் அதிகமாக பேச்சு வெச்சுக்க வேண்டாம் என்று உஷாவின் அம்மாவும், என் அம்மாவும் எங்களைக் கண்டித்தார்கள் (?). ஆனால் நான் உஷா வீட்டிற்கு போகும் போதெல்லாம். ஆனந்த் வீட்டையே பார்ப்பேன், பெரும்பாலும் அது பூட்டியே இருக்கும், ஒரு நாள் உஷா சொன்னாள், ஆனந்த் வீட்டுல எல்லாரும் காலி பண்ணிகிட்டு போய்ட்டாங்களாம். அப்புறம் ஆனந்த் என்ற பெயர் நினைவடுக்குகளில் படிந்துவிட்டது. உஷாவிற்கு திருமணமாகி இரு பிள்ளைகள். அம்மா வீட்டிற்கு
போகும்போது சில சமயம் பார்க்க நேரிடும். ஆனந்த் என்னவானான் என்று அவளைப் பார்த்தபின் கேள்வியெழும், ஆனால் கேட்கத்தோணாது. ஆனந்த் நீ இப்போது எப்படியிருக்கிறாய்? அதை விட முக்கியமாய் என்னாவாகயிருக்கிறாய்?

இப்படியாக வாசிப்பு ஆனந்த் வழி ஆரம்பித்து, பிறகு சுதா மூலமாக அது ஸ்கூல் லைப்ரரி, ஈஸ்வரி லெண்டிங்க் லைப்ரரி என்று உருமாறிக்கொண்டே இருந்தது.

அறிவுமதி, அ.வெண்ணிலா, வைரமுத்து, யுகபாரதி, நா. முத்துக்குமார் இப்படியாய் நிறைய பேரின் கவிதை புத்தகங்களை சுமந்து கொண்டிருந்தது என் அலமாரி, கூடவே அம்மாவின் வசவுகளையும் சேர்த்து. குடிக்கத் தண்ணியில்லையாம், கொப்புளிக்க பன்னீராம், எவ்வளோ புக்ஸு பாரு, இதெல்லாம் எப்புடி வாங்குன, உங்கிட்ட ஏது இவ்ளோ காசு என்ற கேள்வி அடிக்கடி அம்மாவிடமிருந்து வரும். அதுக்கெல்லாம் அனேகமாய் ஒரு முறைப்புத்தான் பதில்.

அறிவுமதியின் வலி, நட்புக்காலம், அணுத்திமிர் அடக்கு, அ.வெண்ணிலாவின் நீரிலைலையும் முகம், கனவிருந்த கூடு, வைரமுத்துவின் வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், யுகபாரதியின் பஞ்சாரம் இன்னும் சில தொகுப்புகள், நா.முத்துக்குமாரின் பாலகாண்டம் முதற்கொண்டு அத்தனை கவிதை புத்தகங்களும் என நிறைய.

இப்படியாய் ஆரம்பித்த கவிதைகள், ஒரு கட்டத்தில் கன்னாபின்னாவென்று திசை மாறி ( ஹி. ஹி. நானே எழுத ஆரம்பிச்சேட்டேன் இல்ல) இங்குவந்து ஆரம்பத்துல சில கவிதைகளோட இருந்து, பிறகு வாசிப்போட ஒரு ப்ரேக் போட்டது.

சில கவிதைத் தளங்கள்

நிலவு நண்பன் @ ரசிகவ் வின் http://nilavunanban.blogspot.com/
நிலா ரசிகனின் http://www.nilaraseeganonline.com/
தமிழ்நதியின் http://tamilnathy.blogspot.com/
உமாஷக்தி http://umashakthi.blogspot.com/
செல்வேந்திரனின் http://selventhiran.blogspot.com/
பொன்.வாசுதேவனின் http://aganaazhigai.blogspot.com/
மண்குதிரை http://mankuthiray.blogspot.com/
ஆதவாவின் குழந்தை ஓவியம் http://aadav.blogspot.com/
அனுஜன்யா http://anujanya.blogspot.com/
ஸ்ரீமதியின் http://karaiyoorakanavugal.blogspot.com
சரவணக்குமாரின் http://msaravanakumar.blogspot.com/
ச.முத்துவேலின் http://thooralkavithai.blogspot.com/
ஜீவா http://gg-mathi.blogspot.com/
வானம் உன் வசப்படும் http://puthiyavanonline.blogspot.com/
ராமலஷ்மி http://tamilamudam.blogspot.com/
சஹாரா தென்றல் http://saharathendral.blogspot.com
இனியவள் புனிதா http://ninaivellam.blogspot.com/
நாணல் http://tamil-naanal.blogspot.com/
சென்ஷி http://senshe-kathalan.blogspot.com/
சக்தி http://veetupura.blogspot.com/
கடல் புறா http://kadalapura.blogspot.com/

ப்பா, கை வலிக்குது, இன்னும் நெறைய பேர் இருக்காங்க, கவிதைய சைட் பிஸினஸா வெச்சுக்கிட்டு, அவங்கள பகுதி இரண்டில் பார்க்கலாம்.

நட்புடன்
அமித்து அம்மா

Monday, May 25, 2009

முன்கதை சுருக்கம்

இதனால் சக Blog ஓனர்களுக்கு அறிவிப்பதென்னவென்றால் வந்தனம் வந்தனம் வந்தனமுங்கோ - இன்னைலருந்து இன்னும் 7 நாளைக்கு நாமதான் இங்க ஆசிரியராம். சீனா ஐயா உத்தரவிட்டிருக்காரு.

என்னடா இது சக வலைப்பதிவர்கள்னு சொல்லாம Blog ஓனர்னு சொல்றாங்க அப்படின்னு நெனைக்கிறீங்களா, அதுதான் என்னோட மொதப் பதிவோட தலைப்புங்க. பழச மறக்கக்கூடாதில்லிங்களா.

பழைய ஆபீஸ்ல இருந்து புது ஆபிஸ்க்கு வந்தப்ப ஒரு ரெண்டு நாளைக்கு வேலை ஏதும் யாரும் தரலீங்க, வெறுமனே சிஸ்டம் முன்னாடி ஒக்காந்திருக்கப்புடிக்காம, நோண்டுனதுல தெரிஞ்சிக்கிட்டதுதான் இந்த வலைப்பூவுலகம். ஒரு தடவை ஆனந்தவிகடன்ல பி.கே.பி ப்லாக்ஸ்பாட் பத்தி படிச்சு அது பத்தி அப்படியே ஞாபகம் வெச்சிருந்து அத கூகில் செஞ்சேன், அவரு பதிவு வந்துது, அப்படியே உள்ள புகுந்து புகுந்து படிக்க ஆரம்பிச்சேன், விதைகள் ப்லாக்ஸ்பாட் கண்ணுல பட்டுது. நிலவு நண்பன் @ ரசிகவ் ஞானியாரோட இன்னொரு ப்லாக் தான் அது. யார் யாருக்கு உதவி தேவைப்படுதோ அத அங்க போட்டுவெச்சிருந்தாரு.
அதுல அடையார்ல இருக்குற ஒரு பள்ளிக் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யலாம்னு சொல்லி அட்ரஸெல்லாம் கொடுத்திருந்தார். சரி அதுக்கு நன்றி சொல்லி பதில் (அப்ப அது பின்னூட்டம்னு எனக்கு தெரியாது) போடலாம்னு பாத்தா நமக்கு ஒரு அடையாளம் வேணும்னு சொல்லிச்சு. அநாமதேயரா கமெண்ட் போட மனசு ஒத்து வரலை (திட்டியெல்லாம் இல்ல, நல்ல கமெண்ட்டுக்குதான்), பின்ன அவரு கொடுத்திருந்த ஈமெயில் ஐடிக்கு மெயில் போட்டேன், போட்ட மறு நாள் அவர் நன்றின்னு சொல்லி பதில் போட்டிருந்தாரு. அதுக்கு நான் பதில் போட,, பிறகு அவர் பதில் போட, சரி எனக்கு மத்தவங்களுக்கெல்லாம் பதில் போட என்ன செய்ய (நான் கொஞ்சம் சுமாரா கவிதை எழுதுவேன்னுவேற அவர்கிட்ட சொல்லியிருந்தேன்) கேட்க, அவரோட உதவியால துவங்கப்பட்டதுதான் என்னோட ப்லாக். மொதல்ல சொன்னா மாதிரி நமக்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டுச்சு பாருங்க, அதுக்கு என் பொண்ணையே எனக்கு அடையாளமாக்கிகிட்டேன்.
அமிர்தவர்ஷினி அம்மா - ஒரு கணம் சொல்லிப்பார்த்துகிட்டேன்,வாழ்க்கையே அர்த்தப்பட்டா மாதிரி தோணுச்சு, அடுத்த செகண்ட் அதுதான் ப்லாக் பேரு.


அப்புறம் படத்த போட்டு ஓட்டிக்கிட்டிருந்தப்ப, ஆச்சி(சந்தனமுல்லை) வந்து உங்க பொண்ணப் பத்தி எழுதுங்களேன்னு கமெண்ட் போட
அதுவே நமக்கு டானிக் ஆகி, அங்க பிக் அப் ஆனவதான், இப்ப இங்க வந்து எழுதிகிட்டிருக்கேன்.

எழுத்து : எழுத தெரிஞ்சாலோ, இல்ல எழுதறதோ படிச்சு புரிஞ்சுக்க தெரிஞ்சாலோ அதுவே பெரிய வரப்ரசாதம். நிறைய மனமுடைஞ்ச காலங்களில் நான் செய்த ஒரே விஷயம்
எழுதியதும், வாசித்ததும் தான். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அப்ப அந்த எழுத்தை நான் அறிந்து கொள்ள பாடுபட்ட என் அம்மா தெய்வத்துக்கும் மேல.

எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர்னா, அவரு பாலகுமாரன். அதனால நான் அடிக்கடி படிக்குற ப்லாக்ல இதுவும் ஒன்னு
http://balakumaranpesukirar.blogspot.com/

அடுத்தா எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் பைரவன். (மன்னார் அண்ட் கம்பெனி பைரவன் இல்லீங்க) வலைப்பூவுலயும் அப்படி
ஒருத்தர் இருக்காரு.. இப்படித்தான்னு வரையறுக்க முடியாம எதைப்பத்தியும் எழுதுவாரு. இவரோட மாற்றாந்தாய் பதிவு,வேண்டாத குணங்கள் ?? போன்ற சிந்தனையைத் தூண்டும்
பதிவுகள் மட்டுமில்லாம, ஒரு பீரும் நாலு பேரும் அப்படின்னு தான் தண்ணியடிக்கறதப் பத்தியும் எழுதுவாரு. மனுஷன் ஜோசியரும் கூட.
அப்புறமென்னங்க. போய் படியுங்க http://pirathipalippu.blogspot.com

சில சமயம் மனசு சோர்ந்து போன காலங்களில் திடீர்னு நம் கண்ணில் படும் சில வாசகங்கள் நமக்கு டானிக் தர மாதிரி இருக்கும். உதாரணமா பைபிள் வாசகங்கள சொல்லலாம்
அதுமாதிரி ஒரு நாள், ரொம்பவும் மனசு கஷ்டமா ஃபீல் செய்துகிட்டு எதையெதையோ படிக்க ஆரம்பிச்சேன், ஆபிஸ்ல தான். ரெண்டு மூணு ப்லாக் தாண்டி,
இந்த ப்லாக்ல, இந்தப் பதிவுல இருந்த வாசகங்கள் எனக்கே எனக்குன்னு எழுதின மாதிரி இருந்துச்சு, உற்சாகமாயிட்டேன். அந்த வார்த்தைகள் இதுதான்

//ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும்,
ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை.
நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன.
ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன.
அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.//


இதை எழுதியவர் இவர்தான் http://raghavannigeria.blogspot.com
ஏற்கனவே இன்னிக்கு ஸ்கூல்க்கு நான் ரொம்ப லேட்,அதுக்காக மன்னிச்சுக்கோங்க.
நாளைக்கு பார்க்கலாம்.

நட்புடன்
அமித்து அம்மா

நன்றி மின்னல் - வருக வருக அமித்து அம்மா

அன்பின் அன்பர்களே

கடந்த ஒரு வார காலமாக மின்னல் ஆசிரியப் பொறுப்பேற்று பதின்மூன்று இடுகைகளிட்டு ஏறத்தாழ நூறு மறுமொழிகள் பெற்று - அருமையான பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் விடை கொடுப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று துவங்கும் இவ்வாரத்திற்கு அமித்து அம்மா ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் தன் அருமை மகளுக்காக - பதினெட்டு மாதம் நிரம்பிய அமித்துவிற்காக - அமிர்தவர்ஷினி அம்மா என்ற பெயரில் மழை என்ற பதிவினில் ஏறத்தாழ நூறு இடுகைகள் இட்டிருக்கிறார். ஒரு நல்ல அம்மாவாக இருப்பதையே கொள்கையாகக் கொண்டு பணி ஆற்றுகிறார். பல தோழிகளுடன் இணைந்து சமையல் குறிப்புகள் பலவற்றை அளிக்கிறார். பல் இளம் தாய்மார்களுடன் சேர்ந்து அம்மாக்களின் பதிவுகள் என்ற பதிவினில் பல இடுகைகள் இட்டு வருகிறார்.

இவரை வருக வருக - பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்க - என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

சீனா

Sunday, May 24, 2009

என்னைப் ப‌ற்றி(இறுதி ப‌திவு)

ம்ம் இது வ‌ரை பொறுமையாக‌ நான் கொட்டிய‌ குப்பைக‌ளை எல்லாம் ப‌டிச்சி
முடிச்சிட்டீங்க‌. நானிட்ட‌ நிறைய‌ ப‌திவுக‌ளில் என் க‌ட்டுரை, க‌விதைக‌ளை ப‌ற்றி சொல்லியாச்சு. லாவ‌ண்யா கூட‌ போதும்டி செல்ப் டாப்பா என்று சொல்லி கிண்ட‌ல் செய்கின்றாள். இருந்தாலும் இந்த‌க் க‌டைசிப் ப‌திவில் என்னை ப‌ற்றி என் எழுத்துக்க‌ளைப் ப‌த்தி இன்னும் கொஞ்ச‌ம் சொல்லிட்டு விடை பெற்றுக் கொள்கின்றேன்.

அறிமுகம் பதிவில் சொன்னது போல, தில்லியில் ஒரு சிறந்த நிறுவனத்தில் என்னுடைய எம்.டெக் படித்தேன். அங்கே ப‌டிக்கும் போது தான் நான் க‌விதைக‌ள், இல‌க்கிய‌ம் இதை எல்லாம் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்தேன். முத‌லில் ப‌டித்த‌ புத்த‌க‌ம் ஜெமோவின் ச‌ங்க‌ சித்திர‌ங்க‌ள். மிக‌ அருமையான‌ புத்த‌க‌ம். இதை எல்லாம் அறிமுக‌ம் செய்து விட்டு என்னோடு சிறு பிண‌க்காக‌ பிரிந்து போன‌ அந்த‌ ந‌ட்பு வாழ்க‌.

அடுத்த‌ நிலையாக‌ க‌விதை புரித‌ல், புரிய‌ச் செய்த‌து இன்னும் ஒரு ந‌ண்ப‌ர்.

"இலைக‌ள‌ற்ற‌ இந்த‌ கோடை
நீ வ‌ந்து போன‌தை
எந்த‌ பூ பூத்து கொண்டாடுவ‌து"

என்ன‌டா ம‌ர‌ம் சொல்ற‌து போல‌ இருக்குன்னு கேட்டேன் அந்த‌ ந‌ண்ப‌ரிட‌ம்.
அவ‌ன் சொன்னான் இல்லை ம‌னித‌ உணர்வை அப்ப‌டி வெளிப்ப‌டுத்தி இருக்காங்க‌
அது ஒரு ப‌ர‌வ‌ச‌ம் நிலை. ம‌கிழ்வை எப்ப‌டிக் காட்டுவ‌துன்னு தெரியாத‌து
போல‌. என‌க்கும் பொறி த‌ட்டிய‌து. இன்னும் சில‌வை புரிந்த‌ன‌ அதை
ப‌ற்றிய‌ ப‌திவு மழை. இது எழுத்துலகில் என்னுடைய முதல் படைப்பு.

இப்ப‌டியாக‌ க‌விதை புரித‌ல் தொட‌ர்ந்த‌து. அதை ப‌ற்றி எழுதிய‌ க‌விதை எல்லாம் முத்த‌மிழ் குழும‌த்தில் பின் த‌மிழோவிய‌ம், திண்ணை என்று எல்லாம் வ‌ந்த‌து. பின்ன‌ர் க‌விதை சார்ந்த‌ க‌ட்டுரைக‌ளை ம‌ட்டுமே எழுதாதீங்க‌ இன்னும் வேறெல்லாமும் எழுதுங்க‌ என்ற‌ன‌ர். அத‌ற்காக‌ சில‌ சிறுக‌தை, இல‌க்கிய‌ புராண‌ க‌தைக‌ளில் க‌வ‌னிக்க‌ப்ப‌டாத‌ சிற‌ந்த‌ பாத்திர‌ங்க‌ளை ப‌ற்றி எழுதினேன். கொஞ்ச‌ம் க‌விதைக‌ளிலும் எழுதியுள்ளேன்.

நான் எழுதிய‌ க‌விதைக‌ளில் என்னை மிக‌க் க‌வ‌ர்ந்த‌து குடைக்குள் வான‌ம். இருளில் மிதக்கும் வெயிலின் துகள்களை காற்றை மொழி பெயர்தல்(ச‌ரி ச‌ரி அட‌ங்கு. விட்டா எல்லா பதிவுக்கும் இங்கேயே விள‌ம்ப‌ர‌ம் த‌ந்துருவே). க‌ட்டுரைக‌ளில் க‌வ‌ர்ந்த‌து வ‌ருந்தியழைத்தால் வ‌ருவ‌து ம‌ழையாகுமா?, சிறைவாழ்வு, ஊர்மிளையில் புல‌ம்ப‌ல‌க‌ள், யாதோசரையின் யாகம் இன்னும் சில‌.

ஆக‌ பிரிய‌ ம‌னமின்றி பிரிகின்றேன். வாய்ப்ப‌ளித்த‌ சீனா அய்யாவுக்கும் வ‌லைச்ச‌ர‌த்துக்கும் ந‌ன்றி. அதி பொறுமையோடு ப‌டித்த‌ அனைவ‌ருக்கும் இனி ப‌டிக்க‌ இருக்கும் அன்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி ந‌ன்றி ந‌ன்றி.

Saturday, May 23, 2009

There is nothing called free lunch

என‌க்கு சில‌ ச‌ம‌யம் தோன்றும் நான் ஒரு பிள‌வுப்ப‌ட்ட‌ ஒருவ‌ராக‌ தோன்றும் இருவ‌ரோ அல்ல‌து ப‌ல‌ரோ என்று அதானுங்க‌(ஸ்பிலிட் ப‌ர்ச‌ன‌லிட்டி). என்ன‌டா இது விவ‌கார‌மா இருக்குன்னு தோணுதா. பின் வ‌ரும் உரையாட‌ல்க‌ளை க‌வ‌னிங்க‌.

"தேர் இஸ் ந‌த்திங் கால்ட் ஃப்ரி ல‌ன்ஜ்"

"என்ன‌ சொல்ற‌ எல்லாம் எல்லா நேர‌த்திலும் பிர‌திப‌ல‌னை ஏதிர்நோக்கி என்றில்லை"

"அப்ப‌டி எல்லாம் ஒன்றும் இல்லை எதுவும் எத‌ற்கும் கார‌ண‌மில்லாம‌லில்லை"

"ஏன் அப்ப‌டி சொல்ற‌"

"ஆமா எந்த‌ ஆற்ற‌லும் ஆக்க‌ப‌டுவ‌தோ அழிவ‌தோ இல்லை"

"என்ன‌ ஓல‌ற‌ அதுக்கும் நீ மேல‌ சொன்ன‌ விச‌ய‌த்துக்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்"

"ஆமா அதே போல‌ தான் எந்த‌ செய‌லும் உருவாக்க‌ ப‌டுவ‌தில்லை ஏதோ ஒரு கார‌ண‌த்துக்காக‌ முன்னிருந்தே தொட‌ர்ந்து வ‌ருவ‌து"

"புரிய‌லை என்ன‌ தான் சொல்ல‌ வ‌ரே பெரிய‌ விஞ்ஞானி வெங்காய‌ம் போல‌ கொள‌ப்ப‌ற‌"

"ஆமா நீ செய்யும் ஒரு ஒவ்வொரு செய‌லும் ஏதாவ‌து பிர‌திப‌ல‌னை எதிர்நோக்கியே இருக்கு"

"அப்ப‌டி எல்லாம் கிடையாது, ப‌டிக்கிறேன் எழுத‌றேன் இதில் என‌க்கு என்ன‌ பிர‌திப‌ல‌ன் இருக்க‌ போகுது"

"ஆமா ப‌ல‌ர் ப‌டிப்பாங்க‌, ந‌ல்லா இருக்குன்னு புக‌ழ்வாங்க‌ன்னு தானே எழுத‌றே"

"ஆமா அப்ப‌டியே நான் எழுதினை ப‌டிச்சி....‌. போப்பா ஆனாலும் எழுதாமா இருக்கேனா"

"பின்னா ஏன் பின்னூட்ட‌ம் வ‌ர‌லைன்னு புல‌ம்ப‌ற‌ இர‌ண்டு நாளைக்கு முன்ன‌ கூட‌ எழுத‌ற‌தை நிறுத்த‌ போறேன்னு அந்த‌ ப‌திவ‌ர்ட்ட‌ ஏன் சொன்னே"

"அப்ப‌டி எல்லாம் ஒன்னுமில்லை. அவ‌ர் சொன்ன‌து போல‌ எழுத்து ஒரு ஆசுவாச‌ம், இளைப்பாறால் வ‌டிகால்"

"ஒரு ம‌ண்ணாங்க‌ட்டியுமில்லை, அப்ப‌டின்னாலும் நான் சொன்ன‌ க‌ருத்தை தானே நீயே சொல்ற‌ ஆசுவாசும், வ‌டிகால் இந்த‌ தேவைக்காக‌ தானே எழுதிட்டு இருக்கே"

"அப்ப‌டி சொல்ல‌ முடியாது, ச‌ரி என்னை விடு என் எழுத்துக்கு, என் வ‌ள‌ர்ச்சிக்கு எவ்வ‌ள‌வு பேர் பிர‌திப‌ல‌ன் இல்லாம‌ல் உத‌வ‌றாங்க‌"

"எங்கே சொல்லேன் பார்ப்போம்"

"குறுந்தொகை உவ‌மைக‌ள் வேணும் என்ற‌தும் உட‌னே த‌ந்து உத‌விய சித்தார்த் காய‌த்ரி, ப‌டிம‌ க‌விதைக‌ள் தேடி த‌ந்த‌ ந‌திய‌லை, எழுத்து பிழைக‌ளை க‌ளைந்த‌ ம‌ஞ்சூர் அண்ணா, முத்துவேல், க‌ட‌வுள‌ர் ப‌த்தி விள‌க்க‌ம் த‌ந்த‌ கீதாம்மா, திவ்ய‌ ப்ர‌ப‌ந்த‌ம் ம‌ற்றும் விள‌க்க‌ங்க‌ள் அளித்த‌ பாலாண்ணா,நற்றிணை பாடலுக்கு விளக்கம் தந்த இர.வாசுதேவன் அய்யா மேலும் ஊக்க‌ம் அளித்த ப‌ல‌ பேர் இவ‌ங்க‌ எல்லாம் என்ன‌ ப‌ல‌ன் பார்த்து என‌க்கு உத‌வி செய்தார்க‌ள்"

"அதை அவ‌ர்க‌ளிட‌ம் தான் கேட்க‌ வேண்டும், ஒரு வேளை இதெல்லாம் அவ‌ர்களுக்கு தெரியும் என்று காட்டி கொள்ள‌ தான்"

"அட‌ங்கு, அவ‌ர்க‌ளுக்கு இதெல்லாம் அவ‌ர்க‌ளுக்கு தெரியும் என்று உல‌க‌த்துக்கே தெரியும் அது கார‌ண‌ம் இல்லை"

"அப்ப‌ நீ சொல் என்ன‌ கார‌ண‌ம்"

"அவ‌ர்க‌ளுடைய‌ ஆத்ம‌திருப்திகாக‌ உத‌வி செய்கின்றார். இதில் என்னிட‌ம் இருந்து எந்த‌ ப‌ல‌னும் எதிர்பார்ப்பில் இல்லை இவ‌ர்க‌ளிட‌ம்"

"அப்ப‌ நீ என்ன‌ செய்ய‌ போறே"

"ம்ம் நீ பாரு என்ன‌ செய்ய‌ இருக்கேன்ன்னு"

அன்பு ம‌ட்டுமே உருவான‌, அன்பால் ம‌ட்டுமே நிறைந்த‌, ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளே
ந‌திய‌லை, சித்தார்த் காய‌த்ரி, ம‌ஞ்சூர் அண்ணா, கீதாம்மா, முத்துவேல், ந‌ர்சிம், அனுஜ‌ன்யா, ல‌ஷ்ம‌ண், நிலார‌சிக‌ன், ஜ்யோவ்ர‌ம் சுந்த‌ர், என்றென்றும் அன்புன்ட‌ன் பாலா ம‌ற்றும் ப‌ல‌ர் உங்க‌ள் அனைவ‌ரையும் வ‌ண‌ங்குகின்றேன். ந‌ன்றிக‌ள் கோடி ச‌ம‌ர்பிக்கின்றேன். நீங்க‌ள் இல்லையென்றால் மின்ன‌ல் வெறும் லாவ‌ண்யா ம‌ட்டுமே.உங்க‌ளால் ம‌ட்டுமே என் எழுத்து சாத்திய‌ம் ஆயிற்று.

Thursday, May 21, 2009

க‌ட‌வுள‌ர் த‌வ‌றான‌ உதார‌ண‌மாக‌லாமா?

ந‌ம் க‌ட‌வுள‌ர் எல்லோரும் ஐடிய‌ல் இல்லை. ந‌ம் ந‌ம்பிக்கையின் உச்ச‌ப‌ட்ச‌ம் என்ன‌? க‌ட‌வுள் ச‌த்திய‌மா என்ப‌து தானே! கடவுள் அப்படிங்கற கருதுகோள் மூலம் தானே நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட‌வுள‌ர் த‌வ‌றான‌ உதார‌ண‌மாக‌லாமா? த‌மிழ் க‌ட‌வுள் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் கும‌ர‌ன் முன்கோப‌க்கார‌ன். ஒரு மாங்க‌னிக்காக‌ குடும்ப‌த்தை பிரிந்த‌வ‌ன். க‌ற்பு, க‌ள‌வு என்று இருவித‌த்திலும் ம‌ண‌ம் புரிந்த‌வ‌ன்.

அவ‌ன் த‌ந்தை ஈச‌னும் அப்ப‌டியே இரு ம‌னைவி, த‌ன்னை ம‌திக்காத‌ மாம‌னார் வீட்டுக்கு போக‌ கூடாது என்று ம‌னைவியை அந்த‌ உல‌க‌ மாதாவைச் சொன்ன‌வ‌ர். கோப‌ம் வ‌ந்தால் ம‌னைவியையும் ச‌ரி, உண்மைக்காக‌ வாதாடும் ந‌க்கீர‌னையும் ச‌ரி சுட்டெரிப்ப‌வ‌ர்.

இவ‌ர் மைத்துன‌ன் விஷ்ணுவோ ஆயிர‌ம் நாம‌ம் கொண்ட‌வ‌ன், ம‌னைவிமார்க‌ளுக்கு க‌ண‌க்கே கிடையாது. ஒரு ம‌னைவியிட‌ம் மோதிர‌த்தை கொடுத்துவிட்டு முத‌ல் ம‌னைவியிட‌ம் ம‌ண‌ல்வெளியில் தொலைத்துவிட்ட‌தாக‌க் கூறி ம‌ட்டைய‌டி வாங்குப‌வ‌ர். இவ‌ர் ஒவ்வொரு அவ‌தார‌த்திலும் முறைமீற‌ல்க‌ள் ஒன்றா இர‌ண்டா எல்லாம் சொல்ல‌வே இந்த‌ ஒரு ப‌திவு போதுமா?

பிர‌ம்ம‌னோ நான்கு முக‌ம் கொண்ட‌வ‌ர் இவ‌ருக்கும் ம‌னைவிமார் இருவ‌ருரோ மூவ‌ரோ க‌தைப்ப‌டி. சர‌ஸ்வ‌தி,சாவித்திரி,காய‌த்ரி. ஆனா கும்பிட‌ற‌ங்க‌வ‌ங்க‌ எல்லோருக்கும் போய் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அது மெய்ப்பொருள் என்று வ‌ர‌த்தை வாரி வ‌ழ‌ங்கி பின் அடுத்த‌ க‌ட‌வுள‌ரிட‌ம் போய் நிற்ப‌து இவ‌ர் வழ‌க்க‌ம்.

ச‌ரி ச‌ரி அடிக்க‌ வ‌ராதீங்க‌ எல்லாத்தும் கார‌ண‌ம் இருக்கு. க‌ட‌வுள‌ர் யாரும் த‌வ‌றான‌ உதார‌ண‌ங்க‌ள் இல்லை அவ‌ர்க‌ள் யாவ‌ரும் ஐடிய‌ல் தான்.

ஏதோ என‌க்கு தெரிந்த‌ விள‌க்கங்க‌ளை த‌ர‌ முய‌ல்கின்றேன். மாங்க‌னிக்காக‌ குடும்ப‌ம் பிரிந்த‌ கும‌ர‌ன் இளைஞ‌ர்க‌ள் த‌ன் பெற்றோரை சார்ந்தில்லாம‌ல் தானே த‌ன் காலில் நிற்க‌வேண்டும் என்ற‌ க‌ருத்தை எடுத்துக்காட்டுகின்றார். க‌ற்பு க‌ள‌வு ம‌ண‌ம் மேட்ட‌ருக்கு அப்புற‌ம் வ‌ருவோம்.

இறைய‌னார் ஈச‌ன் முக்கால‌மும் உண‌ர்ந்த‌வ‌ர் தாட்சாய‌ணிக்கு த‌ந்தையால் அவ‌மான‌ம் நேரும் என்று தெரிந்தே த‌டுத்தார், தானென்ற ஆண‌வ‌த்தால் அல்ல‌. இவ‌ர் கோப‌த்திற்கு பின்னால் தான் உண‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து ச‌க்தியும் சிவ‌னும் ஒன்றென்று. அப்ப‌டிச் சுட்டெரித்த‌ கார‌ண‌த்தால் தான் த‌ன்னில் பாதியாக‌ ச‌க்தியை கொண்டு அர்த்த‌நாரீஸ்வ‌ர‌ர் ஆனார். நக்கீர‌னுக்கு நெற்றிக்க‌ண் காட்டி த‌மிழுக்குகாக‌ அவ‌ர் த‌ன்னையும் த‌ருவார், க‌ட‌வுள் என்றாலும் த‌மிழை காக்க‌ குர‌ல் த‌ருவார் என்ற‌ பெருமையை தான் பெற்று தந்தார் அந்த‌ இறைய‌னார். இவ‌ரின் கொஞ்சு த‌மிழில் வ‌ந்த‌த‌ல்ல‌வா "கொங்குதேர்" என்ற‌ குறுந்தொகைப் பாட‌ல். இர‌ண்டு ம‌னைவி விச‌ய‌த்திற்கு அப்புற‌ம் வ‌ருவோம்.

விஷ்ணு க‌ண‌க்கிலும் ம‌னைவிமார்க‌ள் பிர‌ச்ச‌னையை பொதுவாக‌ எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு அவ‌தார‌த்திலும் ந‌ட‌ந்த‌ முறைமீற‌ல் எல்லாமே அத‌ர்ம‌த்தை அத‌ன் வழியே சென்று அட‌க்க‌ த‌ர்ம‌த்தை நிலைநாட்ட‌வே தான்.

பிர‌ம்மாவின் இள‌கிய‌ ம‌ன‌துக்கும், "உல‌கில் எங்கெல்லாம் த‌ர்ம‌ம் அழிந்து அத‌ர்ம‌ம் த‌லை தூக்குகின்ற‌தோ அங்கெல்லாம் நான் வ‌ருவேன்" என்ப‌த‌ன் ஊடுகோலே கார‌ண‌ம். "க‌ட‌வுள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளை சோதிப்பான் கைவிட‌மாட்டான் கேட்ட‌வ‌ர்க‌ளுக்கு வாரி வாரி வ‌ழ‌ங்கிவிட்டு, திருந்த‌ வாய்ப்ப‌ளித்து பின் திருந்தாவிட்டால் த‌ண்ட‌னை த‌ர‌வே" இவர் வ‌ர‌ம் த‌ருவார். இவ‌ர் ப‌டைக்கும் க‌ட‌வுள் ஆயிற்றே. காக்கும் ம‌ற்றும் அழிக்கும் க‌ட‌வுள‌ர் த‌ம்த‌ம் வேலையை செவ்வ‌னே செய்வ‌ர்.

ச‌ரி இப்போது க‌ட‌வுள‌ர்க்கு ப‌ல‌ ம‌னைவிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ நியாய‌ம் க‌ற்பிக்க‌? அத‌ற்கும் த‌ர்ம‌ம் இருக்கின்ற‌து. ஒரு நாட்டை ஆள்ப‌வ‌ர் எல்லா துறையையும் த‌ன் கையில் வைத்துக் கொள்ள‌ இய‌லாது. அந்த‌ அந்த‌ துறைக்கு ஒரு எக்ஸ்பேர்ட்ஸ் வேண்டும் அவ‌ர்க‌ளை எல்லோரையும் ஒருங்கிணைத்து நாட்டை ந‌ல்ல‌ வ‌ழியில் செய‌ல்ப‌டுத்த‌லாம் நாட்டை ஆள்ப‌வ‌ர்.

அதைப்போல்தான் ச‌ர‌ஸ்வ‌தி க‌ல்விக்கும், ம‌ந்திர‌ ச‌க்திக்கு காய்திரியும், அந்த‌ ம‌ந்திர‌ ச‌க்திக்குள் இருக்கும் ஜோதி வ‌டிவ‌ம் சாவித்ரி என்றும் வைத்த‌ன‌ர் முன்னோர். அப்ப‌டியாக‌ புத்தி ச‌ம்பந்தமான‌ ஆளுமைக்கு ச‌ர‌ஸ்வ‌தி, காய‌த்ரி, சாவித்ரி இவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர் பிர‌ம்ம‌ தேவ‌ன். ஆக ச‌ர‌ஸ்வ‌தி, சாவித்ரி, காய‌த்ரி அனைவ‌ரும் புத்தி என்ற‌ ஒரு விச‌ய‌த்திற்குள் அட‌க்க‌ம் அந்த‌ வகையில் பார்த்தால் பிர‌ம்ம‌னுக்கு ஒரே ஒரு ம‌னைவியின் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளே காய‌த்ரி ம‌ற்றும் சாவித்ரி.

விஷ்ணுக்கு ப‌ல‌ ம‌னைவிய‌ர் இருப்ப‌து போல‌ தோன்றினாலும் அவ‌ர் அனைவ‌ரும் ம‌ஹால‌ஷ்மி, பூமாதேவி என்ற‌ இருவ‌ருக்குள் அட‌ங்கி விடுவ‌ர். மஹால‌ஷ்மி செல்வ‌த்திற்கு அதிப‌தி. பூமாதேவி நில‌ம் நீர் காற்று என்ற‌ ம‌ற்றை செல்வ‌ங்க‌ளுக்கு அதிப‌தி. ஆக இவ‌ர்க‌ள் எல்லாவித‌ செல்வ‌ங்க‌ளுக்கும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌னித்த‌னி வ‌டிவ‌ங்க‌ளே ஆயினும் ஒரே வ‌டிவ‌மே. ஆகையால் விஷ்ணுக்கும் ம‌னைவி ஒருவ‌ளே. ஏக‌ ப‌த்தினி விர‌த‌ன் ராம‌ன் ம‌ட்டும‌ல்ல எல்லா விஷ்ணு ரூப‌மும் அப்ப‌டியே.

சிவ‌ச‌க்தி வீர‌த்திற்கும் உட‌லில் அசையும் அனைத்து ச‌க்திக்கும் அதிப‌தி. க‌ங்கை உயிர்வாழ தேவையான‌ த‌ண்ணீர். த‌ண்ணீரால் ஆன‌து தானே உட‌ம்பும். உட‌ல் முழுதும் ஓடும் ர‌த்த‌மும் த‌ண்ணீர் க‌ல‌வை தாமே. ஆகையால் ச‌க்தியும் க‌ங்கையும் இருவ‌ர் போல் தெரியும் ஒருவ‌ர்.

மேலும் க‌ட‌வுள‌ர் க‌ண‌வ‌ன் ம‌னைவி மாம‌ன் ம‌ச்சான் என்று ம‌னித ச‌முக‌த்தில் இருக்கும் உறவுக‌ளோடான‌ ஒப்பீட்டிற்கு அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ட‌வுள‌ர் த‌ர்ம‌ம் வேறு. ந‌ம் ந‌டைமுறையோடு பார்த்து அறிவிய‌ல் ஆராய்ச்சி எல்லாம் செய்யின் வீண் குழ‌ப்பமும் தேவைய‌ற்ற‌ சிந்த‌னையுமே மிஞ்சும்.மீண்டும் சொல்கிறேன் கடவுள் என்கிற‌ நித‌ர்ச‌ன‌ உருவ‌க‌ங்கள் மூலமாக‌த்தான் நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். இவை க‌ட‌வுள‌ர் த‌ர்ம‌ம் என்று சொல்லி ந‌ம்பிக்கை வ‌ள‌ர்க்க‌ வேண்டும். மேலே சொன்ன‌து போல‌ புத்திப்பூர்வ‌மாக‌ என்று நினைத்து விப‌ரீத‌மாக‌ யோசித்தால் கிடைக்கும் வெளிச்ச‌ம் பய‌ம் தான் த‌ரும். பின்வ‌ரும் க‌விதை போல‌.

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

-- ல‌ஷ்ம‌ண்.

த‌ன்ன‌ம்பிக்கை க‌விதைக‌ள்


த‌ன்ன‌ம்பிக்கை த‌லைக‌ன‌த்திற்கும் நுலிலைதான் வித்தியாச‌ம் என்று ந‌ம்ம‌ ஹீரோ ச‌ஞ்ஜ‌ய் ராம‌சாமி க‌ஜினி ப‌ட‌த்துல‌ சொல்லி இருப்பாரு. ஆனா த‌ன்னம்பிக்கை த‌லைகனமில்லை. த‌ன்ன‌பிக்கை வ‌ர‌ம். த‌ன்ன‌பிக்கை இருந்தால் வான‌மும் வ‌ச‌ப‌டும். மாம‌லை போல் வ‌ரும் துய‌ர‌மும் க‌டுகு போல் சிறிதாகும். தில‌க‌பாமாவின் இந்த‌ கவிதையில்

http://mathibama.blogspot.com/2007/08/blog-post_28.html

"தோன்றி மறையும்
குமிழிகளை
பலமில்லாததொன்றாய்
சொல்லிப் போகின்றது காற்று"

ப‌ல‌வ‌ந்த‌மாக‌ காற்று உடைக்கும் நீர்குமிழிக‌ளை விட்டுத்தான் பாருங்க‌ள் அத‌ன் ப‌ல‌த்தை. இதில் குமிழுக‌ளை த‌ன்ன‌ம்பிகை சின்ன‌மாக‌ காட்டி இருக்கும் வித‌ம் அழ‌கு.


வானுக்கு வண்ணமேற்றுதல் என்ற இந்த கவிதையில் காதல் தோல்வியில் தளர தேவையில்லை. அன்பு மீண்டும் கிட்டும் காத்திருங்கள் என்று மின்னல் சொல்லி இருக்காங்க(போதும்டி உன்னோட செல்ப் டப்பாக்கு அளவே இல்லாம போயிச்சி)

நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்...
- விக்ரமாதித்யன்

ஒரு பிரம்மாண்டத்தை வீழ்ச்சி என்பது வினோதமில்லையா. மேலும் இதை எந்த தோல்வியோடும் ஒப்பிட்டு பார்க்கலாம். நர்சிமின் இந்த பதிவு கூட இதையே தான் சொல்லி இருக்கு. எந்த தொல்வியும் ஒரு தாமதமான வெற்றி தானே. எந்த வீழ்ச்சியும் பின் கரைபுரண்டோடும் நீண்ட நதி தானே. தொல்வி என்பது குறைவான நேரமே அருவியை போல் அதன் பின் வரும் நதி போன்ற நீண்ட வெற்றிகளுக்கான ஆயத்தம் அது.

Wednesday, May 20, 2009

ஆண்டாள் திருப்பாவை

ஆடிப்பூரத்தில் துளசிச் செடிக்கருகே தானே தோன்றியவள் தான் கோதை. கோதைக்கு மாலை என்றொரு அர்த்தமும் உண்டு. அதனால் தானோ என்னவோ அவளே தன்னைத் தானே தருவது போல் தினமும் பெருமாளுக்கு சாற்ற வைத்திருக்கும் மாலைகளை தான் சூடி கண்ணாடியில் தன்னழகை கண்டு பின் அதை பெருமாளுக்கு கொடுத்து அனுப்ப தோன்றியதோ? அப்படியான சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதை ஆண்டாள் ஒரே பெண் ஆழ்வார். மற்றை ஆழ்வார்களே தங்களை பெண்ணாக உருவகம் செய்து கொண்டு பெருமாள் மேல் காதலாகி கசிந்துருகிய போது, பெண்ணாகவே பிறவி எடுத்த கோதை சூடிக் கொடுத்தவள் ரங்க காதலில் திருப்பாவை முப்பதும் நாச்சியார் திருமொழி நூற்றி நாப்பத்து மூன்றும் செப்பியதில் வியப்பேதுமுண்டோ என்ன?

திருப்பாவையிலும் சரி நாச்சியார் திருமொழியுலும் சரி பெருமாளை மணப்பதே முக்கிய மோடிவ் ஆக‌க் கொண்டு இருக்கின்றார். திருப்பாவையில் பாவை நோன்பு நூர்த்தும், திருமொழியில் மன்மதனுக்கு நோன்பிருந்தும் திருமாலை மணக்க வேண்டுகோள் விடுத்து பல பாடல்கள் பாடியுள்ளார். என்ன தான் மற்ற ஆழ்வார்கள் பெண்ணாகித் தன்னை உருவகப்படுத்தி நாயகன் நாய‌கி பாவ‌த்தில் பெருமாள் மேல் காதலாய் மொழிந்தாலும், அது நாச்சியார் திருமொழியிலும் திருப்பாவையிலும் வெளிப்ப‌டும் பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் போல‌ ஆகாது.

சிறுமியர் நாங்கள் கட்டும் மணல் வீட்டைச் சிதைக்கலாமா என்று கவிதை போல் கேட்ப‌து என்ன‌ அழ‌கு. இதைத்தான் இப்போதெல்லாம் ப‌டிம‌ க‌விதை என்கின்ற‌ன‌ர்.(ஆண்டாள் காத‌ல் = சிறும‌ண‌ல் வீடு) கோதையின் நாச்சியார் திருமொழி ஒவ்வொன்றும் காத‌ல் காவிய‌ம். வாரணமாயிரம் சூழ வலம் வந்து என்று திருமால் கைத்தளம் பற்ற கனவு கண்டதும், பறவை, புல்லினம் இன்ன பிற எல்லாவற்றையும் தூது அனுப்பி கண்ணன் மனம் கண்டு வரச் சொல்வதும், கூடல் இழைப்பதும், சிறு தெய்வங்களை வேண்டுவதும் கோதை அந்த உலகளந்தவன் மேல் எத்தனை நேசம் கொண்டு இருப்பாள் என்ப‌தை விள‌க்க‌ச் செய்யும். "திருமால் தொட அமைந்த என் மார்பகங்கள் மானிடர்க்கு என்ற எண்ணம் ஏற்பட்டாலே மரித்துப் போவேன்" என்பவள் திண்ணம் என்னே என்னே ! "மழையே மழையே" என்றும் "கடலே கடலே" என்று விண்ணிலிருந்து மண் வரை அனைத்தையும் கொஞ்சி, கெஞ்சிக் கேட்கின்றாள் கண்ணனோடு தன்னை சேர்க்க.

"கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு,என்னை வாட்டம் தணிய வீசீரே"

என்று தொடங்கும் பத்து பாடலும் "அவ‌ன் வ‌ண்ண‌ ஆடையை என் வாட்ட‌ம் த‌ணிய‌ வீசுங்க‌ள்" என்றும், "அவ‌ன் மாலையை என் மார் மீது புர‌ட்டுங்க‌ள்", அவ‌ன் அமுத‌ வாய் நீர் என‌க்கு ப‌ருக‌ கொடுங்க‌ள்", "அவ‌ன் குழ‌லின் இருந்து தெரிக்கும் எச்சிலை என் முக‌த்தில் த‌ட‌வுங்க‌ள்" "அவ‌ன் திருவ‌டி ம‌ண்ணை என் மேனி எங்கும் உட‌ம்பெங்கும் பூசுங்க‌ள்" "என் மார்ப‌ழுத்த‌ அவ‌னோடு சேர்த்து க‌ட்டி விடுங்க‌ள்" என்று எப்ப‌டி எல்லாம் த‌ன் உன்ன‌த‌ காத‌லை வெளிப்ப‌டுத்தி இருக்கின்றார் கோதை நாச்சியார். காத‌லால் வ‌ரும் உடலியல் உபாதைக‌ளை விர‌ச‌மின்றி வெளிப்ப‌டுத்தியுள்ளார்.

அவ‌ர் மொழி ஆளுமையை மெச்சாம‌ல் இருக்க‌வே முடியாது. திருமாலில் அத‌ர‌ சுவை அறிய‌ வெண்ச‌ங்கை வ‌ண‌ங்கி பாடும் ப‌த்து பாட‌ல்க‌ளும் காணும் போது அவள் புத்திகூர்மையை விய‌க்காம‌ல் இருக்க‌வே முடியாது.

"கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே."

என்ற இந்த திருமொழியில் இன்ஸ்பயர் ஆகாதவர்களே இருக்க இயலாது (அதே இன்ஸ்பிரேசனின் எனது ஏளனம் கவிதையும்). ஆக கார‌ண‌ம் இன்றி எந்த‌ காரிய‌மும் இல்லை. ஆண்டாள் காத‌ல் அர‌ங்க‌னை அடைய‌. அவ‌ளை ப‌ற்றிய‌ இந்த‌ ப‌திவு என்னுடைய‌ ஏள‌ன‌ம் என்ற‌ க‌விதையை உங்க‌ள் பார்வைக்கு வைக்க‌.

ப‌டிம‌ம்

என்னம்மா மின்னல் ஏதோ கவிதை கவிதைன்னு உருகறியே. உனக்கு கவிதைகான மொழிகள் வரைமுறை எல்லாம் தெரியுமா? சும்மா ஒரு விசயம் கேட்கறேன் ஜஸ்ட் படிமம்ன்னா என்னா என்று மட்டும் சொல்லு பார்ப்போம்.படிமம் இதை பற்றி பேசாத பெரிய கவிஞர்களே இல்லை எனலாம்.(of course என்னை பெரிய கவிஞர் வரிசையில் நான் வைக்கலை so நான் படிமம் பத்தி பேச போறது இல்லை).

படிமம் என்பது "ஒரு விஷயத்தில் இன்னொரு விஷயத்தை படியச் செய்வது. நேரடியாகச் சொல்வதில்லை. படிமம் கவிதையின் சிறப்பம்சம். கவிதையில் கொண்டுவரப்படும் படிமம் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான காட்சியைத் தரக் கூடும். படிமம் என்பது மிக எளிதான விஷயம். பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. சொல்ல வருவதனை நேரடியாகச் சொல்லாமல் வேறொன்றின் மீது ஏற்றிவிடுதல்" இப்படி சொன்னது வா.மணிகண்டன். மேலும் விபரங்களுக்கும்

http://pesalaam.blogspot.com/2006/08/blog-post_23.html

"கவிதைப் படிமம் (poetic image) என்பது பொருள், எண்ணம், கருத்து, உணர்வு என்பவைகளைப் புலன்வழிக் காட்சிகளாகவோ, நுண்காட்சிகளாகவோ, புலனுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களாகவோ மாற்றி வழங்குவது.படிமம் அலைந்து திரிவதில்லை. யோசனைக்கும் தீவிர சிந்தனைக்கும் அறிவுக்கும் இட்டுச் செல்லாமல் அனுபவத்தின் நுழைவாசலில் சுருக்கமாக இயங்குகிறது. அடுத்த நிமிஷத்தில் அந்த இயக்கம் மறைந்து படிமமே அனுபவமாகிறது." சொன்னது அய்யனார். மேலும் விரிவாக

http://ayyanaarv.blogspot.com/2007/07/blog-post_1527.html

மேலும் மிக பெரிய தலை ஜெமோவும் படிமம் பத்தி சொல்லி இருக்காராம். "படிமம் என்பது பொருள் ஓர் அந்தரங்கத்தில் உருவாக்கும் பிரதிபலிப்புகளின் சாராம்சமாக அம்மனதால் மீண்டும் உருவாக்கப்பட்ட ஒரு “ மறுபொருள்” ஆகும்.”இம் மறுபொருள் அப் பொருள் அவ் வந்தரங்கத்தில் உருவாக்கிய பிரதிபலிப்புகளுக்கு இணையான, பலமடங்கு மேலான பிரதிபலிப்புகளை வாசக மனங்களில் உருவாக்கும்."

சரி படிமத்தை பத்தி இவங்க எல்லாம் சொல்லிட்டாங்க இப்போ நீ என்ன பண்ண போற? ம்ம் நானா ஒரு சில படிம கவிதைகளை பத்தி சொல்ல போறேன்.

அய்யனாரின் சிலகவிதைகளும் நிறைய புலம்பல்களும் ஆகாயத் தாமரை என்ற கவிதை மிக கவித்துவமானது. "பற்றுதலுக்காய் அலைந்து கொண்டு இருகின்றன எனது மெல்லிய வேர்கள்" செம வரிகள் இது. இந்த கவிதையில் உன்னை முழுவதுவா ஆக்கறமிக்க பரவும் எனதிந்த நேசங்களை நீ போலி என்றோ மிகையின்றோ தவிர்த்துடாதே, உன்னுடைய அடிமனத்தின் பற்றுதலுக்காக அலைஞ்சிக்கிட்டு இருக்கு என் வேர்கள் என்கிறது மேலோட்டமாக மேலும் நேர்மறையாக வெளிப்புறம் திடமாக, அடர்த்தியாக, கொஞ்சம் எண்ணத் திமிராக காட்டிக் கொண்டாலும் என்னுடைய ஆவணமற்ற மிக மென்மையான அன்பு பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கலாம் எப்போதும்.எதிர்மறையாக வெளிப்புறம் அழகாக, நேர்த்தியாக, செழுமையாக, மிக நல்லவனாக காட்டி கொள்ளும் என்னுள் அழுக்கான பாசிபடிந்த அசிங்கமான பல சின்ன எண்ணங்கள் இருக்கலாம் என்றும் சொல்லுது.

காதல் என்று சமீப காலமாக இரவணன் ஆகி போன லஷ்மணராஜா எழுதிய இந்த கவிதை படிமம் நேரடியாக சொல்லது இது தான், காதல் தேர்தல், காதல் செய்யும் போது செய்யும் காதலிப்பரை அவர்களின் சந்தோசம் மற்றும் கோபங்களை கையாளும் விதம், காதல் பிரிவின் போது சிதைதல் இவற்றில் எதையுமே பழகாமல் காதல் நுய்பது எவ்வளவு தவறென்று ஒவ்வொரு முறை தவறி நுய்தபின் தான் புரிகின்றது. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதே தவறை ஆரம்பிக்கும் போது நுய்தலின் சுகம் மட்டுமே நினைவில், விழந்த பின் மீண்டும் புலம்பல்கள் இப்படியாக தொடர்க்கின்றது ஒவ்வொரு காதல் காதையும். காதலுக்கு மட்டுமில்லை இதை எந்த உறவோடும் நட்போடும் ஓப்பிட்டு பார்க்கலாம்.

பிசுபிசுப்பு என்ற அனுஜன்யாவின் இந்த கவிதை மிக அருமையான படிமம் அது. அந்த‌ தாள் ப‌டப‌ட‌த்த‌து அவ‌னை போல‌வே. இலை போல‌ ப‌ற‌க்க‌ நினைத்த‌து. கிழியும், ந‌னையும் க‌வலை இல்லை அத‌ற்கு. ஆனால் பூச்சி பிடிக்க‌ தான் ப‌ய‌ன‌யிற்று. நாம‌ கூட‌ எதை எதையோ சாதிக்க‌ நினைக்கிறோம் ஆனா வாழ்க்கை கைதியா மென்பொருள் இட்ட‌ இய‌ந்திர‌ம் போல‌ வேற‌ எதுக்கோ ப‌ய‌ன்ப‌ட‌றோம். த‌ன் இய‌லாமையை நினைத்து அவ‌ன் பிம்ப‌ம் அந்த‌ காகித‌த்தில் தெரிந்த‌து.

கல்யாணத்திற்கு பிறகு(க.பி கவிதைகள் - 2) விழியன் எழுதிய கவிதைகளில் வரும் அவளன்பு என்ற இந்த கவிதை மிக அழகான எளிமையான படிம கவிதை இது. முன்னமிருந்த ஒரு இழந்த காதலின் வலிகளை இப்போது வந்த மிக அழுத்தமான கடைப்புரண்டு ஓடும் அன்பு/காதல் கழுவி களைகின்றது. முன்னம் திளைத்த மேலோட்டமான ஒரு காமம் நினைவுகளை, திமிரி ததும்பும் இவளின் பிரியங்கள் திளைக்க செய்கின்றன முன்னாலிருந்த நினைவுகளை மறக்கடிக்கின்றன. அதை பொதுப்படையாக எந்த அனுபவமும் நிரந்தரம் இல்லை, அடுத்து அதையும் தாண்டிய புனிதமான அனுபவங்கள் கரைபுரண்டோடும் எப்போதும் என்பதை அணித்தரமாக உணர்த்துகின்றது.

நிராக‌ரித்த‌ல் நிராக‌ரிக்க‌ப்ப‌ட‌ல் இர‌ண்டும் மிக‌ க‌டின‌மான‌ உண‌ர்வு. கார‌ண‌மேயின்றி ஒரு விச‌ய‌த்தை நிராக‌ரித்தாலோ, தெரிந்தோ தெரியாம‌லோ அல்ல‌து சூழ்நிலை கார‌ண‌மாக‌ நிராக‌ரித்தாலோ, நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் நிலையிலும் கொடிய‌து நிகாரித்த‌வ‌ர் ம‌ன‌ உறுத்த‌லும், த‌விப்பும், குற்ற‌ உண‌ர்வும் அதிக‌ப‌டியான‌து. அவை வார்த்தையில் அட‌ங்குவ‌தில்லை. காய‌த்ரியின் இந்த‌ க‌விதையும் அதையே உண‌ர்த்துகின்ற‌து.

Tuesday, May 19, 2009

தனித்திருத்தல்

த‌னிமை என்ப‌து எப்போதும் மிக‌ கொடுமையானதொரு விச‌ய‌ம். பெரும் கூட்ட‌த்தோடு இருந்தாலும் ந‌ம்மோடு இருப்ப‌து த‌னிமை ம‌ட்டுமே என்று க‌ற்று தெரிந்த‌ ஞானி(ஓ ப‌க்க‌ம் ஞானி இல்லைங்கோ) சொல்லி இருக்காங்க‌. இங்கே தனிமை ப‌ற்றிய‌ ஒரு சில‌ரின் கவிதைக‌ள்

தனித்திருத்தல்
=============

தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...

- காயத்ரி

இவ‌ங்க‌ அந்த‌ ஞானிக‌ளில் ஒருவ‌ராக‌த் தான் இருக்க‌ வேண்டும்.

சொற்களோடுதான் வாழ்வென்றாகிவிட்ட பிறகு...
===========================================

தனிமை நிரம்பியிருக்கும்
அறைகளில்
சொற்களைத்தான்
புணர வேண்டியிருக்கிறது

- முபாரக்

கீழ்வ‌ரும் சுட்டியை பாருங்க‌. இவங்க சொல்றது மிக வித்தியாசமான தனிமை.

http://poongulali.blogspot.com/2009/04/blog-post_25.html

மேலும் காந்தியும் மிக அருமையாக சொல்லி இருக்கின்றார்

http://tkbg.wordpress.com/2008/10/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/

காமராஜ் கூட இதே தளத்தில்

http://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_16.html

மேலும் அய்யனர் தன் வலைப்பூவையே தனிமையின் இசை என்றே பெயரிட்டு இருக்கிட்டார்.

இத்தனை பேரும் சொல்லாத தனிமையா இவங்க சொல்லீட்டாங்க

நதியலைகள்

நதியலைகள்
===========
உயர்ந்த மரத்தின் வேருக்கு இருந்த காதலால்
உதிர்ந்த பூக்களை
ஏந்திச் செல்கின்றது
எங்கே சேர்ப்பதென்று தெரியாமல்

இப்ப‌டி ஒரு க‌விதையை முத்த‌மிழில் வைத்த‌தும் ஏக‌ப்ப‌ட்ட‌ க‌லாட்டா, க‌விதையில் ஏதோ ஒன்று குறையுதுன்னு. அதுக்கான‌ விவாத‌ங்க‌ள் போய்கிட்டு இருந்த‌ போது, வண‌க்க‌ம் லாவ‌ண்யா என்ற‌ த‌லைப்புடன் ஒரு ம‌ட‌ல், ஒரு‌ ப‌திவ‌ரிட‌ம் இருந்து. நீங்க‌ லேட்ட‌ஸ்டா எழுதி இருக்கும் க‌விதையில் என் பெய‌ர் இருப்பால் உங்க‌கிட்ட‌ பேச‌லாம் என்றும் அந்த‌ க‌விதையை செதுக்க‌லாம் என்றும் என்னுடைய‌ குடை க‌விதை பிடித்த‌தென்றும் என்று சொல்லப்ப‌ட்டு இருந்த‌து அந்த‌ ம‌ட‌லில். நீண்ட‌ உரையாட‌ல் பின் அந்த‌ க‌விதையை இப்ப‌டி ஆக்கினேன்.

http://minnalpakkam.blogspot.com/2008/05/blog-post_2304.html

அவ‌ளோடு பேசும் போது அவ‌ள் க‌விதை மீதான‌ அவ‌ள் புரித‌ல் என‌க்கு விய‌ப்பாக‌ இருந்த‌து. மேலும் க‌விதைக‌ளை ப‌ற்றி பேசினோம் நிறைய‌ பேசினோம். நிறைய‌ பேசிய‌ பின் கேட்டேன் "உங்க‌ இய‌ற்பெய‌ர் என்ன‌, எங்கே இருக்கீங்க‌?"

"இப்ப‌டியே பேச‌ உங்க‌ளுக்கு எதுவும் பிர‌ச்ச‌னையா?" என்றாள் அவ‌ள்.

"அப்ப‌டி இல்லை ஆனா சொன்னா என்ன‌?"

"எனக்கு அது ப‌ழ‌க்க‌மில்லை. ந‌ம‌க்கு தேவையான‌ விச‌ய‌த்தை ம‌ட்டும் பேசுவோம்" என்று க‌ட் அண்ட் ரைட்டாக‌ பேசிய‌வ‌ளின் பெய‌ரோ,முக‌வ‌ரியோ,முக‌மோ தெரியாது.ஆனால் இந்த‌ உல‌கில் மிக‌ உன்ன‌த‌மான‌ முத‌ன்மையான‌ தோழி என்றால் அது அவ‌ளே. அவ‌ள் மிக‌ புத்திக்கூர்மையுள்ள‌வ‌ள். தூய‌ ந‌ட்போடான‌வ‌ள். சிற‌ந்த‌ ர‌ச‌னைக்காரி. என் உயிர்த் தோழி. என் வ‌ள‌ர்ச்சியில் மிக‌ அதிக‌ ப‌ங்குடைய‌வ‌ள். இப்போது க‌விதைக‌ளை மீதான‌ என் புரித‌ல் எல்லாம் அவ‌ளிட‌ம் நான் க‌ற்ற‌து. நான் எழுதும் எதுவும் பிழைத்திருத்த‌, வ‌டிவ‌மைக்க‌ நான் நாடுவ‌து இவ‌ளையே. என் வ‌லைப்பூ உருவாக‌ அவ‌ளே கார‌ண‌ம். நாங்க‌ள் பேசாத‌ விச‌ய‌ங்க‌ளே கிடையாது. ஆனால் நாங்க‌ள் பேசிய‌து, ச‌ண்டையிட்ட‌து, கொஞ்சிய‌து எல்லாமே ம‌ட‌ல்க‌ள் ம‌ற்றும் அர‌ட்டை மூல‌மான‌ மௌன‌ மொழியில் ம‌ட்டுமே. இந்த‌ ப‌திவின் மூல‌ம் அவ‌ளுக்கு ஒரு வேண்டுகோள் நான் இற‌க்கும் முன் என்றாவ‌து ஒரு நாள் ச‌ந்திக்க‌ வ‌ருவாயா?

==========

இதே மௌ‌ன‌ மொழியாலான‌ உரையாட‌ல்க‌ள் மிக‌ சுவார‌சிய‌மான‌வை

http://minnalpakkam.blogspot.com/2009/01/blog-post_24.html

இந்த‌ க‌விதையில்
"ப‌ருகினான்
உருகினாள்"

இந்த‌க் க‌விதையை ப‌டித்த‌ அந்த‌ தோழ‌ர்(ஒரே ஒரு முறை ஒருசில‌ வினாடிக‌ள் ச‌ந்தித்து இருக்கின்றேன்) ரித‌ம் த‌விர்த்து த‌ட்டையா எழுதி பாருங்க‌ லாவ‌ண்யா. ந‌ல்லா வ‌ரும் என்றார். மீண்டும் ஒரு முறை அதே க‌விதையை ப‌டிக்க‌ கிடைத்த‌ போது கிண்ட‌லாக‌ "லாவ‌ண்யா உங்க‌ளை என‌க்கு மிக‌ப் பிடிக்கும்" என்றார்.

http://minnalpakkam.blogspot.com/2008/11/blog-post_24.html

இந்த‌ க‌விதையில் அழ‌கிய‌ல் வ‌ர்ண‌ பூச்சுக‌ள் வேண்டாமே ஆனாலும் இந்த‌ க‌விதை ந‌ல்லா வ‌ந்திருக்கு என்றார். அவ‌றோடு உரையாடும் அத்த‌னையும் நிறைய‌ ப‌திவிற்கு வித்திட்ட‌து.

============

"வ‌ண‌க்க‌ம் என் பெய‌ர் மின்ன‌ல் என்கிற‌ லாவ‌ண்யா. உங்க‌ வ‌லைப்பூ பிடித்த‌து. நேர‌ம் இருந்தால் என் வ‌லைப்பூ பார்த்துவிட்டு பின்னூட்ட‌ம் தாங்க‌ உங்க‌ க‌விதை என்னுடைய‌ ர‌சித்த‌ க‌விதை கிட‌ங்கில் இருக்கின்ற‌து."

"உங்க‌ காட்சிப்பிழை, எல்லை இத‌ன் தெறிப்பு பிடிச்சி இருக்கு." "ந‌குல‌ன் ப‌டிச்சி இருக்கீங்க‌ளா?" "பிரமிள், சுந்தர ராமசாமி, விக்ரமாதித்யன், கலாப்ரியா, தேவதச்சன், தேவதேவன்" இவ‌ர்க‌ளைப் ப‌டியுங்க‌ள். நவீன‌ விருட்ச‌ம் வ‌லையில் கிடைக்குது, ப‌டிங்க‌. கால‌ச்சுவ‌டு ப‌டிங்க‌ என்று ஏக‌ப்ப‌ட்ட‌ அறிவுரை வ‌ழ‌ங்குகின்றார் ம‌ற்றுமொரு தோழ‌ர். முத‌ல் முறை தொலைபேசிய‌ போது "நீங்க‌ ஆனந்தியா?" என்று கேட்டார். ஓரிண்டு முறை த‌விர‌ எல்லா முறையும் இவ‌ருட‌னும் அதே மௌன‌ மொழியில் உர‌க்க‌ பேசி இருக்கின்றேன்.

============

இவ‌ர் வ‌லைப்பூவிலிருந்து அவ‌ருடைய‌... அங்கிருந்து இன்னுமொன்று என்று பார்த்தால் கிடைத்த‌ ஒரு முத்தான‌ வ‌லைப்பூவிலிருந்து நான் எழுதும் க‌விதைக‌ளை சார்ந்த‌ க‌ட்டுரைக்கு பொருத்தமான‌ ஒரு க‌விதை கிடைத்த‌து அதை ப‌ய‌ன்ப‌டுத்த‌ அவ‌ரிட‌ம் உத்த‌ர‌வு பெற‌ ம‌ட‌லிட்டேன். ம‌ட‌ல் க‌ண்டு மகிழ்வுற்ற‌ இந்த‌ தோழ‌ர் எழுதுவ‌தை கொஞ்ச‌ கால‌ம் விட்டுவிட்ட‌தாக‌ சொன்னார். "எழுத்து வ‌ர‌ம் எல்லோருக்கும் கிடைக்காது. எழுதும் ஆர்வ‌ம் ம‌ட்டும் கொள்ளுங்க‌ள், எழுத்து த‌ன‌க்கான‌ நேர‌த்தை தானே தேடிக்கொள்ளும்" என்றேன். அத‌ன் பின் சில‌ க‌விதைக‌ள் அந்த‌ த‌ள‌த்தில் வ‌ந்த‌து. அவ‌ர் க‌விதையை என் க‌ட்டுரையில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் ந‌ன்றிக்காக என் க‌விதை சார்ந்த‌ க‌ட்டுரைக‌ளை வாசித்துவிட்டு "தோழி ஏதோ ஆராய்ச்சி நோக்கோடு எழுதுவ‌து போல‌ இருக்கே" என்றார். (அட‌ அது தானா என் வ‌லைப்பூவுக்கு வ‌ர‌வங்க‌ எல்லாம் பிட‌ரில‌டிச்சி ஓடிட்டு இருக்காங்க‌)

============

"உயிர் எழுத்து வெளியாகியுள்ள‌ க‌விதைக‌ளுக்கு வாழ்த்துக‌ள்" இந்த‌ பின்னூட்ட‌த்தை என்னுடைய‌ ஒரு ப‌திவில் பார்த்துவிட்டு இவ‌ர் ம‌ட‌ல் முக‌வ‌ரி கேட்டு ந‌ன்றி சொல்லி இவ‌ர் க‌விதையை நான் சிலேகித்த‌தால் எங்க‌ள் உரையாட‌ல்(ம‌ட‌ல், அர‌ட்டை வ‌ழி) தொட‌ர்ந்த‌து. உங்க‌ள் புரித‌ல் திற‌ன் அதிக‌ம் என்றும் க‌விதை ப‌கிர்த‌ல் அருமை என்றும் சொல்லி(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஆள‌ ர‌ண‌க‌ள‌மாக்க‌ வேண்டிய‌து) தொட‌ர்ந்த‌ உரையாட‌ல்க‌ள் உன்ன‌த‌மான‌வை

==============

இதே போல‌ முக‌மே அறியாம‌ல் பேச‌ ஆர‌ம்பித்து பின் ந‌ல்ல‌ ந‌ட்பாகி ச‌ந்தித்து இன்னும் ந‌ட்பாகி நிறைய‌ ப‌டிக்க‌ கிடைத்து அறிவை வ‌ள‌ர்த்த‌து..., இப்ப‌டியாக‌ முத்த‌மிழ் குமும‌த்தில் தோழ‌ர்க‌ள்,தோழிக‌ள், அண்ணாக்க‌ள், சித்தப்பா, த‌ம்பிக‌ள், ஏன் ஒரு ம‌க‌ன் கூட‌..., இந்த வ‌லையுல‌கிற்கு ந‌ன்றி ந‌ன்றி.

Monday, May 18, 2009

காத்திருத்த‌லின்

"காத்திருத்தல் வரம், காத்திருத்தல் தவம், காத்திருத்தல் சுகம்" இப்படி வைரமுத்து சொல்லி இருக்காரு. எங்காவது எதற்காவது காத்திருக்க தான் செய்கின்றோம் அது ரெசனில்

மண்ணெண்ணை வாங்கவோ அல்லது வாழ்க்கை புரட்டி போடும் நேர்முக தேர்வு வளாகத்திலே. வெற்றுகாகித்தின் முன் வார்த்தைகளுக்கு காத்திருக்கும் கவிஞன் போல எப்போதும்

எங்காவது ஒரு காத்திருத்தல் இருக்கத் தான் செய்கின்றது. இங்கே தொகுக்கப்பட்டது சில் காத்திருத்தலை சார்ந்த கவிதைகள்


காத்திருத்தலின்
கடைசி கண
நிரம்பி வழிதல்களுக்கும்

பிரிவின்
முதல் கண ஆவியாதல்களுக்கும்
நடுவே

இல்லை
இடையில் நிகழ்ந்தது
எதுவும் இல்லை

- மனுஷ்ய புத்திரன்

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது

-கல்யாண்ஜி

மேலும் அய்ய‌னார் ம‌ற்றும் முபார‌க்கின் கவிதைக‌ளும் காத்திருத்த‌லை வித்தியாச‌மாக‌ எடுத்துரைத்துள்ள‌ன‌. முபார‌க் க‌விதையை ஜ‌மலான் அவ‌ர்க‌ள் முன்ன‌மே வ‌லைச்ச‌ர‌த்தில் சிலேகித்துள்ளார்.

உவ‌மைக‌ளும் விய‌ப்பும்

ஒருவ‌ர்க்கு த‌ன் க‌ருத்தை விற்ப‌னை செய்ய‌ நினைக்கும் யாவ‌ரும் த‌ன் க‌ருத்தை எத்த‌னை எளிமையாக்க‌ வேண்டுமோ அத்த‌னை எளிமையாக்க‌ வேண்டும். அல்ல‌து யாரிட‌ம் விற்ப‌னை செய்ய‌ வேண்டும், அவ‌ர்க்கு புரிந்த‌ விச‌ய‌த்தைச் சொல்லி அதோடு இணைத்து இதைச் சொல்ல‌ வேண்டும். இது பெரிய‌ வியாபார‌ த‌ந்திர‌ம். இந்த‌ த‌ந்திர‌த்தைத்தான் அந்த‌க்கால‌த்திலிருந்து இந்த‌க் கால‌ம் வ‌ரை பல‌ க‌விதைக‌ளில் உவ‌மை கூறி விள‌க்கி உள்ள‌ன‌ர்.

"தொட்ட‌ணைத்தூறும் ம‌ண‌ற்கேணி" போல‌ ச‌ங்க‌ கால‌த்தின் குறுந்தொகையிலும் ச‌ரி க‌ம்ப‌ ராமாய‌ண‌த்திலும் ச‌ரி உவ‌மை கொட்டி கிட‌க்கும். இது அவ‌ர்க‌ளின் ர‌ச‌னையும் புத்தி கூர்மையும் வெளிப‌டுத்துவ‌து போல‌ இருக்கும். நான் இங்கே விய‌க்க‌ வ‌ந்த‌து ஒரு வேறு நூற்றாண்டில் வாழும் க‌விஞ‌ர்க‌ள் ஒரே மாதிரி எப்ப‌டி சிந்த‌னை செய்த‌ன‌ர் என்று தான்.

''பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இரும்கழி ஒதம் மல்குதொறும்
கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்'' (குறுந். 9)

என்னும் பாடல் வரிகளில் திரண்ட காம்புகளை உடைய நெய்தல் மலரானது பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. மிகுந்த மீன்களும் காணப்படும் இக்குளத்தில் வெள்ளம் பெருகும்போதெல்லாம் பெரிய நீர்ச்சுழியில் சிக்கும் நெய்தல் மலர்கள் வெள்ளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்கின்றன. இக்காட்சியானது குளங்களிலே மூழ்கி விளையாடும் பெண்களின் கண்களைப் போன்று இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

மேலும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய,

''தாரைப் பூத்த தடாகத்திலே - முகத்
தாமரை தோன்ற மூழ்கிடுவாள்''

இந்த‌ இர‌ண்டு உவ‌மைக‌ளை டிராஜேந்த‌ரும் "த‌டாக‌த்து மீன் இர‌ண்டு காம‌த்தில் த‌டுமாறி தாம‌ரை பூ மீது விழுந்த‌ன‌வோ" என்ற‌ திரைபாட‌லோடு ஒப்பிட‌ இய‌லும். மேலும்


குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.

-பரணர்.

உயர்ந்த மரத்தில் இருக்கும் பெரிய தேனடையை காணும் முடவன் தன் கைகளை வளைத்து தேனடையை சுட்டி நக்குவதை போல, அவரை சேர இயலாவிடின், அவரை கண்டுக்கொண்டிருப்பதே என் மனதுக்கு இனிதாக இருக்கும் என்ற‌ குறுந்தொகை பாட‌ல்


தாம‌ரையின் "அலைக‌ளில் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்" அழ‌கான‌ ப‌டிம‌த்தோடு (ப‌டிம‌ம் ப‌ற்றிய‌ விள‌க்க‌மாக‌ பின்னொரு ப‌திவில்) ஒப்பிடவ‌ல்ல‌து. இந்த‌ உவ‌மையில் எத்த‌னை அழ‌கான‌ சோக‌ம், அழுத்த‌மான‌ உண‌ர்வு. கொஞ்ச‌ தூர‌த்திருந்து பிடித்த‌வ‌ர் இருத்த‌லை உண‌ர்ந்த‌ப‌டி அவ‌ர்க‌ளின் நினைவில் ம‌ட்டும் வாழ்த‌ல் கொடுமையான‌ விச‌ய‌ம் ஆண்டாள் முத‌ல் இந்த‌ கால‌ அழ‌கிக‌ள் வ‌ரை ப‌ல‌ரும் இந்த‌ மடைமையில் இருக்க‌த் தான் செய்கின்ற‌ன‌ர்.


காய‌த்ரி (கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல) ம‌ற்றும் ந‌ர்சிம் (குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போல) அவ‌ர்க‌ளின் ப‌திவில் கூற‌ப்ப‌ட்டு இருக்கும் உவ‌மை ப‌ற்றிய‌ விய‌ப்பு என்னை க‌வ‌ர்ந்த‌து. எனது ஒரு கட்டுரை சிறைவாழ்வில் வரும் உவமை(அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி போல) கூட மிக அருமையானது.

மிக‌ ச‌மீப‌மாக‌ நான் ர‌சித்த‌ உவ‌மை நான் க‌ட‌வுள் ப‌ட‌ பாட‌லில் வ‌ரும்

"ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?"

விய‌ப்புக‌ள் தொட‌ர்கின்ற‌ன‌.

நீராலான‌து

"நீரின்றி அமையாது இவ்வுல‌கு" என்ற அய்ய‌ன் திருவ‌ள்ளுவ‌ர் வாக்கிற்கிண‌ங்க‌ நீராலான‌தே இவ்வுல‌கும், உற‌வும் ஏன் ந‌ம் உட‌லும். நீராலான‌து என்ப‌து ஏன் என்றால் நீருக்கும் நீராலான‌த‌ற்கும் வ‌டிவ‌ங்க‌ளில்லை. நீராலான‌ உற‌வு அல்ல‌து உல‌கென்றால் உற‌வுக‌ளும் வ‌டிவ‌மில்லை. உண‌ர்வுக‌ளுக்கும் வ‌டிவில்லை. காத‌ல், இறைய‌ண‌ர்வு எல்லாமே உருவ‌ம‌ற்ற‌, வ‌டிவ‌ம‌ற்ற, வாச‌னைய‌ற்றைவை தாம். சுகுமார‌னின் "நீரின்றி அமையாது" என்ற‌ க‌விதையும் இதைத் தான் சொல்கின்ற‌து.

திட‌மென்றால் இய‌ங்குவ‌து சிர‌ம‌ம்
ஆவியென்றால் அட‌ங்குவ‌து க‌டின‌ம்
என‌வே
திர‌வ‌ங்க‌ளால் பிணைத்தேன் உற‌வுக‌ளை
ஒவ்வொரு உற‌வுக்கும்
ஒவ்வொரு திர‌வ‌ம்

இந்தக் க‌விதையை முழுமையாக‌ வாசிக்க‌ "பூமி வாசிக்கும் சிறுமி" என்ற‌ சுகுமார‌னின் க‌விதைத் தொகுப்பை வாங்க‌லாம்.

இதே நீராலான‌ ஒரு உற‌வினை ஒரு காதலை அழ‌காக‌ சொல்லி இருக்கின்றார் ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் த‌ன‌து நீராலான‌து என்ற‌ தொகுப்பில், நீராலான‌து என்ற‌ க‌விதையில்

வெறுப்பைப்போல திடமாக
வஞ்சகம் போல சந்தேகிக்க முடியாததாக
...
இல்லை
உனதிந்தப்
பிரியங்கள்

இந்த‌க் க‌விதையையும் இன்னும் சில‌ சிற‌ந்த‌ க‌விதைக‌ளையும் வாசிக்க‌ நீராலான‌து க‌விதைத் தொகுப்பை வாங்க‌லாம்.

இந்த‌ இரு க‌விதைக‌ளும் த‌ந்த‌ இன்ஸ்பிரேச‌னால் நானும் ஒன்னு கிறுக்கி இருக்கேன்‌.

ந‌ம்ம‌ கோதையும் திருப்பாவையில் இதே போல் நீராலான‌ உற‌வாக‌ க‌ண்ண‌னை உருவ‌க‌ப்ப‌டுத்தி பாடி இருக்காங்க‌. ஆழிமழை க‌ண்ணா என்று தொட‌ங்கும் இந்த‌ திருப்பாவை பாட‌லில் க‌ண்ண‌னை கோதை ம‌ழை வ‌டிவ‌மாக‌ நீராலான‌வ‌னாக‌ நினைத்து போற்றியுள்ளார். சாத‌ர‌ண‌ தூர‌ல் அல்ல‌ ஆழி ம‌ழையென்றால் ப‌ருவ‌த்தில் பெய்யும் பெரும‌ழை. ஆழி என்றால் க‌ட‌ல் என்ற‌ அர்த்த‌மும் க‌ட‌லாய் போல் மழை அல்ல‌து க‌ட‌லாய் ம‌ழை என்ப‌தையே ஆழிம‌ழையென்றாள் கோதை. ம‌ழை என்ப‌தே காத‌ல் அல்ல‌து புண‌ர்ச்சி குறியூடு தானே?

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

இவை ம‌ட்டும் அல்லாம‌ல் ந‌ற்றினையில் ஒரு பாட‌ல்


நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே


"நீரின்றி அமையாத‌ உல‌க‌ம் போல‌ நான் இன்றி அவ‌ர் இல்லை" என்ன‌ ஒரு தெளிவும் ந‌ம்பிக்கையும் பாருங்க‌. இந்த‌ ந‌ற்றிணை பாட‌லுக்கு உரிய‌ விள‌க்க‌மும் பொழிப்புரையும் த‌ர‌ நேர‌ம் இல்லாத‌ கார‌ண‌த்தால் இப்போ எஸ்கேப். யாராவ‌து பின்னூட்ட‌த்தில் த‌ருவாங்க‌ன்னு ந‌ம்பிக்கை தான்.

வலை அறிமுகம்

தற்சமயம் என்னை வளர்ப்பது இந்த வலையுலகமே. நான் நிறைய கற்றது, இன்னும் கற்க வேண்டியது எல்லாமே கொட்டிக் கிடக்கிறது இந்த வலையுலகில். என்னை கவர்ந்த சில வலைப்பதிவர்களை இங்கே அறிமுகம் செய்ய நான் பெரும் பேறு கொள்கின்றேன்.

கூர்தலறம் என்ற பெயரிலேயே வித்தியாசம் கொண்ட இந்த பதிவர் மிகச் சிறந்த கவிதைகளைப் படைப்பவர். இவரோடு கவிதை உரையாடுதல் மிக சிறந்த அனுபவம்.

http://tkbg.wordpress.com/ or http://tkbgandhi.blogspot.com/

தூறல்கவிதைகள் என்ற இந்த வலைப்பதிவர் பற்றி அனேகம் பேர் அறிந்திருக்க கூடும் எனினும் என்னை கவர்ந்த ஒரு சிறந்த பதிவர் இவரும் ஆவார்.

http://thooralkavithai.blogspot.com/

லஷ்மிசாகம்பரி மிக அழகான மொழியில் அருமையான செம்மையான கவிதைகளை தருவதில் இவருக்கு நிகர் இவரே

http://sahambari.blogspot.com

என்னுடைய மிக சிறந்த தோழி. என்னுடைய வளர்ச்சியின் முக்கிய பங்கு வகிப்பவள். நவீன கவிதைகள் எழுதுபவள். (கண்டிப்பா பொழிப்புரை இல்லாமல் இவள் கவிதைகள் புரிவதே இல்லை)


http://nathiyalai.wordpress.com/


சகாரா தென்றல், தென்றல் போன்றே இருக்கும் இவள் கவிதைகளும் புனைவும் அழகியல் மொழி இவள் விரல்களில் அசைந்தாடும்.


http://saharathendral.blogspot.com/


மேலும் ஸீ என்று ஒரு தோழி மிக அருமையாக கதை எழுதுவார். இவருக்கு வலைப்பூ கிடையாது. sristories@gmail.com இந்த மடல் முகவரிக்கு மடலிட்டு அவர் கதைகளை வாங்கி படிக்கலாம்.


இதுவரை சொன்ன பதிவர் எல்லாம் ஒருவேளை ஏற்கனவே எல்லோருக்கும் அறிமுகம் ஆனார்களாக கூட இருக்கலாம். இனி வருபவர்கள் பற்றி...

சரி இதோ இந்த பதிவரை பத்தி நான் சொன்னா அது அந்த சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிறது போல

http://mathibama.blogspot.com/

ஆமாங்க திலகபாமாவே தான். அந்த சூரியாளை தூரத்திருந்து ரசிக்கும் சிறுமி நான்.

http://holyox.blogspot.com/

உலகின் புதிய கடவுள் பெண்ணியவாதி இவருக்கு தெரியாத விசயங்களே கிடையாதோ என்று எத்தனையோ முறை வியந்திருக்கின்றேன். இலக்கியம், கவிதை, கட்டுரை, சிறுகதை, துப்பறியும் கதை, சமூக சிந்தனை, பொருளாதாரம் எதை எடுங்கள் இவர் சொல்லும் விதம் தனித்துவம்.


http://angumingum.wordpress.com/

இவரை பத்தி நான் சொன்னா அது குறுந்தொகைக்கே உவமை சொல்வது போல.

http://thaaragai.wordpress.com/

இவர் தீவிர இலக்கியவாதி. இவரை வழிநடை குறிப்புகள் மிக அவசியம் அனைவருக்கும் உதவும் காவியங்கள்.

அறிமுகம்

என்னை ப‌த்தி அதிக‌மா சொல்லிக்க‌ ஒண்ணுமில்லைங்க‌.

த‌மிழ் நாட்டில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்து திரும‌ண‌த்திற்கு பின் த‌லைந‌க‌ர் தில்லி அருகே உள்ள‌ ஒரு ந‌க‌ர‌த்தில் வ‌சிக்கிறேன்.

கொஞ்ச‌ம் ப‌டிச்சி இருக்கேன். அத‌னால் ஒரு ந‌ல்ல‌ வேலையில் இருக்கேன்..
வாசிக்க‌ ஆர‌ம்பிச்சி ஏழு வ‌ருட‌ங்களாகுது. கடந்த ஐந்து வருடங்களாகத்தான் ஏதோ கிறுக்கிகிட்டிருக்கேன். மேலும் அதிக‌மா எழுதியும் கிழிக்க‌லை. வாசிக்க‌ ஆர‌ம்பிக்கிற‌ ஒவ்வொருத்த‌ரும் முத‌லில் தொடுவ‌து க‌விதை த‌ள‌த்தை தான். நான் இன்னும் அதை விட்டு இன்னும் வெளியே வ‌ர‌வில்லை. நான் எழுத‌ ஆர‌ம்பித்த‌து முத்த‌மிழ் என்ற‌ இணைய‌ குழும‌த்தில். அங்கே த‌மிழ், இல‌க்கிய‌ம், க‌விதை இன்னப்பிற‌வென்றும் ப‌ல‌தும் அல‌ச‌ப்ப‌டும். அங்கே க‌விதையின் ப‌ன்முக‌ அல‌ச‌லாக‌ சில‌ க‌ட்டுரைக‌ள் எழுதி அதில் சில‌ தமிழோவிய‌த்திலும் திண்ணையிலும் பிர‌சுக்கப்ப‌ட்ட‌ன‌. ச‌ரியா ஒரு வ‌ருட‌த்திற்கு முன் தோழி ஒருத்தி த‌ந்த‌ ஆலோச‌னைப்ப‌டி‌ வ‌லைப்பூ ஆர‌ம்பித்தேன்.

அப்ப‌டி ஆர‌ம்பித்த‌ வ‌லைப்பூவிலிருந்து ஒரு க‌விதை இந்த வ‌லைச்ச‌ர‌த்தில் இட‌ப்ப‌ட்ட‌து. அத‌ற்கு முன்பே ஜ‌மலான் அவ‌ர்க‌ளால் வ‌லைச்ச‌ரத்தில் கிடைத்த‌ க‌விதைக‌ளும் வ‌லைப்பூ அறிமுக‌ங்க‌ளும் ஏராள‌ம். அந்த‌ வ‌லைச்ச‌ர‌ப் ப‌திவில் ஒரு க‌விதை விடாம‌ல் எல்லா க‌விதைக‌ளையும் வாசித்து ப‌ய‌ன‌டைந்தேன். அதோடு ம‌ட்டும் அல்லாம‌ல் அந்த‌ வ‌லைப்பூக்களுக்கு அடிக்க‌டி விஜ‌ய‌மும் செய்ய‌ ஆர‌ம்பித்தேன்.

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் ஷைல‌ஜா அக்காவும், சில‌ வார‌ங்க‌ளுக்கு முன் ப‌ரிச‌ல் பின் ந‌ர்சிம் ஆசிரிய‌ர்க‌ளாக‌ இருந்த‌ போது நாமும் ஒரு நாள் வ‌லைச்ச‌ர‌ ஆசிரிய‌ர் ஆவோமா என்று நினைத்த‌ அடுத்த‌ நொடியே ஆமா நாமெல்லாம் என்ன‌த்தா எழுதி கிழிச்சிட்டோம் ஆசிரிய‌ர் பொறுப்பு ஏற்கும‌ள‌வு என்றும் நினைத்தேன். ஆச்ச‌ரிய‌ம் பாருங்க‌ சீனா சார்கிட்ட‌ இருந்து க‌ட‌ந்த‌வார‌ம் ம‌ட‌ல் வ‌ந்த‌து ஆசிரிய‌ர் பொறுப்பேற்கும்ப‌டி அப்ப‌டிதாங்க‌ இங்கே இப்போ. வாங்க‌ எல்லோரும் வ‌ச‌மா சிக்கிட்டீங்க‌. விடுவேனா?

Sunday, May 17, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருத்தல்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலம் ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த நண்பர் நசரேயன் மூன்றே மூன்று இடுகைகளிட்டு பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து விட்டு விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த வழ்ழ்த்துகளுடன் வழி அனுப்புகிறோம்

இவ்வாரத்திற்கு மின்னல் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர்
மின்னல் பக்கம் என்றொரு பதிவினில் எழுதி வருகிறார். நூஉறுக்கும் மேற்பட்ட இடுகைகளிட்டிருக்கிறார். இவரை வருக வருக - பொற்றுப்பினை நிறைவேற்றுக என வாழ்த்துடன் வரவேற்கிறோம்

சீனா

Thursday, May 14, 2009

இன்றைக்கும் பாடம் இருக்கு

நேத்து பாடம் நடத்தினது ஓரளவுக்கு நல்லா இருந்து இருக்கும் என்ற நம்பிக்கையிலே இன்றைக்கும் பாடம் நடத்த வந்து இருக்கேன்.பொன்னியின் செல்வன் புகழ் பெற்ற நாவல், அதே பெயரில் வலையுலகிலேயும் ஒருவர் இருக்கிறார், அவரோட சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு

பொன்னியின் செல்வன் ஒன்று

பொன்னியின் செல்வன் ரெண்டு

பொன்னியின் செல்வன் மூன்று

பொன்னியின் செல்வன் நான்கு

பொன்னியின் செல்வன் ஐந்து

இப்ப நான் சொல்லப்போறவர் வாலிப புள்ளைன்னு பல வருசமா சொல்லிக்கிட்டு இருக்காரு, நிறைய அறிவியல் தகவல் தரக்௬டியவர், அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.

வேத்தியனின் பக்கம் ஒன்று

வேத்தியனின் பக்கம் ரெண்டு

வேத்தியனின் பக்கம் மூன்று

வேத்தியனின் பக்கம் நான்கு

வேத்தியனின் பக்கம் ஐந்து

அடுத்து வரப்போரவரும் எழுத்திலே புல்லட் வேகம் கொண்டவர், சில புல்லட் உங்களுக்கு

புல்லட் பாண்டி ஒன்று

புல்லட் பாண்டி ரெண்டு

புல்லட் பாண்டி மூன்று

புல்லட் பாண்டி நான்கு

புல்லட் பாண்டி ஐந்து

இப்ப நான் சொல்லப்போறவர்க்கு என்னோட அறிமுகம் தேவை இல்லை, அவரோட அறிமுகம் தான் எனக்கு வேணும், அவரோட வலையுலக படைப்புகள் உங்களுக்காக

படித்துறை ஒன்று

படித்துறை ரெண்டு

படித்துறை மூன்று

படித்துறை நான்கு

படித்துறை ஐந்து

அடுத்து நான் சொல்லப்போரவங்களுக்கும் என்னோட அறிமுகம் தேவை இல்லை, இவங்களோட பதிவுகளில் சில

சித்திரக்கூடம் ஒன்று

சித்திரக்கூடம் ரெண்டு

சித்திரக்கூடம் மூன்று

சித்திரக்கூடம் நான்கு

சித்திரக்கூடம் ஐந்து

இன்று இதோடு முடித்து கொள்கிறேன், மீண்டும் நாளை சந்திக்கலாம்

Wednesday, May 13, 2009

மறுபடியும் வந்துட்டேன் வேலைக்கு

கொஞ்சம் அளவு கடந்த ஆணி பிடுங்க வேண்டிய இருந்தாலே நேத்து என்னால் எழுத முடியலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.எங்க முடிச்சேன்.. எங்க ஆரம்பிக்கிறதுன்னு கொஞ்சம் குழப்பம் தான், நேத்து வகுப்பு அறைக்கு வாத்தியார் வராம விட்டு போன பழைய பாடங்களையும் சேத்து இன்னைக்கு எடுக்குறேன்.

அதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும், அந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத தெரியாது.நம்ம ஊரிலே மழை பெய்வதே அதிசயம், ஆனால் இங்கே மழை எப்போதும் பெய்யும்.ஒரு சில மழை துளிகள் உங்களுக்காக

மழை ஒன்று

மழை ரெண்டு

மழை மூன்று

மழை நான்கு

மழை ஐந்து

என்னதான் வெளியூர்ல மேய்ஞ்சாலும் சொந்த ஊரு போகும் போது ஒரு தனி மகிழ்ச்சி தான்.அப்படி வருகிறவர் தான் இந்த எங்க ஊருக்காரர்.மலையும் மலை சார்ந்த இடத்துக்கு சொந்தக்கார்.குற்றால சாரல் வீசும், அது எங்க ஊரு வருங்குள்ளேயும் அனல் காத்தாக மாறி விடும்

சிவசைலம் ஒன்று

சிவசைலம் ரெண்டு

சிவசைலம் மூன்று

சிவசைலம் நான்கு

சிவசைலம் ஐந்து

மனதை மயக்கும் இன்னொருவரின் பதிவுகளில் சில

மனம் ஒன்று

மனம் ரெண்டு

மனம் மூன்று

மனம் நான்கு

மனம் ஐந்து


இன்னும் சில இருக்கு முரண் தொடைக்கு சொந்தக்காரனா இவரின் எழுத்துக்களும் பிடிக்கும். இவரோட நவீன விக்கிரமாதித்தன் கதைகள் நல்லா இருக்கும், அந்த கதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.


முரண் தொடை ஒன்று

முரண் தொடை ரெண்டு


இன்னொருத்தரையும் குறிப்பா சொல்லியாகனும், நான் இப்ப மொக்கை அனுபபங்கள் எழுதுவதற்கு காரணம் இவருதான், சும்மா உலக்கையை விடாம அடிகிறவர். அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.

குடுகுடுப்பை ஒன்று

குடுகுடுப்பை ரெண்டு

குடுகுடுப்பை மூன்று

குடுகுடுப்பை நான்கு

குடுகுடுப்பை ஐந்து


நேத்திக்கும் சேத்து இன்னைக்கு நிறைய பாடம் எடுத்தாச்சுனு நினைக்கிறன், மறுபடி நாளைக்கு பார்க்கலாமா

Monday, May 11, 2009

தகவல் களஞ்சியம்

படிச்சது கை அளவு படிக்காதது வானளவு மாதிரி இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கு அதுக்காக இருக்கிற வேலையை விட்டு விட்டு கல்லூரியிலே படிக்க வயசு இருந்தாலும், மனசு இல்லை. எதோ கஷ்டப்பட்டு பரிச்சைக்கு முந்தின நாள் விடிய விடிய படிச்சி பதில் தாள்ல திருத்துபவருக்கு விண்ணப்ப கடிதம், அன்பளிப்பு கடிதம் எழுதி தேர்விலே தேர்ச்சி அடைந்த பழைய கதை இன்னும் மறக்கலை.

ஆனா ஒருசில பேர் பதிவுகளை படிச்சா இப்படி நான் என்னைக்கு பதிவு எழுதப்போறேன்னு ரெம்ப யோசித்து முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தாலே,அவங்களோட எழுத்துகளை ரெம்ப ரசித்து படிப்பேன்னு சொன்னா நீங்க நம்புவீங்க என்ற நம்பிக்கையிலே,பார்வையிலே உள்ள சிலவற்றை உங்களுக்காக.இவங்களை எல்லாம் வலைச்சரத்திலே அறிமுகப்படுத்துவதிலே எனக்குத்தான் பெருமை. நான் துண்டு போடுறேன்னு எழுத காரணமும் இவர் தான், அதுக்காக அவருக்கு துண்டு போட முடியலை

பார்வைகள் ஒன்று

பார்வைகள் ரெண்டு

பார்வைகள் மூன்று

பார்வைகள் நான்கு

பார்வைகள் ஐந்து


ஒரு வழியா பாதிகடல் தாண்டி விட்டேன்.இன்னொருவரையும் சொல்லணும் இவரும் ரசிக்கிற மாதிரி எழுதுவார், பதிவிலே நிறைய நல்ல நல்ல தகவல்களை தருவார்.

துக்ளக் ஒன்று

துகளக் இரண்டு

துக்ளக் மூன்று

துக்ளக் நான்கு

துக்ளக் ஐந்து


ஒரு பானை பதிவுக்கு ஒரு சில பதிவுகள் பதம் என்பதைப்போல கொஞ்சம் பதிவுகளைதான் சுட்டி காட்டினேன், இவங்களோட கடைப்பக்கம் ஒரு பெரிய தகவல் களஞ்சியமே இருக்கு. இன்னைக்கு இவ்வளவு தான், நாளைக்கு கண்டிப்பா நிறைய பதிவர்களைப் பத்தி சொல்லுறேன், தகவல் குறைவாக இருந்தாலும் பதிவுகளிலே மன நிறைவு வரும் என்ற நம்பிக்கையோடு நாளை பார்க்கலாம்

செல் விருந்தோம்புதலும் வருவிருந்து எதிர்பார்த்தலும் ,,,,,,

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் லதானந்த் ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஆறு பதிவுகள் இட்டு ஏறத்தாழ எண்பதற்கும் மேலான மறு மொழிகள் பெற்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். எடுத்த செயலைச் செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகள்

அடுத்த படியாக, வருகிற வாரத்திற்கு, ஆசிரியராகப் பொறுப்பேற்க அருமை நண்பர் நசரேயன் வருகிறார். அவரை இரு கரம் கூப்பி, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://yesuvadian.blogspot.com/

Sunday, May 10, 2009

நானும் வாத்தியார் ஆகிவிட்டேன்

நான் எதோ வாய்க்கு வந்த மொக்கைகளை எழுதி பிழைப்பை ஓட்டி கிட்டு இருந்தேன்.தேர்தல் நேரத்திலே புதுசா திட்டங்களோ வேலை வாய்ப்புகளோ அறிமுகப்படுத்துக் ௬டாதுன்னு தேர்தல் ஆணையம் சொல்லி இருந்தாலும், எனக்கு ஒரு வாரத்துக்கு வாத்தியார் வேலை கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு நன்றி.நான் பள்ளி ௬டத்திலேயும் சரி, கல்லூரியிலும் சரி முன்னாடி இருக்கிற நண்பர்களையும், பின்னாடி இருக்கிற நண்பர்களையும் பார்த்து எழுதியே பழக்கம்.இப்ப செய்யுற வேலையிலும் தேடுவண்டி கூகிள் உதவியாலே அதையே தான் இன்னும் செய்துகிட்டு இருக்கேன்.

நாம்ம ஊரு சினிமா நடிகைகள் மாதிரி, நான் எழுத வந்ததே ஒரு விபத்துன்னு சொல்லி உங்களை கலவரப்படுத்த விரும்ப வில்லை.வலைப்பதிவு உலகம் இருக்குன்னு எனக்கு ரெம்ப நாளா தெரியாது, காரணம் கூகிள் ஆண்டவர் என்கிட்டே சொல்லவில்லை தேடும்போது, ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி என் கல்லூரி நண்பர்கள் மூலமாத்தான் இப்படி ஒரு விஷயம் இருகிறதே தெரிஞ்சது, அவரு கடந்த ஐந்து வருடங்களா எழுதி கிட்டு இருக்காரு.மாம்பழச்சாலை என்ற குழுப்பதிவை ரெண்டு வருடமாக நடத்தி வருகிறார், அங்கே திருகுறளுக்கு உரையும், வெண்பாக்களுக்கும் எழுதி இணைய தளம் மூலமாக தமிழுக்கு சேவை செய்து வருகிறார்.இது அவரோட சொந்த வீடு, இங்கேயும் நிறையை விசயங்கள் ரசிப்பதற்கு இருக்கு.

என்னைப் படு குழியிலே தள்ளி விட்ட பெருமை இன்னொருக்கும் இருக்கு, அவர் முகவைக்கு மண்ணுக்கு சொந்தக்கார், அது ஒரு கந்தக பூமி, தண்ணியில்லா காடு என்று சினிமாவிலே ௬றப்பட்டாலும், நல்ல மன உறுதியுள்ள நண்பனை தந்த நிலம், அவரும் நல்ல எழுத்தாளர் யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற வீட்டுக்கு சொந்தக்காரர்.

நான் கல்லூரியிலே படிச்சப்ப என்னை பார்க்க வந்த எங்க அம்மா இவரிடம் " தம்பி நசரேயனை நல்ல பசங்களோடு சேரச்சொல்லு, கேட்ட பசங்க என் புள்ளையை பீடி, சிகரட் என்று குடிக்க சொல்லி கெடுத்து புடுவாங்க" ன்னு சொன்னதும் மயங்கி விழுந்துட்டான், ஏன்னா அதுக்கு முந்தின நாள் தான் அவனுக்கு பீடி குடிக்க சொல்லி கொடுத்தேன். அன்புமணி ஐயா, தேர்தல் பிரச்சரத்திலே மும்முரமாக ஈடு பட்டு இருப்பதால் இதற்க்கு தடை விதிக்க வேண்டாம் என உத்தரவு இட்டு இருப்பதால் மேற்௬றிய சம்பவம் தணிக்கை செய்யப்படவில்லை


இப்படி உறுப்படியா நாலு விஷயம் பண்ணிக்கிற நல்லவங்க மத்தியிலே என்னை மாதிரி தமிழை பிழை இல்லாம எழுத தெரியாத உருப்படாத ஒன்னும் இருக்கு, இதை சொல்லும் போது எனக்கு இன்னொரு கொசு வத்தி வருது, வலை உலகின் பின்னூட்ட பிதாமகன் எங்கள் நைஜீரியா சிங்கம், இன்னும் அவங்க ஊரு திவிரவாதிகளாலே கடத்தப் படாத தமிழர் உருப்படாத அணிமா அவர்கள் தான் என் கடைக்கு முதல்ல வந்து போணியை ஆரம்பித்து வைத்தார். எனக்கு அவருக்கும் இடையிலே ஒரு நிரந்த வித்தியாசம் அவரு கொஞ்சம் கருப்பு, நான் அட்டு கருப்பு.


உருப்படியா எழுதிற அளவுக்கு சரக்கு ஒன்னும் என்கிட்டே இல்லை, சட்டியிலே இருந்தாதானே அகப்பையிலே வரும், அதனாலே கும்மி அடிக்கிற கும்பல் குட சேர்ந்துகிட்டு நாலு கும்மியை போட்டு காலந்தள்ளுகிறேன்.
எனக்கு மொக்கை போடுறதை தவிர வேற ஏதும் தெரியாது, இருந்தாலும் நல்லா எழுதுற ஒரு நாலு பேரை அறிமுகம் செய்வது என்பது ரெம்ப கஷ்டம், என்னை தவிர எல்லோருமே நல்லாவே எழுதுறாங்க என்பது மறுக்க முடியாத விஷயம், அதனாலே சான்றோர் நிறைந்த இந்த சபையிலே வருகிறவர்கள், தலைவர் படம் பார்க்க வருகிற மாதிரி அதிக எதிர் பார்ப்புகளோடு வரவேண்டாம், நானே கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்கி நடித்த படத்தை வலுக்கட்டாயமா படம் பார்க்க நான் காசு கொடுத்து உங்களை அழைத்த உணர்வோடு வாங்க.


நானே ஒரு பதிவு எழுதி ரெண்டு பேரை அதை படிக்க வைக்கும் குள்ளேயும் உயிரே போகுது, இன்னொரு ஒரு வாரத்திற்கு என்ன செய்யப்போறேன்னு நினைச்சா ஈரக்கொலை நடுங்குது.ம்ம் ஏதாவது தேத்திகிட்டு நாளைக்கு வாரேன்.

Saturday, May 9, 2009

மகளிர் மட்டும்


சமீபத்தில எழுத வந்தாலும் தனித் தனிமையோட எழுதுறவிங்க மயில். கோயமுத்தூர்க்காரவிங்க.

அரிசியும் பருப்பும் சாதம்னாலும், பழைய நண்பர்களைப் பற்றி எழுதுறதுனாலும், காட்டமான சினிமா விமர்சனம்னாலும் அந்தத் தலைப்புக்கேத்தபடி சடார்னு நடையும் சொற் பிரயோகங்களும் மாறுது. இனிமையான் இளமையான் நடை. கொஞ்சம் முயற்சி பண்ணுனா இவிங்க ஜனரஞ்சக எழுத்தாளராவது உறுதி. சிறுகதை எழுத முயற்சிக்கலாம். சிறுகதை டிஸ்கஷனிலும் ஆர்வம் உள்ளவிங்க.

மயில் வீட்டுக்குப் போயிருந்ந்தப்போ மெயில் செக் பண்றதுக்காக கம்ப்யூட்டர் பக்கம் போனேன். மௌசில் இடது வலது பட்டன்களை மாற்றிப் பயன்படுத்தும் அளவுக்குப் புதுமை விரும்பி.

தக்காளிச் சந்தகை, தேங்காச் சந்தகை, இனிப்புச் சந்தகைனு அசத்திட்டாங்க. அருமையான சமையல்!

இவிங்க வலைப்பூ :
http://mayilviji.blogspot.com/

சின்ன அம்மிணி

இவிங்களும் கோயமுத்தூர்க்காரவிங்கதான். ஊட்டுக்கார அய்யன் உலகம் சுத்துற வாலிபன்(?) அதனால இவிங்களுக்கும் வெளிநாடுகள் நல்ல பரிச்சயம்.

நல்லாக் கட்டுரை எழுதுவாங்க. நேர்ல பாக்கிற மாதிரி இருக்கும் படிக்குறப்போ.

தண்ணியடிச்சவிங்களக் கம்ப்பேர் பண்ணி போட்டோ போட்ருக்காங்க நல்லாருக்கு. நான் படிச்ச நேரம் அந்தப் பதிவு ரெண்டு ரெண்டாத் தெரிஞ்சது. சிறுகதை ஒண்ணை என் பார்வைக்கு அனுப்ச்சாங்க. சில திருத்தம் பண்ணினேன். அரண்டு போயிட்டாங்க.

ஆன்மீகம் பத்தியும் அள்ளி விடுவாங்க. படிங்க. இவிங்க வலைப்பூ :
http://chinnaammini.blogspot.com/


சிந்து சுபாஷ் : கோவை மாவட்டத்துக்காரங்க.

இப்ப அரபு நாடுகளிலே ஒண்ணில இருக்காங்க. எழுத்தும் அழகு. இவிங்களும் நெம்ப அழகு. ஒரு தேர்ந்த வர்ணனையாளரோட நேர்முக வர்ணனை மாதிரி இருக்கும் இவரோட எழுத்து. குறிப்பா ஒரு விழாவை இவிங்க ஆர்கனைஸ் பண்ணும்போது ஏற்பட்ட சிரமங்கள நேர்ல பாக்குற மாதிரி விவரிப்பாங்க. தயிர்சாதமும் காப்பியும் பதிவு மழைச் சாரலில் லேசா நனைகிற உணர்வை ஏற்படுத்தும். அறிவுப்பல் மொளச்சு அவதிப் பட்டதால பதினஞ்சு நாளா எங்கூடப் பேசலை. இண்ணைக்குத்தான் வலி செரியாயிப் பேசுனாங்க.சரியான குறும்பு.

http://sindhusubash.blogspot.com/ இவிங்களோட வலைப் பூ


விக்னேஷ்வரி

கோவையில கல்லூரியில படிச்சு வேலையிலும் இருந்திருக்காங்க.

இவிங்க எழுத்தோட சிறப்பு என்னன்னா தன்னோட நாட்குறிப்பக் கூட மத்தவங்களோடது மாதிரி சொல்லுவாங்க. புரியற மாதிரி சொல்ல முயற்சிக்கிறேன். பொதுவா வலைப்பூ என்பதையே பெரும்பாலும் நாட்குறிப்பு மாதிரி நெம்பப் பேரு எழுதிகிட்டிருக்காங்க. செம போரடிக்கும். ஆனா விக்னேஷ்வரியோட சில நாட்குறிப்புக்களப் படிங்க. நெம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

குறிப்பா இவிங்க திருமண விழா வைபவங்களை ஆனந்தம் கொப்புளிக்க இயல்பா விவரிப்பாங்க. ஓட்டலுக்குப் போயிச் சாப்பிடுறதை இவ்வளவு சுவையா ஆரும் சொன்னது கெடையாது.

என்ன... லேசா மேல்தட்டு வர்க்கச் சாயல் எழுத்துக்களில் தென்படுவதைத் தவிர்க்கலாம். மத்தபடி விக்கிக்கு எழுத்துலகில் நல்ல பிரகாசமான வாய்ப்பிருக்கு.

http://vigneshwari.blogspot.com

இன்னும்

சந்தனமுல்லை http://sandanamullai.blogspot.com/
மாதங்கி http://clickmathangi.blogspot.com/
உஷா http://nunippul.blogspot.com/
உமா சக்தி http://umashakthi.blogspot.com/
நிர்மலா http://nirmalaa.blogspot.com/
ல‌ஷ்மி http://malarvanam.blogspot.com/
மங்கை http://manggai.blogspot.com/
மெஹருன்னிஸா
சுமதி
தமிழரசி
http://ezhuthoosai.blogspot.com/

ஜீவா http://jeevaflora.blogspot.com/

இவிங்களப் பத்தியெல்லாம் தனித் தனியாச் சொல்லணும்னு குறிச்சு வெச்சிருந்தேன். அவசர அழைப்பு வயர்லெஸ்ல. அதனால பதிவை இதோட முடிச்சுக்கிறேன்.

இன்னும் உயிர்த் தோழி ஆரையாச்சும் குறிப்பிடாம உட்ருக்கேனா? அப்படியிருந்தா மன்னிசிருங்கோ! வேணும்னு ‘பண்ணி’ யிருக்கமாட்டேன்.


வலைச் சரத்தை ஆரமிச்சவரு அனுராக் அப்படிங்கிற சிந்தாநதினு கேள்விப்பட்டேன். அவருக்கும் என் நன்றி. ஆமா! அவரு இப்ப எங்கிருக்காரு?

இறுதியாக வலைப் பதிவர்களுக்குச் சில வேண்டுகோள்கள்.
தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.
உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.
குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.
அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.
பதிவர்களைச் சந்தித்துப் பேசவும் தொலைபேசியில் பேசவும் காசை விரயம் செய்யாதீர்கள்.
உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் - பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.
நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.

என்னை வலைச் சரம் கோர்க்கப் பணித்த திரு.சீனாவுக்கு நெம்ப நன்றி! விடைபெறுகிறேன்!

(கேள்வி பதிலுக்குக் கேக்க மறந்திராதீங்க!)

**********************************************************************************



மரியாதைக்குரியவர்கள்


மரியாதைக்குரிய பதிவர்கள் பட்டியலும் இருக்கு. பிரச்சினை என்னன்னா எழுதுற அவுதியில சில பேர்த்த உட்டுப் போடுவேன். அவிங்க சங்கடப் பட்றாங்களோ இல்லியோ நம்பளுக்கு அங்கலாப்பா ஆயிரும். பாப்பம்.

முக்கியமானவரு ஜ்யோவ்ராம் சுந்தர். நானு சென்னைக்கு வர்ரப்பெல்லாம் சந்திகோணும்னு நெனைப்பேன். அவரும் ’எங்கன்னு சொல்லுங்க? வர்ரம்’பாரு! எங்க முடியிது? கால்ல சுடுதண்ணி ஊத்திகிட்டு உடனே ஓட்ற மாதிரியில்ல இருக்கு. இருந்தாலும் போன தரவ போன் பண்ணதும் ரூம்புக்கு வந்தாரு. அதுக்கு முந்தியே ரமேஷ் வைத்யாவும் ரூம்புல இருந்ததால ஜாலியா இருந்துச்சு சந்திப்பு. (என்னப் பொருத்த வரைக்கும் மேக்சிமம் 4 பேருதான் ஒரு சிட்டிங் சந்திப்புக்கு லாயக்கு. அதுக்கு மேல்பட்டா கொசலமும் புறங்கூறலும்தான் நடக்குது.)

பொதுவா மொதோ தரவ பாக்குற பதிவருங்க லேசாக் காச்சலும் அஜீர்ணமும் வந்து, மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி சங்கடமா ஒக்காந்திருப்பாங்க. இந்தப் பிரச்சின ஜ்யோவ்ராம் சுந்தர்கிட்ட இல்ல. நெம்ப நாளு பழகுனவரு மாதிரிப் பேசுனாரு.

எங்கிட்ட ஒரு கொணம். பேசுறவிங்களுக்கு என்ன இன்ட்ரஸ்ட்னு லேசாத் தெரிஞ்சுக்குவேன். அப்புறம் அவிங்க இன்ட்ரஸ்டுக்குத் தகுந்த மாதிரி விஷயங்களாத் தேர்ந்தெடுத்துப் பேசுவேன். ஒருபோதும் ஆர்கியூமெண்ட் பண்ண மாட்டேன்.

பொதுவாத் தமிழ் இலக்கியம் பத்திப் பேசுறவிங்களோட இலக்கிய அறிவை டெஸ்ட் பண்ணவும் சில மெத்தேட் வெச்சிருக்கேன். க.நா.சு, ஆர்.ஷண்முகசுந்தரம்னு லேசா ஆரமிப்பேன். திரு திருனு முழிச்சா அவிங்களோட தமிழ் இலக்கிய ஸ்டேண்டர்ட்ட லேசாப் புரிஞ்சுக்கலாம்.

ஆனா பல விஷயங்களில ஜ்யோவ்ராம் சுந்தர் மாஸ்டரா இருக்காரு. ஜ்யோவ்ராம் சுந்தர் முதல் தர வாசகர். ஏன்னாக்கா முதல் தர எழுத்தாளர்களைத் தெரிஞ்சு வெச்சிருக்கார். படிச்சிருக்காரு. ஆளும் நெம்ப ஸ்மார்ட்டா இருக்காரு.

நா.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி, சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, இவிங்கள வாசிச்சவிங்க,

தி.ஜானகிராமன், ல.ச.ரா, சுஜாதா, சு.சமுத்திரம் படிச்சவிங்க

ராஜேஷ்குமார், பாலகுமாரன், ரமணிச்சந்திரன் படிக்கிறவிங்கனு வாசகர்களிலே நெம்ப கிரேடு இருக்கு.

ஜ்யோவ்ராம் எல்லாம் படிச்சிருக்காரு.

கோபி கிருஷ்ணனின் கதைகளை இலவசமா இணைய தள வாசகர்களுக்குக் கொண்டு போற முயற்சிக்கு என்னோட பாராட்டுக்கள். (பெருமைக்காகப் புஸ்தகங்கள் சேமிச்சு ஊட்டுக்கு வர்ரவிங்க பார்வையில படுற மாதிரி வெக்கிற அன்பர்கள் சாக்கிரிதி!)

இவரோட வலைப்பூ முகவரி :
http://jyovramsundar.blogspot.com

லக்கிலுக், அய்யா ஹூஸ்டன் கணேசன், காசி ஆறுமுகம், ரமேஷ் வைத்யா இவிங்க முகவரியெல்லாம் குடுக்கிறது ‘சூரியன் கெழக்க உதிக்குது’னு சொல்ற மாதிரி. அதனால உட்டர்ரேன். பாப்பம்.

ரூம்புல பேசிகிட்டிருக்கறப்போ ”நரசிம்மன்னு ஒருத்தர் பிளாக் எழுதறாரு. இலக்கியமெல்லாம் எழுதுவாரு”. அப்படினு ரமேஷ் வைத்யா சொன்னாரு. ஒடனே போனப் போட்டுப் பேசவுங் குடுத்தாரு. பேசுறப்போவே புடிச்சுப் போச்சு எனக்கு. ரூம்புக்கு வர்ரன்னாரு. எல்லாரும் காத்திருந்தோம். அப்புறம் எங்கிருந்து என்ன தகவல் போச்சோ அவருக்கு...... ’ஆருக்கோ ஒடம்பு முடியலை.அதனால வரலை’ அப்படின்ட்டாரு. பாப்பம். அடுத்த விஸ்கா சென்னை போகுறப்போ அவரைச் சந்திக்க முடியுதான்ட்டு!


இங்க இருக்கிற வலைப்பூவைப் பாருங்க.
http://maddox.xmission.com/
பதிவுக்கு மேட்டர் கிடைக்காமல் அல்லாடுற அன்பர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் இந்த வலைப் பூ. அர கொற இங்கிலீஷ் தெரிஞ்சாலுங்கூடிப் போதும். ஐடியாக்களை உருவி நகாசு வேல பண்ணித் தாளிச்சர்லாம்.


அடுத்த பதிவு exclusively about lady bloggers. Right?
************************************************************************

Thursday, May 7, 2009

கலந்து கட்டியாக


இண்ணக்குக் கலந்து கட்டியாச் சில பேரப் பத்திப் பாப்பம்.
விஜய் கோபாலசாமி என்ர மாப்பிள்ளை கோவாலு. ஆரம்ப மொதலே என்ர சிஷ்யனா இருக்காரு. மாப்ளனு அன்பாக் கூப்புடுவேன்.
ஒற்றர் படையில முன்னணி வகிப்பவரு. என்னையப் பத்தி எங்காச்சும் இணையத்துல வந்துச்சுனா உடனே போன் பண்ணிச் சொல்லிப் போடுவாரு. தஞ்சாவூர்க்காரரு. இப்பம் ஹதராபாத்தில இருக்காரு.

இவரோட முகவரி
http://vijaygopalswami.wordpress.com

”வாயுத்தொல்லை” அப்படிங்கிற இவரோட பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம்
“டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

அப்பறம் ஜோசப் பால்ராஜ்!

சிஙக்பூர்ல இருக்காரு. இவரும் என்ர பதிவுகளோட ரெகுலர் வாசகர். என்ர கம்ப்யூட்டர் பத்தின சந்தேகங்களுக்கும் அப்பப்ப பதில் சொல்லுவாரு.

வேலை மாறும்போதுங்கூடி எங்கிட்ட ஆலோசனை கேப்பாரு. சிலசமயம் சொந்தப் பிரச்சினைகளையும் என்கிட்டப் பகிர்ந்துக்குவாரு. நான் எழுதாம இருக்குறப்பெல்லாம் எழுதச் சொல்லி வற்புறுத்துவாரு. மத்தவிங்களுக்குச் சொல்லி விளம்பரம் தேடாம நெம்பப் பேருக்கு உபகாரங்கள் பண்ணியிருக்காரு. இவரு பேர்ல நன் வெச்சிருக்கிற அபிமானத்தக் காட்டுறதுக்காக என்ர படைப்புகளிலே ஏதாவது ஒரு கேரக்டருக்கு இவரு பேரை வெச்சுப் போடுவேன்.
இவரோட பதிவுக்கு :
www.maraneri.com

இனி
பத்ரி சேஷாத்த்ரி. சென்னைக்காரர்.

இவரது உலகம் பரந்து விரிந்தது. பல களங்களிலும் உருப்படியான விஷயங்கள் சொல்றார். தமிழ் வளரப் பணிகள் செய்கிறார். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” அப்படிங்கிற கான்சப்ட் நல்லாப் பின்பற்றுகிறார்.

பொதுவா நெம்பப் பதிவருங்களோட பதிவுகளப் பாத்தா நாட்குறிப்பு மாதிரி இருக்கும்.”காலையில் எழுந்தேன் வயிறு கடமுடா என்றது. அப்புறம் கரகரவென்று வந்தது” அப்படினு தங்களோட அன்றாட நிகழ்வுகளைக் கொட்டுவாங்க.

இவர் அப்படியில்ல. அவனாசியத் தாண்டியும் உலகம் இருக்குதுனு தெரிஞ்சுக்க இவரு பதிவுகளைப் படிக்கலாம்.

இவரோட வலைப் பூ முகவரி : http://thoughtsintamil.blogspot.com

அடுத்தது அகரம் அமுதா.

இவரும் சிங்கப்பூர்லதான் இருக்காரு. வெண்பா எழுதுறதுல நெம்பத் திறமையானவரு. சமயத்துல பின்னூட்டமெல்லாம் வெண்பாவுல எழுதிருவாரு. நான் நடத்துன வெண்பாப் போட்டில மொதோப் ப்ரைஸ் வாங்குனவரு.

இவரு எழுதுன குறள் வெண்பா ஒண்ணு அருமையா இருக்கும்.

கொங்கு தமிழிருந்தும் இங்கிலிஷை வைத்திடுவாள்
நுங்குநிகர் நாக்கின் நுனி!”
அடடா என்ன உவமை! என்ன உவமை! எப்பவோ படிச்சிருக்கேன் அரவப் படம்னு. அந்த மாதிரி உவமை இவரோட நுங்கு உவமை.

அதுக்கு முந்தி ஒரு ஃப்ளாஷ்பேக்.

ஆராச்சும் கொமுறிங்க இங்கிலீஷ்ல தஸ்ஸு புஸ்ஸுனு பேசுனா லதாளுக்குக் கோவம் வந்துரும்.

”............. க்கு மேல எட்டி ஒரு ஈடு போட்டா ஒளுக்கமாத் தமிள்ள பேசுவாளுக” அப்படினு காட்டமா விமர்சிப்பா.
அது இருக்கட்டும்.
அகரம் அமுதாவுக்கும் அத்தசோட்டுக் கோவம் இருக்கும் போல.
கொங்கு நாட்டுத் தமிழ் இருக்குறப்போ இங்கிலீஷ்ல பேசுற டிங்கிகளப் பத்தி.

இப்ப அதல்ல பிரச்சினை.

உவமைங்கண்ணா உவமை!

கொமுறியோட நாக்குக்கு உவமை சொல்றார் பாருங்க!
நுங்கு நிகர் நாக்காம்.

கொஞ்சம் வெலாவரியாப் பாப்பம்.

நொங்கு தின்னுருக்கீங்களா? எள நொங்கு குளுமையா இருக்கும். ஈரப் பதத்தோட இருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டுதான் நொங்கைத் திறக்கோணும். அதுக்கப்பறம் பாத்தீங்கன்னா வளு வளுன்னு இருக்கும். லேசா ஒரு மாதிரி பிரத்தியேகமான வாசனையாவும் இருக்கும். நாக்கால வருடினா அப்பிடியே உறிஞ்சிரலாம்னு தோணும். சூப்பியும் சுவைக்கலாம். பாக்கறதுக்கும் அட்டகாசமாயிருக்கும். லேசா சுவைக்கிறப்போ மென்மையா சத்தமும் வரும். ருசி கிறுகிறுக்க வைக்கும். ஈரப் பதத்தோட லேசாப் பசை மாதிரி வாயெல்லாம் ஒட்டும். வெயிலுக்குக் குளிர்ச்சியாயும், குளுர் காலத்துல லேசா வெதுவெதுப்பாயும் இருக்கும். இப்படி ஐம் புலனுக்கும் கிரிகிரி தர்ர நொங்கைப் பொருத்தமா உவமையாக்கியிருக்காரு.

உவமைங்கண்ணா உவமை!

இவரோட வலைப் பூவுக்கு :
http://taminglishpoem.blogspot.com/2008/05/blog-post_19.html

அப்புறம் பதிவுலக ஒளி ஓவியர் நந்து f/o நிலா. பெரும்பாலும் பின்னூட்டங்கள்தான் போடுவாரு. ஆஸ்பத்திரி சம்பந்தமா இவர் போட்ட பதிவு குறிப்பிடத் தக்கது. வனவிலங்குக் கணக்கெடுப்பு நடந்த 3 நாளும் எங்கூடவே இருந்தாரு. நந்து பெரிய போட்டோகிராஃபர். ஏராளமான போட்டோக்களை எடுத்திருக்காரு. ஃப்ளிக்கர், நேச்சுரல் வாச் அப்படினெல்லாம் புரியாம பேசிகிட்டிருப்பாரு. நல்ல கம்பனி. தரமான பதிவர். இவரோட வலைப்பூ முகவரி: http://nandhu1.blogspot.com/

********************************************************************************



*************************************************************