07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 18, 2010

முதல் நாள் ஆசிரியப் பணி

சில நேரங்களில்..நாம் வேலை செய்யும் அலுவலகத்தில்..நமக்குப் பின் வந்தவர்கள் பதவி உயர்வு பெறுகையில்..நம்மை நிர்வாகம் கன்ஸிடர் பண்ணவில்லையே என்ற மெலிய வருத்தம் ஏற்படுவதுண்டு.ஆனால் அதற்காக சில நாட்கள்?மாதங்கள் கழித்து நமக்கும் அப்பதவி கிடைக்கையில்..Better late than never என மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு..அப்பதவியை ஏற்றதும் உண்டு.

கிட்டத்தட்ட அதே நிலை எனக்கு..ஆனால் சீனா சார் சொன்னதும்..உடனே சரி என்றும் சொல்லிவிட்டேன்..

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என பொய் சொல்வானேன்.

நான் பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஒடிவிட்டன. தமிழா..தமிழா..என்பது என் வலைப்பூ பெயர்.நான் எழுதிய பதிவுகளில் எது எனக்குப் பிடித்த பதிவு?

நம் குழந்தைகளில் ஏதேனும் ஒன்று சோனியாய் இருந்தாலும்..(சோனியா தானே இன்று பாரதத்தை ஆட்டிப்படைக்கிறார்)அது நம் மனதிற்குத் தெரிந்தாலும்..அதை விட்டுக் கொடுக்க முடியுமா வெளியில்..அதுபோல நான் எழுதிய பதிவுகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும்.

தவிர மகாபாரதத்தை மிகவும் எளிய நடையில் மகாபாரதம் என்றே ஒரு வலைப்பக்கத்தில் எழுதுகிறேன். வள்ளுவனையும் விட்டு வைக்கவில்லை

சில முக்கியச் செய்திகளை தொகுத்து அவ்வப்போது கறக கசடற வில் அளித்து வருகிறேன்.

என்னை ஊக்குவிக்கும் அனைத்து பதிவர்களுக்கும்...பின்னூட்டம் இடுபவர்களுக்கும் என் நன்றி.

சரி..சரி..போதும் சுயதம்பட்டம் என நீங்கள் சொவது காதில் விழுகிறது..

ஆனால்..எந்த திறமைசாலியும்..தம்பட்டம் அடிக்காவிட்டால் சங்கமத்தில் காணாமல் போக வாய்ப்புண்டு.அதுதான்,,,ஹி..ஹி..

நாளை சந்திப்போம்

22 comments:

  1. முதல் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாங்க சார்..வந்து கலக்குங்க..:)

    ReplyDelete
  3. அய்யா,

    உங்களின் அறிமுகத்தோடு அசத்தலாய் ஆரம்பித்திருக்கிறீர்கள்...

    இன்னும் நிறைய வரும் நாட்களில்...

    பிரபாகர்.

    ReplyDelete
  4. அன்பின் டிவிஆர்

    பதவி உயர்வுகள் வங்கியில் பல காரணங்களினால் தள்ளிப் போகிறது - இருப்பினும் தாமதமாகவாவது கிடைத்து விடுகிறது - ம்ம்ம்

    கேட்ட உடன் சரி எனச் சொன்னதற்கு நன்றி - இத்தனை பதிவுகளா - இத்தனை இடுகைகளா - பிரமிப்பாய் இருக்கிறது.

    ம்காபாரதம் - வள்ளுவம் - கற்ககசடற - தமிழா தமிழா - ம்ம்ம் இதில் கதை நாடகம் என பல்வேறு முகங்கள் - நேரம் எங்கிருந்து கிடைக்கிறது நண்பரே

    நல்வாழ்த்துகள் டிவிஆர்

    லேபிள் டிவிஆர் என இட்டீர்களானால் தேடும் போது இடுகைகள் எளிதாகக் கிடைக்கும். இதற்கும் இனிமேலும் டிவிஆர் என லேபிள் இடுமாறு கேடுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. மிக்க வாழ்த்துக்கள். உண்மையில் நீங்கள் எழுதிய மகாபாரதம் மிக அருமை. நன்றி.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்..இதுவரை உங்கள் வலை படித்ததில்லை என எண்ணுகிறேன்..இனி தொடர்வேன்..ஆசிரியர் பணியை சிறப்பாக செய்யுங்கள்..

    ReplyDelete
  7. வாழ்த்துகள்.

    சில இடுகைகளை படித்திருக்கிறேன்.

    நிறைய படிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. முதல் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  10. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. முதல் நாள் வாழ்த்துகள்.

    தமிழா தமிழா வலைப்பூவை தவிர உங்களின் மற்ற வலைப்பூக்களைப் பார்த்தது இல்லை. இன்று பார்க்கின்றேன்.

    ReplyDelete
  12. முதல் நாள் வாழ்த்துகள் டி.வி.ஆர் சார். மற்ற வலைப்பூக்கள் சர்ப்ரைஸ்

    ReplyDelete
  13. முதல் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  15. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    சந்தோஷமாகத் தொடங்குங்க.

    ReplyDelete
  16. பணி சிற(கடி)க்க வாழ்த்துகள் !

    ReplyDelete
  17. பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  18. check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
    you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது