07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 2, 2010

வித விதக் கதம்பம்...

வணக்கங்ணா.

இந்த ஆனை, ரயிலு, ஏரோப்ளேனு, கடலு இதெல்லாம் 2 வயசு குழந்தைன்னாலும் 92 வயசு யூத்துன்னாலும் ஹானு வாய் பொளந்து பாக்காம இருக்க முடியுமாங்ணா. இந்த வலையுலகத்துல சிலது அரிசி மண்டி மாதிரி, பருப்பு மண்டி மாதிரி பெசலிஸ்ட் வலைப்பூ. என்னைய மாதிரி வத்திபொட்டில இருந்து வெங்காயம் வரைக்கும் ஏதோ கொஞ்சம் பலசரக்கு கடை மாதிரி கொஞ்சம் இருக்கு.

பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாதிரி எல்லாம் கிடைக்கும், எல்லாருக்கும் கிடைக்கும் மாதிரியான வலைப்பூ ரொம்பக் கொஞ்சம். போனா முதல்ல ஒரு பிரமிப்பு. கட்டி வைக்கிற எழுத்து. இப்படி ஒரு ரசனையான பதிவர் டாக்டர் SUREஷ்(பழனியிலிருந்து). சிறிய வயதில் இவர் அடித்த கூத்தைப் பற்றிய பதிவு இது.

அக்த்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்கு உதாரண புருஷன் செந்தில்வேலன். இளமைவிகடனில் ஆசிரியர் போல் இவரின் கட்டுரைகள் வராத இதழ்கள் மிகக் குறைவு. சினேகமான இவரைப் போலவே இவர் எழுத்தும். பழனிக்குப் போய் வந்த அனுபவம் சொல்கிறார் படியுங்கள். கடைசி வரி படித்தவுடன் தெரியும் நான் சொன்னது சரிதான் என்று.

இன்றைய தேடலில் நான் கண்டெடுத்த இன்னொரு பிரமிப்பு ஈழப் பதிவர் சந்ருவின் பக்கம். புது வருட வாழ்த்தும் கூட நம்மைச் சுற்றியுள்ள சமூக ப்ரக்ஞையுடன் கூறிய பாங்கு கட்டிப் போட்டது.

எழுத்து மட்டுமேவா பதிவுலகில்? கணினிக்குத்தான் எத்தனை உப கருவிகள் தேவைப் படுகிறது. மருந்தும் கூட. பிரச்சனையில் பயன் படுத்தக் கூடிய இலவச மென்பொருட்கள், ஆலோசனைகள் கிடைக்கும் பதிவும் கூட முக்கிய பதிவே. வடிவேலனின் கணினி மென்பொருள் கூடமும் அத்தகையதே. இந்தச் சுட்டி ஒன்றே போதும் இதன் பின் இருக்கும் இவரின் உழைப்பைக் கூற.

இன்றைய புதியவர்கள் அறிமுகத்தில் சிலர்:

திசைகாட்டியென்ற பெயரில் எழுதும் ரோஸ்விக். எல்லாம் எழுதுகிறார். உறவுகள் குறித்த இவரின் இடுகை ஒரு சாம்பிள்.

ஊடகன் சமுதாயச் சிந்தனையுடைய இளைஞன். பொறுப்பான எழுத்து. தொலைநோக்குப் பார்வை. சமூகத்துக்கு உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்ற அவா. இதுதானே அடுத்த தலைமுறைக்குத் தேவை. கருவறை முதல் கல்லறை வரை என்ற இவரின் இடுகையைப் பாருங்கள்.

இன்றைக்குத்தான் தேனம்மையின் வலைப்பூ பார்த்தேன். கவிதைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல எழுத்து.

கயல்விழி சண்முகம்
கொங்கு தமிழில் கவிதை, கட்டுரை என்று எல்லாம் எழுதுகிறார். ஏனோ அதிகம் எழுதுவதில்லை. எழுத வைப்போமே. அழகான ஒரு கவிதையைப் படிப்போமா?

நினைவுகளுடன் நிகே என்ற வலைப்பூவின் ஆசிரியர் நிகேதா. வலையுலகுக்கு புது வரவு. தாய்மை என்ற ஒரு கவிதை திறனுக்கு சான்று.

நாளை விடைபெறுமுன் சந்திப்போம் நண்பர்களே.

18 comments:

 1. அய்யா,

  SUREஷ், வேலன், ரோஸ்விக், ஊடகன் தவிர எல்லோரும் எனக்கு புதியவர்களே. அறிமுகத்திற்கு நன்றிங்கய்யா! படிக்கிறேன், தொடர்கிறேன்.

  நன்றிங்கய்யா!

  பிரபாகர்.

  ReplyDelete
 2. பாலா அண்ணே தங்களின் உயர்வான அறிமுகத்திற்கு என் அன்பின் நன்றிகள். இதில் இன்னும்பல சிறந்த பதிவர்களை அறிமுகப் படுத்தியமைக்கும் மிக்க நன்றிகள்.

  இதில் ஊடகன், SUREஷ்(பழனியிலிருந்து), செந்தில்வேலன், சந்ரு மற்றும் வடிவேலனின் தளங்களை நான் வாசித்து மகிழ்ந்து பயன்பெற்றதுண்டு. மற்ற புதியவர்கள் எனக்கு வாசிக்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

  வலைச்சரத்திற்கு என் நன்றிகள்.

  தங்களின் இச்செயல் எங்களை தொடர்ந்து சிறப்பாக எழுத ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 3. அறிமுகத்திற்கு நன்றி தலைவரே

  ReplyDelete
 4. தேடி தேடி படித்து விடுகிறேன்,நன்றி அய்யா.

  ReplyDelete
 5. அன்பின் பாலா

  அருமையான பதிவர்களை அறிமுகம் செய்தது நன்று - புதியவர்கள் அறியப்பட வேண்டியவர்கள் - தேடிப்பிடித்து அறிமுகம் செய்தமை நன்று

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 6. பதிவர்களை அறிமுகம் செய்தது நன்று

  ReplyDelete
 7. சீனா, சுருக்-நறுக் அறிமுகங்கள். தொடர்ந்து கலக்குங்க.

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 8. அழகான அறிமுகங்கள்....
  வலைச்சரத்திற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. மதிப்பிற்குரிய ஐயா வானம்பாடிகள் அவர்களுக்கு முதலில் மிக்க நன்றி...

  தங்களின் இந்த ஊக்கம் என்னிடமிருந்து மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்கும்....

  அன்புடன்,

  ஊடகன்

  ReplyDelete
 10. (எனக்கு) நிறைய புதியவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி பாலா சார். நிச்சயம் எல்லோரையும் வாசிக்கிறேன்.

  ReplyDelete
 11. மிக்க நன்றி வானம் பாடி அவர்களே எதிர்பார்க்கவே இல்லை எனக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுப்பீர்கள் என்று
  இந்த வாழ்த்து இன்னும் என்னை செம்மையாக
  எழுதத் தூண்டுகிறது

  நன்றி வானம்பாடி அவர்களே மற்றும் சீனா சார் அவர்களே

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. வேறு பதிவிற்கான கமெண்டை இணைத்துவிட்டேன்..ஆகவே அதை டெலிட் செய்துவிட்டேன்..அவ்வளவுதான்

  ReplyDelete
 14. நல்ல பதிவர்கள். பலரை படித்திருக்கிறேன். நன்றி சார்.

  ReplyDelete
 15. ஆறாம் நாள் வாழ்த்துக்கள் ஆசானே..!

  ReplyDelete
 16. அனைவரும் அருமையான அறிமுகங்கள்

  தல,ரோஸ்விக்,ஊடகன்,தேனம்மை,சந்ரு,கயலு,நிகே,வடிவேலன்
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. @@நன்றி பிரபா
  @@நன்றி ரோஸ்விக்.
  @@நன்றி டாக்டர்(அறிமுகமா:>)
  @@நன்றிங்க அப்பன்
  @@நன்றி சீனா சார்.
  @@நன்றி டிவிஆர்சார்
  @@நன்றி ஜவஹர்
  @@நன்றி ஆரூரன்
  @@நன்றி ஊடகன்
  @@நன்றி நவாஸ்
  @@நன்றி தேனம்மை
  @@நன்றி ப்ரியாம்மா
  @@நன்றி பின்னோக்கி
  @@நன்றி வசந்த்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது