07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 3, 2010

த லாஸ்ட் ஆனா நாட் த லீஸ்ட்...

வணக்கம் நண்பர்களே!

ஆமாமுங்க. திரும்ப துண்டு இடுப்புல கட்டியாச்சிங்க. அதான் மருவாதியா கொஞ்ச பேத்த காட்டி விட்டு போட்டு கும்புடு போட்டு கிளம்பணுமுங்க.

அதென்ன எப்பப்பாரு எங்களை கடைசியாத்தான் சுட்டுவீங்களான்னு புதிய வரவுகள் நினைச்சிடப்படாதே. அதனால அவங்களுக்கு முன்னுரிமை இன்னைக்கு.

சிவாஜி சங்கர்: வித்தியாசமான கவிதைகளின் படைப்பாளி. அதுவரை பொறு என்ற இவரின் கவிதை இவர் கவிதைக் கடலில் நான் ரசித்த ஒரு முத்து.

அவனி அரவிந்தன்
: இன்றைய தேடலின் பரிசு இவரின் வலைப்பூ. பழைய வீடு  என்ற இவரின் கவிதை அசத்தலாய் இருக்கிறது.

ரெத்தின சபாபதி: பலவும் எழுதுகிறார். இயல்பான நகைச்சுவையுணர்வோடு. வாங்க பஜ்ஜி சாப்பிடலாம்  ன்றழைத்து இவர் செய்யும் லந்து அபாரம்.

மகேஸ்: இவரைத் தெரியுமுன் இவர் எழுத்து எனக்கு அறிமுகம். மிகச் சிறந்த படைப்பாளி. நல்ல எழுத்தோட்டம். அதிக வேலைப் பளு காரணமாக ஒரு தேக்கம். இந்த வருடம் முற்றுகையிட்டாவது எழுத வைக்க எண்ணம். ஈழம் குறித்த இவரின் ஒரு கனவு என்ற கவிதை சொல்லும் எழுத்தாண்மையை.

ஓரளவுக்கு எனக்களித்த பொறுப்பைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்ற திருப்தியிருப்பினும் நல்ல தமிழ் எங்கெல்லாமோ படித்து அட என வியந்திருப்பினும் இலக்கியத் தமிழ் கொஞ்சம் மிரட்டியே வைத்திருந்தது.நட்பாய் கை நீட்டி நான் இருக்கிறேன் வா. இனிமை இனிமை கொட்டிக் கிடக்கிறதிங்கே. தேன் இனிப்பு என்றுச் சொன்னாலும் ஒவ்வொரு பூவின் தேனிலும் இனிப்பிலும் வித்தியாசமிருக்கிறது. நான் காட்டித் தருகிறேன் என்று வந்தவரைக் கட்டிப் போடும் தமிழாசான் முனைவர் இரா.குணசீலன். இவரை அறிமுகப் படுத்துவதில் தமிழ்த் தாய்க்கு என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

சங்கப் பாடல்களை இவர்  நம்மை அக்காலத்துக்கு கடத்திப் போய் எளிய தமிழில் விளக்கி காட்சியை கண்முன் காட்டிவிடுவதால், மனம் லயித்துப் போகிறது. சிறு பிள்ளையும் பெருங்களிரும் என்ற அவரின் இடுகை ஒன்று போதும். ஈரோடு பதிவர் சந்திப்பில் இவரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். கடந்த 10 நாட்களாய் படிக்காதது நிறைய. நாளை முடித்துவிடுவேன் ஐயா.

தமிழை வணங்கியாச்சி. இனிமே கலகலன்னு களம் திரும்பலாம். ஆமாங்க. கடைசியா சொல்லல இதை. முதல் இடுகையிலேயே சொன்னேன்ல. அந்த என் தாய்க்கு சமர்ப்பணம்னு. அப்படித்தான். இதோ வலைச்சரப் பணி முடியுமுன் என்னை எழுத வைத்தவளை, பெருமையாய்க் காட்டுகிறேன். இதோ என் அம்மா, என் ஆசான் என்று.

சிரிக்க சிரிக்க நகபுராணம், தவிக்கத் தவிக்க பயணங்கள் முடிவதில்லை இந்த இரண்டு போதும் இவளின் எழுத்துக்கு கட்டியம் கூற. கலகலப்ரியாவுக்கு முன் ஈழப்ரியாவில் நாங்கள் பகிர்ந்து கொண்ட வலிகள் அதிகம்.

சீனா அய்யா தந்த இந்த வாய்ப்பு எனக்கு இவளுக்கு நன்றி கூறும் வாய்ப்பாகவே கருதுகிறேன்.

இந்த ஒரு வாரகாலத்தில் நான் படித்துப் பிரமித்த பதிவர்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பாகவும் அமைந்தது மிக்க மகிழ்ச்சி. சொல்லாமல் விட்டது ஏராளம். அந்த படைப்புகள் என்னை மன்னிக்கும்.


விடை பெறுகிறேன் நண்பர்களே.

நன்றி சீனா அய்யா.

அன்புடன்

பாமரன்..(எ)பாலா..(எ) வானம்பாடிகள்.  

(பொறுப்பி: தலைப்பு இங்கிலிபிசுல இருக்கு வரிச் சலுகை கிடையாதுன்னா பரவால்ல. இப்புடித்தான் சொல்லத் தோணுது)

19 comments:

 1. அன்பின் பாலா

  அருமை அருமை- ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை - இன்னும் ஒரு வாரம் எழுதுகிறீர்களா

  நல்வாழ்த்துகள் பாலா

  ReplyDelete
 2. சிறப்பான பணி ஆசானே

  வாழ்த்துக்கள் அறிமுகங்கள் அனைத்திற்க்கும்......!

  ReplyDelete
 3. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 4. நல்வாழ்த்துகள் பாலா

  ReplyDelete
 5. அறிமுகங்கள் அத்தனையும் சிறப்பாக இருந்தது. நன்றியும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 6. நிறைவாய்ப் பணி செய்திருக்கிறீர்கள்....

  வாழ்த்துக்கள்


  அன்புடன்
  ஆரூரன்

  ReplyDelete
 7. மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி..!! கண்கள் விரிந்தது ... இதயம் மலர்ந்தது...:)

  ReplyDelete
 8. அய்யா,

  உங்களின் ஒரு வார ஆசிரியபணியை பார்த்து சீனா அய்யா கேட்பது போல், நானும்... இன்னும் ஒரு வாரம் எழுதுவீர்களா?

  சீனா அய்யா, மிகச் சரியாய் தேர்ந்தெடுத்து எங்களை ஒரு வாரம் பரவசத்திலாழ்த்தியதற்கு நன்றி.

  பாலா அய்யா, எங்களுக்கெல்லாம் ஆசானாய் வழிகாட்டுவதோடல்லாமல், நிறைய நபர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றிங்கய்யா!

  பிரபாகர்.

  ReplyDelete
 9. வரிச்சலுகை உண்டோ இல்லியோ, வரிக்கு வரி நல்லாருக்கு,

  நன்றி ஐயா

  ReplyDelete
 10. அச்சச்சோ! ஒரு வாரம் அதற்குள் முடிந்துவிட்டதா. ஒவ்வொரு அறிமுகமும் செம்மையாய் இருந்தது சார்.

  பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு மிக்க நன்றி. செய்த பணியை செவ்வனே செய்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சார்.

  (இன்னும் ஒரு வாரம் சீனா ஐயா தரும்போது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்)

  ReplyDelete
 11. அருமை நல்ல பணி. தொடருங்கள். வாழ்த்துக்கள். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. :).. நன்றி சார்...! இப்டி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி சங்கடப் படுத்தாதீங்க...

  ReplyDelete
 13. வாழ்த்துகள் பாலாண்ணா.

  ReplyDelete
 14. @@ நன்றி சீனா. பெரிய பாராட்டு இது. மறுப்பேனா?
  நன்றி

  ReplyDelete
 15. @@நன்றி வசந்த்
  @@நன்றி டி.வி.ஆர்.
  @@நன்றி ஜோதிஜி
  @@நன்றி ஆரூரன்
  @@நன்றி பலா பட்டறை
  @@நன்றி பிரபாகர்
  @@நன்றி சங்கர்.
  @@நன்றி நவாஸ். அய்யா சொன்னப்புறம் கசக்குமா. மகிழ்ச்சியுடன் தொடர்கிறேன்
  @@நன்றி றமேஸ்
  @@நன்றி ப்ரியா
  @@நன்றி அப்பன்
  @@நன்றி ஜெரி

  ReplyDelete
 16. வரிச் சலுகை எல்லாம் தரமுடியாது ஆனால்
  வாக்களிக்க முடியும்
  தலைப்ப தமிழ்ல வச்சா
  :)

  வாசகன்

  ReplyDelete
 17. சிவாஜி சங்கர் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள்..அவர் பாராட்டுக்கு ஏற்றவர்தான்..நண்பரே.
  உங்கள் பொன்னான பணி தொடரட்டும்

  ReplyDelete
 18. check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
  you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது