07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 10, 2010

சென்று வருக பாலா - கலக்க வருக அரவிந்த்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த இரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் பாலா - (பாமரன் பக்கங்கள் - வானம்பாடிகள்), ஏற்ற பொறுப்பினை கடமை தவறாது நிறைவேற்றி மிகுந்த மனமகிழ்ச்சியுடனும், அப்பாடா என்ற பெருமூச்சுடனும் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

நண்பர் பாலா ஏறத்தாழ நூறு பதிவர்களை - இடுகைகளைத் தேடித் தேடி, அருமையான முறையில் பதின்மூன்று இடுகைகளில் அறிமுகம் செய்து தன்னுடைய கடும் உழைப்பின் பலனை நமக்குத் தந்திருக்கிறார். அதற்கு நமது கருத்துகளாக ஏறத்தாழ 270 மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

அன்பர்களே ! நண்பர் பாலா அறிமுகப்படுத்திய பல புதிய பதிவர்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் வலைப்பூக்களில் தொடர்பவர்களின் எண்ணிக்கையாகட்டும் - ஹிட்ஸ்களாகட்டும் கூடிக்கொண்டே செல்கிறது.

எனதருமை நண்பர் பாலா அவர்களுக்கு நல்வாழ்த்துகள் கலந்த நன்றியினை வலைச்சரக்குழுவின் சார்பினில் மன நிறைவுடன் தெரிவித்து வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து 11ம் நாள் துவங்கும் வாரத்திற்கு இரும்புத்திரை அரவிந்த் ஆசிரியப் பொறுபேற்க ஆரவத்துடன் வருகிறார். இவரைப்பற்றிய அறிமுகத்தினை எனது சார்பினில் மதுரையைச் சார்ந்த ராமராஜு என்ற ராஜூ என்ற டக்ளசு வழங்குகிறார்.

இதோ அறிமுகம் :

இரும்புத்திரை. அரவிந்த் அவர்களுக்கு அறிமுகமே தேவையில்லை. அவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலிப்பக்கம். இப்போது மும்பை வாசம். மற்றபடி சென்னையே தஞ்சம். அரவிந்த், சினிமா பதிவுகளாகட்டும் சக பதிவர்களை கலாய்த்து எழுதும் கல கல பதிவுகளாகட்டும் சூப்பர் ரகம்தான். கவிதைகளும் எக்ஸ்ட்ரா டோஸ்தான். அவ்வப்போது எதிர்க்கவிதைகளும் வரும். தற்சமயம் திருநெல்வேலியின் வட்டார வழக்கு மொழியில் “சாணிக்குழி” என்ற தொடர்கதையை, தன்னுடைய தளத்தில் எழுதி வருகிறார்.குறைந்த அவகாசத்தில் வலையுலகில் அதிக பட்டங்களைப் பெற்றவர் என்று கூட ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொல்லிக் கொள்ளலாம். தமிழ்சினிமாவை அக்குவேறாய் ஆணிவேராய் துவைத்துத் தொங்கப்போட சரியான ஆள் அரவிந்த் (கவனிக்க,அடியாளில்லை). இப்போது வலைச்சரத்தை தொகுத்துத் தொங்கப்போட வந்திருக்கிறார். வாருங்கள். வாழ்த்துவோம். கலக்குங்க அரவிந்த் அவர்களே.

அன்புடன்
ராஜு.

ராஜூவிடன் சேர்ந்து நாமும் அரவிந்தை வருக வருக - தமிழ்ச்சரத்தினைத் தொடுக்க வருக என வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் அரவிந்த்

நட்புடன் சீனா

10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நன்றி சீனா அய்யா.

    அருமையான பணி பாலா சார்.நன்றி.

    அருமையான வாழ்த்துக்கள் அரவிந்த்!கலக்குங்க..

    ReplyDelete
  3. நன்றி சீனா அய்யா. வாருங்கள் அரவிந்த். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நன்றி பாலா சார்,


    வாங்க அரவிந்த், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஐ...... நம்மூர்காரர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நன்றி பாலா அண்ணே நன்றி சீனா ஐயா...
    வாங்க வாங்க அரவிந்த் கலக்குங்க. ஜெய் ஹோ
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி பாலா அண்ணே நன்றி சீனா ஐயா...
    வாங்க வாங்க அரவிந்த் கலக்குங்க. ஜெய் ஹோ
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நன்றி பாலா அண்ணே நன்றி சீனா ஐயா...
    வாங்க வாங்க அரவிந்த் கலக்குங்க. ஜெய் ஹோ
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சீன அய்யாவின் தலைப்பை அய்யாவையும், தம்பியையும் சேர்த்து பலமாய் ஒருமுறை உறக்கச்சொல்லுகிறேன்....

    பிரபாகர்.

    ReplyDelete
  10. அருமையான பணி பாலா .

    வாழ்த்துக்கள் அரவிந்த்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது