07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 10, 2011

உலகம் துளிர்க்க.. - பெண்சக்தி சிறப்புச்சரம் - வியாழன்

‘குறிஞ்சி மலர்கள்’ சுந்தரா:
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்குமாம் குறிஞ்சி மலர். மனித நேயம் மாசுப்படும் வேளையெல்லாம் அதைத் தூசு தட்டப் பூத்தபடியே இருக்கும் சுந்தராவின் கவிமலர்கள். உறவுகளின் நடுவே ஏற்படும் விரிசல்கள், மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், சமூக நலன் குறித்த ஆதங்கங்கள் வீச்சுடன் வெளிப்படுகின்றன இவர் எழுத்துக்களில். காலவதி மருந்துகளை விற்று காசு பார்த்தக் கூட்டத்தைச் சாடுகிறார் இப்படி,
“உயிரைக் கொடுத்தேனும்
நீதிகாத்த நாட்டினில்
உயிரை எடுத்தேனும்
பணம்சேர்க்கும் மனிதர்கள்...

வணிகமயமாகிவிட்ட
வாழ்க்கையின் போக்கினில்
காலாவதியாகிப்போனது
மனிதமும்கூடத்தான்... ” காலாவதி மனிதம்.
***
இன்னும் சில:வாடகை வயிறுகள், இருவகை இரவுகள், உறவுக் கயிறு,


ஹுஸைனம்மா:
வீட்டு நடப்பு, ஊர் நடப்பு, நாட்டு நடப்பு, உலக நடப்பு என எல்லாவற்றைப் பற்றியும் ‘பொழந்து கட்டும்’ ஹுஸைனம்மாவின் ‘டிரங்குப் பெட்டி’[அனைத்துப் பாகங்களும் இந்த இழையில்] பதிவுலகில் அதி பிரபலம். “நாமளும் வித்தியாசமா பேர் வைப்போம்னு மூளையக் குடைஞ்சதில கண்டுபிடிச்சதுதான் இந்த “டிரங்குப் பொட்டி” !! நாம சின்னப் புள்ளைங்களா இருந்தப்போ (இப்பவும் யூத்துதான்!!) எல்லார் வீட்டிலயும் ஒரு டிரங்குப் பொட்டி கண்டிப்பா இருந்திருக்கும். அதுல அப்பாவோட கணக்குப் பொஸ்தகம், அம்மாவோட சிறுவாடு காசு, நம்மளோட விலைமதிப்பில்லாத “சாவி கொடுத்தா கொட்டடிக்கிற குரங்கு பொம்மை”...இப்படிப் பலதும் கிடக்கும். அதேதான் இது!!” என்கிறார்.

பலரது பதிவுகளில் இவர் இடும் பின்னூட்டங்கள், கேட்கும் கேள்விகள் பளிச்சுன்னு நமக்கு ஒரு புன்னகையை வரவழைக்கும். அதே நேரம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். எதிலும் ஒரு அநாயசம், தனித்துவம், இது ‘தாமிரபரணித் தண்ணியக் குடிச்சு’ வளர்ந்த பலரிடம் காணக்கூடிய ஒன்று என்றால் மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது:)!

இவரது அனுபவப் பகிர்வுகளாகிய ஆறுமுகத்தாய்- பாகம் 1, பாகம்-2 என்னை மிகக் கவர்ந்தவையாகும். சிறப்பான எழுத்து நடைக்கு உதாரணமும்.
‘உப்புமடச் சந்தி’ ஹேமா

தன் ஊர் பெயர் கொண்ட ‘உப்புமடச் சந்தி’யில் ‘கதை பேச வாங்கோ’ என அன்புடனே நமை அழைத்து அளவளாவும் ஹேமா கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கிறார், இங்கே.

தன் தாய் தேசம் தந்த பரிசாக
மனநெகிழ்வோடும் கண்ணீரோடும் இவர் ஏந்திய ஈழம் பிரிவுக்கான தமிழ்மணம் விருது 2010, இவர் அனுபவித்த.., இவர் போன்ற பல ஈழத்தமிழர்கள் அனுபவித்த வேதனைகளுக்கெல்லாம் மவுன சாட்சியாக, யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு. “கண் திறக்காமலே அப்பா என்னைப் பிடித்தப்படி "ஓடி வா ஓடி வா" என்றபடி ஓட முயற்சிக்கிறார்.கால் அடி எடுத்து வைக்கவே இடம் இல்லை அங்கு.அப்பாவை நான் இழுக்க என்னை அவர் இழுக்க எங்கோ ஒரு குழிக்குள் விழுந்ததாய் விளங்குகிறது.அப்பாவின் கை என்னோடுதான் இன்னமும்.சேறு அப்பிக்கொள்ள நிறையப் பேர் இருந்தோம் அந்தக் குழிக்குள்.மழையும் வெள்ளமும் சேறும் என்று முன்னமே சொல்லியிருந்தேன்.இப்போது விளங்குகிறது.அது குழியல்ல.வெள்ள வாய்க்கால்.

அப்பா அணைத்துக்கொள்கிறார்.எதுவும் சொல்லவில்லை நான்.பயமோடா தம்பி என்று கேட்டாலோ,குளிருதோ என்று கேட்டாலோ,நோகுதோ என்று கேட்டாலோ இல்லை என்றேதான் சொல்லியிருப்பேன்.மனம் முழுக்க வலி.தமிழனாய்ப் பிறந்து தாய்மொழி தமிழுக்கு விழா எடுக்கக்கூட முடியாத தேசத்திலா நாம் பிறந்திருக்கிறோம் என்று.


இந்த வலிகளில் பிறக்கும் இவரது படைப்புகள் உலகில் அல்லலுறும் மக்கள் யாவருக்காகவும் அன்பை யாசிப்பதாக உள்ளன.

இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகும் இவர் கவிதைகள் யாவும் ‘வானம் வெளித்த பின்னும்..’ வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகின்றன. இவர் மொழிப்புலமை கண்டு வியந்து மகிழும் தமிழ், எழுத்துக்களில் மயிலாகத் தோகை விரித்தும், வேதனைகளில் நெகிழ்ந்து போய் தாயாகப் பங்கெடுத்துத் தன் தோளிலே சாய்த்தும் துணை செல்கிறது.
ஹாஸ்ய ரசம் கோமா
நண்பர் வட்டம், திண்ணை இதழ்களில் ஒரேகால கட்டத்தில் நாங்கள் எழுதி வந்திருந்தாலும் இவரது முதல் படைப்பை நான் வாசித்தது ஒன்பதாவது படிக்கையில், 1979-ல், ரத்னாபாலா சிறுவர் இதழில். ‘இன்னொரு காந்தி வரவேண்டும்!” என்கிற அந்த சிறுகதை பெற்ற ஆயிரம் ரூபாய் பரிசு அந்தக் காலத்தில் உயரிய ஒரு அங்கீகாரம். அதை வலைப்பூவில் இவர் பதிந்திருக்கிறாரா எனத் தேடியபோது கிடைக்கவில்லை. தனிமடலில் கேட்டபோது, ‘அக்கட்டுரையின் கருத்து இக்காலத்துக்கு பொருந்தாதே?’ என்றார். ‘நாட்டுப் பற்றை விதைக்கும் நல்லதொரு கருத்து பொருந்தாமல் போனது காலத்தின் பிழை. நாட்டின் வருந்தத்தகு நிலை. ’ என்றேன். சம்மதித்துள்ளார் பதிவதாக. இன்றும் அந்த விதை எவர் மனதையேனும் அசைத்து, துளிர்த்துத் தளிர்விட வல்லதென்றே நம்புகிறேன். இந்த வாரத்துள் கிடைத்தால் அதன் சுட்டியை இங்கு இணைத்திடுவேன், முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரசித்த படைப்பை வலைச்சரத்தில் தொகுத்த பெருமையுடன்!

ஒருவேளை தாமதமானாலும், அவர் பதியும் போது பின்னூட்டத்தில் இணைத்திடுவேன் அதன் உரலை.

‘இன்னொரு காந்தி வரவேண்டும்’ வலைச்சரத்துக்கும் நாட்டுக்கும்!
***

இவரது டைமிங் நகைச்சுவைக்கு யாரைக்கேக்கணும்?, வாக்களித்தவன் கேள்விகளும் தமிழக அரியாசனத் தலைமையின் பதில்களும்!
***

தனக்கு நீச்சல் தெரியாத நிலையில் கூட,தண்ணீரில் தத்தளித்த ,பல குழந்தைகளைக் காப்பாற்றி ,தன் உயிர் நீத்த பள்ளி ஆசிரியை சுகந்தி”யை நினைவு கூர்ந்து தான் தேடும் பத்தாவது பெண்மணியாகவும் ஆகிறார் இங்கே முத்தான 10 பெண்மணிகள்.

வள்ளுவம் வலைப்பூவில் இவர் விதைத்து வரும் சிந்தனைளும், ஆன்மீகப் பாடல்களும், ஹாஸ்ய ரசங்களும் விரைவில் தனித்தனிப் புத்தகங்களாகத் தொகுக்கப்பட உள்ளன என்பது உங்களுக்குக் கூடுதல் தகவல். வாழ்த்துவோம் இவரை.

[கோரிக்கையை ஏற்று இன்னொரு காந்தியை வலைச்சரத்துக்கு அழைத்து வந்திருக்கும் கோமாவுக்கு நன்றியும் வணக்கங்களும்!!]

அன்புடன் அருணா
தாய்மையின் மறு உருவாய் மாணவரை வழிநடத்தும் தலைமையாசிரியை, பொறுப்பான இல்லத்தரசி, சக மனிதர் யாவரிடமும் அக்கறை காட்டும் சமூக உணர்வு கொண்டவர், மனிதரோடு மழையையும் நேசிப்பவர். எங்கே, நல்ல விஷயங்களைக் கண்டாலும் மனமும் முகமும் மலந்து நீட்டிடுவார் பூங்கொத்தை. சென்றவாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலித்த போது பகிர்ந்த படைப்புகள் யாவும் கல்வெட்டு. அதில் நிறைவுதினக் கவிதையை பறந்துபோய் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன் இந்த நட்சத்திர வார்த்தைகளில் உலகம் துளிர்ப்பது நிச்சயம் என்று:
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்

உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள் விதைகளை.....
கைக்கெட்டா தூரம் வரை விசிறியடியுங்கள் விதைகளை....

ஒரு பறவையின் நோக்கத்தோடு பறந்து பறந்து விதை தூவுங்கள்...

எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.

என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.

கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!
” நன்றி அருணா!! தூவுவோம் விதைகளை!!
***

இன்றுடன் பெண்சக்தி சிறப்புச்சரம் நிறைவுறுகிறது. 33 சதவிகிதம் தருவதற்கே யோசிக்கும் உலகினிலே, கொடுத்திடுவோம் பெருந்தன்மையுடன் ஐம்பது சதவிகிதமாய் அடுத்த மூன்று நாட்களை, ஆண் சக்திகளுக்கு:)!

45 comments:

  1. அறிமுகத்திற்கு நன்றிகள் அக்கா.

    மற்ற தோழிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுகள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சரங்கள் மணக்கின்றன...

    ReplyDelete
  4. ஹுசைனம்மா மற்றும் அருணா ப்ளாகுகள் ஏற்கனவே அறிவேன். மற்றவர்களை வாசித்ததில்லை. நன்றி

    ReplyDelete
  5. நிறைவான அறிமுகங்கள்.. கோமாக்காவின் புத்தகவெளியீட்டுக்கு வாழ்த்துகளை இப்பவே தெரிவிச்சுக்கறேன் :-))

    ReplyDelete
  6. சிறப்பான அறிமுகங்கள்.
    நன்றி.

    //33 சதவிகிதம் தருவதற்கே யோசிக்கும் உலகினிலே, கொடுத்திடுவோம் பெருந்தன்மையுடன் ஐம்பது சதவிகிதமாய் அடுத்த மூன்று நாட்களை, ஆண் சக்திகளுக்கு:)!//

    உங்களது பெருந்தன்மைக்கு எனது பாராட்டுக்கள்:-))))!

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நிறைவான அறிமுகங்கள்..

    ReplyDelete
  9. அக்கா, சிலமுறை இங்கே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்களின் எண்ணங்களோடு என்னை இங்கே அறிமுகப்படுத்தியதைப் பெருமையாகக் கொள்கிறேன். நெகிழ்கிறேன். நன்றி அக்கா.

    உடன் அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் மேலும் பெருமிதப்பட வைக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    //இது ‘தாமிரபரணித் தண்ணியக் குடிச்சு’ வளர்ந்த பலரிடம் காணக்கூடிய ஒன்று//

    உங்களைப் படிச்சவங்க நிச்சயமா மறுக்க மாட்டாங்க.

    ReplyDelete
  10. சுந்தரா நல்ல அறிமுகம் மற்றவர்கள் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்றாலும் உங்கள் நடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பானது ::))
    தொடருங்கள் வலைச்சர ஆசிரியரே

    ReplyDelete
  11. அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  12. அருமையான அறிமுகங்கள் நன்றி அக்கா

    ReplyDelete
  13. அருமையான அறிமுகங்கள்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. விரிவான அறிமுகங்கள் அனைவருக்கும் தந்திருக்கும் விதம் சிறப்பு . வாழ்த்துக்கள் உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் .

    ReplyDelete
  15. ஆஹா...இப்படியொரு அறிமுகமா???!!ரொம்ப நன்றி ராலக்ஷ்மி!

    ReplyDelete
  16. தெரிந்த முகங்கள்தான்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. தனி ஆளாக என் புத்தகத் தேரை இழுத்துப் பார்த்தேன் நகரவில்லை,இன்று அன்பு பதிவர்களின் என்க்கு உற்சாகமூட்ட வாழ்த்தி வடம் பிடிக்க வைத்து விட்டீர்கள்,,,,,தேர் நிலைக்கு வரும் நேரம் கண்ணில் தெரிகிறது.நன்றி ராமலஷ்மி.
    இன்னொரு காந்தியை விரைவில் பதிவில் காணலாம்

    ReplyDelete
  18. அருமையான பகிர்வுகள்

    ReplyDelete
  19. குறிஞ்சியை தவிர மற்றவர்கள் தெரிந்தவர்கள்தான் . இருந்தாலும் ரசித்தவிதத்தில் அறிமுகம் அருமை :-))

    ReplyDelete
  20. அருமையான பகிர்வுகள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. உங்கள் பேனாவுக்குள் நானுமா.
    எத்தனையோ பேர் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் நீங்கள் அறிமுகப்படுத்திய விதமும் தேடியெடுத்துக்கொண்ட பதிவுகளும் மனதை நெகிழச் செய்கிறது அக்கா.
    காற்றில் கையசைத்து நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

    மற்றைய சகோதரிகளும் சளைத்தவர்கள்ளல்ல.
    நிறைவானவர்கள்.வாழ்த்துகள் உங்கள் ஆசிரியப்பணிக்கு.தொடருங்கள் !

    ReplyDelete
  22. குறிஞ்சி மலரும் அன்புடன் அருணாவும் புதிய பக்கங்கள் எனக்கு. சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  23. சுந்தரா said...
    //அறிமுகத்திற்கு நன்றிகள் அக்கா.

    மற்ற தோழிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

    நன்றி சுந்தரா:)!

    ReplyDelete
  24. தமிழ் உதயம் said...
    //அருமையான பகிர்வுகள்.வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    ReplyDelete
  25. பாச மலர் / Paasa Malar said...
    //சரங்கள் மணக்கின்றன...//

    நன்றி பாசமலர்.

    ReplyDelete
  26. மோகன் குமார் said...
    //ஹுசைனம்மா மற்றும் அருணா ப்ளாகுகள் ஏற்கனவே அறிவேன். மற்றவர்களை வாசித்ததில்லை. நன்றி//

    அறியாதவர்களை அறியத் தந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  27. அமைதிச்சாரல் said...
    //நிறைவான அறிமுகங்கள்.. கோமாக்காவின் புத்தகவெளியீட்டுக்கு வாழ்த்துகளை இப்பவே தெரிவிச்சுக்கறேன் :-))//

    மகிழ்ச்சியும் நன்றியும். உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததும் வடத்தைப் பிடித்து விட்டார்கள், பாருங்கள்!

    ReplyDelete
  28. அமைதி அப்பா said...
    ***சிறப்பான அறிமுகங்கள்.
    நன்றி.

    //33 சதவிகிதம் தருவதற்கே யோசிக்கும் உலகினிலே, கொடுத்திடுவோம் பெருந்தன்மையுடன் ஐம்பது சதவிகிதமாய் அடுத்த மூன்று நாட்களை, ஆண் சக்திகளுக்கு:)!//

    உங்களது பெருந்தன்மைக்கு எனது பாராட்டுக்கள்:-))))!//

    நன்றி அமைதி அப்பா:)!

    ReplyDelete
  29. asiya omar said...
    //அருமையான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி ஆசியா, உங்களால் முடிந்தவரை தரப்பட்ட தொடுப்புகள் அத்தனைக்கும் சென்று வாசித்து பின்னூட்டம் இட்டிருப்பதற்கும்:)!

    ReplyDelete
  30. சே.குமார் said...
    //நிறைவான அறிமுகங்கள்..//

    நன்றி குமார்!

    ReplyDelete
  31. ஹுஸைனம்மா said...
    //அக்கா, சிலமுறை இங்கே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்களின் எண்ணங்களோடு என்னை இங்கே அறிமுகப்படுத்தியதைப் பெருமையாகக் கொள்கிறேன். நெகிழ்கிறேன். நன்றி அக்கா.

    உடன் அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் மேலும் பெருமிதப்பட வைக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    //இது ‘தாமிரபரணித் தண்ணியக் குடிச்சு’ வளர்ந்த பலரிடம் காணக்கூடிய ஒன்று//

    உங்களைப் படிச்சவங்க நிச்சயமா மறுக்க மாட்டாங்க.//

    நன்றி ஹுஸைனம்மா:))! உங்களையெல்லாம் அறிமுகப்படுத்த வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  32. sakthi said...
    //சுந்தரா நல்ல அறிமுகம் மற்றவர்கள் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்றாலும் உங்கள் நடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பானது ::))
    தொடருங்கள் வலைச்சர ஆசிரியரே//

    நன்றி சக்தி:)!

    ReplyDelete
  33. புதுகைத் தென்றல் said...
    //அருமையான தொகுப்பு.//

    மிக்க நன்றி தென்றல்.

    ReplyDelete
  34. சசிகுமார் said...
    //அருமையான அறிமுகங்கள் நன்றி அக்கா//

    நன்றி சசிகுமார்.

    ReplyDelete
  35. Chitra said...
    //அருமையான அறிமுகங்கள்.... வாழ்த்துக்கள்//

    நன்றி சித்ரா.

    ReplyDelete
  36. !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
    //விரிவான அறிமுகங்கள் அனைவருக்கும் தந்திருக்கும் விதம் சிறப்பு . வாழ்த்துக்கள் உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் .//

    மிக்க நன்றி சங்கர்.

    ReplyDelete
  37. அன்புடன் அருணா said...
    //ஆஹா...இப்படியொரு அறிமுகமா???!!ரொம்ப நன்றி ராலக்ஷ்மி!//

    நான் ரொம்பக் குறைவாகத்தான் சொல்லியிருக்கிறேன் அருணா. ஆனால் அதை நிறைவான மனதுடன் பூங்கொத்தாய் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி:)!

    ReplyDelete
  38. மாதேவி said...
    //தெரிந்த முகங்கள்தான்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    உங்கள் வாழ்த்துக்கள் அவர்களை இன்னும் உற்சாகமாகத் தொடரச் செய்யட்டும். நன்றி மாதேவி.

    ReplyDelete
  39. goma said...
    //தனி ஆளாக என் புத்தகத் தேரை இழுத்துப் பார்த்தேன் நகரவில்லை,இன்று அன்பு பதிவர்களின் என்க்கு உற்சாகமூட்ட வாழ்த்தி வடம் பிடிக்க வைத்து விட்டீர்கள்,,,,,தேர் நிலைக்கு வரும் நேரம் கண்ணில் தெரிகிறது.நன்றி ராமலஷ்மி.
    இன்னொரு காந்தியை விரைவில் பதிவில் காணலாம்//

    புத்தகத் தேருக்குக் காத்திருக்கிறோம்:)! நன்றி கோமா, இன்னொரு காந்தியை பதியவிருப்பதற்கும்.

    ReplyDelete
  40. திகழ் said...
    //அருமையான பகிர்வுகள்//

    தொடரும் தங்கள் வருகைக்க்கு மிக்க நன்றி திகழ்.

    ReplyDelete
  41. ஜெய்லானி said...
    //குறிஞ்சியை தவிர மற்றவர்கள் தெரிந்தவர்கள்தான் . இருந்தாலும் ரசித்தவிதத்தில் அறிமுகம் அருமை :-))//

    மிக்க நன்றி ஜெய்லானி.

    ReplyDelete
  42. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
    //அருமையான பகிர்வுகள்.வாழ்த்துக்கள்//

    நன்றி ஜெஸ்வந்தி.

    ReplyDelete
  43. ஹேமா said...
    //உங்கள் பேனாவுக்குள் நானுமா.
    எத்தனையோ பேர் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் நீங்கள் அறிமுகப்படுத்திய விதமும் தேடியெடுத்துக்கொண்ட பதிவுகளும் மனதை நெகிழச் செய்கிறது அக்கா.
    காற்றில் கையசைத்து நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

    மற்றைய சகோதரிகளும் சளைத்தவர்கள்ளல்ல.
    நிறைவானவர்கள்.வாழ்த்துகள் உங்கள் ஆசிரியப்பணிக்கு.தொடருங்கள் !//

    அன்பான நன்றியை நானும் நெகிழ்வாக ஏற்றுக் கொண்டேன். நன்றி ஹேமா.

    ReplyDelete
  44. ஸ்ரீராம். said...
    //குறிஞ்சி மலரும் அன்புடன் அருணாவும் புதிய பக்கங்கள் எனக்கு. சென்று பார்க்க வேண்டும்.//

    தங்களுக்கு நிச்சயம் அவர்களது எழுத்துக்கள் பிடிக்கும். மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  45. கோரிக்கையை ஏற்று இன்னொரு காந்தியை வலைச்சரத்துக்கு அழைத்து வந்திருக்கும் கோமாவுக்கு நன்றியும் வணக்கங்களும்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது