07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 24, 2011

கவிதைப்பூக்கள்...


கவிதைகளைச் சுகிக்கும் மனம் அனைவருக்கும் வாய்த்தாலும், கவிஞனின் பார்வையில் உலகைப் பார்க்கும் மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.

பூக்களை பார்த்து, அதன் மலர்ச்சியில் மகிழ்ச்சி கொள்வது யாராலும் முடியும், ஆனால் அந்த பூக்களை மகரந்தம் தாங்கும் கர்ப்பிணிகளாகவும், படர்ந்து வளர்ந்த நட்சத்திரக்கூட்டங்களாகவும் பார்த்து உணர்வது கவிஞர்களேயன்றி யாரும் இல்லை.

அவ்வகையில் நான் தொடர்ந்து வாசித்து வரும் சில கவிஞர்கள் சிலரை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.

கமலேஷ் - சுயம் தேடும் பறவை எனும் வலைப்பதிவில் கவிதைகளை இட்டு வருகிறார். எதார்த்த நடையிலும் கவிதை தெறிக்க எழுதும் புலமை வாய்த்தவர். அதற்குச்சான்றாக அவரின்
இலந்தைப் பூக்கள்

கவிஞர் வைரமுத்துவைப்பற்றி அவர் வரைந்த கவிதை
ஒரு அட்சய பாத்திரம் 


நாவிஷ் செந்தில்குமார் - நாவிஷ் கவிதைகள் எனும் தனது தளத்தில் கவிதைகளை எழுதி வருகிறார். வாரப்பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இவரது கவிதைகளை நான் பார்த்ததுண்டு. ஒன்றிரண்டு வரிகள் என்றாலும் நீங்காமல் மனதில் இருத்தி வைத்து விடுவதில்லை இவரது கவிதைகள் என்றுமே வீரியமானது. அதில் ஒன்றுதான் இந்த உணவே மருந்து .

சாலையைக் கடக்க குழந்தைக்கள் என் விரல் பிடிக்கும்போதெல்லாம் நினைவிற்கு வரும் இவரின் இந்த அறிவுரைகள்...
சாலையைக் கடக்கும் குழந்தை

ரசிகை - ரசிகை என்ற வலைப்பதிவில் கவிதைகள் நிரப்பி வருகிறார். அனுபவித்து கவிதை எழுதுவதில் வல்லவர். இதோ... குளியலில் கூட எவ்வாறு விளையாடுகிறார் பாருங்கள்.. கவிதைக் குளியல்.
சிட்டுக்குருவிகளுக்காக சூழ் மவுனம் கலைக்கா இவரது பார்வையை இன்னும் அழகாக வடித்திருக்கிறார் இந்த கவிதையில் - மழை நாளில்.
முரளிகுமார் பத்மநாபன் - அன்பே சிவம் எனும் வலைப்பதிவில் எழுதுகிறார். காணும் யாவிலும் புதுமையாய் ஏதோவொன்றைக் கண்டுகொள்ளும் மழலைபோல இவரின் மனதில் எங்கும், எதிலும் அழகு நிறைந்திருக்கிறது. 
கிறுக்கல் என்ற பெயரில் அவர் சித்திரமாய்த் தீட்டிவரும் கவிதைகளில் சில...

கிறுக்கல்கள்
போனஸ்

இரவுப்பறவை - இரவுப்பறவை என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். இவரது கவிதைகள் சட்டென முடிந்து விடுவது போலத்தோன்றினாலும், அதன் பின்னால் ஏதோ ஒரு வெறுமையை அல்லது ஆழ்வெளியை கண்டுகொள்ளலாம். சில நேரங்களில் குறும்புத்தனமான கவிதைகளும் உண்டு...

அவரின் இரு கவிதைகள்

வாரக்கடைசி
நிறைவாய் ஒரு வாழ்வு

தியா - தியாவின் பேனா பேசுகிறது என்ற தலைப்பு கொண்ட அவரின் வலைப்பூவில் எழுதி வருகிறார். வீரியம் மிக்க எழுத்துக்களைக் கொண்டு கவிதை புனைவதில் வல்லவர், ஆனால் தற்போது அதிகமாய் வலைப்பக்கங்களில் பார்க்க முடிவதில்லை என்பது வருத்தமே. நண்பர் மீண்டும் வந்து அவரின் கவிதைகளைத் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...

உதிர்கின்ற பூக்கள் 
நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும் 

மணீஜி - இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். வலையுலகில் இருக்கும் அனைவரும் அறிந்த ஒருவர். அவரின் வீச்சு மிகு கட்டுரைகளுக்கும், எள்ளல் கொஞ்சும் இடுகைகளுக்கும் இடையே அவ்வப்போது வரும் ஒருசில கவிதைகள் மகா அற்புதமானவவை. கறுப்புக்கலர் ஆரஞ்சு எனும் இவரது கவிதை என்றுமே மறக்கவியலா ஒன்று. வலையுலகம் சாராத என் அனேக நண்பர்களிடம் நான் பகிர்ந்து கொண்ட ஒரே கவிதையாக அதுதானிருக்கிறது.

கறுப்புக்கலர் ஆரஞ்சு 

அவரின் இன்னொரு அற்புதக்கவிதை

பிறிதொரு சரித்திரம் 

வேலு - GeeVee எனும் வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் வேலு அவர்களின் கவிதைகளும் மிக நல்ல அமைப்பைப் பெற்றவை. பெரும்பாலும் மனித மனங்களின் தேடுதல்களை கவிதைப்படுத்தும் இவரது நயம் போற்றத்தக்கது. அவரின் தேடல் கவிதைகளுக்கு நான் என்றுமே ஒரு நல்ல ரசிகன். இதோ அவரின் இரண்டு முத்துக்கள்

அவதார் 
வட்டங்கள் 

சி.சரவணகார்த்திகேயன் (WriterCSK) - இவர் ஒரு பிரபல எழுத்தாளர். அதைவிட ட்விட்டரில் இவரது கீச்சுக்கள் மிகப்பிரபலம். யாரோ ஒருவர் எழுதியது போல இவர் தமிழ்பேப்பர் தளத்திற்கு எழுதிய காதல்புராணம் இவருக்கு மிக நல்ல வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அக்கவிதைத் தொடரை அனானியாக இவர் எழுதிய நேரத்தில், இவர் யாராக இருக்கும் என்ற அனுமானத்தில் ட்விட்டரில் பெரிய சலசலப்பே ஏற்பட்டது. இதோ அவரது காதல் புராணத்தின் தொகுப்பு... 

காதல் புராணம் 

ஈரோடு கதிர் - வலையுலகில் ஒரு முக்கிய பதிவரான இவர், சமூகம் சார்ந்த இடுகைகளுக்குச் சொந்தக்காரர். சமயங்களில் கவிஞராகவும் உருவெடுத்து நல்ல படைப்புகளைத் தருகிறார். அவரின் கவிதைகளில் சமூகச்சிக்கல்களும், வாழ்வியல் கருத்துக்களும் அழுத்தமாக பதியப்படும். அவரின் சில கவிதைகள்

அவளாக இருப்பாளோ 
சிறகை விரிக்கும் சிறை 

இன்னும் பல நல்ல கவிஞர்களை வலையுலகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆயினும் இவர்கள் என் வாசிப்பு எல்லைக்குள் இருப்பதால், எளிதான அடையாளம் கண்டு பதிவிட்டு விட்டேன். இவர்களைப்போல பல நல்ல கவிஞர்களை வலைச்சரம் ஒவ்வொரு வாரமும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதில் நானும் சிறு பங்காக இன்று இருப்பது எனக்கு ஒரு பெருமைமிக்க ஒரு நிகழ்வு.

அடுத்து வரும் இடுகைகளில் வேறு பல நயங்களைக் கொண்டு, பதிவிடும் பதிவர்களின் தொகுப்போடு சந்திக்கிறேன்....

தொடர்வோம்...

12 comments:

  1. நல்ல தொகுப்பு. படித்தேன், ரசித்தேன். நன்றியும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. நல்ல விசயமுள்ள தளங்களின் பகிர்வு மிக்க நன்றிகள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ராஜா.. அற்புதமான அறிமுகங்கள்....

    ReplyDelete
  5. நல்ல அறிமுகம் ராசா :-))

    ReplyDelete
  6. அன்பின் ஜெய்சிங்
    உங்கள் அகல் விளக்கின் வெளிச்சத்தை
    என் மீதும் கொஞ்சம்
    சரித்தமைக்கி நன்றி நண்பரே..
    உங்கள் சுடரின் நடனம்
    மிகவும் வசீகரம்.
    அறிமுகப்படுத்திய மற்ற நிழல்களும்
    நல்ல இரவின் சுவை.
    நன்றி நண்பரே.
    தொடருங்கள்...

    ReplyDelete
  7. ஈரோடு கதிர் அண்ணன் மட்டும்தான் எனக்குத் தெரியும்.
    மத்தவங்கள போய் பார்க்கிறேன் !

    ReplyDelete
  8. வாழ்த்துகள் அகல் விலக்கு.அகழ்ந்து விளக்கும் பாங்கு அறிமுகங்களில் அறியப் பெறுகிறது

    தொடர்க !

    ReplyDelete
  9. அகல்விளக்கு ராஜான்னு ஒரு கவிஞர் பத்தி சொல்லவேயில்ல!!!

    ReplyDelete
  10. ||க.பாலாசி said...

    வாழ்த்துக்கள் ராஜா.. அற்புதமான அறிமுகங்கள்....||

    தம்பி என்னை சொல்லல தானே!!!?

    ReplyDelete
  11. /ஈரோடு கதிர் said...

    அகல்விளக்கு ராஜான்னு ஒரு கவிஞர் பத்தி சொல்லவேயில்ல!!!/

    அதானே:))

    ReplyDelete
  12. :(
    அகல்விளக்கு ராஜா அவர்களின் தந்தையார் இன்று இரவு (சற்றுமுன் 8மணியளவில்) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது