07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 20, 2011

சரம் 6 – பாசக்காரப் புள்ளைங்க..



எப்டி இருக்கீங்க??? நா தொடுக்குற சரங்களெல்லாம் உபயோகமா இருந்துச்சா?? இருந்துருக்கும்னு நம்புறேன். (ம்ம்ம்.. எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு..)
நேத்து நா பகிர்ந்த சில நண்பர்களோட தளத்துக்கெல்லாம் போனீங்களா??? இன்னைக்கும் சில பாசக்கார நண்பர்களோட தளங்களப் பத்தி பகிர்ந்துக்கப் போறேன்.
1. தாசானுதாசன் - இந்த வலைதளத்துல பகிரப்படும் அனைத்துப் பதிவுகளும், முக்கியமா குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுகளும் தொழில் நுட்பப் பதிவுகளும் ரொம்பவே உபயோகமா இருக்கும்.
2. அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை – இந்த வலைதளத்துல அதிகமா குழந்தைகள் புகைப்படங்கள பார்க்கலாம். பின்னூட்டங்கள்ல ஒண்ணு, ரெண்டு, மூணு கத்துகிட்டு இருக்குற இவரோட இந்தத் தளத்துல அனுபவப் பதிவுகள் அதிகம் இடம்பெறும். ஆனாலும் ரசிக்க வைக்கும்.
3. மாய உலகம் – இவர் வலைதளம் எழுத ஆரம்பிச்சு கொஞ்ச நாள் தான் ஆகுது. மழலைகள் தத்தித் தத்தி நடந்து பழகுவதுபோல இவரோட பதிவுகள் கொஞ்சம் கொஞ்சமா மெருகேறிகிட்டு இருக்கு.
4. வினு – இவர் சம்மந்தமில்லாம கமெண்ட் குடுக்குறதுல கில்லாடி. பிற வலைதளங்களின் பின்னூட்டங்கள்ல அடிக்கடி வந்து கலாய்ச்சுட்டுப் போறதப் பாத்துட்டு சாதாரணமா நாம எடை போட்றக் கூடாது. கவிதை எழுதுறதுல கை தேர்ந்தவராக்கும். அதுவும் காதல் கவிதைனா... சொல்லவே வேணாம்.
5. தமிழ்வாசி – இவரு ரொம்ப நாளா பதிவுகள் எழுதிகிட்டிருக்காரு. மாசத்துக்கு எப்படியும் இருபத்தஞ்சு பதிவாவது எழுதியே தீருவேன்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்காரு. எண்ணிக்கை அதிகமா இருந்தாலும் எல்லா பதிவுகளுமே ஒவ்வொரு விதத்தில் ரசிக்கிறபடி இருக்கும்.
6. கைகளில் அள்ளிய நீர் – பதிவுகள் எழுதுறதுலயும் அதுக்கேத்தபடி புகைப்படங்களைப் பொருத்துறதுலயும் திறமையானவர் இவர். இசை ஆர்வம் மிக்கவர்ங்குறது இவரோட பல பதிவுகள்ல பிரதிபலிக்கும்.
இன்னும் என்ன யோசனை பண்ணிகிட்டு இருக்கீங்க..??? நேரம் கிடைக்கும்போது, மேல சொன்ன நண்பர்களோட வலைதளங்களுக்கெல்லாம் போய்ட்டு வாங்க.
அப்புறம் என் மொக்கை தாங்க முடியாம நொந்துபோயிருக்க உங்க்கிட்ட ஒரு சந்தோசமான செய்தியும் ஒரு வருத்தமான செய்தியும் சொல்லணும். (எதையாவது சொல்லிட்டு சட்டுபுட்டுனு கிளம்புனு நீங்க கத்துறது எனக்கு கேக்குது..).
சந்தோசமான விசயம் இன்னும் ஒரே ஒரு சரம் தான் இருக்கு.
வருத்தமான விசயம் இன்னும் ஒரு சரம் இருக்கு.
அழுவாதீங்க.. அழுவாதீங்க.. நாளைக்கு கிளம்பிடுவேன்..
சரி சரி நேரமாய்டுச்சு. பகிர வேண்டிய தத்துவத்த சொல்லிட்றேங்க...

“நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்“

நாளைக்கு கடைசி சரத்துல சந்திக்கிறேங்க.. மறக்காம வந்துடுங்க.
.
.

20 comments:

  1. நாளையோட சரம் முடியுதா? ஓ... உங்க வலைச்சர அக்ரிமென்ட் முடியுதோ?

    ReplyDelete
  2. இன்றைய சரத்தை அலங்கரித்த பூக்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பாசக்கார புள்ளைங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அட நல்ல அறிமுகங்கள். அதுவும் வினு சான்ஸே இல்ல.. தலைவரு இப்போ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிஸி.. பொண்ணு செட்டாயிடுச்சி இல்ல.அதான் கண்டுக்கிறது இல்ல..

    ReplyDelete
  5. வாழ்க்கை என்பது ரணன்களையும் சேர்த்துத்தான்...

    அருமையான பகிர்வுக்குப் பராட்டுக்கள்.

    ReplyDelete
  6. வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக அறிமுகமாகியிருக்கிறேன்... அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  7. //தமிழ்வாசி//

    //கோகுல்//

    //கவிதை காதலன்//

    //இராஜராஜேஸ்வரி //



    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  8. //மாய உலகம் //



    வருகைக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  9. //மாய உலகம் //



    வருகைக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  10. வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.... அருமையான தத்துவ வரிகள்... தங்களது பதிவில் தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டு விளையாட்டாக அசால்ட்டாக ரசிக்கும்படியாக பதிவை பகிர்ந்துக்கொண்டு கடைசியில் தத்துவத்தையும் சொல்லி மதிப்பையும் வாரிக்கட்டிக்கொண்டு செல்லும் புத்திசாலித்தனம் உங்களால் மட்டுமே முடியும்... எப்படிங்க...(அப்பாடா புகழ்ந்தாச்சு இனி மறக்க மாட்டாங்க) ஹி ஹி ஹி அப்பறம் இன்று அறிமுகமாயிருக்கும் அனைத்து பதிவர்க்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வித்தியாசமான முறையில் அழகிய அறிமுகங்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. வலைச்சர ஆசிரியருக்கு வணக்கம்...தங்களது வலைதளத்தில் கண் தானம் விழிப்புணர்வு விளம்பரம் வருகிறது... அதற்கான படிவம் தங்களது தளத்தில் வெளியிட்டால் பல பேர் உடனடியாக தரவிறக்கம் செய்து இணைவார்கள் என்பது எனது வேண்டுகோள்... பிழை இருந்தால் மன்னிக்கவும் நன்றி

    ReplyDelete
  13. நன்றி தங்கள் அழகான அறிமுகத்துக்கு
    இது ரெண்டாவது முறையாக
    அறிமுக படலம்
    முன்பு அருண் பிரசாத் வலைப்பதிவின் மூலம்
    வலைச்சர பதிவுகள் உங்கள் போஸ்டில் போடவில்லையா

    ReplyDelete
  14. உங்கள் நகைச்சுவையுடன்
    தத்துவமும் கலந்து கலக்கலா முடித்து இருக்கீங்க
    வாழ்த்த வயதில்லை
    இருந்தாலும் வாழ்த்துக்கள்
    நன்றி தோழி இந்திரா

    ReplyDelete
  15. பல பதிவர்களை அறிமுக படுத்தியதற்கு நன்றி....

    நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

    ReplyDelete
  16. அறிமுகங்கள் அருமை

    தத்துவம் வாழ்வியல் உண்மையை உணர்த்துவதாக உள்ளது மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. நன்றி இந்திர மன்னிக்கவும் தாமதமான வருகைக்கு

    ReplyDelete
  18. நன்றி இந்திர மன்னிக்கவும் தாமதமான வருகைக்கு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது