07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 27, 2011

புதிய மனிதாதாதா...........பூமிக்கு வா... :-))

அனைவருக்கும் வணக்கம்,
கடந்த சில நாட்களா பணம் படிப்பு வேலை மருத்துவம்னு பல துறைகளை பற்றி பார்த்தாச்சு... ஆனால் அனைவருமே கொஞ்சம் தயக்கத்துடனே அணுகுவது இந்த தொழில் நுட்பம்தான்! இது பார்க்கத்தான் யானை மாதிரி இருக்கும்..ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் மவுஸ் என்னும் அங்குசத்தால் அதை ஆட்டுவிக்கலாம்! இதைப்பற்றி பல ஜாம்பவான்கள் இங்க எழுதிகிட்டு இருக்காங்க.. கொஞ்சம் பார்வையையும் கொஞ்ச நேரத்தையும் அதற்க்கு ஒதுக்குனாவே போதும் வீட்டுக்கு ஏன் லேட்டுன்னு கேட்க்கிற மனைவியிடமிருந்தும்.. கல்யாணம் ஆகாதவங்க பெற்றவர்களிடமும் எதாவது புரியாத டெக்னிக்கல் வார்த்தையா சொல்லி தப்பிக்கலாம்! சப்போஸ் உங்க மனைவியும் இங்க இருந்து கத்துகிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல! விதி வலியது :))
இன்றைக்கு உள்ள இளைஞர்கள் மூணு வேளை சாப்பாடு இல்லைனாலும் கவலைப்பட மாட்டாங்க ஆனா... ஒரு வேளை பேஸ் புக் தளத்தை ஒப்பன் பண்ணலைனா அவங்களால தாங்கவே முடியாது.. அப்படி ஒன்றி விட்டார்கள்! அப்படி வாழ்வோடு பிண்ணிபினைந்த உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை யாராவது ஹேக் பண்ணினால் எப்பிடி இருக்கும்? தாங்க முடியாதுள்ள?.. அப்ப நீங்க அவசியம் இந்த தளத்தை படிங்க!

மொபைல் போன்ல வாய்ஸ் மெயில் அனுப்புவதைப்பற்றி பெரும்பாலும் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.. ஆனால் அதே வசதி மின்னஞ்சலில் வந்தால் எப்படி இருக்கும்? என்ன கொடுமையா இருக்குமா? எழுத்துல திட்ற மேனேஜர் இனி வார்த்தையாலும் திட்டுவாரோ?.. அத விடுங்க.. ஆனா உங்க காதலிக்கு உங்கள் குரலிலே ஐ லவ் யூ சொல்லலாம் பாருங்க? சொன்னதுமே ஆசையா இருக்கா? அப்ப... இந்த தளத்தில் சென்று பாருங்கள்!

நீங்க பொண்ணு பார்க்கிறதுக்கு போட்டோ அனுப்பினா..இருப்பதிலே நல்ல போட்டோவ தேடி அனுப்புறதுக்குள்ள போதும்..போதும்னு ஆயிருதா? ( சட்டில இருக்கனும்ங்க) ஆனா.. எவ்வளவு மட்டமா இருந்தாலும் அத போட்டோசாப்ள வச்சு முகத்தில் உள்ள பரு கரும்புள்ளி எல்லாத்தையும் எடுத்துட்டு..சும்மா சிவாஜி வெள்ளைக்கார ரஜினி கணக்கா அனுப்பலாம்! என்ன ஆசையா இருக்கா? அப்ப இந்த தளத்தில் சென்று பார்க்கவும்!

அப்பிடியே உங்க முகத்த அழகுபடுத்தின்னாலும்.. பேக்ரவுண்ட்ல நீங்க நின்னுகிட்டு இருந்த டாஸ்மாக் போர்ட் தெரியுதா? வேற வினையே வேண்டாம்..ஊத்தி மூடிருவாங்க! அப்ப என்ன பண்ணனும்? பேக்ரவுண்ட மறைக்கணும்..வேற கலர்ல கொண்டுவரணும்.. அப்ப நீங்க அவசியம் இந்த பதிவ போய் படிச்சிட்டு வாங்க!

அடிச்சு பிடிச்சு கல்யாணம் பண்ணி வந்த புதுசுல உங்களுக்கு எல்லா வேலையும் இழுத்துபோட்டு செய்வாங்க உங்க மனைவி.. கொஞ்ச நாள் ஆச்சுனா.. உங்களுக்கு என்ன நான் பி.ஏவா அப்பிடின்னு கேப்பாங்க! ( யாருப்பா அது? அனுபவமான்னு கேக்குறது?) இதை தொல்லையே வேண்டாம்னு என்ன பண்ணுங்க.. இந்த பதிவ போய் படிச்சிட்டு அதுல சொல்லியிருக்க மாதிரி செய்ங்க.. இனி உங்க லேப்டாப்பே அந்த வேலைய பார்க்கும்!

ஆரம்பத்துல அழகா தெரியுற உங்க மனைவியோட பேச்சு..கொஞ்ச நாள் ஆனா அதிகமா தோணுதா? வாங்க நீங்க நம்ம கட்சி.. அப்ப என்ன பண்ணுங்க, இணையத்துல ஒரு இணைய வானொலிய ஆரம்பிச்சு கொடுத்துருங்க! நீங்க பெற்ற துன்பம் பெறட்டும் இவ்வையகம்! எப்பிடி இதை ஆரம்பிக்கிறதுன்னு கேக்குறீங்களா? உங்களுக்காகவே இந்த தளத்தில் சொல்லியிருக்கார் போய் படிங்க! ( பாவம்..அவருக்கு என்ன கஷ்டமோ?)

இது எதுமே பத்தாது..இன்னும் நிறைய தளங்களின் முகவரிகள் வேணும்னு சொல்றீங்களா? அப்ப.. நீங்க அவசியம் இந்த தளத்தில் போய் பாருங்க .. தொழில்நுட்ப பதிவர்களின் முகவரிகளை தொகுத்து தந்திருக்கிறார்!

மேல.. மனைவியை பற்றி சொன்னதெல்லாம் நகைசுவைக்காக மட்டுமே.. நீங்கள் எவ்வளவு பெரிய டெக்னிக்கல் புலியாக வேணாலும் இருங்கள்..வீட்டுக்குள் செல்லும்போது செருப்போடு சேர்த்து அதையும் வாசலிலே விட்டு சென்றுவிடுங்கள்! மகிழ்ச்சியான குடும்பத்திற்கு அதுவே முதல்படி :-))

நன்றியும் வாழ்த்துக்களுடனும்,

வைகை

39 comments:

 1. இன்றும் இனிய வணக்கங்களுடன்....
  பன்னி...:)

  ReplyDelete
 2. நுட்பமான அறிமுகங்கள்!
  அருமை!
  இனிமை!
  புதுமை!
  வழமை!

  ReplyDelete
 3. நுட்ப பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. Pannikutty & SK... Are you Human Beings? Dont have common sense. stupid peoples. y putting comments without reading post. Bloody fools.

  (போய் பதிவுல இருக்க லிங்க எல்லாம் படிச்சிட்டு வரலாம் பார்த்தா அதுக்குள்ள கமெண்ட் போட்டு வச்சி இருக்கானுங்க ராஸ்கல்ஸ்ஸ்ஸ்ஸ்)

  ReplyDelete
 5. வைகை மச்சி! சூப்பர்... நான் என்னோட பேஸ்புக் அக்கவுண்ட பன்னிகுட்டி மாதிரி திருட்டு பசங்க கிட்ட இருந்து சேப் பண்ணிட்டேன்.

  ReplyDelete
 6. டெரர் சார் உங்களுக்கு பேஸ்புக் அக்கவுண்டாலாம் இருக்கா! பெரிய ஆளுதான்!

  ReplyDelete
 7. ஒவ்வொரு நாளும் செலக்ட் செய்கிற டாபிக் வித்தியாசமாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 8. மாப்ள தளங்களின் பகிர்வு அருமைய்யா.......இந்த Final Touch அப்படின்னா சொந்தக்கதைய ஊருக்கு சொல்றது தானோ ஹிஹி!

  ReplyDelete
 9. புது பிளாக்கு...
  புது ஸ்டைலு...
  புது அறிமுகங்கள்...

  கலக்குற வைகை..!

  ReplyDelete
 10. அருமையான கருத்துக்களுடன் அறிமுகங்கள் அசத்தல்தான்..
  பாராட்டுக்கள்..
  பார்க்கிறேன்..

  ReplyDelete
 11. // ( சட்டில இருக்கனும்ங்க) //

  வைகை,

  இங்க ஒரு நாதாரி தப்பா படிச்சிருச்சி...ஹிஹிஹி...!

  ReplyDelete
 12. //( யாருப்பா அது? அனுபவமான்னு கேக்குறது?) //

  நாங்களா எதுவும் கேக்கல ராசா. நீயா தான் ’சூனியம்’ வெச்சிக்கிற!

  ஐ லைக் யுவர் நேர்மை - மை லார்டு.

  ReplyDelete
 13. //ஆரம்பத்துல அழகா தெரியுற உங்க மனைவியோட பேச்சு..கொஞ்ச நாள் ஆனா அதிகமா தோணுதா? வாங்க நீங்க நம்ம கட்சி..//

  உம்ம கட்சியில சேந்ததுலந்து தானேய்யா தெனமும் திண்ணையில படுத்து தூங்கிக்கிட்டிருக்கேன். இன்னும்வேற உறுப்பினர் சேக்குறாராமா!

  ReplyDelete
 14. //நீங்கள் எவ்வளவு பெரிய டெக்னிக்கல் புலியாக வேணாலும் இருங்கள்..வீட்டுக்குள் செல்லும்போது செருப்போடு சேர்த்து அதையும் வாசலிலே விட்டு சென்றுவிடுங்கள்! மகிழ்ச்சியான குடும்பத்திற்கு அதுவே முதல்படி :-))//

  அதெப்படி மக்கா,

  தெனறத்தெனற அடிச்சிட்டு கடைசியா ஒரு பஞ்ச் எழுதி விட்டுர்ர்ர்ர!

  ReplyDelete
 15. தொழில்நுட்ப வலைகளா அறிமுகப்படுத்தி அசத்திட்டிங்க ராசா.

  வலைச்சர பள்ளியில இருந்து வேலைய விட்டு அனுப்பப்போறாங்களாமே! பிரிவு உபச்சார விருந்து எதுவும் உண்டா?

  ReplyDelete
 16. கலக்கிட்டீங்கண்ணே இன்னைக்கு நம்ம சப்ஜெக்ட்..... வழக்கம்போலவே அசத்தல்.... :)

  ReplyDelete
 17. அறிமுகபடுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்களின் மகத்தான பணிகள்! :))

  ReplyDelete
 18. பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகபடுத்தி வலைச்சரப் பணியை மென்மேலும் சிறப்பாக செய்த உங்களுக்கு சிறப்பு நன்றிகளும் வாழ்த்துக்களும் அண்ணே! :)

  ReplyDelete
 19. ஓகே, மாணவன் சார் ஒரு முக்கியமான தேர்வு எழுத செல்ல இருப்பதால் பிறகு சந்திப்போம் அண்ணே நன்றி வணக்கம்!

  இன்றும் இனிய வணக்கங்களுடன்....
  உங்கள். மாணவன்... :-)

  ReplyDelete
 20. விதி வலியது :))

  நுட்ப பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 21. //இது எதுமே பத்தாது..இன்னும் நிறைய தளங்களின் முகவரிகள் வேணும்னு சொல்றீங்களா? அப்ப.. நீங்க அவசியம் இந்த தளத்தில் போய் பாருங்க .. தொழில்நுட்ப பதிவர்களின் முகவரிகளை தொகுத்து தந்திருக்கிறார்!//

  PANANGOOR ஆகிய என் வளைதளத்தை அறிமுகபடுத்திய அண்ணன் வைகைக்கு ஜே. நன்றி அண்ணா.
  www.panangoor.blogspot.com

  ReplyDelete
 22. "புதிய மனிதாதாதா...........பூமிக்கு வா... :-))"

  ReplyDelete
 23. இன்றும் இனிய வணக்கங்களுடன்....
  உங்கள். கார்த்திக் ... :-)

  ReplyDelete
 24. @ வைகை உங்கள் சிந்தனையும் செயலும் என்னைப்போலவே உள்ளன .. :))

  ReplyDelete
 25. ஹையா வலைச்சரத்திற்கு நாளையோட விடிவுகாலம்... :))

  ReplyDelete
 26. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஐயா.. :))

  ReplyDelete
 27. சுவாரஸ்யமான அறிமுகங்கள்... வாழ்த்துகள்

  ReplyDelete
 28. வைகை அண்ணனுக்கு ஒரு சிறப்பு நன்றி.. போட்டோசாப் பழகனும்னு இருந்தேன். இந்த ப்ளாக் பயன்படும் :))

  ReplyDelete
 29. கலக்குறீக பங்கு ..... கலக்குங்க ...

  ReplyDelete
 30. கலக்கல் பாஸ்!

  ReplyDelete
 31. தளங்களின் பகிர்வு அருமை.

  ReplyDelete
 32. /////// TERROR-PANDIYAN(VAS) said...
  Pannikutty & SK... Are you Human Beings? Dont have common sense. stupid peoples. y putting comments without reading post. Bloody fools.

  (போய் பதிவுல இருக்க லிங்க எல்லாம் படிச்சிட்டு வரலாம் பார்த்தா அதுக்குள்ள கமெண்ட் போட்டு வச்சி இருக்கானுங்க ராஸ்கல்ஸ்ஸ்ஸ்ஸ்)////////

  என்னது பதிவுல இருக்க லிங்க்லாம் போய் படிச்சிட்டு வந்தியா?

  ReplyDelete
 33. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 34. நல்ல தகவல்கள் , என் தளத்தையும் இணைத்தமைக்கு நன்றிகள் பல ........

  ReplyDelete
 35. வலைச்சரத்தில் அறிமுகமாகிய அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே...
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது