07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 11, 2011

ஹோட்டல் எமவிலாஸ் - சைவம்

அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம்

இன்று முட்டை இல்லா வெஜ் ஆம்லெட் செய்வது எப்படின்னு சொல்லி  தரப்போறேன்

தேவையான பொருட்கள்

1. சோளமாவு - 2 தேக்கரண்டி
2. அரிசிமாவு - 2 தேக்கரண்டி
3. வெங்காயம் - 1 பெரியது பொடியாக நறுக்கி கொள்ளவும்
4. தூள் பெருங்காயம் - தேவையான அளவு
5. உப்பு - தேவையான அளவு
6. பச்சை மிளகாய் - 2 நீளமானது பொடியாக நறுக்கி கொள்ளுங்கள் (மூலம் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது அல்லது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்)

செய்முறை

சோளமாவு, அரிசிமாவு இரண்டையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக இல்லாமலும் ரொம்ப தண்ணீராக இல்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த சோளமாவு கரைசலில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள்.

தோசை கல்லை அடுப்பில் வைக்கவும், நன்கு சூடேறிய பிறகு சிறிது எண்ணை ஊற்றி தோசை கல் முழுவதும் தேய்த்துக்கொளுங்கள். ஒரு கரண்டியில் கரைத்த மாவை எடுத்து ஆம்லெட் சைஸ்க்கு ஊற்றுங்கள்,

நன்கு சிவந்து வந்ததும் திருப்பி போடுங்கள். சூடாய் பரிமாறுங்கள்

டிஸ்கி 1 : சமைத்து மட்டும் பாருங்கள், சாப்பிடுவதற்க்கு நான் கியாரண்டி இல்லை.

டிஸ்கி 2 : மேலே வைத்த தலைப்புக்கும் கீழே சொல்லப்பட்டுள்ள பதிவர்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை, சும்மா தமாசுக்கு தலைப்பு அப்பிடி. யாரேனும் தவறாக இருக்கிறது என்று நினைத்தால் மன்னியுங்கள்.

இனி வலை உலகில் எனக்கு பிடித்த சிலர்

1. வித விதமாய் சமையல் செய்வது எப்படி என்று சொல்லிதரும் அழகான வலைப்பூ இவருடையது. பயணிக்கும் பாதை என்று தலைப்பிட்டு இஸ்லாம் / சமையல்/கைவினை/செய்திகள்/மருத்துவம்/டிப்ஸ் என்று பல சுவாரஸ்ய குறிப்புகளை தருகிறார், சமீபத்தில் இவர் பதிவிட்ட நண்டு முருங்கைக்காய் குருமா பதிவில் பல சுவாரசியமான செய்திகளையும் தருகிறார்..


2. அடுத்த சமையல் ராஜா இவர், பல உபயோகமான குறிப்புகளும் தருகிறார். இந்த பதிவு ஒரு சாம்பிள் இவர் எப்பிடி அல்வா கிண்டுறார்ன்னு தெரிஞ்சுக்க


3. அடுத்து பார்க்கபோறதும் சமையல் சொல்லி தர்றவங்க தான், காரட் ஃப்ரை எப்பிடி பண்ணியிருக்காங்க பாருங்க. கொஞ்சம் கஷ்டம் என்ன தெரியுமா, எல்லாம் இங்கிலீஷ்-ல இருக்கு அப்புறம் ஆந்திரா ஸ்டைல் மாதிரி தெரியுது

அன்புடன்
ஜ.ரா.ரமேஷ் பாபு

14 comments:

  1. மணக்க மணக்க முதல் விருந்தில் நான்....


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வெஜ் ஆம்லெட் உனக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டுதான் நாங்க சாப்பிடுவோம்...

    ReplyDelete
  3. தலைப்பே இந்த “கலக்கு” கலக்குறீங்க

    ReplyDelete
  4. தலைப்பு - சூப்பர்!

    ReplyDelete
  5. தலைப்பு சூப்பர் ஆம்லேட்டும் அருமை,.

    பயணிக்கும் பாதை என் தோழி அஸ்மாவை நன்கு தெரியும் மற்ற இரண்டு பேர் புது முகங்கள்

    ReplyDelete
  6. அறிமுகங்கள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சுவையான சமையல் பூ அறிமுகங்கள். நன்றி!

    ReplyDelete
  8. நல்ல அறிமுகங்கள்

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. தொடர்ந்து கருத்துக்களை சொல்லி என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் எல்லோருக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  10. தோசை கல்லை அடுப்பில் வைக்கவும், நன்கு சூடேறிய பிறகு சிறிது எண்ணை ஊற்றி தோசை கல் முழுவதும் தேய்த்துக்கொளுங்கள். ஒரு கரண்டியில் கரைத்த மாவை எடுத்து ஆம்லெட் சைஸ்க்கு ஊற்றுங்கள்//
    ரொம்ப டீடெய்லா இருக்கே.

    ReplyDelete
  11. முட்டையில்லாத ஆம்ளைட்டை இன்று தான் கேள்வி படறேன் சூப்பருங்க... இன்றைய வலைசரத்தில் அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வெஜ் ஆம்லெட் சொன்னீங்க சரி... எங்க வெஜிடபிளே காணோமே.. காக்கா ஊச்??

    சும்மா தமாஷ்....

    சிரிக்கவைக்கும் முயற்சியில் வெற்றியே உங்களுக்கு.....

    அது சரி செய்முறை மட்டும் தானா? நல்லவேளை முயற்சிக்க நாங்க யாரும் மாட்டோம்... தப்பிச்சோம்... :)

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்....

    சிரிக்கவைத்த ரமேஷ்பாபு உங்களுக்கு என் அன்பு நன்றிகள்....

    அருமையான வித்தியாச பகிர்வு...தைரியம் தான் இப்படி சாப்பிடமுடியாதபடி ஒரு வெஜிடபிளே இல்லாத வெஜ் ஆம்லெட் சொல்லி கொடுத்ததுக்கு :)

    ReplyDelete
  13. அறிமுகப்படுத்தி வைத்த சகோ ரமேஷ் பாபு அவர்களுக்கு மிக்க நன்றி :) இத்துடன் நான்காவது முறையாக வலைச்சரத்தில் (வெவ்வேறு கோணத்தில்) என் வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டதில் சந்தோஷமடைகிறேன். (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)

    'வலைச்சரம்' பொறுப்பாசிரியர் Cheena ஐயா அவர்களுக்கும், ஜலீலாக்காவுக்கும், வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது