07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 28, 2011

வைகையிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மனோ சாமிநாதன்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற வைகை - தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடனும், மன நிறைவுடனும், மகிழ்ச்சியாக நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நானூறு மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவர் தனது சுய அறிமுகமான முதல் பதிவில் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட தன் பதிவுகளை அறிமுகம் செய்து, பிறகு இசை, மருந்துகள், வேலை வாய்ப்புகள், பயணம், தொழில் நுட்பம் மற்றும் டெரர் கும்மி குழும நண்பர்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் ஏறத்தாழ எண்பது இடுகைகளை அறிமுகம் செய்திருக்கிறார்.

ஏற்ற பொறுப்பினை நிறை வேற்றியதில் அவரது கடும் உழைப்பு தெரிகிறது. அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மனோ சாமிநாதன். இவர் முத்துச் சிதறல் என்னும் வலைப்பூவினிலும், mano's delicious kitchen என்னும் ஆங்கில வலைப்பூவினிலும் எழுதி வருகிறார். இரண்டு வலைப்பூக்களிலுமே எண்பதுக்கும் மேலான இடுகைகள் இட்டிருக்கிறார். இரண்டிலும் சேர்த்து இறுநூறுக்கும் மேல் பதிவர்கள் பின் தொடர்கின்றனர்.

இவர் தஞ்சையைச் சேர்ந்தவர் - ஐக்கிய அரபுக் குடியரசில் 35 ஆண்டுகட்கும் மேலாக குடும்பத்துடன் வசிப்பவர். எழுபதுகளில் தமிழ் வார இதழ்களில் ஓவியராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். கர்நாடக இசையும் பயின்றிருக்கிறார். மையம் என்ற வலைத் தளத்தில் 2004 முதல் சமையல் குறிப்புகள் எழுதி 11 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறார்.

சகோதரி மனோ சாமிநாதனை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் வைகை
நல்வாழ்த்துகள் மனோ சாமி நாதன்

நட்புடன் சீனா

23 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. Aavaludan kaathirukkiren...
  Congrats vaigai!

  ReplyDelete
 3. முத்துசிதறல் இந்த வாரம் முழுக்க சிதற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அட மனோ மேடம்! வாங்க ! தங்கள் வருகை சிறப்பாகுக !!

  ReplyDelete
 5. வலைச்சர ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்கும் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களை வருக! வருக!! வருக!!! என வரவேற்கிறேன்.

  தங்களின் இந்தப் பணி மிகச்சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 6. முத்துச் சிதறல்கள் சிதற வாழ்த்துக்கள் தந்த சகோதரர் கோகுலுக்கு மனங்கனிந்த நன்றி!!

  ReplyDelete
 7. நல் வரவேற்பிற்கு அன்பு நன்றி சகோதரர் மோகன்குமார்!!

  ReplyDelete
 8. வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் உள‌மார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்....கலக்குங்க மேடம்!

  ReplyDelete
 10. ரொம்ப சந்தோஷம் ஐ எங்க மனோ அக்கா
  கலக்குங்க கலக்குங்க.

  ReplyDelete
 11. வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கும் ஆதரவளித்த அன்பர்களுக்கும் நன்றி கூறிக்கொண்டு.. சகோதரி மனோ அவர்களை வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் :))

  ReplyDelete
 12. இனி ஒரு வாரத்திற்கு இணைய உலகெங்கும் சிதறிக் கிடக்கும் முத்துக்களைச் சேகரித்து நாளும் ஒரு மாலையாக சூட்ட வாருங்கள்.

  ReplyDelete
 13. முத்தான முத்தல்லவோ!!

  ReplyDelete
 14. வாரம் முழுதும் முத்துச் சிதறல் வலை சரத்தில்.... வாழ்த்துக்கள் மனோ மேடம்....

  ReplyDelete
 15. வாங்க மனோ மேடம். முத்துச்சிதறல்
  களை மாலையாக்கி அழகு படுத்துங்க.

  ReplyDelete
 16. உற்சாகப்படுத்துதலுடன் கூடிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி விக்கியுலகம்!

  ReplyDelete
 17. உங்களின் வருகையும் வாழ்த்தும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிற‌து ஜலீலா! ஆரம்ப காலத்தில் உங்களின் டிப்ஸ் எனக்கு பேருதவியாக இருந்த‌தை நான் என்றும் மறப்பதேயில்லை!

  ReplyDelete
 18. கருத்துரைக்கு அன்பு நன்றி மாதவி!

  ReplyDelete
 19. உங்களின் வாழ்த்துக்களுக்கும் வரவேற்பிற்கும் அன்பு நன்றி வைகை!

  ReplyDelete
 20. முத்துச்சரங்களை தினந்தோறும் சூட்ட அழைப்பு விடுத்தமைக்கு அன்பார்ந்த நன்றி சத்ரியன்!!

  ReplyDelete
 21. கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜி!

  ReplyDelete
 22. அன்பான வாழ்த்துக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

  ReplyDelete
 23. வரவேற்பிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரி லக்ஷ்மி!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது