வலைச்சரம் நாள் 3-- விருந்துக்குப் பின் மருந்து!
➦➠ by:
சென்னை பித்தன்
ஒரு இளம் மருத்துவர் ஒரு சிறிய கிராமத்து மருத்துவ மனையின் பொறுப்பேற்கச் சென்றார்.அங்கு அது வரை பணி புரிந்து வந்த வயதான மருத்துவர்,தான் அன்று சில நோயாளிகளைப் பார்க்கப் போகும்போது,புதிய மருத்துவரும் உடன் வந்தால் அறிமுக மாகிவிடும் என்று கூறி அவரையும் உடன் அழைத்துச் சென்றார்.
முதல் வீட்டில் இருந்த பெண், தனக்குக் காலை முதல் வயிற்றை வலிக்கிறது என்று கூற, பழைய மருத்துவர்,அவள் பழம் அளவுக்கு மீறிச் சாப்பிட்டதால் இருக்கும், எனவே பழைத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
அவரது நோய் அறுதியீட்டைக் கண்டு வியந்த புதியவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பெண்ணைப் பரிசோதிக்காமலே எவ்வாறு முடிவு செய்தார் என வினவினார்.
பழையவர் சொன்னார்”அவசியமேயில்லை.நான் அங்கு என் இதயத்துடிப்பு மானியைக் கீழே போட்டேன் அல்லவா.அதை எடுக்கக் குனிந்தபோது கட்டிலுக்கடியில் ஏழெட்டு வாழைப்பழத் தோல்களைக் கண்டேன். எனவே அந்த முடிவுக்கு வந்தேன்.”
எப்படி டயக்னோசிஸ்!
(இது பாதிக்கதை மட்டுமே!மீதிக்கதை தெரிய இங்கு போக வேண்டும்!)
ஆக மருத்துவம் கால்,மதி முக்கால் என்பது தெளிவாகிறது!
இப்போது இந்தக் கதை எதற்கு?
(இது பாதிக்கதை மட்டுமே!மீதிக்கதை தெரிய இங்கு போக வேண்டும்!)
ஆக மருத்துவம் கால்,மதி முக்கால் என்பது தெளிவாகிறது!
இப்போது இந்தக் கதை எதற்கு?
இன்று மருத்துவம்,மருத்துவம் சார்ந்த பதிவுகளைப் பார்க்கப் போகிறோம்.
நேற்று சாப்பாட்டில் ,சுவை காரணமாக அதிகம் சாப்பிட்டதால், அஜீரணம் ஏற்படும், அதற்குப் பாட்டி வைத்தியம் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார் நண்பர் வாசு.இதோ அவர் கேட்ட பாட்டி வைத்தியம்! இங்கு நமது நோய்களுக்கான பாட்டி வைத்திய முறைகள் கொட்டிக் கிடக்கின்றன!
சமையலறை மருத்துவம் பாருங்கள், இந்தப் பெட்டகத்தில்.பல நாட்டு வைத்திய முறைகளும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நேற்று சாப்பாட்டில் ,சுவை காரணமாக அதிகம் சாப்பிட்டதால், அஜீரணம் ஏற்படும், அதற்குப் பாட்டி வைத்தியம் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார் நண்பர் வாசு.இதோ அவர் கேட்ட பாட்டி வைத்தியம்! இங்கு நமது நோய்களுக்கான பாட்டி வைத்திய முறைகள் கொட்டிக் கிடக்கின்றன!
சமையலறை மருத்துவம் பாருங்கள், இந்தப் பெட்டகத்தில்.பல நாட்டு வைத்திய முறைகளும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இன்று இரத்தக் கொதிப்பு என்பது ஒரு தேசீய நோயாகி விட்டது. மாறி வரும் வாழ்க்கை முறைகளே அதற்கான பெருங்காரணமாக இருக்கின்றன. இதைக் கட்டுப்பாட்டில் வைக்க எளிய முறைகள் என்னவென்று சொல்கிறார் Dr.G.சிவராமன்.
நமது நாட்டில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. 2030 இல் இது 8.7 கோடியாக உயரும் என்றும் சொல்லப் படுகிறது. அநேகர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார்கள்.நமக்கெல்லாம் இன்சுலின் ஊசி தெரியும்; இன்சுலின் செடி தெரியுமா? அதை நமக்கு அறிமுகம் செய்விக்கிறார் திரு.குப்புசாமி.
நமது பல நோய்களுக்கு/குறைபாடுகளுக்கு எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் தருகிறார் கை.க.சோழன்.எல்லாமே சின்னச் சின்ன குறிப்புகள். தேவைப்படுவர்கள் முயன்று பார்க்கலாம்.
தைலங்களில்தான் எத்தனை வகை?வாத நோய்க்கு ,உடல் குளிர்ச்சிக்கு,வலிபோக,முடி வளர என்று எத்தனை தைலங்கள்? அவற்றின் செய்முறை பற்றியும்,பயன்கள் பற்றியும் விளக்கமாகச் சொல்கிறார் curesure4u.தைலங்களைச் செய்ய இயலாவிடினும், அவற்றின் பலன் தெரிந்து அவற்றை வாங்கிப் பயன் படுத்தலாமே!பாருங்கள் ஆயுர்வேத மருத்துவம்
இவரது உலகம் அன்பு மயமானது.ஆம்,அன்பு உலகம் ரமேஷ் பற்றித்தான் சொல்கிறேன்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்கள் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்;எளிய உடற்பயிற்சி முறைகள் பற்றியும் எழுதுகிறார். உடல் நலம் பேணப் பாருங்கள்.
மற்றொரு தளம்.நாம் பயன்படுத்தும் காய்,கனிகளின் இயற்கை மருத்துவ குணங்கள் பற்றிக் கூறும் தளம் ,இதோ!
மற்றொரு தளம்.நாம் பயன்படுத்தும் காய்,கனிகளின் இயற்கை மருத்துவ குணங்கள் பற்றிக் கூறும் தளம் ,இதோ!
சிறுநீரகத்தின் செயல்பாடுகள்,அது சரியாகச் செயல் படவில்லை யெனில் ஏற்படும் விளைவுகள்,அதற்கான அறிகுறிகள், யாருக் கெல்லாம் சிறுநீரகம் பாதிப்படையும்,சிறு நீரகத்தைக் காப்பதற்கான வழிமுறைகள் என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் கனடா பதிவர் தென்றல்,கீரன் தகவல் பலகையில்.
வெங்காயத்துக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் வெங்காயத்தை எப்படிப் பயன் படுத்தினால்,என்ன பலன்கள் கிடைக்கும் என்று விளக்கமாக 50 குறிப்புகளில் சொல்கிறார் சிவகுமாரின் சித்த வைத்தியத்தில்
காய்ச்சல் வராத மனிதர்கள் இருக்கலாம்.வயிற்றுப்போக்கு வராதவர்களும் இருக்கலாம்.ஆனால் ஜலதோசம் எனப்படும் சளித்தொல்லை வராதவர்கள் இருக்க முடியுமா?சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்பார்கள்.ஆங்கில மருத்துவத்தில்,மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்திலும் சாப்பிடாவிட்டால் 7 நாட்களிலும் சரியாகி விடும் என்று சொல்வார்கள். அந்தச் சளிக்குச்,சித்த மருத்துவ முறைகள் சொல்கிறார் சாந்தன்
போதுமா?
|
|
நல்ல பயனுள்ள குறிப்புகள் அடங்கிய தொகுப்பு.
ReplyDeleteநன்றி ஐயா.
ஹெல்த் கேர் இப்ப எல்லாருக்குமே அவசியமான ஒரு விஷயம். இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவிருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். நீங்களோ விருந்து படைத்த இரண்டாம் நாளே மருந்து கொடுத்துவிட்டீர்கள். இருந்தாலும் நேற்று சாப்பிட்ட விருந்து செரிக்க இன்று மருந்து கொடுப்பது சரிதான். உடல் நலம் பேண உதவும் நல்ல பதிவுகளை கோடிட்டு காண்பித்தமைக்கு நன்றி. நாளை என்னவோ??!!
ReplyDeleteவணக்கம் பாஸ் சில நாட்கள் பதிவுலகப்பக்கம் வரமுடியவில்லை இதனால நீங்கள் வலைச்சரத்தில் ஆசிரியரானது தெரியவில்லை வாழ்த்துக்கள் கலக்குங்கள்
ReplyDeleteசித்த வைத்திய முறைதற்போது
ReplyDeleteபரவலாகப் பய்படுத்த படுகிறது.
நல்ல பதிவு!
புலவர் சா இராமாநுசம்
அஹா அருமை
ReplyDeleteவிருந்து அதைத் தொடர்ந்து மருந்து
அழகான வித்தியாசமான சிந்தனை
அறிமுகம் செய்யப்பட்ட பதிவுகளும் அருமையான பதிவுகள்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
டாக்டர். சென்னைப்பித்தன் தகவல்கள் அனைத்தும் நன்று.
ReplyDeleteமிகவும் அவசியமான மருத்துவ குறிப்புகளை வழங்கிய அய்யா சென்னைப்பித்தன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறோம்
ReplyDeleteஇன்று மருத்துவ பதிவர்களாக....அறிமுகப்படுத்தியது...நன்று...
ReplyDeleteமிக அருமையான மருத்துவ தொகுப்பு
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
மருத்துவப் பதிவுகளின் தொகுப்பு சூப்பர்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான தொகுப்பு. பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteஏது ஏது ! மருத்துவர்கள் அனைவரும் கூடி தங்கள் வருமானத்திற்கு ஆபத்து வருகிறேதே என்று திரு சென்னை சித்தன் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானம் செய்து இருப்பதாக கேள்வி ! ஜாக்கிரதை ! வாசு -
ReplyDeleteவிருந்துக்கு பிறகு மருந்து சரிதான்..குறிப்பிட்ட மருத்துவ குறிப்புகள் இன்றைய சூழ்நிலைக்கு அவசியமானது தான்..தாங்கள் அடையாளம் காட்டிய அனைவருக்கும் வாழ்த்துகள்..உங்களுக்கு நன்றி..
ReplyDeleteவித்தியாசமான பாகம். முழுக்க முழுக்க மருத்துவ குறிப்புகள் அடங்கிய பதிவுகளின் முகவரி. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட விருந்துக்குப் பின் மருந்து.... நல்ல அறிமுகங்கள்.... புதியவர்கள் பக்கங்களை படிக்கிறேன்...
ReplyDeleteArumai Sir. Arimugangal anaithum Super.
ReplyDeleteஅன்பின் பித்தன் - அருமை அருமை - அறிமுகங்கள் அருமை - அத்தனையும் சென்று பார்த்து படித்து மறுமொழியும் இட்டு வந்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகாலை 10 லிருந்து மாலை 5 வரை மின்சாரம் இல்லை.எனவே இரவுதான் இங்கு வர முடிந்தது.மன்னிக்க.
ReplyDeleteநன்றி கோமதிஅரசு.
ReplyDeleteநன்றி லக்ஷ்மி அம்மா.
ReplyDeleteநன்ரி சபாபதி அவர்களே.
ReplyDeleteநன்றி ராஜ்.
ReplyDeleteநன்றி புலவர் ஐயா.
ReplyDeleteநன்றி ரமணி.
ReplyDeleteடாக்டர்!ஹா,ஹா,பட்டத்துக்கு நன்றி சிவகுமார்.
ReplyDeleteஎன்னையும் டாக்குட்டராக்கிட்டீங்க!
ReplyDeleteநன்றி கஸாலி.
நன்றி veedu
ReplyDeleteநன்றி Jaleela Kamal
ReplyDeleteநன்றி கணேஷ்.
ReplyDeleteநன்றி சமுத்ரா.
ReplyDeleteநன்றி ஆதி வெங்கட்.
ReplyDeleteஐயோ! இது வேறா?
ReplyDeleteநன்றி வாசு.
நன்றி மதுமதி
ReplyDeleteநன்றி கடம்பவன குயில்
ReplyDeleteநன்றி வெங்கட்
ReplyDeleteநன்றி துரை டேனியல்
ReplyDeleteநன்றி சீனா.
ReplyDeleteஅன்பு ஐயா அவர்களுக்கு வணக்கம்
ReplyDeleteஎம்மை மற்றவர் அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி .
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி
நன்றி ரமேஷ்.
ReplyDeleteஉங்கள் மறு வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி ஐயா.
பயனுள்ள குறிப்புகள் அடங்கிய தொகுப்பு.
ReplyDeleteபாராட்டுக்கள்..
ஆமாம் அய்யா! மருத்துவம் கால் மதி முக்கால்தான்,நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள குறிப்புகள் அடங்கிய அருமையான தொகுப்பு. நன்றி ஐயா.
ReplyDeleteநன்றி ரத்னவேல் ஐயா.
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி
ReplyDeleteநன்றி சண்முகவேல்
ReplyDeleteநன்றி வைகோ சார்.
ReplyDeleteமிகத் தேவையான தொகுப்பு.குறிப்பெடுத்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteபயனுள்ள குறிப்புகள்...ரொம்ப நன்றி.
ReplyDelete