07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 4, 2012

உடல் நலம் ,உள நலம், காப்போம்


அன்பு உள்ளங்களுக்கு

முதல் நாள் என் கதையைக் கேட்க வந்தீர்கள், மறுநாள் நான் கொடுத்த விருந்தை ரசித்தீர்களா?இன்று உடல் நலம் எப்படி இருக்கிறது? (அந்த காலத்தில் )கடிதம் எழுதும் போது நலம் நலம்றிய ஆவல். என்று தான் எழுதுவோம். இப்போது ஒவ்வொருவர் சந்திக்கும் போது, தொலைபேசி, அலைபேசியில் எல்லாம் நல்ம் விசாரிப்பு நடக்கிறது. உடலில் ஏதாவது தொந்திரவு செய்வதைச் சொன்னால் கிடைக்கும், நிறைய அறிவுரைகள். ஆரோக்கியம்
என்பது நம் கையில் தான் இருக்கிறது. நாள் தோறும் உடற்பயிற்சிகள், உள் உணர்வுகளை ஒழுங்கு படுத்தச் சிறிது நேரம் தியானம், அளவான உணவு, உறக்கம்,இருந்தால் நல்லது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் . அப்படியே நோய் வந்தாலும் அதை மனவலிமையோடு எதிர் கொண்டால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முதுமையில் கவலை, இயலாமை தரும் சினம் எலலாம் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நம் உடல் நலத்துக்காக ஒரு மணி நேரத்தை ஒதுக்கி பயிற்சிகளை செய்யலாம். மனம் வைத்து இந்த தளங்களுக்கு சென்று படித்துப் பார்த்தால் கண்டிப்பாய் நேரம் ஒதுக்க முடியும். உடல் நலத்தைக் காத்துக் கொள்ளலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பார்கள் !


//நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.//

என்ன நோய் வந்து இருக்கிறது, நோய் வந்ததின் காரணம் என்ன, அதைக் குறைப்பதற்கு என்ன வழி, என்று ஆராய்ந்து நோயைப் போக்க வேண்டும்.


முதலில் எளிதாக செய்யும் முத்திரைகள்: நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரை ஆகும். நரம்புகளுடன் சம்மந்தமுள்ள உடல் உறுப்புகளை முத்திரை ஆள்கிறது. 1.கட்டைவிரல்- அக்னி, 2.ஆள்காட்டிவிரல் -காற்று, 3. நடுவிரல்- விண், 4. மோதிரவிரல் - நிலம், 5 .சிறுவிரல் - நீர். இந்த ஐந்தும் சமநிலையில்
இருக்கும் போது உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்.இம் முத்திரைகளை நிற்கும் போதோ,நடக்கும் போதோ ,அமரும் போதோ செய்யலாம்,

கைகளின் அற்புத சக்தி:

முத்திரைகளை உங்களுக்கு தரப் போவது திரு என்.கணேசன் அவர்கள். முத்திரைகளால் என்ன நன்மைகள் என்று அவர் கூறுகிறார்:
/// இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும்போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாகப் பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து

பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்றுப் பார்ப்போம். இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?//
********

டாக்டர் முருகானந்தம் M.K அவர்கள் மருத்துவ பதிவுகளின் பட்டியல் வைத்து இருக்கிறார். அத்தனையும் நமக்கு பலன் தரக் கூடியது. அனுபவ பதிவுகளும் இருக்கிறது. சிரிக்க ,சிந்திக்க நலமுடன் வாழ அனைத்தும் உள்ளது இவரது வலைத்தளத்தில்.

’ஹாய் நலமா?’ என்னும் பகுதியில் எவ்வளவு உடற்பயிற்சி என்ற தலைப்பில் நாம் காண்பது:
//உடற்பயிற்சி அவசியம் என்பதை வைத்தியர்களும் சரி நோயாளிகளும் சரி ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், வைத்தியர்கள் சொல்லும் அளவிலான பயிற்சியைச் செய்ய பலருக்கும் முடிவதில்லை. உடலால் முடிவதில்லை என்பது ஒரு காரணம், நேரம் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணமாகும்.

எனவே, சோம்பிக் கிடக்காதீர்கள். சிறிய அளவிலான உடற் பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். உடல் நலம் நாடி வரும், பிரஷர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும்.//

** சுவாச நோய்க்கு ஒரு பயிற்சி.:

நெஞ்சு நிறையப் பாடுங்கள் சுவாச நோய்கள் பறந்தோடும்.’

//பாடுவதானது, மூச்செடுப்பதில் சிரமப்படும் நோயாளிகளது துன்பத்தைக் குறைத்து சுவாசத்தை இலகுவாக்கும் என

அண்மையில் ஒரு ஆய்வு கூறுகிறது. பாடுவதானது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை, துல்லியமாக நாம் எமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம். எம்மையறியாமலே இது நிகழ்கிறது. தன்னிச்சையாக இயங்கும் எமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் எமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் எமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இப்பொழுது இசைவாக இயங்குகின்றன.

பிறகென்ன பாடுங்கள். தினசரி பாடுங்கள். இறைவனைத் துதிக்கையில் பாடுங்கள். குளிக்கும்போது குளியலறையிலும் பாடுங்கள். வானொலியில் தொலைக்காட்சியில் பாட்டுகள் வரும்போது சேர்ந்து பாடுங்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக்கொண்டே இருங்கள்.//


** மூட்டு வலிக்குப் பயிற்சி:


மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்.

//பயிற்சி செய்வது மூட்டு வலியை அதிகரித்து, மூட்டுகளை மேலும் இறுக்கமடையச் செய்து இயங்கவிடாமல் தடுக்கும்

எனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பயிற்சிகள் செய்யாது மூட்டுகளை ஆட அசையாது வைத்திருப்பதுதான் உண்மையில் மூட்டுகளின் வலியை அதிகரித்து இறுக்கமடைய வைக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் மூட்டுகளும் எலும்புகளும் திடமாக இருப்பதற்கு சுற்றியுள்ள தசைகள் பலமாக இருப்பது அவசியம். அவை திடமாக இருந்து போதிய ஆதரவையும் பக்கபலத்தையும் கொடுக்கவில்லை எனில் மூட்டுகள் சிதைவடைவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான சாத்தியம் அதிகமாகும். //

***

** சிரிப்பு நல்ல மருந்து:



’.
வாழ்வில் நகைச்சுவை மிக மிக அவசியம் அது நம்மை எப்போதும் இளமை யாக வைக்க உதவும் என்பார்கள் அது திருமதி கோமா அவர்களிடம் நிறையவே இருக்கிறது. நகைச்சுவைக்கு என்றே தனித் தளமே வைத்து இருக்கிறார்.

’ஹா ஹா ஹாஸ்யம்’என்ற தளத்தில் எழுதும் திருமதி. கோமா அவர்கள் ’இடுக்கண் வருங்கால் நகுக ஹ ஹ ’ என்ற தலைப்பில் அவர் அளித்த நகைச்சுவை. கண்,காது, மூக்கு, தொண்டை ,பல், இருதயம் எல்லாவற்றுக்கும் சிறந்த டாகடரை சிபாரிசு செய்கிறார் நகைச்சுவையாக .
எல்லா டாக்டருகளுக்கு மேலாய் அவர் சொல்வது:

// எல்லாத்துக்கும் மேலே நம்ம வைத்தீஸ்வரர் இருக்கார் .அவர்தான் நல்ல டாக்டர், அவர் பார்த்துப்பார் . அவர் கையிலே நம்ம டாக்டர்ஸ் எல்லாருமே டூல்ஸ்தான் //

உண்மைதானே!
***

** உணவு உண்ணும் முறை:



உடல் ஆரோக்கிய டிப்ஸ் தருகிறார் திரு. M.R அவர்கள்.

இவர் வலைத்தளத்தில் உடல் நலக் குறிப்புகள் எல்லாம் கிடைக்கும். எப்படி உணவு உண்பது, எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்று எல்லாம் சொல்கிறார் . பயனுள்ள பதிவு.

***

மனவலிமை:


பிசையோ வலியோ தெரபி :) ’-இது தலைப்பு.

உடல் துன்பத்தையே நினைத்துக் கொண்டு இருக்காமல், தான் ஃபிசியோதெரபி எடுத்துக் கொள்ள வைத்திய சாலைக்குப் போன அனுபவங்களை நகைச்சுவையாக நம்முடன்பகிர்ந்து கொள்கிறார், திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள்.

இப்படி மனதைரியத்துடன் எதிர் கொண்டால் நோய் வந்த இடம் தெரியாமல் ஒடிவிடாதா!

***
சினம் தவிர்த்தல்:



’கோபத்திற்கு குட்பை ’ என்ற பதிவில் , ’ஆறுவது சினம் என்றார் அவ்வைப்பாட்டி. மனித வாழ்க்கை சீராக சுபமாக செல்லவேண்டுமாயின் கோபத்தைக்குறைப்பதுதான் கைகண்ட மருந்து’ என்கிறார் திருமதி ஸாதிகா அவர்கள்.
***

உடலைக் காப்பது நம் கடமை:


மகரிஷியின் சிந்தனைகளை அழகாக் பகிர்ந்து இருக்கிறார், திரு. குமாரன் அவர்கள்.

’உடல் என்ற நற்கருவியை நன்றாகப் போற்றிக் காத்துப் பயன்படுத்த வேண்டும். எனவே மனிதன் தனது நோக்கத்தை

ஒட்டி இயல்பாக வாழ்ந்து, அமைதியும், மகிழ்ச்சியும் பெற வேண்டுமெனில் அறிவில் முழுமை பெறுவது, உடலைப்

பொறுப்போடு காப்பது என்ற இரண்டு வகையிலும் உணர்ந்தாற்ற வேண்டும்.’
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
***

முதுமை என்பது நோயல்ல.:



திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் ’வயோதிகம்! 500 வார்த்தைகளில், சாத்தியமா!’
என்ற பதிவில் முதுமைக் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று அழகாய் சொல்கிறார் நமக்கு.

// என்னைப் பொறுத்த அளவில் வயோதிகம் என்பது மனதிலும் ஏற்பட்டாலே வயோதிகர் ஆகலாம். வெறும்

உடல்மாற்றம் அல்ல. வயோதிகத்திலும் அழகாய் இருந்த எம்.எஸ். அம்மா, சந்திரலேகா, கம்பீரம் குறையாத இந்திரா

காந்தி, அன்னை தெரசா, போன்ற எத்தனையோ பேர் உதாரணம் காட்டலாம்.//

வயோதிகம் என்பது உடலுக்குத் தான்.மனதுக்கு இல்லை என்கிறார்.

வயோதிகத்தை எப்படி கழிக்கலாம் என்கிறார் . ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருத்தல் நலம் பயக்கும். இது ஓரளவு மன வலிமையைக் கொடுக்கும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கின்றன.//

நோயின்றி வாழ இந்தக்கருத்துக்கள் நன்கு பயன்படும்.

வாழ்க நலமுடன்!


37 comments:

  1. புதிய தகவல் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  2. ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் அருமையான பதிவுகளை அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். நன்றி கோமதிம்மா.

    ReplyDelete
  3. உடல் நலம் ,உள நலம் நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உடல் நலம் குறித்த பல வலைப்பதிவுகளை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    நானும் ஒரு பதிவு கடந்த 5 ஆண்டுகளாக எழுதுகிறேன்.

    மருத்துவ உலகில் ஏற்படும் வளர்ச்சிகள், மருந்துகளின் தன்மைகள், புதிய மருந்துகள், தடை
    செய்யப்பட்ட மருந்துகள், பல்வேறு மருந்துகளின் ஒன்றுக்கொன்று ஏற்படும் அழ்ற்சிகள்,
    மற்றும் இன்றைய நாட்களில் மன நலம் உடல் நலம், குறித்த ஆராய்ச்சிகள் இவைகள்
    யாவற்றிற்கும் இங்கே தொடர்பு கிடைக்க வழி செய்து இருக்கிறேன்.

    வலைச்சரத்திற்கு வரும் நேயர் பலரும் இங்கு வந்து பயன் பெறலாம்.

    இருப்பினும் ஒரு வார்த்தை.
    மருந்தைத் தருவது மருத்துவன் கடமை.
    ஆரோக்கியத்தைத் தருவதோ ஆண்டவன் அருள்.

    இன்னொன்றும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
    இன்றைய சுற்றுப்புற சூழலில் நம்மில் பலர் நோய்வாய்ப்படுவது ஆச்சரியமல்ல.
    இந்த சூழ்னிலையிலும் ஆரோக்கியத்துடன் சிலர் வாழ்கிறார்களே !! அது தான் அதிசயம் !!

    சுப்பு ரத்தினம்.
    http://Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
  5. உடல்நலம் பேண உதவும் சுட்டிகளுக்கு மிக்க நன்றி கோமதிம்மா

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு ..வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. என் வலைப்பூவையும் அறிமுகப் படுத்தியதற்கு மிகவும் நன்றி கோமதி.
    வெகு அழகாக உடல் நலத்தை அணுகி இருக்கிறீர்கள். சொல்லும் விதத்தில் சொன்னால் கேட்பவர்களும் கேட்டு செயல் படுவார்கள்.அருமையான பகிர்வு.

    ReplyDelete
  8. நல்ல தலைப்பில் அனைவருக்கும் உதவும் வகையில் அருமையான பகிர்வு.தேவையான பகிர்வும் கூட.மிக்க நன்றி கோமதியக்கா.

    ReplyDelete
  9. அனைவருக்கும் பயனளிக்கும் மருத்துவப் பதிவுகளின் அறிமுகம் அருமை. தொகுத்தளிக்கும் விதமும் அழகாக உள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. நோயின்றி வாழ கருத்துக்கள் நன்கு பயன்படும் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  11. உடல் நலம் ,உள நலம், காப்போம்"
    பயனுற வாழ் பயன்படும் அனைத்து பகிர்வுகளுக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. பல அருமையான, சிறப்பான பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்
    கோமதியம்மா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. உடல்நலம் காக்க உதவும் பதிவுகள் தொகுப்பு அருமை.

    அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது.

    உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. உடல் நலம் பற்றிய அறிமுகங்கள் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. இன்றும் மிகவும் சிறந்த அறிமுகங்கள்:

    உடல் நலம் ,உள நலம், காப்போம்"
    பயனுற வாழ் பயன்படும் அனைத்து பகிர்வுகளுக்கும் வாழ்த்துகள்..

    நோயின்றி வாழ கருத்துக்கள் நன்கு பயன்படும் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்... vgk

    ReplyDelete
  16. வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்தினை பகிர்ந்தமைக்கு மகிழ்கிறேன்.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  17. வாங்க கோவிந்தராஜ், உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  18. வாங்க ராமலக்ஷ்மி, உங்கள் பாரட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  19. மருந்தைத் தருவது மருத்துவன் கடமை.
    ஆரோக்கியத்தைத் தருவதோ ஆண்டவன் அருள்.//

    சூரி சார், நீங்கள் சொல்வது உண்மை.
    சுற்றுப் புறம் மாசு அடைந்த சூழ் நிலையில் ஆரோக்கியமாக இருப்பதே
    கடவுள் அருள் தான்.
    உங்கள் பதிவின் சுட்டி கொடுத்தது மகிழ்ச்சி எல்லோருக்கும் பயன் ப்டும்.
    நன்றி.

    ReplyDelete
  20. வாங்க லக்ஷ்மி, உங்கள் தொடர் ஆதரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  21. புதுகை தென்றல் வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  22. வாங்க வல்லி அக்கா, உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  23. கீதா, பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  24. வாங்க இராஜ்ராஜேஸ்வரி, தொடர் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  25. வாங்க புவனேஸ்வரி, நீண்ட நாட்களாய் பார்க்க முடியவில்லையே நலமா?
    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  26. வாங்க மாதேவி , வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. வாங்க கலையன்பன், உங்கள் வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  28. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  29. வாங்க நிகழ்காலம், குருவை சொல்ல வேண்டாமா?
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  30. சுவர் இருந்தாத்தான் சித்திரம் எழுத முடியும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிகாட்டும் இடுகைகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  31. இவ்வாரம் வலைச்சரம் தொகுத்து அளிப்பதற்கு எனது வாழ்த்துக்கள்.
    எனது வலைப் பதிவுகள் பற்றி அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  32. நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  33. டாகடர், நீங்கள் எல்லோருக்கும் பயனளிக்கும் பதிவுகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் அதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  34. கோமதி அரசு, அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். மிக்க நன்றி என்பதிவுக்கும் அறிமுகம் கொடுத்ததுக்கு. மற்றப் பதிவுகளும் சிறந்தவையாக இருக்கின்றன. எனக்குத் தெரியாத சில பதிவுகளையும் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது