07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 4, 2012

மார்கழிக் கலைகள்

இது மார்கழி மாதம் அல்லவா? மார்கழி என்றாலே நினைவுக்கு வருவது கோலம், இசை , கோயில், அங்கு தரப்படும் பிரசாதங்கள். தெருவை அடைத்து கோலம் போடும் பழக்கம் எல்லாம் இன்னும் கிராமங்களில் இருக்கிறது. நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் வாழும் மக்களாகவே இருக்கிறார்கள். கொஞ்ச இடம் தான் இருக்கும். அதற்குள் சிறு கோலங்களை மனது இருந்தால் போடலாம்.

மார்கழி மாதத்தில் கண்களுக்கு விருந்து - கோலம், நாவுக்கு விருந்து - இறைவனின் பிரசாதங்கள், செவிக்கு விருந்து - இறைவனின் புகழ் பாடும் கீதங்கள்.

நம் வலைப் பதிவர்களில் நான் படித்த பதிவுகளிலிருந்து, கோலங்கள், சமையல்கள், இறைவனின் புகழ்பாடும் இசை ஆகியவை பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

கண்களுக்கு விருந்து:

கோலப்போட்டி எல்லாம் இந்த மாதம் நடைபெறும். நல்ல செய்திகளைச் சொல்லும் கோலங்கள் பெரும்பாலும் பரிசினைத் தட்டி செல்லும். அப்படி, தன் அலுவலகத்தில் நடந்த ரங்கோலிப் போட்டியைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சந்தனமுல்லை.

கோலங்கள் எத்தனை வகை உண்டோ அவை எல்லாவற்றையும் அழகாய்க் கண்களுக்கு விருந்து அளித்து மார்கழிக் கோலங்களின் நன்மைகளைச் சொல்கிறார்,அமைதி சாரல்.
’கோலங்கள் நம்ம மக்களோட வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடிக்கு இழையோடுது.’ என்கிறார். காண்க: அமைதிச்சாரல்

கமலாவின் ’கோலங்கள்’ரசிப்பதற்கு உரியன. கோலங்களைப் பற்றிய அவரது தளம்

இது கோலம் போட ஆசை இருப்பவர்களுக்கு ஏற்ற தளம். பண்டிகைக்கோலங்கள், சிக்குக் கோலம், புள்ளிக் கோலம், ரங்கோலி., நவக்கிரக கோலங்கள், பூக் கோலம் ,
சின்னக் கோலங்கள் பெரிய கோலங்கள் என்று கோலம் போடவும் சொல்லித் தருகிறார்.

***

’சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்’ என்று பழைய பாடல் ஒன்று உண்டு. சமையல் செய்வது அவ்வளவு கடினம் , சங்கீதம் எளிது என்பது போல். முன்காலத்தில் கடினம் தான். விறகு அடுப்பு, கரி அடுப்பு, என்று கஷ்டப்பட்டார்கள். இப்போது நவீன மின் அடுப்புகள், கேஸ் அடுப்புகள் என்று சமையல் செய்வது எளிதாகி விட்டது. மனம் தான் வேண்டும் சமைக்க.(பட்டனைத் தட்டிவிட்டால் இரண்டு தட்டிலே இட்லியும் காப்பியும் நம் பக்கத்திலே வெண்டும் என்றால்)

சமையல் செய்வது ஒரு பெரிய கலை. செய்த சமையலை நன்கு அழகாய்ப் பாத்திரங்களில் அழகு படுத்தி பரிமாற ஆயத்தமாக வைத்தால் கண்களுக்கு முதலில் விருந்து, பின் வயிற்றுக்கு விருந்து. அது நான் பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் இருக்கிறது. ’ஏங்க இன்று சமையல் எப்படி இருக்கு?’ என்று கேள்வி கேட்டால் சிலர் ’வீட்டில் இன்று சமையல் அசத்திவிட்டாய், சிலர் வீட்டில் அட்டகாசம் போ’ என்பார்கள்.
வெளி நாட்டில் உள்ள நம் மக்கள் விழாக்கள் , பண்டிகைகளை ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடுவார்கள். அப்போது ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு விதமான உணவுகளைக் கொண்டுவந்து எல்லோரும் உண்டு மகிழ்வார்கள். அது போல் நானும் நம் வலைத்தளத்தில் உள்ள சமையல் கலை அரசிகளின் குறிப்பில் இருந்து மார்கழி பிரசாதங்களை உங்களுக்கு வழங்குகிறேன். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.

எளிதாக, புளியோதரை.(பெருமாள் கோவில் புளியோதரை நன்றாக இருக்கும் என்பார்கள்.) ஆசியா சுலப புளியோதரை செய்து நமக்கு விருந்து அளிக்கிறார்.


 ஜலீலா ’முந்திரி ,ரவைகீர்’ தருகிறார்.


மிராவின் தளத்தில் ’நவராத்திரி’ என்ற பதிவில் ’நவதானிய சுண்டல்கள்’,’கோலத்தில் நவராத்திரி கொலுவின் படம்’ என்று அசத்துகிறார். உணவே மருந்து என்று உணவுப் பொருளில் சமைத்து தருகிறார்.

 மிராவின் கிச்சனில், அவர் ’பொங்கலோ பொங்கல்’ பதிவில், பால் பொங்கல், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் தருகிறார்.

 மாதேவி பழச்சாறு பொங்கல் செய்து தருகிறார்.

//வயலில் விளைந்த அரிசி எடுத்து, சுவைக்கு பால், வெல்லம், பருப்பு இட்டு சமைத்துப் படைத்து வருடம் பூராவும் இனிதே இருக்க வேண்டி உண்பர்.// - எவ்வளவு விஷயங்களை இதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்!

ஆதி வெங்கல உருளியில் அரிசிப்பாயாசம் தருகிறார்

***
மனித வாழ்வில் இசை விருந்தாக மட்டும் அல்ல மருந்தாகவும் இருக்கிறது.உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகம் அளிக்கிறது.இசை என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல.
இசைக்கு மயங்காதவர் உண்டோ! இசைக்கு இறைவனும் வசப்படுவான்.

/பொய்யான தேவைகளை உருவாக்கிக் கொண்டு அதை நிறைவேற்ற போராட்ட வாழ்க்கையை நடத்துவதும், இயற்கையிலிருந்து விலகிக் கொண்டே செல்வதும், அவசர ஓட்டமும் இக்கால மனிதர்களின் நிம்மதியின்மைக்கு முக்கிய காரணங்களாக சொல்கிறார்.* குமரன்//
அதற்கு மாற்றாக அமையும் இசை.

இசை விருந்து:

இசை இன்பம் தளத்தில் தமிழிசை வரலாறு -5,- சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை என்ற தலைப்பில் மார்கழி மஹா உற்சவத்தில் திருமதி செளம்யா பாடிய பாடல்களைக் கேட்கலாம். பகிர்ந்து கொள்பவர் ஜீவா.

* தி. ரா. ச.(T.R.C.)
* மலைநாடான்
* ஷைலஜா
* கவிநயா
* மடல்காரன்
* ராதா
* ராகவ்
* இரா. வசந்த குமார்
* சங்கர்
* ச்சின்னப் பையன்
* லலிதா மிட்டல்
இவர்கள் எல்லாம் கண்ணனின் புகழபரப்புவர்கள்.
பாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி!
முத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழந்து
நம்மையும் மகிழ்விக்கிறார்கள்.

கண்ணம்மா எனது குலதெய்வம்’ என்ற பதிவில் காருகுறிச்சி பி.அருணாசலம் அவர்களின் கம்பீரம் நாதஸ்வர இசையில்,

’நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !’

கேட்க கேட்க இன்பம். பகிர்ந்து கொள்பவர் ராதா. இது பின்னால் வரும் ஆண்டாள் ரங்கன் திருமணத்திற்கு மங்கள இசை வாசிப்பது போல் இருக்கிறது.


 ’தோழி கோதை பிறந்தநாள்!’ என்ற பதிவில் ஆண்டாளின் பாடல்கள், திருமணம் எல்லாம் காணலாம். மார்கழி என்றாலே ஆண்டாள் தான். மாதங்களில் நான் மார்கழி என்கிறான் கண்ணன். அந்த கண்ணனின் புகழ்பாடும் தளம் இது. சினிமாவில் வரும் கண்ணன் பாட்டு, தனிப் பாடல்கள், பஜனைப் பாடல்கள் என்று நிறைய உள்ளன. கேட்டு மகிழுங்கள்.


25 comments:

 1. கண்ணுக்கும், வயிற்றுக்கும், செவிக்கும் விருந்து. அருமையான சுட்டிகளுக்கு நன்றி.

  ReplyDelete
 2. //மார்கழி என்றாலே நினைவுக்கு வருவது கோலம், இசை , கோயில், அங்கு தரப்படும் பிரசாதங்கள்.//

  ஆஹா! ஒட்டுமொத்த பகிர்வும் அருமை அக்கா.என்னுடைய குறிப்பையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.மிக்க மகிழ்ச்சி.நன்றி.

  ReplyDelete
 3. அழகான கோல , விருந்துடன் இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. மார்கழித்திங்கள் அல்லவா

  கோலங்கள் கொஞ்சும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. இசைக்கு மயங்காதவர் உண்டோ! இசைக்கு இறைவனும் வசப்படுவான்.

  இசைப் பகிர்வுகள் மனதை இசைய வைத்தன.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. ம் நம் வலைத்தளத்தில் உள்ள சமையல் கலை அரசிகளின் குறிப்பில் இருந்து மார்கழி பிரசாதங்களை உங்களுக்கு வழங்குகிறேன். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.

  அருமையான நிறைவான விருந்தாய் அமைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. மார்கழிக் கலைகள்" அனைத்தும் மகிழவைத்த பகிர்வுகள் ..

  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. சுவையானதோர் விருந்து....

  சுவைத்தேன் அம்மா....

  ReplyDelete
 9. //மார்கழிக் கலைகள்//

  நல்ல கிரியேட்டிவிடி!! இந்த வகைப்படுத்துதல் “அட” போட வச்சுது!!

  ReplyDelete
 10. வாங்க புதுகைத்தென்றல், விருந்து நன்றாக இருந்ததை அறிந்து மகிழ்ச்சி.
  நன்றி.

  ReplyDelete
 11. வாங்க, ஆசியா, விருந்து என்றால் நளபாக ராணி இல்லாமலா!
  தொடர் வரவுக்கு நன்றி.

  ReplyDelete
 12. லக்ஷ்மி, உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 13. வாங்க இராஜராஜேஸ்வரி , உங்கள் பாராட்டும், தொடர் வருகையும் மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
  நன்றி.

  ReplyDelete
 14. வாங்க வெங்கட், விருந்தில் கலந்து கொண்டு சுவைத்து மகிழ்ந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 15. வாங்க ஹுஸைனம்மா, உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 16. கிளி கோலத்தை மீண்டும் பாராட்டிக் கொள்கிறேன்:)! கலைகளை வெளிக் கொண்டு வரும் மார்கழியின் சிறப்போடு பகிர்ந்த பதிவுகள் யாவும் சிறப்பு.

  ReplyDelete
 17. கோலம்,இசை,பிரசாதம் விருந்துகளுடன் வாரம் சிறக்கின்றது.

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  சின்னுரேஸ்ரி அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 18. இசைப் பகிர்வுகள் மனதை இசைய வைத்தன.. பாராட்டுக்கள்..


  அருமையான நிறைவான விருந்தாய் அமைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  மார்கழிக் கலைகள்அனைத்தும் மகிழவைத்த பகிர்வுகள் ..

  பாராட்டுக்கள்... வாழ்த்துகள்... vgk

  ReplyDelete
 19. வாங்க ராமலக்ஷ்மி, கிளி தானே உங்களை அழைத்து வந்தது , அதை மறக்க முடியுமா!
  பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 20. வாங்க மாதேவி, வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 21. வாங்க வை. கோபால்கிருஷ்ணன் சார்,
  உங்கள் மகிழ்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  உங்கள் கணிப்பொறி சரியாகி நீங்கள் பின்னூட்டம் கொடுக்க முடிவது மகிழ்ச்சி.

  ReplyDelete
 22. அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி கோமதிம்மா..

  ReplyDelete
 23. அமைதிச்சரல், வரவுக்கு நன்றி.

  ReplyDelete
 24. ஒரு வாரமாக கணினி பக்கம் வர முடியவில்லை.

  என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிம்மா.

  தங்கள் பணி சிறப்பாக இருந்தது.

  ReplyDelete
 25. மார்கழிக் கலைகள் அனைத்தும் அருமை.என்னுடைய சமையல் குறிப்பை பற்றி கூறியதற்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது