07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 5, 2012

பிடித்த பூக்களை பறித்து தொடுத்த சரம்-2

    

       இன்றைய பதிவில் நான்  ரசித்துப் படித்தவற்றில் இருந்து தொகுத்திருக்கிறேன்.

 பதிவுலகில் சிறுகதை எழுதுபவர்கள் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.. அவர்களில் ஒருவர் விமலன். யதார்த்த வாழ்க்கயை அடிப்படையாக வைத்து சிறுகதை எழுதுவதில் வல்லவராக இருக்கிறார் சிட்டுக்குருவி விமலன். அதற்கு எடுத்துக்காட்டு கந்தத்துணி சிறுகதை. இவரது அனைத்துக் கதைகளும் இலக்கியத் தரம் கொண்டவையாக இருப்பது சிறப்பு.

திடங்கொண்டு போராடு சீனு மாணவர்கள் காப்பி அடிப்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சுவாரசியமான கதை பிட்டடித்து வாழ்வோரே வாழ்வர்

முகநூலில் பலகவிதைகள் படைத்துவரும்  கலாம் மரபுக் கவிதைகள் எழுதுவதில் சிறந்து விளங்குகிறார்.கலாமின் கவிதைகள் என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறார்.மனைவி என்னும் துணைவி  என்னும் மரபுக் கவிதை இல்லாளின் இனிமையைப் படம் பிடித்து காட்டுகிறது

   அறிவியல் சார்ந்த கடினமான விஷயங்களை எளிமையாக விளக்கும் நல்ல பணியை சமரசம் உலாவும் இடமே சார்வாகன் செய்து வருகிறார். இவரது கட்டுரைகள் பலமுறை படிக்கவேண்டியவை. அவற்றில் ஒன்று பகா எண்ணுக்கும் ஒற்றை எண்களுக்கும் என்ன தொடர்பு? அறிவியலும் கணிதமும் அறிவியலும் இவர்க்கு கைவந்த கலையாக இருக்கிறது. பலசுவைப் பதிவுகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம்.  இது போன்ற பதிவுகள் கட்டாயம் தேவை.

எனக்குப் பிடித்த வலைப்பூ  வரலாற்று சுவடுகள். , ராக்கெட் உருவான வரலாறு, இங்க் (Ink) உருவான வரலாறு, பெட்ரோல் உருவான வரலாறு .  இப்படி ஏகப்பட்ட வரலாறுகளை அளித்து வரலாறு  படைத்துக் கொண்டிருக்கிறார். (இவரது பெயரை அறியமுடியவில்லை. நண்பரே! உங்கள் பெயரைத் தெரிவிக்கவும்)  இவை எல்லாம் சுவையான பொருள் வரலாற்றுக் கட்டுரைகள். இதையெல்லாம் நிச்சயமாக ஒரு புத்தகமாகப் போடலாம்.

 குருக்ஷேத்ரம் வலைப்பதிவில் கோபிநாத் எழுதிய குருதி வியாபாரம் என்ற கட்டுரை ரத்தத்தை உறைய வைப்பவை. இப்படியும் நடக்குமா என்று ஆச்சர்யப்பட வைத்தது 

காதலை  அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.

ஆனந்திசெல்வா  தனது ஆனந்த நிலையம் என்ற வலைப்பதிவில் எழுதியுள்ள யுகம் பற்றி எழுதியுள்ள விவரம் வித்தியாசமாக உள்ளது.

சமுத்ராவின் அறிவியல் கட்டுரைகள் புகழ் பெற்றவை என்பது தெரிந்ததே. இவர் எழுதிய  இந்தக் கவிதைக்கு இரண்டு முடிவுகள்! கவிதை அருமையாக இருந்தது. இவரது  கலைடாஸ்கோப் 47 . நீளமான பதிவாக இருந்தாலும் பல விஷயங்களை அலசி இருப்பது நன்றாக உள்ளது.

சேகர்தமிழ் வலைப்பதிவில் தனசேகரன் எழுதிய  "நான்" , "பட்டமரம்" இரண்டும் சொல்லாத சோகங்களையும் அழகாக சொல்லி என்னைக் கவர்ந்தது.

தண்ணீர் பந்தல் சுப்ரமணியத்தின் அழுமூஞ்சி ராக்காயி என்ற குட்டிக் கவிதையை படித்திருக்கிறீர்களா? அதில்  ஒரு காதல் கதையே ஒளிந்திருக்கும்.
 
நாளையும்  பறிப்பேன்! பூக்கள் இணைப்பேன்!


24 comments:

 1. நல்ல அறிமுகங்கள். ராக்காயி இப்பத்தான் படிச்சேன்.

  ReplyDelete
 2. பிடித்த பூக்களை பறித்து தொடுத்த சரம் பிடித்திருக்கிறது,, பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. என்னையும் சேர்த்து அறிமுகப் படுத்தியதற்காக முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி முரளி சார்.

  சிறுகதைகளை தேடித் தேடித் படிக்கும் என் போன்றவர்களுக்காக அத்தனை சிறுகதைகளையும் வலைச்சரம் மூலம் ஒரே இடத்தில கோர்த்த உங்கள் பணி பாராட்டப் பட வேண்டியது. வாழ்த்துக்கள் சார். உங்கள் வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள். வலைச்சரத்தில் பூத்த உங்களை தொடர்கிறேன். நன்றி

  ReplyDelete
 4. பறித்துக் கோர்த்த பூச்சரம் அருமை!

  ReplyDelete
 5. அவசியமான நல்ல பூக்களை
  அழகுறத் தொடுத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 6. அருமையான அறிமுகங்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. மாபெரும் சமுத்திரத்தில் சிறுதுளியாய் கலந்திருக்கும் என்னையும், இல்லை எங்களையும் வலைச்சரம் மூலமாக சுட்டிக்கான்பித்திருக்கும் தங்களது அன்பு உள்ளத்திற்கு, இன்று தாங்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவுலக நண்பர்களின் சார்பாகவும் தங்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்!

  நன்றிக்கடனுக்கு உலகிலேயே மிகப்பெரிய எடுத்துக்காட்டாக நிகழ்ந்த, indian ink, கணினியை விட வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பான மை கண்டுபுடிப்பு, பெட்ரோல் முதன்முதலாக வெடிபொருளாக பயன்பட்டது, போன்ற இன்னும் பல வரலாற்று நிகழ்வுகளை பதிவிட்டிருக்கும் வரலாற்று சுவடுகளின் பதிவுகள்,

  தேர்வுக்காக எதைப் படிக்கிறோமோ இல்லையோ தேர்வறையில் நம்மைக் கண்காணிக்கும் வாத்தியாரின் மனநிலையைக் கண்டிப்பாக படிக்க வேண்டும். என்பதை சொல்லும் பிட்டடித்து வாழ்வோரே வாழ்வர்

  இவ்வளவு பெரிய காலத்தில் நாம் வாழ்ந்து முடிக்கும் சிறிய காலத்தில் நாம் நமது தடத்தை எப்படி பதிய வைக்கப்போகிறோம்? என்று யோசிக்க வைக்கும் யுகம்"

  The Red Market பற்றியும் உண்மையில் உலகத்தில் நடக்கும் The Red Market பற்றியும் பயங்கரமான, சமூக அக்கறை கலந்த குருதி வியாபாரம் போன்ற பதிவுகளையும்

  மௌனத்தை எப்படி வெளிப்படுத்துவது எனக்கேட்கும் சமுத்ரா

  பட்ட மரத்திற்கும் உயிர் இருக்கிறது! அதோ அது ஏங்குகிறது! என்று சொல்லும் சேகர் போன்ற இளம் கவிஞர்களையும்

  காதலின் ரகசியம் சொல்லும் எனது நண்பர் விஜயனையும்

  சிறுகதையில் கலக்கும் சிட்டுகுருவியையும், மனைவி எனும் துணைவி போன்ற படைப்புகளையும் தாங்கள் அறிமுகப்படுத்தியது சிறப்பு.

  படித்து ரசித்தேன்! தங்களது வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. தேடி கொடுத்து இருக்கிறீர்கள் இதற்க்கு முன் படித்திராத பதிவுகள் அருமை நண்பரே

  ReplyDelete
 9. சிறப்பான அறிமுகங்கள் தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 10. அநேக அலுவலக பணிகள் காத்துக்கொண்டிருப்பதால் நேரமின்மை காரணமாக முழுமையாக படித்துவிட்டு கருத்திட்ட முடியவில்ல மன்னிக்கவும்..,

  சிறந்த அங்கீகாரம் கொடுத்து என்னை அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு மிக்க நன்றி., ஏனைய மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் ..,

  நண்பர் வே. சுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றி .. :)

  ReplyDelete
 11. Lot of hard work. Good. Continue please !

  ReplyDelete
 12. வாடா மலர் பறித்தேத் தொடுத்தமாலை அருமை
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. ஆமாம் அருமையான கலாமின் மரபுக் கவிதைகள் வாசித்தீர்களா! அத்தனை மணியானஇ அறிமுகங்களிற்கும் முரளிக்கும் நல்வாழ்த்து. நாளை தொடர்வோம். வாழ்க!
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 14. பல பதிவர்கள் எனக்கு புதியவர்கள் நண்பர் சார்வாகன் உள்பட

  சிறப்பான அறிமுகங்கள் நண்பரே..,

  தொடர்ந்து பல நல்ல பதிவர்களை அரங்கேற்றம் செய்து வலைச்சரத்தை கலக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 15. என்னையெல்லாம் ஒரு பதிவராக கருதி இடம்கொடுத்தமைக்கு பலகோடி நன்றிகள் தங்கள் அங்கீகாரத்திற்கு நன்றி.

  ReplyDelete
 16. என்னை அறிமுகம் செய்வித்ததற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 17. நல்ல அறிமுகங்கள் ! நன்றி !

  ReplyDelete
 18. விமலனின் எழுத்துக்கள் தரம் மிக்கதாய் இருக்கும். அவரைப்பற்றிச் சரியாகக் கணித்து எழுதியுள்ளீர்கள்.நன்றி. மற்ற அறிமுகங்களும் ரசிக்கும்படியாய் அமைந்துள்ளது.

  ReplyDelete
 19. நெஞ்சம் படர்ந்த நன்றி முரளிதரன் அவர்களே. என் முகநூல் குறிப்புகளிலிருந்து “மனைவி என்னும் துணைவி’ கவிதையினைச் சுட்டிக் காட்டியும் என் வலைத்தளத்தினை ஈண்டு அறிமுகம் செய்தும் வைத்துள்ள உங்களின் பெருந்தன்மைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

  வாழ்க அன்பு! வளர்க நட்பு!!

  ReplyDelete
 20. நெஞ்சம் படர்ந்த நன்றி முரளிதரன் அவர்களே. என் முகநூல் குறிப்புகளிலிருந்து “மனைவி என்னும் துணைவி’ கவிதையினைச் சுட்டிக் காட்டியும் என் வலைத்தளத்தினை ஈண்டு அறிமுகம் செய்தும் வைத்துள்ள உங்களின் பெருந்தன்மைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

  வாழ்க அன்பு! வளர்க நட்பு!!

  ReplyDelete
 21. நெஞ்சம் படர்ந்த நன்றி முரளிதரன் அவர்களே. என் முகநூல் குறிப்புகளிலிருந்து “மனைவி என்னும் துணைவி’ கவிதையினைச் சுட்டிக் காட்டியும் என் வலைத்தளத்தினை ஈண்டு அறிமுகம் செய்தும் வைத்துள்ள உங்களின் பெருந்தன்மைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

  வாழ்க அன்பு! வளர்க நட்பு!!

  ReplyDelete
 22. ஏராளமான புதிய (எனக்கு) பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள்.

  சிறப்பான தொகுப்பு.

  ReplyDelete
 23. சரம் அருமை.

  குருதி வியாபாரம் வாசித்து உறைஞ்சு போயிட்டேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது