இந்தப் பூக்களிலும் வாசம் உண்டு- சரம் 4
1.சில எதிர்மறைத் தலைப்புகள் நம்மைக் கவர்ந்து அதனை உடனே படிக்கத் தூண்டும். அந்த வகையில் அப்துல் வலைப்பதிவில் நான் படித்தது.குளோபல் வார்மிங் என்பதே பொய். என்ற பதிவு. உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமயமாதலை .வேறு கோணத்தில் பார்க்கிறது இப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய இன்னொரு பதிவான ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது ம் கவனிக்கத் தக்கது.
2. மௌனம் பேசியதே வலைப்பூவில் ராஜராஜன் ராஜ மகேந்திரனின் புத்தகக் காதல் , சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள் ஆகியவை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.
3. முத்துச் சிதறல் வலைப்பதிவில் மனோ என்பவர் எழுதும் முத்தான பதிவுகளைக் காணலாம். அதில் ஒன்று கிரிக்கெட்டும் நானும் சச்சினின் நூறும்!!. முக்கியமான விஷயம் பதிவர் மனோ ஒரு பெண் என்பதே.
4. கோபிகா அசோக் உடல் நலம், ஆன்மிகம்,சமூகம் சார்ந்த பதிவுகள் எழுதி வருகிறார். அவரது வலைப்பூவில் நான் கண்ட விவாகரத்தின் மறுபக்கம் சிந்திக்க வேண்டிய பதிவு. தள்ளிபோடாதீங்க கல்யாணத்தை என்ற பதிவும் உண்மைகளை சுட்டிக் காட்டுகிறது.
5. மதுரை அழகு வின் பதிவுகளில் வடிவேலு - வைகைப் புயல் மீண்டும் வருமா? என்ற பதிவு நம்முடைய ஆதங்கத்தையும் எதிரொலிக்கிறது, தெங்குமரஹாடா - ஒரு சிலிர்ப்பான பயணம் . என்ற சிறிய பயணக் கட்டுரை அருமை.
பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் என்ற நூல் விமர்சனம் புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது.
6. ஊஞ்சல் கலையரசியின் செயல் வீரன் - ஒரு நிமிடக் கதை எளிமையான கதையாக இருந்தாலும் ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துகிறது. இன்னொரு கதையான தண்டனை மிக அருமை.
7. என்.ராமதுரை அவர்கள் பயனுள்ள அறவியல் செய்திகளை தனது அறிவியல்புரம் வலைப்பூவில் எழுதிவருவது பாராட்டத் தக்கது. காக்கைகள் பற்றிய செய்திகளை காக்கைக்கு உங்கள் குரல் தெரியும் என்ற பதிவு அழகாக எடுத்துரைக்கிறது. பணக்காரர்களின் மின்சாரம் என்ற பதிவில் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பற்றி பல தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளது.
8. பலே பிரபு வலைப்பக்கத்தில் நான் படித்த சந்தோஷம் என்ன விலை? என்ற பதிவு பலே! போடவைக்கிறது. சந்தோசமாக இருக்கக் கூடாது என்பதையே சந்தோஷமா மாற்றிவிட்டோம் என்று முடித்திருப்பது அருமை.
9. பிரபல பதிவர் (வலைப்பதிவின் பெயர்) எழுதியுள்ள வாசகர் கடிதம் எழுதும் முறைகள் நல்ல நகைச்சுவைப் பதிவு.
10.அணு போஸ்ட் கார்ட் மேகசின் (ணு எழுத்துப் பிழை அல்ல) ஒரு வித்தியாசமான வலைப்பூ. அஞ்சலட்டையில் வெளியிடப்படும் மாதப் பத்திரிகை இது. பக்கவாத நோயாளிகளுக்கு ஓர் புதிய நம்பிக்கை ஒளி! என்ற பதிவு புதிய மருத்துவ செய்தி.
12.கோவை ரவி அவர்களின் பாசப் பறவைகள் தமிழ் திரை இசை ரசிகர்களுக்கான வித்தியாசமான வலைபப்பதிவு. சென்று பாருங்கள் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
****************************************************************************************
வலைச்சரத்திற்கு வாருங்கள்! கருத்துக்களை அள்ளித் தாருங்கள்!
நாளையும் சரம் தொடுப்போம்.
|
|
அருமையான அறிமுகங்கள் பாஸ். நானெல்லாம் ஏதோ கிறுக்கிப்போட்டு சும்மா சிவனேன்னு இருந்துவிடுவேன். வலைச்சரத்தின் மூலம் புதிய அறிமுகங்கள் புதிய பார்வைகள் கிடைக்கின்றன. நன்றி
ReplyDeleteவித்தியாசமான அறிமுகங்கள். தந்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநிறைய அறிமுகங்கள் முரளிதரன்!
ReplyDeleteபாட்டி கதை வடிவில் பண்பாடு, கலாசாரம், கதை என்று சிறுவர்களுக்காக வல்லிசிம்ஹன் கொஞ்ச நாள் எழுதி வந்தது நினைவிருக்கிறது.
நிறைய அறிமுகங்கள் சில புதுமுகங்கள் நன்றி
ReplyDeleteவலைச்சரத்தில் மற்றுமொரு அழகான சரத்தைத் தொடுத்திருக்கிறீர்கள்..!! வாழ்த்துகள்... அறிமுகங்களுக்கும், அறிமுகப்படுத்தியவருக்கும்...!!!
ReplyDeleteஇந்தப் பூக்களிலும் வாசம் உண்டு- வாழ்த்துகள்..
ReplyDeletenalla arimukangal!
ReplyDeleteசரம் சரமாய்க் கரம் தொடுத்த அறிமுகங்கள்
ReplyDeleteவரம் வாசித்திட.
எல்லா அறிமுகவர்களிற்கும்
வாழ்த்துடன் , ஆசிரியருக்கும் வாழ்த்து.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
அருமையான அறிமுகங்கள் தொடருங்கள் தொடர்கிறோம் .
ReplyDeleteஅத்தனை அறிமுகங்களும் நான் அறிந்திடாவர்கள்... அத்தனை பேரின் பதிவும் தரமான ஒன்றாக இருக்கிறது... புதியவர்களை அறிமுகம் செய்துவைத்த வலைச்சர ஆசிரியருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் :)
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி முரளி தரன். மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteபோட்டு தாக்குங்கள் தலைவா ..,
ReplyDeleteஅறிமுகங்களுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் .. :)
நிறைய அறிமுகங்கள்! பல நான்
ReplyDeleteஅறியாதன!மிக்கநன்றி!
புலவர் சா இராமாநுசம்
Thanks....
ReplyDeleteஇந்த தளமும் சிறுவர்களுக்கு உதவும்....
Rajinthan.blogspot.com
என் பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி முரளி சார்!
ReplyDeleteஎன் தளத்தை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி தோழர்!
ReplyDeleteபல நல்ல தளங்களை தேடித் தொகுத்துள்ளீர்கள். உங்கள் சேவை தொடரட்டும்!!!
நிறைய அறிமுகங்கள்..... மிக்க நன்றி நண்பரே !
ReplyDeleteமன்னிக்கவும். எனது தளத்தை இந்த பதிவில் சேர்த்து விட்டு லேட்டஸ்ட் பதிவு சுட்டி அனுப்பியுள்ளீர்கள். இருந்தாலும் நன்றி.. நன்றி..
ReplyDeleteஅதே தளத்தில் வலது புறம் உள்ள புன்னகை பூக்கட்டும் தளத்திலும் சென்று பாருங்கள் நிச்சயம் இணையதள நேயர்கள் விரும்பி ரசிப்பார்கள்.
அருமையான அறிமுகங்கள்.
ReplyDelete