07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 28, 2012

ஹாரி பாட்டரும் போர்க்கவிதையும்

மறுபடியும் வலைச்சரம் மூலமாக சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை வலைச்சரதிற்கு வந்த பிறகு 5 புது நண்பர்கள் 2 நாட்களுக்குள் கிடைத்துள்ளார்கள். நம்பி ஏற்று கொண்டதற்கு நன்றிகள்.

இன்று என்ன தலைப்பை எடுக்கலாம் என்று யோசித்த போது இந்த தலைப்பை எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன்.  என்ன தான் போர் முடிந்தாலும் சில இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது.

இதை எழுதும் போது சிறு சம்பவம் ஞாபகம் வருகிறது. ஆரம்பத்தில் எங்கள் பகுதியில் யுத்தம் நடந்த போது எனக்கு மிக சிறு வயது. 

துப்பாக்கி வேட்டுக்கள், குண்டு சத்தம் கேட்கையில் நாங்கள் பயப்பட கூடாது என்பதற்காக எங்கள் அம்மா சொல்லுவார் "பக்கத்துக்கு வீட்டில் யாரோ கதவை தட்டுகிறார்கள் என்று"

அப்போது நானும் அண்ணாவும் கேட்போம் "அதுக்காக நாங்க ஏன் அம்மா கட்டிலுக்கு கீழ் ஒளிந்து இருக்கிறோம்" என்று..இன்னும் சில அனுபவங்கள் உண்டு. ஆனால் யுத்தம் நடக்கையிலும் நடந்த பின்னும் வேண்டாத எழுத்துக்கள் ஈழப்போரை பற்றி கூறியும், வேண்டாத பேச்சுக்கள் அரசியல் லாபத்தோடு மேடைகளில் கூறப்பட்டும் தங்களை தனித்துவ படுத்தி ஈழ அனுதாபத்தை மக்கள் மத்தியில் விதைத்து வளர்ந்தவர்களை (மிக சிலரை தவிர) போல நானும் வளர விருப்பமில்லை.

கூர்வாளும் குடைசாய்ந்தது 
சில தமிழ் இரத்தமும் சிந்தியது 
மேடைகளில், எழுத்துகளில் நடிக்காதீர்கள் 
எங்கள் வலி உங்களுக்கு தெரியாது 

ஹாரி பாட்டரும் போர்க்கவிதையும்


ஒரு யுத்தம் நடக்கிறது

அதற்கு அநேகம் காரணமும் சொல்ல படுகிறது 

அதில் அநேகம் இழப்பும் இருக்கின்றது

ஆனால் ஆழமாக சிந்திக்கையில்

புதைந்து இருப்பது

ஒரு தனி மனிதனின் எண்ணங்கள்-

   ஒரு தனி மனித வஞ்சம்

ஒரு தனி மனித போட்டி குணம் 

ஒரு தனி மனித மன வலிமை

 
 
ஆனால் அதற்கு போடும் வேலி-

ஒரு மண்,

ஒரு நிலம்,

ஒரு குடி,

ஒரு காதல்,

ஒரு ஜனம்,

----------

----------

---------

---------

----------

----------

இன்னும் இருக்கு
 
வெடித்து சிதறி
களையிழந்து கிடந்த  
வீட்டு வாசலில் இருந்து ஒரு பத்து வயது 
சிறுமி படுத்து கிடந்த  
தன் தாயை 
பார்த்து நினைத்து கொண்டது-
ஒரு வீடு,
ஒரு அப்பா,
ஒரு தம்பி,
ஒரு மர பொம்மை,
எல்லாம் என்னிடம் இருந்தது-
ஆனால் விடிந்து பார்க்கையில் 
ஒன்றையும் காணவில்லை  
 
அம்மாவிடம் கேட்டேன்  
இடி வந்த போது 
எல்லாம் மறைந்ததாக என் தாய் 
சொன்னாள்- சற்று முன் 

ஆனால் நான் நம்பவில்லை 
கொல்லைக்கு   
தேடி பார்க்க சென்றேன் 


தேடி பார்த்து திரும்பும் போது-
ஒரு துணி,
ஒரு மார்பு,
இல்லாமல் என் தாய் படுத்து கிடந்தாள் - இரத்தத்தோடு 

அப்போது நான் திரும்பி 
பார்க்கையில் 
சடுதியாய்- ஒன்று
என் நெற்றியை உறுத்தி நுழைந்தது..
 
ஒரு காலடி சத்தம்.. 
ஒரு வெறி சிரிப்பு..
 
பின் 
மெதுவாக 
 
எல்லாம் அடங்கியது  
 
ஒரு அமைதி..
ஒரு அடக்கம்..
 
என் குடும்பத்தோடும்..
என் மர பொம்மையோடும்..
என் பயணத்தை தொடர்ந்தேன்..

-----------------ஹாரி16 comments:

 1. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்., தொடருங்கள் தொடர்கிறோம்.!

  ReplyDelete
 2. நல்ல பதிவு நண்பரே, தங்கள் துயரம் விரைவில் நீங்கும். தங்களது நிலை தற்போது அங்கே எப்படி இருக்கிறது?

  ReplyDelete
 3. அறி முகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. என்ன சொல்லுவது என்று தெரியவில்லை, உணர்ச்சிகரமான கவிதை. நிஜமான உணர்வுகளை பெரும்பாலான தமிழ்நாட்டு பொது மக்களால் பிரித்துக் காண முடியும் நண்பரே!

  ReplyDelete
 5. அனைவரும் வாழ்த்துக்கள்.. பதிவுகள் அருமை நண்பரே..

  ReplyDelete
 6. வரலாற்று சுவடுகள் said...//

  THANKS

  ReplyDelete
 7. திண்டுக்கல் தனபாலன் said...//

  THANKS

  ReplyDelete
 8. "என் ராஜபாட்டை"- ராஜா said...//

  நன்றி

  ReplyDelete
 9. http://bommuvinthedal.blogspot.in

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது