07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 3, 2012

நன்றி


"இவரு அப்பாதுரை.. ரொம்ப விட்டா பேசுவாரு" - இது அறிமுகம்.
"இவரு அப்பாதுரை.. ரொம்ப விட்டா பேசுவாரு.. ஆனா விட்டா ரொம்பப் பேசுவாரு" - இது விமரிசனம்.

நீளம் காரணமாக என் அறிமுகங்களை விமரிசனமாகக் கருத வேண்டாம். விமரிசனம் செய்யும் தகுதி எனக்கில்லை.

ஜீவி சொன்னது போல் ஒரு 'ஆழ்ந்த அறிமுகம்'. சத்ரியன் படிக்கும் சத்ரியன் (நயம்) சொன்னது போல அறிமுகப் பதிவைப் படிக்க உந்தும் ஒரு உத்தி. பலித்ததா என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.

இந்த வாரம் உண்மையில் எனக்கு ஒரு அறிமுகமே தவிர, நான் குறிப்பிட்ட பதிவர்களுக்கல்ல. என் வட்டத்தை விரிவாக்கவும் உங்கள் வட்டத்தில் இடம்பிடிக்கவும் எனக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பு. தொடர்ந்து படித்தும், ஒரு படி மேலேறிப் பின்னூட்டம் இட்டும், அரவணைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

படிப்பு, வேலை, குடும்பம், நெரிசல், பயணம்.. இவை போதாதென்று மின்சார வெட்டு, கணினி வசதி.. இந்த morbid constraintsகளையும் கடந்தால்.. பவள சங்கரி சொன்னது போல சக பதிவர்களின் பின்னூட்ட quid pro quoத்தனம்.. என்று அத்தனையும் சமாளித்து, தொடர்ந்துப் பதிவெழுதும் பெருந்தகைகளால் மட்டுமே தமிழ் வலைப்பூ உலகம் சுழல்கிறது - என் போன்ற சொகுசுப் பதிவர்களால் அல்ல - என்பதை நன்கறிவேன். இந்நிலையில் பதிவு/பதிவர்ளை முன்னிறுத்தும் வலைச்சரம் போன்ற அமைப்புகள் இன்றியமையாதவை. வலைச்சரத்துக்கு நன்றி.

இன்னொரு நீண்ட இடுகை எழுதி உங்கள் ஓய்வு நாள் வாசிப்பில் குறுக்கிட விரும்பவில்லை (என்னா? இதுவே நீளமா?). நேரமிருந்தால் - வந்ததோ வந்தீர்கள் - விட்டுப் போனதைக் கொஞ்சம் தட்டிப் பாருங்களேன்? சுட்டிகள் இதோ:
மே 28 மே 29 மே 30மே 31ஜூன் 01ஜூன் 02

மெல்லிசைக் காணிக்கையோடு விடைபெறுகிறேன்.

14 comments:

 1. அன்பின் அப்பாதுரை - இன்று மாலை வரை எழுதலாம். இன்று வீடுமுறை விட்டு விட்டீர்களா ? விடை பெறுகிறீர்களா ? பரவாய் இல்லை. பணிச்சுமையோ ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. அப்பாஜி...
  உங்கள் வாரம் எங்கள் வாரமானது.
  நிறைய நல்ல தளங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வைத்துள்ளீர்கள். உண்மையிலேயே இன்ப உலகில் ஆசைக் கனவுதான். நல்லதொரு வாசிப்பானுபவ வாரத்தைத் தந்ததற்கு நன்றி.
  ஆ....ஆ.... ஆ.. லா லாலா....லா..லாலா....லா..லாலா....

  ReplyDelete
 3. உங்கள் வருகைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. அப்படியொண்ணுமில்லே சீனா சார்.. விட்டா இன்னும் நாலு நாள் கூட எழுதலாம் (அதான் சொன்னேனே :-)..

  படிக்கிறவங்க பாவம்னு தான் :)

  அதுமில்லாமே பதிவுகளையும் படிக்க விரும்புறவங்களுக்கு லைட் லோட் நல்லதில்லையா?
  வாய்ப்புக்கு நன்றி.

  ReplyDelete
 5. குறித்து வைத்துக் ‌கொள்ள நல்ல பல தளங்களைத் தந்தீர்கள். உங்கள் வாரம் எங்களுக்குக் கொண்டாட்டமாகவே அமைந்தது அப்பா ஸார். மிக்க நன்றி!

  ReplyDelete
 6. அருமையான வாசிப்பு வாரத்தை வாரி வழங்கி விடைபெறுகிறீர்கள்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. ஸ்ரீராம்: உங்கள் வாரம் எங்கள் வாரம்.

  இராஜராஜேஸ்வரி: வாசிப்பு வாரம்.

  நான்: வாசிப்பு வரம். அதுவும் வாராதிருந்து வந்த வரம்.

  நன்றி, அப்பாஜி!

  ReplyDelete
 8. நல்லதொரு வாசிப்பு வரம் எங்களுக்குக் கிடைத்தது.

  ReplyDelete
 9. ஆனந்த வாசிப்பிற்கான அருமையான அறிமுகங்கள்... தேடி சென்று வாசிக்க வைக்கும் வகையில் தூண்டுகோல் பகிர்வுகள்... நன்றியும் வாழ்த்தும்......

  ReplyDelete
 10. சொகுசு பதிவர்கள்

  நிறைய யோசிக்க வைத்த வார்த்தைகள்.

  ReplyDelete
 11. அப்பாதுரை : உங்கள் முக்கியமான நண்பர் ஒருவரை அறிமுக படுத்துவீர்கள் என நினைத்தேன். செய்யலை :))

  ReplyDelete
 12. நல்ல பாடல். அதை பார்த்தவுடன் முதலில் எனக்கு மனதில் தோன்றியது - இந்த இருவரும் எதிர்காலத்தில் தாம் தமிழக முதலமைச்சர்களாக வருவோம் என்று அப்போது கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்களோ என்னவோ!

  ReplyDelete
 13. ரொம்ப witஆகப் punனிட்டீங்க
  அப்பாD :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது