07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 10, 2012

நன்றி மாலை!


   ஒரு வார காலம் வலைச்சர ஆசிரியர் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அப்பணியை ஓரளவிற்காவது சரியாகச் செய்தேன் என்று நம்புகிறேன். இது ஒருவித்தியாசமான அனுபவம் பிறருடைய பல்வேறு பதிவுகளை நான் ஏற்கனவே படித்திருந்தாலும் தொகுப்பிற்காக படிக்கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் எதிர்பாரா விதமாக கூடுதல் அலுவலகப் பணிகள் இருந்ததால் தொகுப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. இதுபோல் பதிவர்களை அறிமுகப் படுத்துவது எளிதான பணி அல்ல என்பதை உணர முடிந்தது. ஒருவாரம் எனது வலைப்பதிவில் நான் எந்தப் பதிவும் இடுவதற்கு இயலவில்லை 
  முதல் பதிவை எளிதாக முடித்துவிட்டேன். அடுத்த நாள் பதிவின்போது எதிர்பாரா சிக்கல் ஒன்று ஏற்பட்டது. அடித்து முடித்ததை சேமித்து டிராஃப்ட் ஆக சேமிக்க முற்பட்டபோது Your blog has been Removed என்ற பிழைச் செய்தி தோன்றியது. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தேன். வைரஸ்களின் வேலையாக இருக்குமோ? என்று பயந்தேன். Restart செய்து பார்த்தபோது எனது மின்னஞ்சல் முகவரியிலும் நுழைய முடியாதபடி பிழைச் செய்து வந்து அச்சுறுத்தியது.
   சீனா அவர்களுக்கு தொலைபேசியில் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ரெகவரி செய்ய முற்பட்டபோது முகவரியை உறுதிப்படுத்த verfication செய்ய கைபேசி எண்ணை அனுப்புமாறு கூறியது. கைபேசி எண்ணை பதிவு செய்ய Verfification Code குறுஞ்செய்தியாக வந்தது. அதை உள்ளீடு செய்ததும் ஈமெயில் கணக்கு மீண்டு உயிர் பெற்று விட்டது. வலைப்பதிவிலும் உள்நுழைய முடிந்ததால் நிம்மதி ஏற்பட்டது. ஏற்கனவே பதிவில் பாதியை நான் வேர்டில் சேமித்திருந்தாதால் விடுபட்ட பகுதியை மீண்டும் தட்டச்சு செய்து பின்னர் பதிவை வெளியிட்டேன்.
   இந்த அருமையான  வாய்ப்பை வழங்கிய சீனா அவர்களுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
   தினந்தோறும் பின்னூட்டங்கள் இட்டு ஊக்கப் படுத்திய அத்துணை பேருக்கும் உளமார்ந்த நன்றி செலுத்துகிறேன்.
  இத்தனைக்கும் மேலாக பல்வேறு பதிவர்களைப் பற்றி நிறைய விஷயங்களை நான்  தெரிந்துகொள்ள அவர்களுடைய படைப்புகள் உதவியது. சிறப்பான படைப்புகளை வழங்கிய பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகூறி விடை பெறுகிறேன்.
 நன்றி! வணக்கம்!.

***************************************************************************

7 comments:

  1. இந்த கத்துக்குட்டியையும் அறிமுகப்படுத்தியதுடன் எங்களுக்கு வலையுலக ஜாம்பவான்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி முரளிதரன்.

    ReplyDelete
  2. எண்ணற்ற பல நல்ல பதிவர்களை எனக்கு அடையாளம் காட்டினீர்கள் நண்பா, தங்களது பணி சிறப்பாகவே இருந்தது..!

    ReplyDelete
  3. புதிதாய் பதிவுகளை அறிமுகப்படுத்தினீர்கள். நன்றி!

    ReplyDelete
  4. பல தடைகள் இருந்தாலும் அருமையான அறிமுகங்களை வழங்கி சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அன்பின் முரளிதரன் - நல்லதொரு பணீயினைச் சிறபபாகச் செய்து முடித்தமை நன்று. பல்வேறு இடையூறுகளுக்கு இடையேயும் எடுத்த பணியினைச் சிறப்புற முடித்த்மை நன்று. நல்வாழ்த்துகள் முரளிதரன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியர் பணியை செம்மையுற ஏற்று முடித்தமைக்குப் பாராட்டுகள் முரளிதரன். இடையிடையில் வந்து வாசிக்க முடிந்தாலும் பின்னூட்டமிட இயலா நிலை. பொருத்தருளவும்.

    நீங்கள் குறிப்பிட்டிருந்த சிக்கல் எனக்கும் நான் வலைச்சர ஆசிரியராய்ப் பொறுப்பேற்ற நாளில் வந்து மிகவும் கலங்கிவிட்டேன். பல முயற்சிகளுக்குப் பின் கைபேசி இலக்கம் சரிபார்ப்புக்குப் பின் மீண்டும் வலை கைவரப்பெற்றது. உங்கள் மனநிலையை நன்கு அறிகிறேன். தளராமல் தொடர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது