07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Sunday, July 20, 2014

நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிமுகமும், நன்றியும்)


சமுத்திரம் பெரிதா?
தேன்துளி பெரிதா?
தேன் தான்...
அப்படின்னு நான் சொல்லலை. வசூல் ராஜா சொல்லுறார்! அப்படி சிறு தேன் துளியாய் இப்போ தான் ப்லாக் தொடங்கி இருக்கும் புத்தம் புது பதிவர்களுக்கு மேடை இந்த பதிவு!! 
மேலும் வாசிக்க...

Sunday, June 10, 2012

நன்றி மாலை!


   ஒரு வார காலம் வலைச்சர ஆசிரியர் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அப்பணியை ஓரளவிற்காவது சரியாகச் செய்தேன் என்று நம்புகிறேன். இது ஒருவித்தியாசமான அனுபவம் பிறருடைய பல்வேறு பதிவுகளை நான் ஏற்கனவே படித்திருந்தாலும் தொகுப்பிற்காக படிக்கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் எதிர்பாரா விதமாக கூடுதல் அலுவலகப் பணிகள் இருந்ததால் தொகுப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. இதுபோல் பதிவர்களை அறிமுகப் படுத்துவது எளிதான பணி அல்ல என்பதை உணர முடிந்தது. ஒருவாரம் எனது வலைப்பதிவில் நான் எந்தப் பதிவும் இடுவதற்கு இயலவில்லை 
  முதல் பதிவை எளிதாக முடித்துவிட்டேன். அடுத்த நாள் பதிவின்போது எதிர்பாரா சிக்கல் ஒன்று ஏற்பட்டது. அடித்து முடித்ததை சேமித்து டிராஃப்ட் ஆக சேமிக்க முற்பட்டபோது Your blog has been Removed என்ற பிழைச் செய்தி தோன்றியது. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தேன். வைரஸ்களின் வேலையாக இருக்குமோ? என்று பயந்தேன். Restart செய்து பார்த்தபோது எனது மின்னஞ்சல் முகவரியிலும் நுழைய முடியாதபடி பிழைச் செய்து வந்து அச்சுறுத்தியது.
   சீனா அவர்களுக்கு தொலைபேசியில் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ரெகவரி செய்ய முற்பட்டபோது முகவரியை உறுதிப்படுத்த verfication செய்ய கைபேசி எண்ணை அனுப்புமாறு கூறியது. கைபேசி எண்ணை பதிவு செய்ய Verfification Code குறுஞ்செய்தியாக வந்தது. அதை உள்ளீடு செய்ததும் ஈமெயில் கணக்கு மீண்டு உயிர் பெற்று விட்டது. வலைப்பதிவிலும் உள்நுழைய முடிந்ததால் நிம்மதி ஏற்பட்டது. ஏற்கனவே பதிவில் பாதியை நான் வேர்டில் சேமித்திருந்தாதால் விடுபட்ட பகுதியை மீண்டும் தட்டச்சு செய்து பின்னர் பதிவை வெளியிட்டேன்.
   இந்த அருமையான  வாய்ப்பை வழங்கிய சீனா அவர்களுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
   தினந்தோறும் பின்னூட்டங்கள் இட்டு ஊக்கப் படுத்திய அத்துணை பேருக்கும் உளமார்ந்த நன்றி செலுத்துகிறேன்.
  இத்தனைக்கும் மேலாக பல்வேறு பதிவர்களைப் பற்றி நிறைய விஷயங்களை நான்  தெரிந்துகொள்ள அவர்களுடைய படைப்புகள் உதவியது. சிறப்பான படைப்புகளை வழங்கிய பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகூறி விடை பெறுகிறேன்.
 நன்றி! வணக்கம்!.

***************************************************************************
மேலும் வாசிக்க...

Sunday, September 25, 2011

ஏழாம்நிலை மாடம்!!






கதைகதையாம் காரணமாம்
வாழைமரத் தோரணமாம்!!
பலபேரு சொன்ன கதை
காதார கேட்டுபுட்டு!
சிந்தனையில் இருப்போரே!
மீண்டுமிங்கே திண்ணைக்கு
பாய்ந்து ஓடியாங்க
இன்னுமொன்று பார்த்திடுவோம்!!

ஆயிரம் பேசினாலும்
அளக்காமல் கொட்டினாலும்
ஊரெல்லாம் அலைந்து
உல்லாசம் தேடினாலும்
வீட்டு வாசல் வந்ததும்
உற்சாகம் வருவதுபோல்!
எம்மொழியைப் பேசுகையில்
என்மனம் குளிருது!!


அன்புநிறை தோழமைகளே இன்று நம்ம அரட்டைக் கச்சேரி முடியும் நாள். இன்றைய நிறைவாய் நம் இனிய தாய்மொழியின் சுவை பற்றிக் காண்போம் என நினைத்தேன்.
பேசிக்கொண்டே போகலாம், தமிழின் வளம் பற்றி. இன்றைய காலகட்டத்தில் மொழியில் கலப்பின வார்த்தைகள் பல கலந்து கொஞ்சம் மொழியின் தன்மையை மாற்றி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆயினும் இன்னும் நம் மொழி தரத்தில் இருந்து இறங்கவில்லை. முடிந்த அளவு தமிழைக் கலப்பு இல்லாமல் பேசுவதற்கு முயற்சி செய்வோம். நம் கண் எதிரே ஒரு தமிழர் வந்தால் தமிழில் பேசுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

திரைப் படங்களில் பல பாடலாசிரியர்கள் தங்களின் தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தி இருந்தாலும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இணை அவர்தான். இருவர் என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய நறுமுகையே..நறுமுகையே.. என்ற பாடல் எங்கு பாடினாலும் அப்படியே அந்த பாடலின் கவிநயத்தில் ஆழ்ந்து விடுவேன்.




நாவின் சுழற்சியில்
நாவன்மை தெரியினும்!
ஈரேழு பக்கங்கள்
இறுமாந்து பேசினும்!
உன்புகழைச் சொல்கையிலே
உவகை பெருகியதே!

கோடிசுகம் கிடைத்திடினும்
தேடிவந்து யான்வேண்டும்!
எந்நாளும் என்நெஞ்சில்
நீக்கமற நிறைந்திடவே!
அருள்புரிய வேண்டுமே
தமிழ்ப்பெரும் கருணையே!!

...............................................................................................................................
இங்கே நம் பதிவர்கள் பலர் தமிழின் பெருமையையும், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் வளர்ச்சி, இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புற இலக்கியம், சித்தர்கள் காவியம், மருத்துவம், சங்க காலம், இலக்கியக் கவிதைகள் ஆகிய இன்னபிற செய்திகளையும் நமக்கு எளிதாக புரியும் வகையில் அழகுற படைத்திருக்கிறார்கள். வாருங்கள் தமிழமுதம் பருகிவிட்டு வருவோம்...
...............................................................................................................................




வலைகளை சுற்றி வருகையில் சற்று தாகம் எடுத்து அருகே இருந்த தெளிந்த நீரோடையில் கைகள் அள்ளிய நீரை பருகி தாகம் தணித்தேன். அங்கே என் தாகத்தை தீர்த்ததற்கு முழு உரிமைபெற்றவர் சுந்தர்ஜி. நந்தவனத்தில் ஓராண்டி என்று குசப்பாத்திடம் போட்டுடைத்து பின்னர் காதற்ற ஊசிகொண்டு வாழ்வியல் தத்துவம் பேசிய பட்டினத்தார் பற்றி அழகாக ஒரு காவியம் படைத்திருக்கிறார்.. வாருங்கள் போய் பார்த்து வருவோம்..

இதோ அவருக்காக..

பட்டினத் துறவிகளின்
பாடம் உரைத்தாயே!
பாங்குடனே நீ இட்ட
பத்துப் பாடல்களையும்!
எழுத்துக்கூட்டி படித்த பின்னே
பட்டினத்து அடிகளின்
புலமை தெரிந்ததய்யா!!

................................................................................................................................




அன்னை பூமியின் அருள்மழையை புவனமெங்கும் பொழியச் செய்யும் தோழர்கள் கூறுகிறார்கள் பிற தொழில் செய்வாரை எல்லாம் இத்தரணியில் தாங்கிப் பிடிப்பவர்கள் உழவர்களே, உலகம் என்னும் தேருக்கு உழவர்களே அச்சாணி போன்றவர்கள் என்று. உழவுத் தொழில் தான் நம் நாட்டுக்கே முதுகெலும்பு என்பதை எவ்வளவு அழகாக தமிழ் நயத்துடன் இங்கே கட்டுரையாக போட்டிருக்கிறார்கள் பாருங்கள்...

இதோ அவர்க்காக..

சேற்றிலொரு கால்பட்டால்
செங்கழனி உழுதிட்டால்!
நாற்றங்கால் இறங்கியே
நல்லவிதை செய்வித்தால்!
சோற்றில் நாமும் கைவிடலாம்
செங்குருதி ஊறிடுமே!!

.................................................................................................................................




ஒளவையின் ஆத்திசூடி கண்டு சங்கத் தமிழின் வளத்தை எண்ணி பெருமித்திருந்த வேளையில், இதோ பார் வேதாவின் ஆத்திசூடி என்று தற்கால ஔவையாய் தரணியில் வளம் வருகிறார் சகோதரி வேதா.இலங்காதிலகம். இவரின் வேதாவின் வலை சென்றால் தமிழின் இனிமையை முழுமையாக பருகிவிட்டு வரலாம். செல்வோமா..

இதோ அவருக்காக..

அறம்செய விரும்பென
ஒளவையின் மொழியினை
பழகி வருகையில்
என்மொழியை பாரடியோ!
ஏற்றமிகு ஆத்தியை
மாற்றிப் புனைந்தேன்
வாழ்விற்கு ஏற்ப!
எனப் பகன்று வந்தாயே!
கலியுலக ஒளவையே!!
...............................................................................................................................




இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் (cheers) அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்(cheers)... என மகிழ்வோடு தன் அறிவினை பகிர்ந்து கொள்கிறார் நண்பர் ஜனா தன் வலையில். அங்கே மண்ணின் பாடல்கள் என்று நம் தமிழின நாட்டுப்புற பாடல்களை எங்கே தொகுத்தளித்திருக்கிறார்.. வாருங்கள் பார்த்து வருவோம்..

இதோ அவருக்காக..

மொழியின் வளர்ச்சியோ
கலையாலே தானப்பா!
பண்பாடு பேசிவரும்
கலாச்சாரம் காத்து வரும்
கலைஞர்களின் வாய்மொழிதான்
மொழிவளர்த்து வந்ததுவே!!
அழகிய மொழியாய்
ஏட்டில் ஏறுமுன்
வாய்மொழியாய் வாழ்ந்தாயே
நாட்டுப்புறம் தன்னிலே!!
...............................................................................................................................




கடம்பவன நான்மாடக்கூடலாம் மாமதுரை நகரிலே விரிவுரையாளர் பணிக்கிடையே நம்மை தமிழின் இனிமையால் திகட்ட வைத்துவிட மகிழம்பூச்ச்சரம் தொடுத்து வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்ச்சரமாய் உலா வருகிறார் சகோதரி சாகம்பரி. அவரின் வலை முழுவதும் தமிழ் மனம் வீசும். அங்கே நான் கண்ட ஓர் பதிவு நின்னைச் சரணடைந்தேன்!! எந்தச் செயலைச் செய்தாலும் முழுவதுமாக உன்னை அங்கே அர்பணித்து சரணடைந்து விட்டால் அச்செயலில் வெற்றி உறுதி என அழகாக விளக்குகிறார். வாருங்கள் நாமும் சரணடைவோம்...

இதோ அவருக்காக..

அகண்ட அண்டமும்
அன்றே வேண்டுமென
முரண்டு கொள்ளாதே!
வாழ்வின் வெளியில்
தெரியும் பரப்பினில்
தேவையின் நிமித்தம்
முழுமையாய் பரவு!
அகமழித்து உந்தன்
செயலில் ஒன்றிட்டால்
வெற்றி நிச்சயம்!!
.........................................................................................................................



வலைப்பூக்களில் ஓர் வர்ணஜாலம். தமிழுக்காய் தன்னை முழுவதும்  அர்பணித்து வேர்களைத் தேடி  இவரிடும் ஒவ்வொரு பதிவுகளும் நமது மொழியின் சிறப்பினை எண்ணி மலைக்கும் வண்ணம் தலைசிறந்து நிற்கும். அன்புநிறை நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் தமிழ்ப்பணி வலைப்பக்கங்களிலும் இணையத்திலும் போற்றத்தக்க வணங்கத்தக்க ஒன்று. இதுதானென்று சொல்ல முடியா அளவுக்கு அத்தனை படைப்புகளும் நெஞ்சை வருடி தாலாட்டும் தமிழ்ப்புலமை. அங்கே மேற்கோள் காட்டிடப்படும் ஒரு சங்கப் பாடல் அதற்கான விளக்கம்.
இதோ இன்றைய பதிவு இரவலர் வாரா வைகல்.. சங்க காலத்தில் இரவலர் வராவிட்டால் வீட்டுப் பெண்கள் எவ்வளவு துன்பத்துக்கு ஆளானார்கள் என அவர் சொல்லும் விதமே அற்புதம் தான்.
அப்பப்பா.. முனைவரே. இங்கே நான் உம்மை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை. உம்மின் பெயருடன் என் வலைச்சரப்பணியை நிறைவு செய்வதே என் நோக்கம். செய்தேன்.. பாக்கியம் பெற்றேன்..

இதோ அவருக்காக ..

தமிழின் பெருமையை
எம் ஆசான் உரைக்க
பொறியில் ஏற்றினேன்!
எழுத்துலகில் நுழைந்ததும்
விரல்களின் நுனியில்
ஊறிவந்த வார்த்தையெல்லாம்
கவியில் ஏற்றினேன்!
என்று உன் வலை கண்டேனோ
அன்றே தருவித்தேன்
அழகாய் ஓர் முடிவை!
நினைத்ததை எழுதாதே
அதில் சிறந்ததை எழுது!!

............................................................................................................................




அன்புநிறை தோழமைகளே, இதோ இன்றுடன் என் வலைச்சரப்பணி நிறைவுற்றது. இந்த ஏழு நாட்களும் என் மனதில் உள்ளதை எழுதி சில பதிவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறேன். இங்கே நான் ஏதும் தவறுகள் செய்திருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். நிறைவாய் செய்திருப்பின் என் வலை வந்து சிறப்பியுங்கள்.
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த வலைச்சர பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள். என்னை இத்தனை நாட்கள் ஆதரித்து கருத்துரைகளும் ஓட்டும் அளித்து வந்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அடுத்து வலைச்சரப் பொறுப்பேற்கும் இனியவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்பன்
மகேந்திரன். 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது