சென்று வருக மைதிலி கஸ்தூரி ரெங்கன் - பொறுப்பேற்க வருக இனியா
➦➠ by:
* அறிமுகம்,
#மைதிலி கஸ்தூரி ரெங்கன்
by: Cheena (சீனா)
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் - இவரது வலைத்தளம் : மகிழ் நிறை : makizhnirai.blogspot.com - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 090
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 118
பெற்ற மறுமொழிகள் : 485
வருகை தந்தவர்கள் : 2789
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 090
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 118
பெற்ற மறுமொழிகள் : 485
வருகை தந்தவர்கள் : 2789
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 070.
மைதிலி கஸ்தூரி ரெங்கன் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
மைதிலி கஸ்தூரி ரெங்கனை - அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு இனியா ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்
இவரது வலைத்தளம்
: காவிய கவி : kaviyakavi.blogspot.com
Kaviyakavi என்னும் தளத்தில் இனியா Iniya எனும் பெயரில் 2012 ல்இருந்துஎழுதிக் கொண்டிருக்கிறார். இவரது தளம் 2013 ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் 6 மாதங்கள் வரை இவரது தளத்தை யாருமே பார்வை இடவில்லை.
இருந்தும் இவர் தளராது பதிவுகளை இட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்று எல்லாநாடுகளிலும்
இருந்து நூற்றுக்கணக்கானோர் பார்வை இடுவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்.
இவரைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. ஈழமண்ணில்தவழ்ந்தவள் தான் இவர். இன்னல்கள் தீர இடம் தேடி இதயத்தைதொலைத்தவர். இருட்டினிலே தேடுகிறார் தொலைத்த வாழ்க்கையை. கனடா மண்ணில் தலையெடுக்க வந்தவர்களில் இவரும் ஒருவர் தான்.
சிறுவயதில் தமிழையும் இலக்கியத்தையும்ஆர்வமாக கற்றவர் தான். தொடரமுடியாத சூழ்நிலை இப்பொழுதுதான் நேரம் வந்திருக்கிறது ஆண்டவனின் தயவோடு.
இவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் மைதிலி கஸ்தூரி ரெங்கன்
நல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா
நட்புடன் சீனா