ஒரு பிரமாண்டமான வலைத்தேடல்; இம்முறை உலக அளவில்... சுற்றுலா சனி
புதிய வானம்.....வானம்...வானம்....
புதிய பூமி....பூமி...பூமி.....
ஹலோ
யாரப்பா கூப்பிட்டது.
இங்க சகாக்கள் ,சகோக்கள் எல்லாம் வெய்டிங். நீ என்னடான்னா எம்.ஜி.யார் ஸ்டைல பாட்டு பாடிக்கிட்டிருக்க ?
அட! விமானம் பிடிச்சு வெளிநாடு போகத்தான் பயமா இருக்கு. எவனாவது நடுவானத்தில போகும்போது சுட்டுட்டான்னா. அதனால வம்பில்லாம இந்த நண்பர்களை கேட்டு உலகத்தை தெரிந்துக்கலாம்னு பார்க்கிறேன். திரைகடல் ஒடி திரவியம் தேடு அப்படினு சொல்லுவாங்கல்ல (யாரு சொல்லுவா? அட! தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா) அப்படி திரைகடல் ஒடி நம் வலை உலகுக்கு திரவியம் தந்துகொண்டிருக்கும் பதிவர்கள் தான் இன்னிக்கு நம்ம டார்கெட்!!
படங்களில், வண்ணங்களில் தொடங்கி ஒவ்வொரு பதிவுக்கு இவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை இருக்கே அப்பப்பா! படிக்கும்போதே இவர் பின்னூட்டத்தில் ஒரு சிரிப்பு சத்தம் கேட்கும். அவ்ளோ ஜாலி பட்டாசு இந்த
அமெரிக்காவாழ் காவியகவி. இனியா அவர்களின் தந்தையர் தினக்கவிதை
சுகமான பாடல்கள், சொந்த ஊர் தேடல்கள், ஓய்வுப் பொழுதில் பார்த்த சினிமா என கலவையாய் இருக்கும் இவர் பதிவுகள். அபுதாபி வாழ் மனசு சே.குமார் அண்ணாவின் நட்புப்பகிர்வு
ஆர்வகோளாறு என சொல்லிக்கொள்கிறார் இவர். ஆனா பல திறமைகள் கொண்டவர். இவர் நடித்த தலைவா பட அனுபவ பகிர்வுகள், மற்றும் அவரது குட்டி தேவதைகளின் பள்ளி அனுவபங்கள் என சுவாரஸ்யமான இருக்கும் அண்ணனின் வலைப்பூ. ஆஸ்திரேலியா வாழ் உண்மையானவன் சொக்கன் சுப்பரமணியன் சகோவின் செல்ல மகளின்பள்ளிஅனுபவங்கள்
பிரஞ்சுக்காதலிக்காக உருகி உருகி கவிதை பாடும் இவர் பதிவுகள் மனதை தொடும். பிரான்ஸ் வாழ் தனிமரம் நேசன் சகோ வைரமுத்துவிற்கு எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
கதை, மரபுக்கவிதை, புதுக்கவிதை என எல்லா துறையிலும் கலக்கும்
மற்றொரு பிரான்ஸ் வாழ் சகோதரி அருணா செல்வம். அவ்வவ்வபோது பிரான்ஸ் நகர் விவரிக்கும் இவரது அனுபவப்பதிவுகள் மிகமிக அருமையாக இருக்கும். அவர்களின் ஒன்று குட்டிக்கதை இதோ
இமா, படிக்கும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அப்படி ஒரு உயிரோட்டமான நடை. நியூசிலாந்துவாழ் இமாக்ரிஸ் அவர்களின் வித்யாசமான கேக் அலங்காரம் ஒன்றை பாருங்க.
ஒன்னுபோக, வலைச்சரம்னு இன்னொன்னை ஒருவாரம் நடத்தவே நாக்கு தள்ளுது எனக்கு ! இவங்க என்னடா ஐந்து வலைப்பூக்கள் நடத்துறாங்க. மற்றொரு நியூசிலாந்துவாழ் பதிவர் துளசிகோபால் அவர்களின் முற்றிலும் புதிய ஆல்பம்
முகில் ஆங்கிலத்தில் ஒன்னு, தமிழில் ஒன்னு என்று ரெண்டு வலைப்பூ நடத்துறாங்க. கிராப்ட் ல கலக்குற U.S வாழ் தமிழ் முகலின் உண்மைக்கு நெருக்கமான கதை ஒன்னு படிச்சுப்பாருங்க!
நம்ம பக்கத்து வீட்டு அண்ணன் போலவே பேசும் ஈர மனிதர். சும்மா மீசை வைத்து பயமுறுத்துவாரே தவிர குழந்தை மனசு கொண்ட அண்ணா(அண்ணா சரியா சொல்லிட்டேனா, ரைட்டு அப்ப சோடா சொல்லுங்க:) துபைவாழ் கில்லர்ஜி அண்ணாவின் ஒரு நகைச்சுவை கலந்துரையாடல்
ஆளுக்கொரு துறையில், கலையில் தங்கள் திறமையைக்காட்ட இவரோ பல திறமைகள் கொண்டவர். தன் திறமைகளில் ஒன்ற தோட்டக்கலையையும் பதிவா போட்டு அசத்துவார். U.K வாழ்ஏஞ்சலின் அவர்களின் தோட்டத்தில் என்னவிளைந்தது? . வாங்க பார்க்கலாம்.
பொதுவா பெண்கள் கவிதை (புதுக்கவிதை )எழுதினால் அதில் கூர்மை கம்மியா இருக்கும் என்கிற மனோபாவத்தை தகர்க்க இவங்க கவிதை போதும். இவங்க சொல்லும் சமையல்குறிப்பை நான் செய்தாகூட நல்லா இருக்குன்னா பார்த்துக்கோங்களேன். குவைத் வாழ் மஞ்சுபாஷிணி அக்காவின் டச்சிங் கவிதை.
கலகலப்பான இவரது பின்னூட்டத்தை பார்த்து இவர் பதிவிற்கு போனால் அது அதற்கு மேல் காமெடியை இருக்கிறது. இயல்பான நடையில் அவரது மண் வாசம் தெரிகிறது. பக்ரைன் வாழ் நாஞ்சில் மனோ அவர்களின் மண் மணக்கும் பதிவு.
இந்த பதிவர் எடுத்துக்கொண்டிருக்கும் கலை, புகைப்படக்கலை. விதவிதமான பின்னணிகள், ஒளி நுட்பம் என பிரெஷ்ஷா இருக்கு சிங்கபூர் வாழ் ப்ரியமுடன் பிரபுவின் கவிதையாய் சில புகைப்படங்கள். நீங்களும் பாருங்க.
பட்டிமன்றங்களில் அல்ரெடி பட்டையை கிளப்பும் Alfi அண்ணா பதிவுகள் அவரது அனுபவம் மற்றும் வாழ்க்கைமுறைக்கு மிக அருகில் இருக்கிறது.
அமெரிக்கா வாழ் (இது அவரா கொடுத்துக்கிட்ட பேருங்க, நான் ஒன்னும் சொல்லல) பரதேசி ஆல்பி அண்ணா வின் சுவையான ஒரு பகிர்வு.
ஆன்மிகம், மரபுக்கவிதை, புதுக்கவிதை என கலக்கும் இனிய தோழி. எடுத்துக்கொள்ளும் தலைப்பை சுவைபடச்சொல்லும் திறமைக்காரர். அம்பாள் அடியாள் என்கிற தோழி ரூபிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாமா?
க்வெல்லிங், கோயர் சாங், போட்டோக் கலை என கலவையாய் இருக்கிறது இவரது தளம். பார்த்தவுடன் புன்னகைக்க வைக்கும் ஒரு இன்னொசென்ட் அழகு இருக்கும் இவங்க தளத்தில். ஜெர்மனி வாழ் தோழி ப்ரியசகியின் ஊர் திருவிழாவிற்கு போய்வரலாமா?
ரொம்ப நேரமா ஊர் சுத்தினது டயர்டா இருக்கு. நெக்ஸ்டு ரெஸ்ட்டு. இன்னும் என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க. நீங்க போய் சட்டுபுட்டுனு கமென்ட போடுங்கப்பா.
|
|
தேடலுக்கு பாராட்டுக்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அண்ணா!
ReplyDeleteஎனது பதிவை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள் தோழி. இன்று அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள் .
ReplyDeletewelcome தோழி!!
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ. அறிமுகப்படுத்தியதோடு மட்டும்மல்லாமல், என் தளத்திற்கு வந்து சொன்னதற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
welcome சகோ!!
Deleteபரதேசி அல்பி நம் நம் நண்பர் -சகோவும் கூட. அருமையான நடையில் அட்டகாசமாக எழுதுவார். நான் இன்று இடுகை எழுத (அவரை திட்டி துளைக்காதீர்கள்) காரணமே அவர்தான். சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தான் என்பார்களே.. அதுபோல்... என்னை தூண்டிவிட்டார். அறிமுகம் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅல்பி அண்ணாவுக்கு ஸ்பெஷல் thanks வேணா சொல்லுவேன்.
Deleteஉங்கள கண்டுபிடுச்சு கொடுத்ததற்கு!
நன்றி அண்ணா!
தம்பி விசு, ஏன்யா இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி >>>>>>>>>>>>>>>
Deleteபுதிய வானம்.....வானம்...வானம்....
ReplyDeleteபுதிய பூமி....பூமி...பூமி...../
ரொம்பவே எதிரொலிக்குதுங்க....நல்லா க்ளியாரா வேற! வலையுலகம் மூலம் உலகையே ஒரு சுற்று சிற்றியிருக்கீங்க போல.....வலை"யுலகம்" சுற்றும் வாலிபி!
எல்லா அறிமுகப் பதிவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
ஒ! அங்கவரை கேட்டுட்டுச்சா!
Deleteரொம்ப சந்தோசம் சகா!
ஹா...ஹா...ஹா..நல்ல பட்டம்.
மிக்க நன்றி!
இதோ இப்ப போட்டுடுறேன்மா. கோபப்படாதடா உடம்புக்கு ஆகாதில்ல.
ReplyDeleteஆமா என் சிரிப்பு சத்தம் அவ்ளோ .....தூரம் கேட்குதா too bad பொண்ணு சிரிச்சா போச்சு போயிலை விரிச்சா போச்சுன்னாங்க.ம்...ம்...ம்
அம்மாடியோவ் இவ்ளோ பேர் வெளிநாட்டில இருந்தா...... கலந்து கொள்வததை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. கண்களும் பனித்தன. வாழ்க தமிழ்!
என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றிம்மா ! ரொம்ப சந்தோஷம்.
ஆமா வித விதமான தலைப்போடு வந்து என்னமா அசத்துது இந்தப் பொண்ணு. குட் குட் கீப் இட் அப் ! டீச்சர் அம்மா ! வாழ்த்துக்கள் மா ! அறிமுகங்கள் அனைவருக்கும் என் மன மார்ந்த நல் வாழ்த்துக்கள் ....!
இனியா செல்லம்னு தான் intro கொடுக்க நினைத்தேன். அதுதான் உங்க பேருன்னு நினைச்சு மத்தவங்களும் அப்டி கூப்பிட்டுட்ட :)) அது என் ஸ்பெஷல் உரிமை ஆச்சே! ஹா..ஹ...ஹா..
Deleteவெல்கம் இனியா செல்லம்!
hey வாலு நான் வெடியா.... வச்சிருக்கேன் இல்ல வெட்டு கொஞ்சம் பொறுத்துக்கடா வாறன். ஹா ஹா ..... என்ன குழப்பமா இருக்கில்ல இருக்கட்டுமே இப்ப என்ன.
Deletei guessed:)) பார்போம் ;) அது நடந்தா சந்தோசம்:))
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteநன்றி அண்ணா!
Deleteசொக்கன் சுப்ரமணியனும் கில்லர்ஜியும் இனிதான் நான் படிக்கணும். (அவங்க ரெண்டு பேரும் என் படைப்பைப் படிச்சும்கூட நான் இன்னும் அவங்க பக்கம் போகல பாரும்மா... என்னா வில்லத்தனம்!) மத்தவங்க எழுத்துக்கள் எனக்கு அறிமுகமானவை. அனைவரும் திறமையாளர்கள். சனிக்கிழமைல தங்கை கையப் புடிச்சுக்கிட்டு உலக உலா போனதுல ரொம்ப சந்தோஷம் எனக்கு.
ReplyDelete//என்ன வில்லத்தனம்// இப்படி பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்ண்ணா. அதாவது காமெடி பன்ச் பயன்படுத்துறது! ( தெளிவா சொல்லன்னா அதை கண்டுபிடுச்சு கபடி ஆடவே எனக்கு நண்பன்கிற பேர்ல ஒரு வில்லன் இருக்காரே)
Deleteஒருவழியா நீங்களும் என்னோட உலகம் சுத்தினது ரொம்ப ரொம்ப சந்தோசம் அண்ணா!
டீச்சரம்மா பாரின் இருக்கும் நல்லவர்களை எல்லாம் இங்கே தொகுத்து வழங்கி இருக்கீறீங்க பாராட்டுகள்,
ReplyDeleteஆமாம் நானும் பாஸ் வருணும் பாரின் தான் ஆனா எங்களை லோக்கல் லிஸ்டில் சேர்த்துட்டீங்களேம்மா...
இன்று ஜுஸ் குடிக்க வேண்டாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இப்ப ஜுஸ் குடிக்க முடிவு செய்துவிட்டேன்.....ஹும்ம்ம்ம்ம்
//ஆமாம் நானும் பாஸ் வருணும் பாரின் தான் ஆனா எங்களை லோக்கல் லிஸ்டில் சேர்த்துட்டீங்களேம்மா//
Deleteநீங்கலாம் பாரின்ல இருந்தாலும் லோகலில் ரொம்ப பிரபலமானவங்க. நான் பாட்டுக்கு உங்கள பாரின் லிஸ்ட்ல சேர்த்து இங்க இருக்கிற எல்லாரும் போராட்டம் பண்ண தொடங்கிட்ட என்ன பண்றது, மேலும் உங்க மெயில் பேக் எனக்கு ரொம்ப பிடிக்கும். so கம்போ பதிவில் அதை சேர்த்தேன். (ஒருத்தருக்கு பதில் சொல்லவே கண்ணை கட்டுது! இதில வருணை வேற கோர்த்துவிட்டுருக்கரே:(( அவர் ரொம்ப புத்திசாலி. அவரை ஏன் அந்த பதிவில் சேர்த்தேன்னு கரக்டா புரிஞ்சுப்பார்.)
அப்போ நான்னு அப்டின்னுதானே கேட்டீங்க! நீங்க அதி புத்திசாலி,சும்மா கலாய்க்கிறீங்க:)) (உஸ்ஸ்! அப்பா இந்த பஞ்சாயத்தை கலைக்கிறதுக்குள்ள நான் பட்டபாடு)
//இன்று ஜுஸ் குடிக்க வேண்டாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இப்ப ஜுஸ் குடிக்க முடிவு செய்துவிட்டேன்.....ஹும்ம்ம்ம்ம்//
இல்லைனா சனிக்கிழமை விரதமா இருக்கப்போறீங்க? இன்னைக்கு நான் சிக்கிருக்கேன்.
friendship is understanding everything in a single word (courtesy-Google)
got it dude !!!
good morning!!
தல: நம்ம நாடுவிட்டு நாடு போயி பல ஆண்டுகளாக அகதியாக அலைந்தாலும் "நம்மட்ட உள்ள அந்த தமிழன் என்கிற அடையாளம், தனித்துவம்" பதிவுலகில் நம் "நடை உடை பாவனை"களில் எப்போதுமே ஜொலிப்பதால், நம் உறவுகளுக்கு நாம் அருகில் இருப்பதுபோலவே ஒரு பிரமை ஏற்படும்னு தெரியாதா?.:) அதான் நம்மை அன்னியமாக நெனைக்காமல் அவர்களோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். :) இதை நெனச்சு பெருமைப்படணும் தல! :)
Deleteமைதிலி: அவர் என்னை கோர்த்துவிட்டதுக்குக் காரணம், தனியாக உங்களிடம் வாதிட ரெண்டுபேருக்குமே பயம். பயமா? நான் என்ன பேயா?னு சண்டைக்கு வராதீங்க. ஆமாங்க, உங்க தமிழ்ப் புலமை அபாரமானதுனு சொல்ல வந்தேன். "அங்காடிதெரு"வில் நடந்துபோகும் தாத்தா-பேத்தி கூட உங்க கவித்துவத் திறமையை மெச்சிப் பேசிக்கிறாங்கனா பார்த்துக்கோங்க! :)
Deleteதல: நான் அப்பவே சொல்லல. சகா ரொம்ப நல்லவரு, வல்லவரு, கரக்டா புரிஞ்சுப்பார்னு ;)
வருண்: OMG!! நீங்க அங்காடித்தெரு கவிதை படிச்சுடிங்களா? ரெண்டுக்கும் சேர்த்து இங்கேயே பின்னூட்டமா? ரொம்ப ஸ்மார்ட் தான்:)
anyway friends, you two people make this place very lively!!
it's really a memorable experience!!
thanks a ton:)
நன்றிங்க .:)
ReplyDeleteவெல்கம் சகா!
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சகோ!!
Deleteசகோதரி மைதிலி அவர்களுக்கு,,, ''நம்ம பக்கத்து வீட்டு அண்ணன் போலவே பேசும் ஈர மனிதர். சும்மா மீசை வைத்து பயமுறுத்துவாரே தவிர குழந்தை மனசு கொண்ட அண்ணா'' இந்தவரிகள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்னோடு நெடுங்காலம் பழகிய சகோதரியைப்போல எப்படி இத்தனை சரியாக உங்களால் சொல்லமுடிந்தது ?
ReplyDeleteஎன்னாலும் முடியுமோ ? என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன்... தங்களது வலைச்சர அறிமுகத்தால் என்னாலும் முடியுதே ? என்ற நம்பிக்கையை அளிக்கிறது... எனக்கு தாங்கள் பின்னூட்டத்தில் தகவல் கொடுக்காவிட்டாலும் படித்திருப்பேன் காரணம் நான் தங்களது அனைத்து பதிவுகளையும் கண்டு வருகிறேன் இருப்பினும் அதற்கும் சேர்த்து ஒரு கன்டென்னரில் ''நன்றி'' யைஅனுப்பி வைத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்.
பத்து கேள்வி பதிலில் தெரிஞ்சுகிட்டேன் அண்ணா! இல்லைனாலும் ஒரு வரி போதாதா ஒரு மனிதரை தெரிந்துக்கொள்ள! அண்ணா! செம வெயிட் நீங்க அனுப்பின கன்டைனர்!:)))
ReplyDeleteஎனது கேள்வி-பதிலை இத்தனை ஆழமாக உணர்ந்து படித்தமைக்கு மீண்டுமொரு முறை நன்றி.
Deleteசகோதரி என்னைப்பற்றி மேலும் அறிய... ஆகஸ்ட் 30 நான் வெளியிடும் ''மௌனமொழி'' என்ற கவிதையை கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன்.
படிக்ககாத்திருக்கிறேன் அண்ணா!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதேடியே தந்தனை தீஞ்சுவை அல்லவோ!
Deleteகோடியாய்க் கொட்டினேன் வாழ்த்து!
இன்றும் இங்கு உங்கள் தேடல் மிக அருமை தோழி!
நன்றியுடன் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
ஆஹா! குறள் வெண்பா வாழ்த்து!!
Deleteமிக்க மகிழ்ச்சி தோழி!!
தாங்கள் அறிமுகப்படுத்திய நண்பர்களின் தளங்களுக்குச் சென்று அனைத்தையும் படித்தேன். பல துறைகளில் எழுதியவர்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நன்றி.
ReplyDeletewww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
அய்யா! நீங்கள் எல்லோரும் காட்டும் அன்பிற்கு என்ன கைமாறு செய்யபோகிறேனோ?
Deleteமிக்க நன்றி!
வணக்கம் அக்கா
ReplyDeleteநம் நட்புகளை அறிமுகம் செய்ததைப் பார்க்கையில் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களின் எழுத்துகள் தொடர்ந்து ஜொலிப்பதும் அதே சமயம் ஜாலியாக நகர்வதும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அக்கா. நாளையும் தொடருங்கள்.
நாளை மாலைக்குள் பதிவுகளை முடித்து விடுங்கள் அக்கா. இரவு வரை வேண்டாம்.திடீரென்று டேஸ்போர்டில் வலைச்சரம் மறைந்து விட்டால் பதிவிட இயலாது என்பதால் கூறுகிறேன் நன்றிங்க அக்கா..
Deleteஎல்லாம் நம்ம மண்ணோட மகிமையோ?
Deleteஇரவு வரை பதிவு போடும் எண்ணம் இல்லை சகோ!
உங்களை மாதிரி நான் ரொம்ப சின்சியர்லாம் கிடையாது:))
மிக்க நன்றி தம்பி!!
உலக உலா வந்தது செம ஜாலியா இருந்தது. அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteஆஹா! அப்படியா தோழி!
Deleteமிக நன்றி!
சனி பகவான் பெயர்ச்சி பற்றித் தான் எழுதி இருக்கிரீர்கள் என்று
ReplyDeleteநினைத்து விட்டேன்.
சனியன்று ஒரு சுற்றுலா வா? வாவ். !!
எல்லா பதிவர்களுக்கும் எனது ஆசிகள்.
\
பை த வே ,
எனக்கு பிடித்த நோ.நோ. என்னைப் பிடித்த அஷ்டமத்துச் சனி என்ன செய்கிறது என்று நீங்கள் பார்க்க படிக்க.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
//எனக்கு பிடித்த நோ.நோ. என்னைப் பிடித்த அஷ்டமத்துச் சனி//
Deleteஇங்க நிக்கிறீங்க சார்!!
படிச்சு பின்னூட்டம் தந்துட்டேன்!!
மிக்க நன்றி அய்யா!
ஆஹா... வலைச்சர ஆசிரியர் - ன்னு ஊருக்குள்ள கலக்கி அடிச்ச கையோடு கடல் கடந்தும் கலக்கிய கண்மணிக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்றைய தொகுப்பின் தளங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..
இரட்டை இலை பாயாசம் போல இருக்கு!..
(ஆமா.. பணி நீட்டிப்பு கொடுப்பாங்களாமா!?.. )
//இரட்டை இலை பாயாசம் போல இருக்கு!.. //
Deleteகண்டுபிடுச்சுடீங்களா? நீங்கதான் போட்டோவை நுட்பமா கவனிச்சிருக்கீங்க!
இல்லை அய்யா! கொடுத்தவரை எனக்கு மனநிறைவா தான் இருக்கு:))
ரொம்ப நன்றி!
வெளிநாடுவாழ் பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! ஒருசிலரை தவிர அனைவரும் நான் தொடரும் பதிவர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ் சார்!
Deleteசனி அதிஸ்ரம் என்று பயண முகவர் சொல்லியது இன்று சரிதான் போலும். ஹீ! தனிமரத்தையும் வலைச்சரத்தில் மகுடம் சூட்டியதுக்கு நன்றிகள் உறவே!
ReplyDeleteஒ! சனிக்கிழமை அறிகம் பற்றி சொல்கிறீகளா?
Deleteமிக்க நன்றி நேசன் சகோ!
ஒரு சில தளம் புதிது அறிமுகத்துக்கு நன்றிகள்.
ReplyDeleteவெல்கம் சகோ!
Deleteஅறிமுக சக உறவுகளுக்கு வாழ்த்துக்கள். பணி தொடர் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமீண்டும் நன்றி சகோ!
Deleteஅடடா, வீக்-எண்ட்ல கூட கொஞ்சம் ரெஸ்ட் இப்படி உழைக்கிறீங்களே! தெரிந்தவர்கள் சிலரையும், புதியவர்கள் பலரையும் இப்பதிவுமூலம் தெரிந்து கொண்டேன். உங்க உழைப்பு வீண்போகவில்லை! :)
ReplyDeleteThe above response should read as..
ReplyDeleteஅடடா, வீக்-எண்ட்ல கூட கொஞ்சம் ரெஸ்ட் எடுக்காமல் இப்படி உழைக்கிறீங்களே! தெரிந்தவர்கள் சிலரையும், புதியவர்கள் பலரையும் இப்பதிவுமூலம் தெரிந்து கொண்டேன். உங்க உழைப்பு வீண்போகவில்லை! :)
எடுக்காமல் //இல்லாதப்பவும் எனக்கு புரிந்தது! இந்த மெனக்கெடல் உங்க பொறுப்பை காட்டுது!
Delete//உங்க உழைப்பு வீண்போகவில்லை! :)// இந்த வார்த்தைக்காகவும், புன்னகைகாகவும் தான் வீக்-எண்ட்ல கூட கொஞ்சம் ரெஸ்ட் எடுக்காமல் இப்படி உழைக்கிறேன்:)))
நன்றி சகா!
கஷ்டப்பட்டு உழைச்சுது உங்க வீட்டுக்காரர் ஆனால் அழகாக பேரைத் தட்டிச் செல்வது நீங்கள். என்ன நியாமுங்க இது
Delete:))))))))
Deleteஇப்போ என்ன கஸ்தூரிக்கு ஒரு வாழ்த்து ப்ளெக்ஸ் ஆடர் பண்ணிட்டா போச்சு :)
அன்பின் சகோதரிக்கு...
ReplyDeleteகடல் கடந்து தேடியவர்களில் என்னையும் தாங்கள் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
வலைச்சர அறிமுகம் எத்தனை முறை கிடைத்தாலும் கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவில்லை...
இந்த முறை தொடர்ந்து மூன்று வாரம்... ஹாட்ரிக் அடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்...
உங்கள் அன்புக்கு நன்றி....
அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஒ! hat trick!!!!
Deleteவாழ்த்துக்கள் சகோ!!
நானும் இது மாதிரி ஒருமுறை ஹட் ட்ரிக் வாங்கிருக்கேன்:))
மிக்க நன்றி!!
பன்னாட்டுப் பதிவர்களையும் அழகுற இங்கே தொகுத்து வழங்கியது, சுவைபட இருந்தது. பாராட்டுக்கள்!!!
ReplyDeleteமிக்க நன்றி சகோ!
ReplyDeleteமிக நல்லநல்ல தள அறிமுகங்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇவர்களுடன் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு ரெம்ப நன்றி தோழி.
என்னையும் இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு
ReplyDeleteமிக்க நன்றி தோழி.
உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மிக்க நன்றி மைதிலி .இப்போதான் பார்த்தேன் .தாமதத்திற்கு மன்னிக்கவும் ..
ReplyDeleteமைதிலி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
ReplyDeleteஇது எனக்கு நிச்சயமாய் ஒரு உற்சாக டானிக்.