07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 25, 2014

நாவூறும் அறுசுவையில் நூறுவகை நோய்தீரும

  

நாவூறும் அறுசுவையில்நூறுவகை நோய்தீரும் 
ஆறும் நூறும்
அலுக்காமல் வாழும்
நகை- சுவை சேர்ந்தாலே
சுகம் காணும் வாழ்வு   
நீரும்மோரும் உண்டால்  
நிழல் தரும் மேனி  
நீள நடந்தாலும்
நீளும் ஆயுள்



ஆலய தரிசனம் முடிந்து வரும் வழியில் அம்முக்குட்டியும் மதுவும் நன்றாக தூங்கி விட்டார்கள்.  நன்றாக களைத்து விட்டார்கள் அல்லவா பாவம். மகிழ் நிறை என்னுடன் பேசிக்கொண்டே விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
ரூபன் யன்னலினூடாக வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மகிழ் அம்முவின் பாக்கை திறந்து மேக்அப் இருந்த பக்கத்தில் கண் மை எடுத்து அம்முவின் முகத்தில் மீசை வரைந்து விட்டார்கள். இதை பரர்த்த ரூபன் விழுந்து விழுந்து சிரிக்க மது எழும்பி விட்டார். ஏன் சிரிக்கிறோம் என்று தெரியாமல் என்ன சிரிப்பு என்கிறார் தூக்கக் கலக்கத்துடன். மகிழ் மெதுவாக கையை காட்ட. மதுவுக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது. நீங்கள் எப்படி என் மைதிலிக்கு மீசை வைக்கலாம் என்றார். பாவம் மகிழ் கொஞ்சம் தள்ளி  பயந்து போய் இருந்தார் இன் நிலையில் காட்டிக் கொடுக்க முடியுமா. இந்த அமளியில் அம்முவும் விழித்து கொண்டே என்னம்மா பஞ்சாயத்து என்று அலுப்புடன் முனங்கினார். மகிழ் ஓடிவந்து அம்மாவிடம் தஞ்சம் புகுந்து கொண்டார். மதுவும் கண்ணாடியில் உன் முகத்தை பார் அப்போ தெரியும் என்கிறார். மகிழ் பாக்கில் இருந்த கண்ணாடியை காண்பித்தார். எதிர்பார்க்கவே இல்லை அம்மு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டார். அப்பாடா இப்ப தான் நெஞ்சுக்க தண்ணி வந்திச்சு. இனி  வேறு எங்கும் போக  முடியாது எனவே வீட்டிற்கு செல்லலாம் என்றோம்.
போகும் வழியில் ரூபன் பேச்சுக் கொடுத்து கொண்டே வந்தார் மதுவிடம் எப்படி வலை தளம் எல்லாம் எப்படி போகிறது ம்.... போகிறது எல்லோரும் நன்றாகவே எழுதுகிறார்கள் இல்ல அதிலும் இந்த saamaaniyan saam. சாமானியன் இல்லைங்க எழுதின பதிவு பார்த்தீர்களா சூப்பருங்க நிச்சயம் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது ரெளத்திரம் பழகு !  இல்லையா? கோபத்தை பற்றி விலாவாரியாக எழுதியுள்ளார் நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டியதொன்று ம்...ம்...  அதோட பாருங்க வை.கோபாலகிருஷ்ணன்  இவர் சிறு கதை எல்லாம் நிறைய எழுதி அசத்துகிறார் இல்ல, புத்தகங்களும் அதிகமாக வெளியிட்டுள்ளார்,அடிகடி விமர்சனப்போட்டி கூட வைக்கிறார் இல்லையா ம்..... அப்பிடியா ரூபன் எனக்கு அவ்வளவு  பழக்கம் இல்ல ஆனா பின்னூட்டத்தில சந்திச்சு இருக்கிறன்.அது சரி  இவர் வருண்  இருக்கிறார் இல்ல அவர் என்னடான்னா நம்மளை ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று சொல்லிட்டு என்னை ஏன் பிளாக் பண்ணின? நீ என்ன பெரிய இவனா?  இப்பிடி வேற கேட்கிறார் இது நியாயமா? முதல்ல இவர் ரிலாக்ஸ் பண்ணவேன்டாமா?  தனக்கொரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா? இதுக்கு என்ன செய்யலாம் ரூபன்  என்கிறார் மது . ரூபன் இவர்தான் KILLERGEE Devakottai இருக்காரே 300 வருடதத்துக்கு முன்னமே... மே வாழ்ந்திருக்க வேண்டியவராம் என்று வருத்தப் படுகிறார் தெரியுமா. இப்ப ஏன் பிறந்தேன் என்று கோபம் வேற அது மட்டுமா  தாலி.  ஏன் பவுனில போடவேணும் என்று கொதிக்கிறார். எப்பிடி இவரை சமாதனப் படுத்திறது என்று தெரியலை மது என்கிறார் ரூபன். எனக்கு கவலையாய் போய்விட்டது அப்படியா சொல்கிறார் மது ம்...ம்... பொண்ணுகளா கொஞ்சம் உஷாரா இருங்க இவர் ஒரு பொட்டுத்தங்கம் கூட வாங்கித் தருவார் போல தெரியல. அம்மு  இப்பிடிப்போனா இவர் \\குமரிப் பொண்ணின் இதயத்தில் குடியிருக்க நான் வரலாமா குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் /////என்று கெஞ்சப் போகிறார்.   பாருங்க.  ஹா ஹா  ......சரி சரி பேசியது போதும் இறங்குங்கள் வீடு வந்து விட்டது.

 பின்னர் நல்ல தூக்கம்  . .அனைவரும்  தூங்கி எழும்பியதும் லஞ்சுக்கு என்ன செய்யலாம் என்று அம்மு மண்டையை குழப்பிக் கொண்டு இருந்தார் . எனக்கு மைதிலி கையால தான் சாப்பாடு வேண்டும் என்றேன். எனக்கு சமையல் வராது என்கிறார். எவ்வளவு ஆசையாக வந்தால் இப்படியா சொல்வீர்கள் என்று கோபித்துக் கொண்டேன். இல்லை அப்படி செய்வேனா இதோ ஒரு நொடியில் என்கிறார் என் அம்மு

.


பின்னர் தெரிந்தவர்களிடம் கேட்டு 2 மணித்தியாலம் தாங்க இவ்வளவும் சமைத்து வைத்திருக்கிறாங்க. பார்த்தால் பலவகை ஐட்டம். நான் அசந்தே போய்ட்டேன். என்ன சமைச்சிருக்கிறாங்க என்று நீங்களே பாருங்க இதோ நீங்களும் வேணுமின்னா சமைத்து பாருங்கள்.
  கதை தொடரும்
அறுசுவைத்தளங்கள்

1.    சகோதரன் சுரேஸ்குமார் என்பவர் அறுசுவை பற்றி எழுதியுள்ளார் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது நாவூறும் வண்ணம் ரசனையோடு சொல்கிறார். அது மட்டுமா தன்னுடைய பயணஅனுபவங்களையும் கடல்பயணங்கள் என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதிவருகிறார் இதோ அவர் எழுதிய பதிவு. நம்நாட்டு பர்கர், kadalpayanangal.com
பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார்.... நீங்களும் செய்து பார்க்கலாம்.


2.    தனது சொந்தப்பெயரில்ஆர்.உமையாள்.காயத்ரி பல சுவைப்பட்ட தனது அனுபங்களை மிக அருமையாக பகிர்ந்து வருகிறார் அதிலும் மிக எளிமையான முறையில் மாவடு
ஊறுகாய் தயாரிக்கும் முறை பற்றி சொல்லியுள்ளார் பாருங்கள் நீங்களும் செய்து பார்க்கலாம் இதோ முகவரி.umayalgayathri.blogspot.com


3      .சமையலில் ரொம்ப கில்லாடியாக இருப்பாங்க போல. என்னமா சமைக்கிறாங்க  கீதா வோட ப்ளாக் தான்.என் சமையல் அறையில் அம்மாடி எவ்வளவு அழகழகான  ரெசிபிஸ்! உலகத்துலயே ரொம்ப கொடுத்துவச்சவங்க கீதாவோட குடும்பத்தினர்தான்னு தோன்றுகிறது .அவரின் சமையல்தான் இவை சென்று தான் பாருங்களேன். geethaachalrecipe.blogspot.in


4.           அடுத்ததாக  சித்திரா அவர்களின் சமையல் பக்கம் செல்வோம் விதவிதமான சமையல்களின் தொகுப்பு உள்ளது அவற்றில் ஒன்றுதான் முருங்கை தொக்கு
என்ற தலைப்பில் எழுதி சமைத்தும் காட்டியுள்ளார் வாருங்கள் போகலாம். karaikudisamayal.blogspot.com


5       .அடுத்து மனோ சாமிநாதன் சகோதரியின் முத்துச்சிதறல் தளத்துக்குசெல்வோம்மாயின் வருகிற தீபாவளிக்கு செய்யக்கூடிய பலகாரங்கள் பற்றியும் ஏனைய சமையல் குறிப்பகளையும் பகிர்ந்துள்ளார் அதில் ஒன்றுதான் முள்ளங்கி  இரசம் http:///2013/01/blog-post_28.htmபற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார் வாருங்கள் சென்று வருவோம். 


6          அடுத்து பார்க்க இருப்பது கோவை2தில்லி என்னும் வலைப்பூ பற்றிதான் இங்கே

குடமிளகாய் சாதம் எப்படி தயார்செய்யவேண்டும் என்பதையும் தேவையான பொருட்கள் பற்றியும் சொல்லியுள்ளார் பாருங்கள். kovai2delhi.blogspot.com


7.   காணாமல் போன கனவுகள் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி ராஜி அவர்கள் மாங்காய்ச்சாதம் செய்யும் முறை பற்றி நன்றாக சொல்லியுள்ளார் சென்று  பார்ப்போம் வாருங்கள். rajiyinkanavugal.blogspot.com


8.        .மணித்துளி என்னும் தளத்தில் எழுதி வரும் ஆசியா ஊமர் (Asiya omarஅவர்களுடைய தளத்தில் சில சமையல் டிப்ஸோ.டிப்ஸ் தந்துள்ளார் வாருங்கள் உங்களுக்கும் பயன் படும் குறிப்பாக இருக்கும்.  asiya-omar.blogspot.com


 9          இவர்  Mohamed ali எக்கச் சக்கமான  சமையல் டிப்ஸ் வைத்திருக்கிறார்.அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக! --- வீட்டுக்குறிப்புக்கள், சமையல் மட்டுமல்ல உடலுக்கு தேவையான, வாழ்கைக்கு தேவையான நிறைய தகவல்கள் தருகிறார். சென்று பார்த்து பயனடையுங்கள்.

10.          sashiga kitchen என்னும் வலைப்பூவில் எழுதிவரும் மேனகாஅவர்களின் தளத்தில் கடப்பா செய்யும் முறை பற்றி மிக அருமையாக சொல்லிள்ளார் வாருங்கள் சென்று வருவோம். sashiga.blogspot.com


11       உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவைகளின் வகைகள் யாவை என்று உணர்ந்து நாம் சாப்பிடுவதில்லை. வயிறு நிறைந்து பசி தீரவேண்டும் என்பதே சாப்பிடுபவரின் குறிக்கோளாக இருக்கிறது என்கிறார் பழனி.கந்தசாமி விபரங்களை அறிய இதோ அத்தியாவசிய உணவு பகுப்புகளும் அவற்றிலுள்ள உண்மைகளு... swamysmusings.blogspot.com

நன்றாக சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்கிட்டு தென்பாக  வாங்கப்பா பிறகு இங்க வந்து தூங்காம.  மீண்டும் நாளை சிந்திப்போம்.  சந்திப்போம் புதிய தலைப்புடன். bye

51 comments:

  1. வணக்கம்
    அம்மா.
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வாரத்திற்கு என்னையும் தொடர்புபடுத்தி கதையாக வலைச்சரத்தில் பின்னிய விதம் கண்டு உவகை கொண்டேன் நன்றி அம்மா.
    தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன்! உங்களுக்கு சந்தோஷம் தானே நான் நினைத்தேன் கோபப் படுவீர்களோ என்றல்லவா பயந்தேன் ஹா ஹா
      மிக்க நன்றி! ரூபன் வருகைக்கும் கருத்துக்கும். தொடருங்கள்.

      Delete
  2. வணக்கம்
    அம்மா.
    எல்லாத்தளங்களையும் ஒரு சுற்று சுற்றி வந்தாச்சி...4 வலைப்பூக்கள் எனக்கு புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல.. த.ம பதிவுக்கு இணைப்பு கொடுத்தாச்சி.த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குமா? புதிய தளமா? அப்பாடா அப்ப பரவாய் இல்லை மிக்க நன்றி! வாக்கிற்கு

      Delete
  3. இனியாச்செல்லம்
    மகி உண்மையாவே அப்படி பண்ணகூடிய ஆள் தான்!! ஆன என் hand bagல சேப்டி பின், ஹேர்பின் மட்டும் தான் இருக்கும்:)) not even mirror! அப்புறம் ஆதி மேடம், ராஜி அக்கா சமையல் குறிப்பை நிஜமாவே நான் ட்ரை பண்ணிருக்கேன், சூப்பரா இருக்கும். ஆன மஞ்சுபாசினி அக்காவும் சூப்பரா ரெசிபி போடுன்காவடா!! அருமையான பயனுள்ள தொகுப்பு (மதுவுக்கா என்றெல்லாம் கலாய்க்காதீங்கப்பா)

    ReplyDelete
    Replies
    1. அழகாக இருப்பவங்க மட்டும்தான் mirror யை வைத்து அடிக்கடி முகம் பார்த்து சந்தோஷப்படுவாங்க அது எல்லாம் நமக்கு எதுக்கு என்றுதான் நீங்க வைக்கப்வில்லை போலிருக்குது

      Delete
    2. நீங்க சொல்ற விளக்கம் நான் கேட்டதில்லை. ஆனால், நிறைகுடம் தளும்பாதுனு சொல்லுவாங்க, தல! :)

      Delete
    3. என்னுடைய சமையல் குறிப்புகளை செய்து பார்ப்பதற்கு மிக்க நன்றிங்க மைதிலி.

      Delete
    4. எப்பிடி கண்டு பிடிச்சிட்டன் இல்ல அம்மு மகி ட சுட்டித் தனத்தை ஆமா bagல வேறு என்ன தான் வைத்திருகிறீர்கள் கவிதை துணுக்குகளும் சமையல் குறிப்புமா வைத்திருகிறீர்கள் அம்மு. ஹாஹா நான் அப்பிடித் தான் கிறுக்கிய துண்டுகள் புக்ஸ் வைத்திருப்பேன்.அம்மு. மிக்க நன்றி அம்முகுட்டி வருகைக்கும் கருத்துக்கும்.!

      Delete
  4. ப்ளச்... ப்ளச்... ப்ளச்.. என்னன்னு பாக்கறியாம்மா இனியா? இத்தனை அறுசுவை ஐட்டங்களின் படங்களையும் ரெசிபிகளையும் பாத்ததுல என் நாவு கதகளி ஆடி விட்ட ஜொள்ளுதான் அது. ஹா.. ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அடடா பார்த்ததுக்கே இப்படி என்றால் ருசி பார்த்தால் எப்படி இருக்கும் இல்லையா சகோ.
      மைதிலியின் கைபக்குவம் அப்படி இருக்கும் தெரியுமா சகோ. நீங்க வேனுமின்னா சகோ தரர் மதுவை கேட்டு பாருங்கள்.
      மிக்க நன்றி சகோ !வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  5. என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !தங்கள் வரவிற்கு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

      Delete
  6. Replies
    1. அனைத்தும் தொடரும் தளங்கள்...

      அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

      Delete
    2. மிக்க நன்றி! சகோ வரவிற்கும் வாழ்த்துக்கும். அனைத்தும் தொடரும் தளங்கள் தானா நினைச்சன்.

      Delete
  7. சகோதரி இனியா....அருமையான எழுத்துடன், சாப்பாட்டையும் சேர்த்து அளித்துள்ளீர்கள்! ஆஹா! அறுசுவை பதிவுகள்!!! கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்...இந்தக் கௌரவப் பிரசாதம் இதுவே எமக்குப் போதும்....

    அருமையான தளங்கள்! எல்லோருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ மிக்க நன்றி தங்கள் ஆதரவிற்கும் இனிய கருத்துக்கும். ஆமா எல்லாம் சமைத்து சாப்பிடுவீர்கள் தானே சகோ.
      சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள் எப்படி இருந்தது என்று.

      Delete
  8. ***அது சரி இவர் வருண் இருக்கிறார் இல்ல அவர் என்னடான்னா நம்மளை ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று சொல்லிட்டு என்னை ஏன் பிளாக் பண்ணின? நீ என்ன பெரிய இவனா? இப்பிடி வேற கேட்கிறார் இது நியாயமா? முதல்ல இவர் ரிலாக்ஸ் பண்ணவேன்டாமா? தனக்கொரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா?****

    இனியா அவர்களே! நான் உங்க ஸ்டைல்ல இப்போப் பேசப்போறேன்..

    ஐயய்யே! வருண் பதிவை எதுக்கு இங்கே இழுத்து வந்தீங்க!! இப்படி எல்லாம் பதிவு எழுத்தக்கூடாது காட்ட மட்டுமே வருணின் பதிவை மேற்கோல் காட்டணும்னு உங்களுக்குத் தெரியாதா? :)))

    ---------------

    நாந்தான் ஒரு ரெண்டு மாதமாக பதிவே எழுதாமல் பதிவர்கள் எல்லோரையும் நிம்மதியா இருக்க விட்டு இருக்கேனே! அது எல்லோருக்கும் ரிளாக்ஸிங்காத்தானே இருக்கும்? :)

    -----

    On a serious note, Thanks, iniya! :-)

    ReplyDelete
    Replies
    1. பாஸ் பதிவு போடுங்க அட்லீஸ்ட் வாரம் ஒன்றாவது. இப்படி கேட்டும் நீங்க பதிவு போடலைன்னா உங்களை பதிவு போட வைக்க ஒரு வழி இருக்கிறது அது என்ன தெரியுமா? எங்க பாஸை கடவுள்தான் இப்படி பதிவு போடவிடமா கைகளை கட்டி போட்டு வைத்திருக்கிறார் என்று கதையை கிளப்பி விடுவோமே அதை கேட்டு உங்களால் சும்மா இருக்க முடியுமா என்ன?

      Delete
    2. பதிவெழுதாமல் இருக்கிறதும் நல்லாத்தான் இருக்கு, தல!

      கடவுள் கையை கட்டிப் போட்டுட்டா எப்படி பின்னூட்டமிட மட்டும் முடியுது? :)

      Delete
    3. என்னை போலவே சூப்பரா பேசுறீங்களே அது என்ன வேண்டா வெறுப்பா தாங்க்ஸ் சொல்ற மாதிரி இருக்கு. இத்துனூண்டா மூலையில thanks..... அது நல்லவா இருக்கு சகோ முதல்ல ரீலக்ஸ் ok வா. நன்றிப்பா அப்பப்ப வந்து கலாய்கிறதுக்கு.

      Delete
    4. ஆமா மதுரை வீரன் சொல்வதை கேட்டு பதிவை போட்டுடுங்க வருண்.அப்புறம் அவருக்கு கோபம் வந்துவிடும். அது சரி இந்தக் கதை எப்பிடி முடியும் guess பண்ணுங்க பார்ப்போம்.

      Delete
    5. உங்களோட ஒரு புது பதிவு கூட நான் படிச்சத்தில்லை.
      எங்களை மாதிரி friends இவ்ளோ கேட்க்கும் போது you must consider it as a good friend:))

      Delete
  9. கல்யாண சமையல் சாதம் சாப்பிட்ட மாதிரி இருக்கு.

    நம் நாட்டு பர்கரா, அது எப்படின்னு இதோ போய் பார்த்துட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தா மட்டும் போதாது சகோ செய்து ஓவியா, இனியாவுக்கு கொடுங்கள் சகோ சரியா.
      மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  10. என்னையும் கூட கலாய்சுருக்கீங்க... உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா ? ''நான் அப்பாவி'' யினு ? இதற்க்கு நன்றிக்கடனா பொட்டுத்தங்கம் என்ன ? ஒருபொட்டி நிறைய தங்கம் வாங்கி அனுப்பனும் ஆனால் ? நீங்கள் ஏற்கனவே சொல்லியிக்கீங்க... ''நகை நமக்கு பகை'' என்று ஆகவே... என்ன செய்யலாம்னு நண்பர் ரூபனிடம் கேட்டேன் அவர்தான் சொன்னார் மனம் நிறைந்த நன்றிகளை கருத்துரை மூலம் அனுப்பி வையுங்களேன் என்று... ஐடியா கொடுத்த நண்பர் அவர்களுக்கும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -Killergee-

    ReplyDelete
    Replies
    1. அண்ணா! இப்படி ஆளாளுக்கு ரூபன் சகோவை கலாய்ச்சு விடுறீங்களே:))))
      சூப்பர் அண்ணா!

      Delete
    2. ய்ய்ய்யேன் ? இப்படி போட்டு விடுறீங்க... ? அவரே, மறந்துட்டாரு...

      Delete
  11. இன்றைய அறிமுகங்களில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    தங்களின் வலைச்சர பணி சிறப்பாக அமையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

      Delete
  12. இனிய தோழி இனியா!

    நாவூற நற்சுவை நூறெனத் தந்தீரே!
    பாவூறும் நின்பதிவு பார்த்து!

    வலைச்சரப் பதிவில் நாளும் புதுமை படைக்கின்றீர்!
    கண்டு மனம் களிக்கின்றேன்! அருமை!

    அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும்
    இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. குறளிலே தந்த வாழ்த்து
      நிறைத்தது நெஞ்சை
      உறவே நீ வாழ்க
      குறைவின்றி என்றும்... !

      மிக்க நன்றி தோழி! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.

      Delete
  13. வணக்கம்!

    நாவூறும் வண்ணம் நளபாகா் பூக்களைப்
    பாவூறும் நல்லினியா பார்த்தளித்தார்! - காவூறும்
    தேனாய் இனிப்பன! தேடி விரைந்தன
    மீனாய் நினைவுகள் மீண்டு!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே !
      பாக்களால் தந்த நற்கருத்தெல்லாம்
      பூக்களாய் ஆனது எனக்கு!

      மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.

      Delete
  14. அறுசுவையுடன் கூடிய அருமையான தளங்களின் அணிவகுப்பு!..
    அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வாழ்த்திற்கும் வருகைக்கும்.

      Delete
  15. சமையல் பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள்! அனைவரும் நான் விரும்பி படிக்கும் பதிவர்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வாழ்த்திற்கும் வருகைக்கும்.

      Delete
  16. அன்பிற்கினிய நண்பர் காவியகவி அவர்களுக்கு இனிய வணக்கங்கள்! தங்களின் கருத்துக்களுக்கும் வலைச்சரத்தில் எமது வலைப்பூவை இன்றைய அறிமுகங்களில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். எனது இதயம் கனிந்த நன்றிகள் பல. தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்க விழைகின்றேன். என்றும் அன்புடன் அன்புநெஞ்சம் பெட்டகம் A.S. முஹம்மது அலி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வாழ்த்திற்கும் வருகைக்கும்.

      Delete
  17. இன்றைய வலைச்சர அறிமுகத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி.. அறிமுகமானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வாழ்த்திற்கும் வருகைக்கும்.

      Delete
  18. வித்தியாசமான முறையில் பதிவர்கள் அறிமுகம் வாழ்த்துக்கள் இனியா. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வாழ்த்திற்கும் வருகைக்கும்.

      Delete
  19. அருமையான கவிதை.

    நிழல் தரும் மேனி
    நீள நடந்தாலும்
    நீளும் ஆயுள்//

    நன்றாக சொன்னீர்கள். நடப்பதை மறந்து விட்டார்களோ! என்று நினைக்க வைக்கிறது . பக்கத்தில் போக வேண்டும் என்றாலும், வாகனங்கள் வேண்டி இருக்கிறது எல்லோருக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை இப்போது.

    பதிவுகள் அருமை, வழங்கியவிதம் புதுமை.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக ஆசிரியர் பணியை செய்யும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  20. என்னை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றிகள் பல... நன்றி இனியா ...

    எனக்கு இதில் வந்து இருப்பதினை மெயில் மூலம் தெரிவித்த ரூபன் அவர்களுக்கும் நன்றி....

    ReplyDelete
    Replies
    1. மேலும் மேலும் சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

      Delete
  21. அன்பு சகோதரி இனியா!

    என்னையும் என் தளத்தினையும் இங்கே அறிமுகம் செய்ததற்கு மனம் கனிந்த நன்றி!!
    இச்செய்தியினை எனக்கு தெரிவித்த சகோதரர் ரூபன் அவர்களுக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி! மிக்க நன்றி வருகைக்கு!
      மேலும் மேலும் சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது