07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 29, 2014

கதை கேளு கதை கேளு!

வலைச்சர வாசகர்களுக்கு அன்பு வணக்கம்!

குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். நல்லொழுக்க‌ங்களையும் கருத்துகளையும் அவர்களுக்குப் பிடித்த கதைகள் மூலம் கூறினால் விருப்பமாக எளிதாக பிடித்துக் கொள்வர்.

எனக்கு மிகவும் பிடித்த குழந்தைகளுக்குக்  கதை சொல்லும் தளங்கள் சில உங்கள் பார்வைக்கு.

பகைமை உணர்வை மறக்கச் சொல்லும் கதை, நல்ல குணத்திற்கான கதை, வீண் பழி போடுவதை தடுக்கும் கதை, ஓட்டைப் பானை கதை, மனம் தளரக் கூடாது என பல கதைகள் தமிழ் அறிவு கதைகள் எனும் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

ஆத்திச்சூடியை கதைகள் மூலம் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் தானே? தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தன் தளத்தில் அறம் செய்ய விரும்பு, ஐயமிட்டு உண், ஊக்கமது கைவிடேல்உடையது விளம்பேல்ஈவது விலக்கேல் என ஆத்திச்சூடி கதைகள் எழுதியுள்ளார். படித்துப் பாருங்களேன்!

தமிழ் சிறுகதை என்கிற தளத்தை வாசித்து இருக்கிறீர்களா? குழந்தைகள் கதைகள் நிறைய இருக்கின்றன. தோட்டக்காரனும் குரங்கும், தெனாலிராமனும் திருடர்களும், ராஜாவும் முட்டாள் குரங்கும், புகழ் போதை, பாகுபாடு பார்க்கக் கூடாது போன்ற கதைகளை படித்துப் பாருங்கள். கதைக்குத் தகுந்த படங்களும் கண்களைக் கவர்கின்றன.

குட்டிக் கதைத் தொகுப்பு என்னும் இந்தப் பக்கத்தில் பல கதைகள் இருக்கின்றன.

பாட்டி சொல்லும் கதை தளத்தில் நீதிக்கதைகள் அருமையாக இருக்கும். முயற்சி திருவினையாக்கும், ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு, துஷ்டரைக் கண்டால் தூர விலகு, காலத்தினால் செய்த நன்றி, உண்மை நண்பன் போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை.

என்ன நண்பர்களே, தங்கள் வீட்டிலுள்ள குழந்தகளுக்குக் கதை சொல்ல இடுகைகளைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?

மீண்டும் நாளை சந்திப்போம். வணக்கம்! நன்றி!

27 comments:

 1. வணக்கம்

  இன்றைய வலைச்சர அறிமுகங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தொடருகிறேன்பதிவுகளை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம்
  எல்லா வலைப்பூக்களும் தொடரும் தளங்கள்தான் அறிமுகத்திற்கு நன்றிகள் பல...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. நல்லொழுக்க‌ங்களையும் நீதிக் கருத்துகளையும் குழந்தைகள் விரும்பும் வகையில் கதைகளாகக் கூறினால் எளிதாக பிடித்துக் கொள்வர் - என்பது உண்மை.

  நீதிக் கதைகளினால் நல்லவர்களும் வல்லவர்களும் உருவாகியதாக வரலாறு..

  - நல்ல கருத்துடன் இன்றைய பதிவு.. நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை செல்வராஜூ

   Delete
 4. வலைச்சர அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. குழந்தைகளுக்கான அனைத்து வலைத்தளங்களையும் அறிந்து கொண்டோம்! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  அறிமுகப் படுத்திய தங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன்

   Delete
 6. குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். நல்லொழுக்க‌ங்களையும் கருத்துகளையும் அவர்களுக்குப் பிடித்த கதைகள் மூலம் கூறினால் விருப்பமாக எளிதாக பிடித்துக் கொள்வர்.
  //
  உண்மை தியானா நீங்கள் சொல்வது.
  நல்ல நீதிபோதனை கதைகளும், நகைச்சுவை கதைகளும் குழந்தைகளுக்கு நல்லது.
  இன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா!

   Delete
 7. என் ஆத்திச்சூடி கதைகள் இலக்கியத்துக்குப் பின்னால் மறைந்துபோன நிலையில் அவற்றை அறிமுகப்படுத்திய உனக்கு நன்றி தியானா.
  மற்றவையும் நல்ல கதை கூறும் தளங்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரேஸ்

   Delete
 8. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனிமரம்

   Delete
 9. அருமையான அறிமுகங்கள்! புதிய தளங்களுக்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்

   Delete
 10. குழந்தைகளுக்கான அனைத்து வலைத்தளங்களையும் அறிய தந்தற்கு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி மதுரைத் தமிழன்

   Delete
 11. குழந்தைகளுக்கான கதைகள் இவ்வளவு இருக்கிறதா...

  சென்று பார்க்கிறேன்,
  தெரியப்படுத்தியமைக்கு நன்றி,.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சொக்கன்!

   Delete
 12. சிறந்த அறிமுகங்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி காசிராஜலிங்கம்

   Delete
 13. நீண்ட நாளைக்குப் பிறகு வலைச்சர பக்கம் வந்திருக்கிறேன். நல்லதொரு வாரமாக வலைச்சரம் அமைய வாழ்த்துக்கள், தியானா.
  இன்று அறிமுகமான எல்லா பதிவர்களுக்கும் பாராட்டுக்கள். குழந்தைகளின் உலகத்தில் நுழைவது மிகவும் கடினமான விஷயம். இவர்கள் எல்லோரும் இதில் வல்லவர்கள்.
  அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. எங்க வீட்ல வளர்ந்த குழந்தை...சிறு வயதில் நிறைய குட்டிக் கதைகள் சொல்லித்தான் தூங்கவைப்பேன். இப்பவும் குழந்தைகளுடன் பழகுவதால் தேவைதான் கதைகள். நன்றி..

  ReplyDelete
 15. தியானா அவர்களுக்கு

  வலைசர அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது